*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Thursday, May 03, 2012

சில முடியாதவைகள்...

பாசம் பணம்
இரண்டுக்குமான தூரத்தை
சொல்லி முடித்த அவன்
எதையோ இடக்கையில்
எழுதிக்கொள்கிறான் .

பணம் பற்றிச் சொல்ல
கலைந்த அமைதி
வலச்சுழியில் லயித்திருந்த
சின்னவன்கூட விழித்தான்.

சொல்லிடறிய பாசம்
பாவம்....
ஊடாடும் உயிரோடு
துணிகிறது கொல்ல
முடியாதென்கிறான் சின்னவன்.

புழுங்கும் வெப்பம்
இடக்கை மை உருகி வழிய
மல்லுக்கட்டமுடியா
பலனற்ற இரவொன்றில்
நுழைகிறான் கல்லறைக்குள்
தலைமுறைத் தோல்வியோடு.

இடக்கையில் என்னதான்
எழுதிக்கொள்ள
முனைந்திருப்பான் பாவம்!!!

ஹேமா(சுவிஸ்)

60 comments:

கலா said...

தங்கமே!அப்புறம் வருகிறேன் இப்போது நேரமில்லை
யாரும் சொல்லக்கூடதல்லவா! தாமதமாய் வந்தேனென்று!

Anonymous said...

aaaaaaaaaaaaaaaaaa

நிரூபன் said...

வணக்கம் அக்கா,
குறியீடு, படிமம் கலந்து கொஞ்சம் புரிந்தும், கொஞ்சம் புரியாதும் நாம் சிக்கும் வண்ணம் ஓர் கவிதை கொடுத்திருக்கிறீங்க.

முடியாத உணர்வுகள், நிறைவேறாத மானித இயல்புகளின் ஓர் பக்கத்தை சின்னவனின் உருவில் கவிதை சொல்லுகிறது.

Anonymous said...

kavithai super akkaa

Yoga.S. said...

aaaaaaaaaaaaaaaaaa!!!!!!!!

Anonymous said...

இனிய மதிய வணக்கம் யோகா மாமா அக்கா ,ரீ ரீ அண்ணா ரேரீ அண்ணா ..!..

அக்கா கவிதை நல்ல இருக்கு ...மூணு தரம் படித்துப் போட்டேன் ..ஆனால் எனக்கு விளங்கவே இல்லையே ...கவிதாயினியே உங்கள் கவிதை புலமை சான்ஸ் எ இல்லை ...கலக்குங்க

Yoga.S. said...

பகல் வணக்கம்,மகளே!///இடக்கையில் என்னதான்
எழுதிக்கொள்ள
முனைந்திருப்பான் பாவம்!!!///வலக் கைக்குத் தெரிந்திருக்குமோ???

Yoga.S. said...

இனிய பிற்பகல் வணக்கம்,கலை!!!

Anonymous said...

பணமா பாசமா?? பணத்துக்கு தான் முதலிடம் !!!!!!!!

Yoga.S. said...

ஆபீஸ் முடிந்து விட்டதா,கலை?

Yoga.S. said...

மதிய உணவு இடைவேளை,டிங்,டிங்,டிங்!!!!!!!

செய்தாலி said...

ஆழப் பொருளும்
அழகிய சொல்லாடலும்

உங்களின்
கவிதைகளை வாசிக்கையில்

என்
நெற்றியில் வானவில்லாய்
வளைகிறது புருவம்

பால கணேஷ் said...

கவிதை சூப்பர் என்று மேம்போக்காய் நான் கருத்திட்டால் அது பொய். உண்மையில் இதன் உட்பொருளை விளங்கிக் கொள்ள முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். மீண்டும் படித்து விட்டு பின்னர் மறுபடி வருகிறேன்,

Unknown said...

ம்ம்ம் பாவம்தான் அவன் வணக்கம் அக்கா எப்படி இருக்கிங்க? சுவிஸ் எப்படி இருக்கு? அழகான கவ உங்கள் கவியை பற்றி நான் சொல்ல வேண்டியதில்லை உங்கள் கவிதை தந்த விருதே சொல்லுமே....

Anonymous said...

விளக்கம் கேட்டால் கவிதையின் அழகே போய்விடும்...ஒதுங்கி நின்று ரசித்துவிட்டுப்போகிறேன் கவிதாயினி...

ஹேமா said...

வாங்கோ கலா.எங்க கும்மியடிக்காம கலாய்க்காம அழகா ஒரு பின்னூட்டம் பார்க்கலாம் பிறகு !


கலை...கருவாச்சி...காக்கா...கருப்பு வாத்து...அலப்பறை அரசி...கலிங்கநாட்டு இளவரசி...பொன்னியரிசி...பின்னழகு கருப்பி இன்னும் இருக்கு.ஏன் சொல்றனெண்டா எல்லாருக்கும் தெரியவேணுமெல்லோ.

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் நோ நோ இதுக்குலாம் அழப் பிடாது சொல்லிபுட்டேன் ..நீங்க அழுதா எனக்கு அழுகை வர்துல்லா...(எங்கயோ சொன்னமாதிரிக்கிடக்கோ)

கவிதை கந்து,நிரூ சொன்னதை வச்சுப் படிச்சால் விளங்கும் !

அப்பா...கவிதையின் உட்கருத்து.திருந்தாத சமூகம் அல்லது மனிதனின் திருந்தாத மனநிலை !

ஹேமா said...

நிரூ...கந்து...கன காலாத்துக்குப்பிறகு பார்க்கிறேன்.சந்தோஷமாயிருக்கு.கவிதையின் கருவைச் சுட்டிக்காடியது சந்தோஷம் !

செய்தாலி... ஊக்கம் தரும் வார்த்தைக்கு நன்றி !

ஃப்ரெண்ட் கணேஸ்...வலைச்சரப் பணியின் நடுவிலும் வந்து உற்சாகப்படுத்தியதுக்கு மிக்க நன்றி !

சுதா SJ said...

ஹாய் அக்காச்சி :)))

கவிதை எனக்கு கொஞ்சம் புரிந்தது போலும் இருக்கு கொஞ்சம் புரியாத மாதிரியும் இருக்கு :(((

காதல் கவிதைகள் என்றால் உடனே புரிந்து விடுகிறது....... ஆவ்.... (படுவா...... ராஸ்க்கள் என்று அக்காச்சி திட்டுவது கேக்குது )

பணம்!!!!!!!!!
இப்போது எல்லா இடங்களிலும் பணத்துக்குதானே முதல் இடம்....... உறவா பணமா என்றால் எல்லோரும் பண பக்கம்தான் சாயிணம் :(

ஆனாலும் இதற்க்கு சில விதிவிலக்கு உறவுகளும் உண்டு அந்த குட்டி சந்தோசம் போதுமே......... அக்காச்சி......

CS. Mohan Kumar said...

நீங்கள் ஒரு பிரபல பதிவர் என்பது எப்படி எனக்கு தெரியாமல் போனது ? தமிழ் மண டிராபிக் ரேன்க் 25 என்கிறது !!

கவிதைகளை ரசிக்கும் மனதை எதோ ஒரு வயதில் தொலைத்து விட்டேன்.

நன்கு எழுதுகிறீர்கள் தொடர்ந்து எழுதுங்கள்

Anonymous said...

மாலை வணக்கம் மாமா ..நெட் ப்ரோப்லம் கொடுத்து விட்ட்டது ...இப்போ தான் நெட் கிடைச்சது ....

கவிதாயினி கவிதைக்காய் சந்தியில் காத்துக் கொண்டே இருந்திணன் மாமா ..பாருங்கள் அவ்வங்க பிரிண்ட்க்கு மட்டும் தனியா சேதி சொல்லி ...............ஹும்ம்ம்ம்...மாமா உங்கட செல்ல மகளை கொஞ்சம் கவனிச்சி வையுங்கள் ... சொல்லிட்டேன் ,,,,

Anonymous said...

அக்கா கவிதை இப்பம் கொஞ்சம் புரியாமல் புரிகிறது ...ஆனாலும் .............என் களி மனடைக்குள் ...............................

ஆத்மா said...

நவீன ஓவியம் போன்று உள்ளது கவிதை......ஒன்னும் புரியல்ல....ஆனாலும் புரியுது....:)

ராமலக்ஷ்மி said...

நல்ல கவிதை ஹேமா.

மகேந்திரன் said...

பாசத்தின் ஊடாடல்களில்
லயிக்கும் மனம்
பணத்தின் பிணவறைக்குள்
தம்மை புதைத்து
தலைமுறைத் தோல்வியை
தழுவி விடுகிறது..
விடையற்ற வினாக்களுடன்..

அருமை அருமை..
கனமான கருத்தை
மிக எளிதாக கைகொள்வது
தங்களுக்கு கைவந்த கலையல்லவா...

ஸ்ரீராம். said...

கவிதை நல்லாயிருக்கு. கணேஷுக்கு இருந்த கஷ்டம் எனக்கில்லை! அதற்குள் நீங்களே விளக்கம் கொடுத்து விட்டீர்களே....!

விச்சு said...

உங்கள் ஒவ்வொரு கவிதையும் பலமுறை படிக்க வேண்டியுள்ளது ஹேமா. அப்போதுதான் என் அறிவுக்கு எட்டுகிறது. பலதடவை படிக்கவேண்டும் என்பதற்குத்தான் இப்படி வார்த்தை அமைப்புகளா?(சும்மா...). உங்களின் கவிதையின் ஒவ்வொரு வார்த்தையினையும் அனுபவித்து படிக்கலாம்.

தனிமரம் said...

பணமா பாசமா அவன்  அதைக்கடந்து   ஏன் அன்பின் இணைவையோ  எழுதியிருப்பான் என எண்ணவைக்கும் கவிதை !

Angel said...

இடக்கையில் என்னதான்
எழுதிக்கொள்ள
முனைந்திருப்பான் பாவம்!!//
பாசம் என்று எழுத முனைந்திருப்பான் .
//பணம் பற்றிச் சொல்ல
கலைந்த அமைதி//பணத்தின் (மனதின்)வெப்பம் அதை அழித்திருக்கும்

Yoga.S. said...

இரவு வணக்கம் மகளே!!!

முற்றும் அறிந்த அதிரா said...

//Yoga.S.FR said...
aaaaaaaaaaaaaaaaaa!!!!!!!!////

repeatu:)))

எனக்கும் ஆஆஆ தான் வருது, கவிதை புரியவே இல்லைக் ஹேமா... ஆனா நல்லா தமிழ் பாவிச்சு எழுதியிருக்கிறீங்க எனத் தெரியுது.....

முற்றும் அறிந்த அதிரா said...

//பாசம் பணம்
இரண்டுக்குமான தூரத்தை
சொல்லி முடித்த அவன்
எதையோ இடக்கையில்
எழுதிக்கொள்கிறான் .///

பணம் இருந்தால் பாசமும் பக்கத்திலயே ஒட்டிக்கொண்டிருக்க்கும்.. ஹா..ஹா..ஹா.. தூரமே இல்லாமல்:))

முற்றும் அறிந்த அதிரா said...

//பணம் பற்றிச் சொல்ல
கலைந்த அமைதி
வலச்சுழியில் லயித்திருந்த
சின்னவன்கூட விழித்தான்///

என்னாது நம்மட கலைக்கு அமைதியில்லாததால சின்னவன் விழித்திட்டாரா?:))).....

கலை பொறுத்தது போதும் பொயிங்கி எழுங்கோ:))

முற்றும் அறிந்த அதிரா said...

//சொல்லிடறிய பாசம் //

சொல்லு இடறிய பாசம்... அப்படியென்றால் என்ன? இத் தமிழ் எனக்குப் புரியவில்லைக் ஹேமா.....

முற்றும் அறிந்த அதிரா said...

//இடக்கையில் என்னதான்
எழுதிக்கொள்ள
முனைந்திருப்பான் பாவம்!!!
///

சே...சே.... ஒண்ணுமே எழுதியிருக்க மாட்டார் என்றுதான் எனக்குப் படுது.. எங்கட மணியம் கஃபே ஓனரைப்போல:))

MARI The Great said...

ஒரே குழப்பமா இருக்கே..,

பத்து தடவ படிச்சு பார்த்தா விஷயம் புரியுதான்னு பார்ப்போம் ..!

Seeni said...

meendum !
meendum padikkiren!

purinthathu-
sila !

அப்பாதுரை said...

பாசமும் ஒரு வகையில் பணம் தானே..?

அப்பாதுரை said...

பின்னழகு கருப்பியா? இப்போது தான் முதல் முறையாகக் கேள்விப்படும் அன்புமொழி.
நல்லா இருக்குங்க. நினைவில் வைக்க வேண்டும்.

Yoga.S. said...

காலை வணக்கம்,மகளே!இன்றைய நாள் நல்லபடியாக அமைய பிள்ளையார் துணையிருப்பார்!

arasan said...

பலமுறை படைத்தலும் சில இடங்களில் புரியவே இல்லை அக்கா

கலா said...

பிள்ளை! யார்? துணையிருப்பார்!\\\\
என்னங்கோ...
இப்படியொரு கேளவியை அந்தப் பிளளையிடம் கேட்கலாமா அப்பு?

ஏன்!ஹேமு தனியாக இருக்கப் பயமா?
அப்புச்சி!நலமுங்களா?

கலா said...

புழுங்கும் வெப்பம்
இடக்கை மை உருகி வழிய
மல்லுக்கட்டமுடியா
பலனற்ற இரவொன்றில்
நுழைகிறான் கல்லறைக்குள்
தலைமுறைத் தோல்வியோடு\\\\\\\
என்னதான் நாம் ,
நம் உயிரைப்பற்றி,வாழ்கையைப்பற்றி
வாழ்வதைப்பற்றி,நடக்கவேண்டியதுபற்றி.....
நினைத்து வகுத்திருந்தாலும்...
விதி!இந்த விதியென்ற ஒன்று {எழுத்து}
முடிந்துவிட்டால்...
நாம் இரு,இரு வருகிறேன் எனக் காலனிடம்
சண்டைக்கு நிற்கவா?முடியும்?
போய்தான் சேரவேண்டும்.



{தலைமுறைத் தோல்வியோடு}
ஹேமா,அழகாகச் சொல்லி இருக்கிறாய்!
உயிர் உள்ள அனைவரும்,அனைத்தும்
என்றோ ஒருநாள் மடிவது உறுதி!
விஞ்ஞானம் வளர்தாலும்....
நியதியின் சுழற்சியை யாராலும்...
கட்டுப்படுத்தவோ!நிறுத்தவோ!தடைசெய்யவோ
முடியாத செயல். {நம் வாழ்க்கைமுடிந்து,
காலம்வந்து உயிர்போவதை}எந்த விஞ்ஞானம்
வளர்சியடைந்தாலும்...முடியாத ஒரு தோல்விதான்!!

இது மானிடருக்கு தலைமுறையாக....
நடக்கும் தோல்விதான்!!!


பணம்,பாசம் என்று பறந்தும்,துறந்தும்,
வெறுத்தும்.....நம் நடவடிக்க்கள்
இருந்தாலும்....
என்னதான் நாம் நேர‌ட்டவனை போட்டாலும்...
முடியாமலே...
நம் கணக்கு முடிந்தவுடன் போய்ச் சேருகின்றோம்
அதற்குள் எத்தனை ஆட்டங்கள்...?எனச்
சொல்கிறது உன் கற்பனை சரியா!மோளே?

அம்மாடி என் சின்னமூளைக்கு எட்டியது!
இதற்கு யாராவது..மாத்துயோசணை
மணி,மணியாகக் கூறுவாகளோஓ................?

கலா said...

ஆனா நல்லா தமிழ் பாவிச்சு
எழுதியிருக்கிறீங்க எனத் தெரியுது.....\\\\\\\\\\
ஐய்யய்யோ....ஹேமா,
இது ஒரு புதிய கண்டுபிடிப்பு
கின்னஸ்க்கு கொடுப்போமா?


இத் தமிழ் எனக்குப்
புரியவில்லைக் ஹேமா.....\\\\\\\
கறுப்பாக இருப்பதால் புரியவில்லைபோலும்...
பச்சத்தமிழ்,சிவப்புத்தமிழ்,நீலத்தமிழ்,
மஞ்சள்தமிழென்று........எழுதுஹேமா!
அவகளுக்க “கலர்கலராகப் “ “பார்த்துப்” ஆஆ....திரையில் என்று படிப்பதுதான் புரியும்போலும்.......

K said...

சே...சே.... ஒண்ணுமே எழுதியிருக்க மாட்டார் என்றுதான் எனக்குப் படுது.. எங்கட மணியம் கஃபே ஓனரைப்போல:)) ://///

:-)))

Yoga.S. said...

கலா said...

பிள்ளை! யார்? துணையிருப்பார்!\\\\
என்னங்கோ...
இப்படியொரு கேளவியை அந்தப் பிளளையிடம் கேட்கலாமா அப்பு?

ஏன்!ஹேமு தனியாக இருக்கப் பயமா?
அப்புச்சி!நலமுங்களா?/////வணக்கம் பாட்டிம்மா!நல்லாருக்கீங்களா?நான் நல்ல சுகமோ,சுகமா சந்தோஷமா இருக்கேன்(பெரியவ கூட பேசினாலே சந்தோஷம் வந்துடும்)அப்புறம்,பாட்டிம்மா!நான் "பிரிச்சு" எதுவும் எழுதலியே?கரெக்டா,கடவுள் "பிள்ளையார்" எழுதியிருக்கேன்!மூக்குக் கண்ணாடிய சரி பண்ணி எழுத்துக் கூட்டிப் படிச்சுப் பாருங்க!

Yoga.S. said...

கலா said...

தங்கமே!அப்புறம் வருகிறேன்.///பாட்டிம்மா,இப்போ "தங்கம்" விலை எகிறிடுத்து,தெரியுமில்ல????ஹ!ஹ!ஹா!!!!!

K said...

இடக்கையில் என்னதான்
எழுதிக்கொள்ள
முனைந்திருப்பான் பாவம்!!! //////

அதொண்டுமில்லை! ஹேமா எழுதின கவிதை ஒண்டுமே புரியேலை எண்டு எழுதியிருப்பான் :-)))

பின்ன என்னங்க? நானும் கவிதை போட்ட நேரத்தில இருந்து 17 தடவை படிச்சுப் பார்த்திட்டன்! எல்லாமே தமிழில் தான் எழுதியிருக்கீங்க! ஆனா ஒண்ணுமே புரியல! இப்படியும் கவிதை எழுதலாமான்னு ஒரே ஆச்சரியமா வேற இருக்கு! அட, இந்தக் கவிதையப் புரிஞ்சுகொள்ளுற அளவுக்கு நமக்கு கிட்னி:-)) வேலை செய்யவில்லையே என்று நினைக்கும் போது கொஞ்சம் வருத்தமாவும் இருக்கு!!

எவ்வளவு பெரிய படிப்பெல்லாம் படிச்சிருக்கும் லண்டன்காரருக்கே:-)) இந்தக் கவிதை புரியவில்லை எனும் போது, எனக்கு மட்டும் எப்படிப் புரியுமாம்?? :-)))

கலா said...

பின்ன என்னங்க? நானும் கவிதை போட்ட நேரத்தில இருந்து 17 தடவை படிச்சுப் பார்த்திட்டன்! \\\\\\\


ஹேமா எனக்குச் சிரிப்போ..
சிரிப்பு அடக்கமுடியல்ல..

நான் யோசி..யோசியென யோசிச்சன்
என்னடா ஹேமாவோட வலைபக்கம் இப்படிச் சரிந்து செங்குத்தாக் கிடக்குதே என்று!ஓஓஓஓ...இம்புட்டுத்தரம் ஓடியோடிப்
படிச்சதில...தேய்ந்து போச்சுபோல..வலைத்தளம்.அம்மாடியோ...பாவம்!
ஹேமா நான்தான் வெற்றியாளர் போல...
பாராட்டு ஒன்றும் இல்லையா..?

கலா said...

நான் "பிரிச்சு" எதுவும் எழுதலியே?கரெக்டா,கடவுள் "பிள்ளையார்\\\\

ஹய்யோ... நானும் எப்பவும் ,எந்தப்
பிளளையாரையும் பிரிக்கவில்லையே!
பிளளை!யார் ?என்றுதான் கேட்டேன்.
தம்பி! நான் கண்ணாடியெல்லாம் உங்களைப்போல...பாவிக்கிறதில்லையடா
இயற்கையோட வாழ்வதால் இந்தச் செயற்கைகளை நாடியதில்லை எண் கண்உஉஉஉஉஉநீங்கதான் ஒருக்கா மாற்றிப் பாருங்கோ{ரஜனிப்பாங்கில..}
உங்க தங்க மணிக்
கண்ணாடியை! {நான் மிக,மிக,மிக நலமே!நன்றி}

இராஜராஜேஸ்வரி said...

தலைமுறைத் தோல்வியோடு.
இடக்கையில் என்னதான்
எழுதிக்கொள்ள
முனைந்திருப்பான் பாவம்!!!

விளங்கிக்கொள்ள முயற்சிப்பான் !

Anonymous said...

மாமா ,ஹேமா அக்கா ,ரீ ரீ அண்ணா ,ரே ரீ அண்ணா ,தூசி அண்ணா வணக்கம் .....

அக்கா நலமா ........நீங்கள் லேட் ஆ வாரீன்கள் .....சீக்கிரமா வாங்களேன் ...
நாளை லீவ் ஆஆஆஆஆ அக்கா
நாளை சந்திப்பம் அக்கா

அக்கா மாமா டாட்டா

Yoga.S. said...

இரவு வணக்கம்,மகளே!!!&கலை!!!

சிவகுமாரன் said...

புரிந்து கொள்ள முயல்கிறேன்.
ஆனால் என் புரிதல் உங்கள் கவிதையின் மூலத்திற்கு சம்பந்தமில்லாமல் போனால் நான் அதற்கு பொறுப்பல்ல.

கீதமஞ்சரி said...

எதையோ எழுதிப் போகட்டும். அழிந்தபின் அதைப் பற்றிய கவலை என்ன? இருக்கும் உள்ளங்களில் பாசத்தை நிலைக்கவைக்க முடியவில்லையே! பணத்துக்கும் பாசத்துக்குமான கணக்குவழக்கு இப்படிதான் கல்லறையில் முடியநேருமோ? மனம் கனக்கிறது ஹேமா.

Yoga.S. said...

காலை வணக்கம்,மகளே!கோவிலுக்கு வெளிக்கிடுகிறேன்,இரவு சநதிப்போம்.

Yoga.S. said...

ஹேமா said...
அப்பா கோயிலுலுக்குப் போறாராம்.எங்கள் எல்லாருக்குமாச் சேர்த்துக் கும்பிட்டு வரட்டும்.இரவில் தனியாகச் சந்திப்பேன் !

அப்பா,நேசன்,கருவாச்சி,ரெவரி,துஷிக்குட்டி போய்ட்டு வாறன் !///கும்பிட்டாச்சு!போயிட்டு நல்லபடியா வாங்கோ,காத்திருக்கிறேன்!

vimalanperali said...

கனமான கவிதை,நன்றி வாழ்த்துக்கள்.பணத்தின் மீதான பிரேமை சமீப காலங்களாக அதிகரித்திருக்கிறதுதான்.அதுவும் உலக மயத்திற்கப்புறம் ரொம்பவே அதிகரித்திரிக்கிறது.

vimalanperali said...

கனமான கவிதை,நன்றி வாழ்த்துக்கள்.பணத்தின் மீதான பிரேமை சமீப காலங்களாக அதிகரித்திருக்கிறதுதான்.அதுவும் உலக மயத்திற்கப்புறம் ரொம்பவே அதிகரித்திரிக்கிறது.

Yoga.S. said...

காலை வணக்கம்,மகளே!

ஹேமா said...

அநேகமாக இந்தக் கவிதைக்கு நான் இனி விளக்கம் தரத் தேவையில்லையென்றே நினைக்கிறேன்.பின்னூட்டங்களில் சொல்லிவிட்டார்கள்.பணம் பாசத்தைக் கல்லறைக்குள் தள்ளிவிடுகிறது.அது எங்கள் வாழ்வியல்.மாற்றமுடியாது.அதைத்தான் தலைமுறைத் தோல்வி என்றும் சொல்லியிருக்கிறேன்.தலைப்பும் கூடச் சொல்கிறது’சில முடியாதவைகள்’.மாற்ற முடியாதவைகளில் இதுவும் ஒன்று !

Post a Comment