*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Sunday, May 27, 2012

ரசிகனின் நினைவில்...

கொஞ்சம் முன்வரை நினைத்திருக்கவில்லை
எனக்கும் உனக்குமான உறவுக்குள்
இப்படி....

நம்...நம் இயல்பிலேயே
கவிதையையும்...பிடித்த பாடல்களையும் சொல்லி
மலையும்...மழைமண்மணமும்
தாயும்.....தன்நாடும் அழகெனச் சொல்லி
நீ....தந்த ஒற்றைச் சிறகுகளுக்குள் பொத்தி வைத்து
ஒரு ஆயுத அமைதி ஒப்பந்தக் காலத்தில்
வைத்திருக்க முடிந்தது
இரவின் யன்னல்களுளினூடே
என்னை மட்டுமே அனுமதித்திருந்தாய் தென்றலாய்.

இப்போ...........
ஒற்றைச் சிறகைத் தாண்டி
இன்னொரு அன்புலகம் இருப்பதாய் சொல்கிறாய்
என் இயல்பில்லா அந்த உலகத்தில்
தங்க என்னால் முடியவில்லை
அந்த உலகில் வீசும் பாசத் தென்றலில்
பலமணிநேரங்கள் என் துணையில்லாமல்
உன்னியல்போடு
தனித்தியங்க முடிகிறதென்றும் சொல்கிறாய்.

நன்று நண்பனே....

ஒருவேளை முயன்றிருப்பேன்.அந்த உலகைக் கண்டிருக்காவிட்டால் என் உலகில் உன்னைப் பாதுகாத்திருக்க .நீயே வெளிக்கொண்டு வந்துமிருப்பாய் என் ஆழ்மன அன்பைக்கூட.பல பூக்கள் ஒடிக்கும் ஒரு சாவியை நான் கண்டிருக்கிறேன் உன்னிடம்.கேள்விகளும்,கருத்துக்களும்,சிக்கலில்லாப் பேச்சுக்களும்,நவீனத்துவம் இல்லாக் கவிதைகளும் வேண்டாமென உணர்வதாயும் சொல்கிறாய்.உனக்கான இயல்புலகம் அதுவெனக் கண்டிருக்கிறாய்.நீ உன் சிறகுகளோடு இணைத்திருக்கவில்லை உன் தேவைகளை.நீ அறிமுகப்படுத்திய உலகின்....அந்த மொழி சிரமமாயும் இருக்கிறது எனக்கு.

புள்ளியென்கிறாய்......கோலமென்கிறாய்.நானறிந்த ஒரு புள்ளி நீ மட்டுமே.கோடு போடத்தொடங்க நீ.....என்கிற அதே புள்ளியிலேயே முடிகிறது என் வட்டம்.வியர்த்த என் கரங்களுக்குள் நீ தந்த எத்தனை பரிசுப் பொருட்கள் என்னோடு உன்னப்போல் பேசும்.ஆனால்....நீயும் கடந்து போகிறாய்....நான்...?

அன்புப் பட்டம் ஒன்று காதுக்குள் கரையாமல் ......பெண் ஹிட்லர்......!

ஹேமா(சுவிஸ்)

57 comments:

செய்தாலி said...

....ம்(:
இதும் கடந்து போகும்

தனிமரம் said...

ம்ம் கடந்து போகும் உணர்வுகள் தாங்கும் வரம் வேண்டும் பாரதி கேட்டானே வரம் தா என்று அதேயே வேண்டுவோம் !

தனிமரம் said...

தென்றல் அனுமதிப்பது வீசத்தானே தீண்ட அல்ல என்று அவன் நினைத்து இருக்கலாம்! ஏன் மயக்கம்!!!!!!!!!!!

தனிமரம் said...

தனித்தியங்க முடிகிறதென்றும் சொல்கிறாய்.// நிச்சயம் அவனால் முடியும் என்றுதானே அவன் துனிந்து செல்கின்றான் ஏன் வாட்டம்!

கலை said...

அக்கா ஆஅ ஆஅ

கலை said...

அக்கா புரியாமல் புரிகிறது முணு தரம் படிச்சேன் ....


என்ன செய்ய குரு சொல்லுவாங்களே இதுவும் கடந்து போகும் நு ,,,


சோகங்களும் ஒரு நாள் கடந்து போகும் அக்கா /.....

கலை said...

மாமா இன்னும் வரலையா ...நீங்கள் சந்தியில் நிண்டு பேசியதைக் கண்டு தான் நானே வந்திணன் ...இன்னும் மாமா வைக காணும் ....

கலை said...

மணி அண்ணா வந்தால் மணி அண்ணாவின் விளக்கவுரை அறிந்து இன்னும் நிறைய புரிந்து இருக்கலாம் ...

சிட்டுக்குருவி said...

Naan vanthen but ennala padikka mudiyalla coz en mobile le unga pathivu fulla white clour la thaan theriyuthu night kku padikiren ok

T.N.MURALIDHARAN said...

//புள்ளியென்கிறாய்......கோலமென்கிறாய்.நானறிந்த ஒரு புள்ளி நீ மட்டுமே.கோடு போடத்தொடங்க நீ.....என்கிற அதே புள்ளியிலேயே முடிகிறது என் வட்டம்.வியர்த்த என் கரங்களுக்குள் நீ தந்த எத்தனை பரிசுப் பொருட்கள் என்னோடு உன்னப்போல் பேசும்.ஆனால்....நீயும் கடந்து போகிறாய்....நான்...?//
காதல் குவிந்திருக்கும் வரிகள்,
மெல்லிய சோகம் இழைந்தோடும்
கவிதை

கணேஷ் said...

போன முறை கவிதையை புரிந்து கொள்ள கடினமா இருந்துச்சுன்னு நிறையப் பேர் சொன்னதால எளிமையா எழுதிட்டீங்களா ஃப்ரெண்ட். ஆனால் இதுவும் பிரமாதமாத்தான் இருககு. மென்சோகம் தாங்கிய இந்தக் கவிதை மனதுக்கு இதம்.

நிலாமகள் said...

காத‌லின் மாய‌த்தில் பிரிவெனும் சோக‌மும் சுக‌மே... அது துரோக‌ம் க‌ல‌வா வ‌ரை! அதிர்வும் வ‌லியும் குறைந்த‌பின் சிந்தை ச‌ரியாகி போகும் பாதை தெளிவாகும் தோழி!

வரலாற்று சுவடுகள் said...

அருமை ..!

ஸ்ரீராம். said...

சோகமும் ஒரு சுகம்தான்... கவிதை தருகிறதே...!

மாத்தியோசி - மணி said...

வணக்கம் ஹேமா!

இந்தியத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக என்பது போல.....,

ஹேமாவின் கவிதை வரலாற்றில் முதல் முறையாக, எல்லோருக்கும் சட்டெனப் புரிந்த அழகான கவிதை இது!

நல்லா வந்திருக்கு! :-))

மாத்தியோசி - மணி said...

அன்புப் பட்டம் ஒன்று காதுக்குள் கரையாமல் ......பெண் ஹிட்லர்......! ///////

ஸப்பா.... முடியல! ஹேமாவைப் பார்த்து பெண் ஹிட்லர் என்று சொன்ன அந்த மாபாவி யார்?

இப்பவே கல், தடி, கம்பு எல்லாவற்றையும் எடுங்கள் ஆளை உண்டு இல்லை என்று ஆக்குவோம்!

ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்! இப்படிச் சொல்ல பயமா இருக்கு! அப்புறம் கடைசியில் நீங்கள் சொல்வீர்கள் - இது கற்பனைக் கவிதை என்று!

ஹா ஹா ஹா நமக்கு இந்த அவமானம் தேவையா???

மாத்தியோசி - மணி said...

ஆண்களை ஒரு கட்டுக்குள் வைத்திருக்க பெண்கள் காலம் முழுமைக்குமே போராடத்தான் வேண்டும் போல கிடக்கு!

பாருங்கள் கண்ணகி காலத்தில் இருந்து இதுதான் வரலாறு !!!

Yoga.S. said...

கவி வரிகளில் பாரம் தெரிகிறது.எல்லாம் அவன் செயல்!

Ramani said...

சோகத்தின் சுகம் சொல்லும் கவிதை அருமை
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்

Ramani said...

Tha.ma 3

Rathi said...

ஹேமா, உங்கள் திறமைக்கு பெருமைப்படுகிறேன்.

தத்துவங்களால்
தங்களை
தகவமைத்துக்கொண்டோர்க்கும்
புரிவதில்லை
பாதிக்கப்பட்டவனின்
இழப்பில் உணரப்படும்
இருப்பின் வலி

இதை கவிதை சொல்வதாய் புரிகிறது.

இங்கே தேவைகளுக்கேற்ப மாறும் அவரவர் இயல்புலகம. இதுவும் தக்கன பிழைக்கும் தத்துவம்!

மகேந்திரன் said...

மென்சோகம் இழையோடினாலும்
மனதிற்கு திடம் தரும் படைப்பு...
கடந்துபோகும் துன்பங்களை தாங்கி நிற்க
திறம் மிகுந்த மனம் வேண்டும்..
அதைத் தாங்கிக்கொண்டு றன்னால் தனித்தியங்க முடியும்
என்ற எண்ணம் அவ்வளவு சாதாரணமாக கிடைத்து விடுவதில்லை...

அருமையான படைப்பு சகோதரி...

athira said...

கவித..கவித... என்னாச்சு ஹேமா... வாறன் படித்துக் கொண்டிருக்கிறேன்ன்ன்.. இம்முறை நல்லாவே புரியுதெனக்கு....

athira said...

//மாத்தியோசி - மணி said...
வணக்கம் ஹேமா!

இந்தியத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக என்பது போல.....,

ஹேமாவின் கவிதை வரலாற்றில் முதல் முறையாக, எல்லோருக்கும் சட்டெனப் புரிந்த அழகான கவிதை இது!

நல்லா வந்திருக்கு! :-))///

repeat!!!!!

athira said...

அங்கு “கோடு” கதையிலும் காதல் திசைமாறிப்போச்சு... இங்கேயும் காதல் திசைமாறிப்போச்சே... எல்லாம் நன்மைக்கே.. இதுவும் கடந்து போகும்...

அழகாக கவிதைபோலவும் இல்லை, கதை போலவும் இல்லை, இடையில நன்றாக இருக்கு.

Yoga.S. said...

நேசன் பதிவு போட்டிருக்கிறார்,மகளே!

விச்சு said...

//இரவினில் என்னை மட்டும் அனுமதித்தாய் தென்றலாய்// நீயும் கடந்து போகிறாய்... யாரென்று புரியாவிட்டாலும் உங்களின் ஆதங்கமும் ஆற்றாமையும் புரிகிறது. இதுவும் கடந்து போகும்...

விச்சு said...

திடீரென எதுக்கு எல்லோருக்கும் புரியிற மாதிரி எழுதிட்டீங்க? உங்களின் முகநூல் பக்கம், மெயில் ஐடி எதுவும் தெரியவில்லை.

எஸ்தர் சபி said...

எல்லா துன்பங்களும் ஓர் நாள் கடந்து போகும் அக்கா...
முதலில் படித்தேன் புரியவில்லை மீண்டும் படித்தேன் அறிந்தேன்....

சத்ரியன் said...

ஹெலோ ஹிட்லர்,


ஹிட்லர் அவரது அரசியல் பிரவேசத்துக்கு முந்திய காலத்தில் தனக்கில்லா விட்டாலும், தனது அறையில் தங்கியிருக்கும் எலிக்கு தவறாமல் உணவிட்டு வந்ததாக அவரது வாழ்க்கை வரலாற்று நூலில் படித்திருக்கிறேன். ஆக அவனிடம் நுண்ணிய அன்பு இருந்ததற்கான அடையாளம் அது. ஆனால் யூதர்களைக் கொல்லும் விசயத்தில் மட்டும் எந்த சமரசத்திற்கும் உடன்படாது கொடூரம் புரிந்தவன்.

ஹேமாவிற்கு

”பெண் ஹிட்லர்” என அன்பு பட்டம் தந்தவனுக்கு மட்டும் தெரிந்திருக்கும், சமரசத்திற்கு இசையாத ”உங்களின் பிடிவாதம்.”

Yoga.S. said...

காலை வணக்கம்,மகளே!

Seeni said...

MMMM...

SATHRIYAN SONNATHU!
SARITHAAN!

சசிகலா said...

எல்லாம் கடந்து போகும் . பிரிவில்லாக் காதல் காதலே இல்லை . பிரிவும் கடந்து போகும் .

சே. குமார் said...

இதுவும் கடந்து போகும்.

யாருக்கும் படிபடாத உங்கள் பிடிவாதம் பெண் ஹிட்லராய் பார்த்த உயிருக்கு புரிந்திருக்கும் அல்லவா?

இராஜராஜேஸ்வரி said...

புள்ளியென்கிறாய்......கோலமென்கிறாய்.நானறிந்த ஒரு புள்ளி நீ மட்டுமே.

புள்ளியிட்டு அழகாய் கோடுகளால் அருமையான கோலப் பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..

Yoga.S. said...

மாலை வணக்கம்,மகளே!

Kanchana Radhakrishnan said...

அருமை!

Yoga.S. said...

காலை வணக்கம்,மகளே!இன்றைய பொழுது நன்றாக அமைய ஆண்டவன் துணை இருப்பார்!

சிட்டுக்குருவி said...

அட இந்த மேட்டர தானா எழுதியிருந்தீங்க,,,,//

நமக்கும் கொஞ்சம் போல புரிஞ்சுதுங்கோ....

சிட்டுக்குருவி said...

ஆனா ஒண்டு புரிஞ்சது என்ன எண்டு மட்டும் கேட்டுராதீங்கோ...:(

AROUNA SELVAME said...

என் இனிய தோழி ஹேமா...

“அன்புப் பட்டம் ஒன்று காதுக்குள் கரையாமல்....“

என் மனத்தில் உங்கள் கவிதை ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கிறது.

ஜெயா said...

வியர்த்த என் கரங்களுக்குள் நீ தந்த எத்தனை பரிசுப்பொருட்கள் என்னோடு உன்னைப்போல் பேசும். ஆனால்...நீயும் கடந்து போகிறாய்... நான்.? ஹேமா அழகான வரிகள். பாராட்டுக்கள்.....

Yoga.S. said...

காலை வணக்கம்,மகளே!

ரெவெரி said...

நலமா கவிதாயினி?

வழமைக்கு மாறாக புது பாணியில்...

இதுவும் நல்லாத்தான் இருக்கு..

இரண்டுமே நன்று கவிதாயினி....

ENTER BUTTON வேலை செய்கிறது தானே?(Just Checking...-:))

VijiParthiban said...

புள்ளியென்கிறாய்......கோலமென்கிறாய்.நானறிந்த ஒரு புள்ளி நீ மட்டுமே.கோடு போடத்தொடங்க நீ.....என்கிற அதே புள்ளியிலேயே முடிகிறது என் வட்டம்.வியர்த்த என் கரங்களுக்குள் நீ தந்த எத்தனை பரிசுப் பொருட்கள் என்னோடு உன்னப்போல் பேசும்.ஆனால்....நீயும் கடந்து போகிறாய்....நான்...?


மிகவும் அற்புதம்.....

Yoga.S. said...

காலை வணக்கம்,ஹேமா!நலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன்,

ரெவெரி said...

காலை வணக்கம்...

மனம் தளராதீர்கள் ஹேமா..அப்பா விரைவில் உடல் நலம் பெறுவார்...என் பிரார்த்தனைகளும் உங்களுடன்...

Yoga.S. said...

காலை வணக்கம்,ஹேமா!

ஹேமா said...

செய்தாலி...முதல் வருகைக்கி நன்றி !

தனிமரம்...நேசன் ஒரு குழந்தையின் ஏக்கம்தான் காதலிலும்.விட்டுக்கொடுக்க முடியாத இயலாமை !

கலை...சோகம் என்றில்லை.சில மறக்கமுடியாத நிகழ்வுகள்.அதோடு என் சூழலும் அப்பிடி ஆகிறது.அக்கா எப்பவும் சந்தோஷமாத்தானே இருக்கேன்.அதுவும் கலைக்குட்டியோட கதைக்கேக்குள்ள,அப்பா நேசனோட கதைக்கேக்குள்ள நல்ல சந்தோஷமாயிடுவன் !

சிட்டுக்குருவி...கைத்தொலைபேசியில் வாசிக்கும் ஆர்வம் .மேட்டர் கொஞ்சம் புரிஞ்சுபோச்செண்டும் சொல்லிட்டீங்க.அதுவரைக்கும் சந்தோஷமாயிருக்கு !

முரளீதரன்...வரவுக்கும் அன்பான கருத்துக்கும் நன்றி !

கணேஸ்...ஃப்ரெண்ட்...மெல்லிய சோகமும் இதமெண்டு சொல்லிட்டீங்க.அதுவே இதமாயிருக்கு !

நிலாமகள்...காத‌லின் மாய‌த்தில் பிரிவெனும் சோக‌மும் சுக‌மே... அது துரோக‌ம் க‌ல‌வா வ‌ரை.ம்ம்... !

வரலாற்றுச் சுவடுகள்...நன்றி தம்பி வருகைக்கு !

ஸ்ரீராம்...என்னை உற்சாகப்படுத்தும் ஒரு தொடரான உள்ளங்களில் நீங்களும் ஒன்று...நன்றி எங்கள் புளொக்குக்கு !

மாத்தியோசி- மணி...இல்லையே என் கவிதைகளுக்குள் சந்தோஷமான கவிதைகள் இருக்கே.ஆனால் குறைவு.’பொம்பிளை ஹிட்லர்’ ர்ண்டு ஒருக்கா சொல்லிப்பாருங்கோ நீங்களே...உண்மையா சொல்லமாட்டன் கற்பனையெண்டு....இது உண்மையிலும் உண்மை.வலித்த உண்மைகளை எழுத்தி வைச்சிட்டால் கொஞ்சம் பாரம் குறையும்.அதுதான் எனக்கு ஆறுதல்.ஏனெண்டா என் எழுத்துக்கள்போல நானும் அநாதை !

யோகா....அப்பா..எனக்கென்ன குறை.உங்களின் அன்பு முழுமையாகக் கிடைத்ததே மகிழ்ச்சி எனக்கு !

ரமணி...உங்கள் அளவுக்கு முடியவில்லை ஐயா.என் எணங்களை ஊக்கப்படுத்தும் உங்களுக்கும் நன்றி !

ரதி....//தேவைகளுக்கேற்ப மாறும் அவரவர் இயல்புலகம். இதுவும் தக்கன பிழைக்கும் தத்துவம்!//உலகத்தைச் சரியாகவே புரிஞ்சு வச்சிருக்கீங்க ரதி.எங்க என்ன கூடுதலாகக் கிடைக்குதோ அங்குதான் வலிமையும் ஈர்ப்பும் அதிகமாகிறது.முடியாதவர்கள் இயலாமையால் புலம்பித் தீர்க்கவேண்டியதுதான்,.ஹிஹி என்னைப்போல.அன்புக்கும் இது பொருந்துகிறது.நல்ல கவிதைகளுக்குள் காணாத உங்களை இங்கு கண்டு அதிர்வான சந்தோஷமப்பா !

மகேந்திரன்...தனித்தியங்கும் தந்தபடியால்தான் ...ஒன்றைத் தந்து ஒண்றைப் பறிப்பானாம் இறைவன்.துணிவையும் தாங்கும் இதயத்தையும் நிறையவே தந்திருக்கிறான்போலும்.நன்றி !

அதிரா...//அழகாக கவிதைபோலவும் இல்லை, கதை போலவும் இல்லை, இடையில நன்றாக இருக்கு.//அதிரா...பிரிஞ்சுபோச்சா.சந்தோஷம்.இதற்கு முந்தின கவிதையிலயும் வந்து ‘தமிழ் தமிழ்’எண்டு புகழ்ந்தமாதிரிச் சத்தம்கேட்டது.எனக்கு ஒரே வெக்கமாயிருக்கு.நன்றி அதிரா!

விச்சு...முகநூலில் நான் இல்லையே..ஹிஹிஹிஹி மேல பாருங்கோ...அதிரா-பூஸார்.அவைக்குத் தெரியாமல் தருவன்.உங்களைத் தேடினன்.அகப்படேல்ல !

எஸ்தர்...சின்னப்பிள்ளைகளுக்கு விளங்காமலே இருக்கட்டும்.சுகம்தானே சகோதரி !

ஹேமா said...

சத்ரியன்...ஹெலோ ஹிட்லர்....சொல்லுங்கோ சத்ரியன்....ஹிட்லரின் அன்பும் கருணையும் சொல்லி பிடிவாதம் தேவையெண்டும் சொல்லிடீங்கள்.//”பெண் ஹிட்லர்” என அன்பு பட்டம் தந்தவனுக்கு மட்டும் தெரிந்திருக்கும், சமரசத்திற்கு இசையாத ”உங்களின் பிடிவாதம்.”//எனக்குத் தேவையானதுக்கு அடம்பிடித்தால்....பட்டம் வைப்பீங்களோ.கண்ணைத் தோண்டி காக்காவுக்கு... !

சீனி...வாங்கோ.வருகைக்கு மிக நன்றி !

சசிகலா...எல்லாமே கடந்து போய்க்கொண்டுதானிருக்கிறது நினைவுகளைத் தவிர !

சே.குமார்....//யாருக்கும் படிபடாத உங்கள் பிடிவாதம் பெண் ஹிட்லராய் பார்த்த உயிருக்கு புரிந்திருக்கும் அல்லவா?//நிச்சயம் நிச்சயம் !

இராஜராஜேஸ்வரி...புள்ளியென்கிறாய்......ம்ம்ம்ம் நன்றி ஆன்மீகத் தோழி !

காஞ்சனா...அன்ரி வாங்கோ.ஐயாவும் நீங்களும் சுகம்தானே !

அருணா செல்வம்...புரியும் கவிதைகளும் இடைக்கிடை வரும் நண்பரே.உங்கள் கவிதைகளின் ரசனையே தனி !

ஜெயா...ரசித்த வரிகளுக்குள் அத்தனை வலியும் அடக்கம்.சுகமா தோழி !

ரெவரி....என் தளத்தில் குறைகள் இருக்கா.பார்ப்போம்.உதவி தேவை ரெவரி.கவிதையை ரசித்தமைக்கு மிக்க நன்றி.ம்ம்ம்....அப்பா...இபோதைக்குச் சுகம் ரெவரி !

விஜி பார்த்திபன்...வாங்கோ சகோதரி.தொடர்ந்துகொள்வோம் !

அம்பாளடியாள் said...

ஆகா!...ஓர் அழகிய காதல் கவிதை
மனதை சற்று வாட்டிச் செல்கிறதே
எப்படி உள்ளீர்கள் சகோதரி?..நான்
மீண்டும் என் வலையுலகத்திற்கு
வந்துவிட்டேன் உங்கள் அனைவருடனும்
உரையாடி மகிழ.மிக்க நன்றி பகிர்வுக்கு .

அன்புடன் மலிக்கா said...
This comment has been removed by the author.
அன்புடன் மலிக்கா said...

உங்கள் கவிதைகளின் ரசனையே தனி !
மிக அருமையான கவிதை தோழி..

Yoga.S. said...

காலை வணக்கம்,ஹேமா!!!நலமா?கவிதையை எதிர்பார்த்து............................

கிணத்து தவளை said...

//ஏனெண்டா என் எழுத்துக்கள்போல நானும் அநாதை !//
ஒரு போதும் இல்லை ....
இனி, நீங்களே நினைத்தாலும் முடியாது ....

ஹேமா said...

தவளையாரே....எனக்கு உங்களை நல்லாவே தெரியும்.நீங்களே அநாதையெண்டால்....நான் ?!.

தவளைக்குட்டிகளோடு கனகாலம் வாழுவீங்கள்.கொஞ்சம் கிணத்தைவிட்டு வெளில வாங்கோ.உலகம் பெரிசு.வந்திருக்கிறீங்களெண்டும் நம்புறன்.அதனால்தானே....ஒரு அரச மரம் அரபுநாட்டில முளைக்காமப்போச்சு.

வாழ்த்தும் வசந்தமும் எப்பவும் உங்களோட இருக்கும்....தூரத்து நிலவாய் தென்றலாய் உறவாடும் எப்போதும்.கவலைகள் வேண்டாம்.சூரியன் வராவிட்டால் நிலவுக்கும் வெளிச்சம் போதாது....தெரியுமோ !

Sweety said...

hii.. Nice Post

Thanks for sharing

For latest stills videos visit ..

More Entertainment

www.ChiCha.in

Post a Comment