*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Wednesday, November 14, 2012

என் காதல் மிருகம்...

காதல் தின்று
பின் கொல்லும்
கூர்விழி வாளோடு
உலவும்
ராட்சஷியோ நீ.

கண்ணும்
வார்த்தையும்
குவளை மதுவாய்
போதையாய்
அதைவிட
இன்னும் தேவையாய்.

அன்று சந்தித்த
இரவில்
என்ன பேசினாய்
உன் பக்கமாய்
என்னை...
எப்படிச் சரித்தாய்
இன்றுவரை
சுயமற்று நான்.

மிரட்டும் அன்பில்
வியர்க்கும் மெய்
உன் வெப்ப
ரேகைகளுக்குள்தான்
அடங்கி இயங்கும்.

அடியேய் கிராதகி...
வெளிவரமுடியாக் காட்டில்
அலையவிட்டு
வேடிக்கையா பார்க்கிறாய்
காதல் மிருகமாய்
அறிகிறேன் உன்னை
கொல்லாமல் கொல்லும்
காட்டேரி.

காடும் மலையும் தாண்டி
பூவொன்று கண்டேன்
பறித்து வாவென
புன்னகைப் பூவொன்றைப்
பிய்ந்தெறிந்துவிட்டு
பேசாமலிருக்கிறாய்.

ஒற்றையடிப்பாதையடி
என் காதல்
காடும் மலையும்
காட்டித் தந்தவளே
நீதானே.

தொலைதூரச் சிரிப்பில்
‘காதலும் நீதான் காடும் நீதான்'
எனச் சொன்னவள்....

மௌனித்த மென்னிருளில்

உறைந்து கிடக்கிறேன்
பக்கத்தில்........
வானத்து வெள்ளிகளை
போர்த்திக்கொண்டு
என்....
போக்கிரிக் காதலி!!!


தம்பி 'தாமரைக்குட்டி'யின் அன்புப் பிறந்தநாள் பரிசாக...அவர் தன் காதலுக்காகக் கேட்டு நான் எழுதிக் கொடுத்தது!

18 comments:

Yaathoramani.blogspot.com said...

மனம் கொள்ளை கொண்ட
அருமையான காதல் கவிதை
பகிர்வுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

tha.ma 1

T.V.ராதாகிருஷ்ணன் said...

ம்.....

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

அருமை காதல் பொங்கி வழிகிறது.ஆணின் பார்வையில் இருந்தும் அசத்திவிட்டீர்கள் ஹேமா!இதைப் படித்தான் நிச்சயம் மயங்கித்தான் போவாள் அந்தக் காதலி

ஸ்ரீராம். said...

கொல்லும் காதலைச் சொல்லும் கவிதை. அருமை ஹேமா. இதை அந்தக் 'கிராதகி' படித்தால் அவள் முகத்தில் தோன்றும் புன்னகையைக் கற்பனை செய்து பார்க்கிறேன். :))

மகேந்திரன் said...

மனதில் உள்ள
உணர்ச்சி செல்கள் எல்லாம்
வீரியம் பெற்றதுபோல
அழகிய வார்த்தைகள் கொண்ட
கவிதை....

திண்டுக்கல் தனபாலன் said...

கொடுத்து வைத்த காதலி...

அழகான வரிகள்... அருமை...
tm2

பால கணேஷ் said...

காதல் மிருகம். போக்கிரிக் காதலி... அன்பில் தேர்ய்ந்த காதலில் ஊறிய வார்த்தைகளில் படிக்க அருமையான கவிதை ஃப்ரெண்ட்.(தனபாலன் சொன்ன மாதிரி) கொடுத்து வைத்தவள் அந்தக் காதலி.

இளமதி said...

அருமை ஹேமா அருமை!

ஆணின் மனநிலையை அழகாகப் படம்பிடித்துக் காட்டிட அருமையாகக் கோர்த்த முத்துவரிகள்.

பாருங்கள்..எனக்கு முன்பாக இங்கு பின்னூடம் தந்திருப்பவர்கள் அனைவரையும்.....:)

ஆச்சரியப்பட வைக்கும் திறமை உங்களிடம். மனதைக் கொள்ளை கொள்ளும் வரிகள். வாழ்த்துக்கள் தோழி.....

”தளிர் சுரேஷ்” said...

சிறப்பான உணர்வுகளை படம்பிடித்த கவிதை! அருமை! நன்றி!

அப்பாதுரை said...

இன்றைய பொழுது நன்கு விடிந்தது - முதல் வாசிப்பு இது தான்.

Anonymous said...

காதல் துளிகள் 3...MISSING...?

தம்பி 'தாமரைக்குட்டி'யின் அன்புப் பிறந்தநாள் பரிசாக...அவர் தன் காதலுக்காகக் கேட்டு நான் எழுதிக் கொடுத்தது...

2 BAD...Ask him to write something or just do something nice for her...

BTW...I enjoyed என் காதல் மிருகம் Hema...

அம்பலத்தார் said...

//காதல் தின்று
பின் கொல்லும்
கூர்விழி வாளோடு
உலவும்
ராட்சஷியோ நீ.//
ஆரம்ப வரிகளே அசத்தலாக அருமையான கவிதை

Bibiliobibuli said...

ம்ம்ம்ம்.....கடனாய் ஓர் கவிதை :)

வெற்றிவேல் said...

நல்லா, அனுபவித்து எழுதுன மாதிரியே, இருக்கு....

கடனா எழுதுன கவிதை என்பதை நம்பவே முடியல... கடைசி பத்தி மனம் கொள்ளைக் கொண்டு விட்டது...

இராஜராஜேஸ்வரி said...

உறைந்து கிடக்கிறேன்
பக்கத்தில்........

கவிதைவரிகளுக்கு பாராட்டுக்கள்..

Seeni said...

urainthu ponen.....

varikalin sethukkalil...

சிகரம் பாரதி said...

Arumaiyaana parisu. Enakkum ondru eludhith tharungalen? Manadhai mayakkum arpudha varigal. Vaalththukkal ullame.

Post a Comment