*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Tuesday, November 27, 2012

ஊழியக்காரர்கள்...

வெட்டவெளியில்
காற்றசையும் மொழியில் பிறக்கிறது
உமக்கும் எனக்குமான உரையாடல்
தலைதடவிப் போகிறது
ஒரு கிளை
சூரியக்கதிரின் ஸ்பரிசத்தோடு.

கண்கள் இருளுடைக்க
கேட்கின்றீர் ஆயிரம் கேள்விகளை
கனவுகளில் தேடிக் கிடைத்த
உமக்கான
வசியச்சொற்களின் அலங்காரத்தோடு.

மடித்த வானத்துள் மனசை மறைத்து
தலை குனிந்தே
மண் பார்த்துக் கவிழ்கிறேன்.

நீரைப்போல் சுழித்தோடியவர்களிடம்
கரையாத உணர்வோடு
பெருமூச்சொன்றை
வெப்பமாய் வெளித்தள்ளி
பலஜென்மத்து மீதமென
விரட்டும் விந்தையோடு
உயிர் குடிக்கும் விஷப்பாம்பின்
கதை சொல்கிறேன்.

சப்பாத்திக் கள்ளி காலில் குத்த
திரை விலக்கிய காற்றில்
நீட்டும் ஒரு கையில்
என் குருதி.

சுவறேறும் எறும்புகளின்
கனவுக்கான வேண்டுகோளோடு
ஈரக்காற்றில்
முகம் புதைந்திருக்கும் என்னிடம்
பிரிந்து போவதற்கான
வார்த்தைகளை அவிழ்க்கிறீர்கள்.

தோழர்களே....
மீண்டும் வருவீர்களோ
காத்திருக்கிறோம்!!!

ஹேமா(சுவிஸ்)

11 comments:

இரவின் புன்னகை said...

அவர்கள் மீண்டும் மீண்டு வருவார்கள்...
உமக்காய், உம் கவிக்காய்...

சப்பாத்திக் கள்ளி காலில் குத்த
திரை விலக்கிய காற்றில்
நீட்டும் ஒரு கையில்
என் குருதி. ..

ஆழமான வரிகள்... மாவீரர்களுக்கு எப்போதுமே முடிவு கிடையாது, அவர்கள் மீண்டும் மீண்டும் ஓயாத அலைகளாய் வந்துகொண்டே இருப்பார்கள்...

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை...

வருவார்கள்... நம்பிக்கையோடு இருப்போம்...

Easy (EZ) Editorial Calendar said...

கவிதை அருமையாக இருக்கு......

நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

சின்னப்பயல் said...

உமக்கும் எனக்குமான உரையாடல்
தலைதடவிப் போகிறது
ஒரு கிளை
சூரியக்கதிரின் ஸ்பரிசத்தோடு.////

ஸ்ரீராம். said...

அருமை. மேலே ஓடும் வரிகள் குட்டிப் பதிவு போலவே இருக்கின்றன.

சிட்டுக்குருவியின்_ஆத்மா said...

அழுத்தமான வரிகள்.....
அவசியமான எதிர்பார்ப்பு

Yoga.S. said...

வருவார்கள்!காத்திருப்போம்!!!!

s suresh said...

நல்ல காத்திருப்பு! காலம் வரவழைக்கும்! நம்புங்கள்!

கவி அழகன் said...

நாங்களும் காத்திருக்கிறோம்

Sasi Kala said...

மிக மிக ஆனந்தத்தை மனதில் எழுப்பிப்போகும் வார்த்தைப்பிரயோகம் சகோ.

திண்டுக்கல் தனபாலன் said...

வணக்கம்...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/11/blog-post_30.html) சென்று பார்க்கவும்... நன்றி...

Post a Comment