கட்டட முகப்பில்
உயர்த்தப்பட்ட
கொடியெனக் காம நெடி
பிரிந்த கணவனுக்காய்
கட்டியணைத்து
முத்தம் தந்தவர்களில்
எவரும் அனுதாபிகளல்ல
பயந்து பயந்து மருண்ட
ஒரு விழி உரசுகிறதவளை
தெரிந்துகொண்டதில்
சின்னவனாம் பத்தாண்டு.
காதல் எரிக்க
காமம் அதை முந்த
கறுப்பு மரமேறி
யன்னல் க(ள்)ல் நுழைந்து
இறங்கினான் சின்னவன்
ஆடையில்லா அவளருகில்
பார்த்தானாம் அன்றொருநாள்
அந்தப்புர அந்தியில்
முற்பிறவியில் கணவனென்றான்.
தொடர் இரவில்....
"அதிரவைக்கிறாய் என்னுடலை
விடத்திற்கு நீயே ஒளடதம்
உயிர்த்தெழ உத்தரவாதம்
உந்தி வெளியேற்றும்
என் ஒரு துளி விந்தும்
உன் காதலுமென"
இரத்தம் கீறுகிறான்.
அத்துமீறலென
அலற அலற அடிக்கிறார்கள் அவளை
அதன்பின் அறையத்தொடங்குகிறாள்
அவளை அவளே!!!
உயர்த்தப்பட்ட
கொடியெனக் காம நெடி
பிரிந்த கணவனுக்காய்
கட்டியணைத்து
முத்தம் தந்தவர்களில்
எவரும் அனுதாபிகளல்ல
பயந்து பயந்து மருண்ட
ஒரு விழி உரசுகிறதவளை
தெரிந்துகொண்டதில்
சின்னவனாம் பத்தாண்டு.
காதல் எரிக்க
காமம் அதை முந்த
கறுப்பு மரமேறி
யன்னல் க(ள்)ல் நுழைந்து
இறங்கினான் சின்னவன்
ஆடையில்லா அவளருகில்
பார்த்தானாம் அன்றொருநாள்
அந்தப்புர அந்தியில்
முற்பிறவியில் கணவனென்றான்.
தொடர் இரவில்....
"அதிரவைக்கிறாய் என்னுடலை
விடத்திற்கு நீயே ஒளடதம்
உயிர்த்தெழ உத்தரவாதம்
உந்தி வெளியேற்றும்
என் ஒரு துளி விந்தும்
உன் காதலுமென"
இரத்தம் கீறுகிறான்.
அத்துமீறலென
அலற அலற அடிக்கிறார்கள் அவளை
அதன்பின் அறையத்தொடங்குகிறாள்
அவளை அவளே!!!
("மெலேனா" என்கிற பிரெஞ் படத்தின் தாக்கம்)
ஹேமா(சுவிஸ்)
Tweet | ||||
34 comments:
தங்களின் தாக்கம் என்னையும் தாக்கியது..
சில ஆண்டுகளுக்குமுன்
இப்படத்தை பார்த்துவிட்டேன்
உங்கள் வரிகளை வாசித்தபோது
நினைவுக்கு வந்தது இப்படத்தின் கடைசி
கூரமான கோரக் காட்சி
இப்படத்தின் உங்கள் தாக்கத்தை
வரிகளில் உணர முடிந்தது
ஐயோ....படம் பார்த்த பாதிப்பா...காதல் தவிப்பில் காம எரிப்புகள்!
நடைமுறைதான் சினிமா ஹேமா!
ஏன்! நம் தமிழர்களிடம்கூட இப்படி நடக்கிறதே!நடக்கும்போது மற்றமொழிக்காரர்களுக்கு இது சர்வசாதாரணம்.
இருந்தாலும்....உன் துணிச்சல் வரிகளுக்கு ஒரு சபாஷ்.
ஸ்ரீராம்..போட்ட ஜயோஓஓஓஓஓஓஓஓஓஓஓ சத்தம் இங்குவரைக் கேட்டதாக ஒரு தூது அனுப்பிவிடு தோழி!
ஹேமா உங்கள் கவிவரிகளின் தாக்கம் இதுவரையில் பார்க்காத அந்த மேலேனா படத்தை தேடிப்பிடித்துப் பார்க்கவேண்டும் என்ற ஆவலைத்தூண்டிவிட்டது.
ஓ! படம் பாத்தாச்சா! படத்தின் சிறு பகுதியைக் கவிதையாக்கி இருக்கிறீர்கள்! நல்லாயிருக்கு!
என்னடா நம்ம ஹேமா விமர்சனத்தில இறங்கியாச்சுன்னு நினைச்சேன்...
படம் பாடாய் படுத்திட்டோ...?
அப்படியே உணர்ச்சியை எங்களுக்கு அனுப்பி விட்டீங்க கவிதை மூலம்...
//ஸ்ரீராம்..போட்ட ஜயோஓஓஓஓஓஓஓஓஓஓஓ சத்தம் இங்குவரைக் கேட்டதாக ஒரு தூது அனுப்பிவிடு தோழி!//
நான் சின்ன 'ஐயோ' தானே சொன்னேன்! அட, பின்னூட்டப் பெட்டி டைப் மாறி விட்டதே... !
அதற்குள செய்தி அனுப்பிவிட்டாளா?"களளி. இதைத்தான் சுடச்சுட என்கிறதோ!
கவனம் கை சுடப்போகிறது
டைப் மாறி விட்டதே\\\\
நானா?மாற்றினேனா? என்ன{னை}மாதிரி?நீங்களும் மாறிவிட்டீர்களா?
ஹேமா.பொண்ணுக்கு என்ன பெயர் சூட்டலாம்? ஸ்ரீராகினி பரவாயில்லையா ஹேமா?
முன்னொரு சமயம் ‘சினிமா பாரடைஸோ’ பாத்த கையோட அதே டைரக்டராச்சேன்னு டிவிடி வாங்கிப் பாத்த படம் இது. அப்போ படம் எனக்குள்ள ஏற்படுத்திய பாதிப்புகளைச் சொல்ல எனக்குத் தெரியல. ஆனா, கவிதாயினி ஹேமாவால மனதைப் பிசையும் கவிதையா சொல்லிட முடிஞ்சது. ரொம்பவே ரசிச்சேன் ஹேமா!
உங்கள் கவிதை வரிகள் மனதை மிகவும் பாதிக்கிறது. முடிவு படம் பார்க்க தூண்டவில்லை.
உணர்வுகளைத் தூண்டும் வகையில் கவிதை அமந்திருக்கிறது.அருமை அக்கா.
kavithai nalla irukkunga akka
இரவு வணக்கம்,மகளே!பிரான்சில் இருந்து கூட இந்தப்படம் பார்க்கவில்லை!உங்கள் கவி வரிகளில் படம் தெரிகிறது,பார்க்கவே வேண்டாம்!
இன்று போல் நாளையும் விடியட்டும்,கலகலப்பாக!இரவு வணக்கம் எல்லோருக்கும்!!!!!
அப்பா...இரவும் அழகு விடியலும் அதேபோல.இரவின் வணக்கங்கள் !
அழகான உணர்வுள்ள கவிதை ஹேமா! அதென்னவோ தெரியவில்லை, எந்த உணர்வாக இருந்தாலும் உங்கள் கவிதைகளில் ஒருபடி மேலே தான் இருக்கும்! பசிக்கும் போது உணர்வுகளையா சாப்பிடுகிறீர்கள்? :-)
மெலேனாவின் யூ டியுப் லிங்கினை கவிதைக்கு கீழே இணைந்த்திருந்தால் சிறப்பாக இருந்திருக்குமே - நான் கூட அந்தப் படத்தை இன்னமும் பார்க்கவில்லை!!
கட்டட முகப்பில்
உயர்த்தப்பட்ட
கொடியெனக் காம நெடி ////
இந்த உருவகம் நல்லா இருக்கு! மேலும் “ கட்டட முகப்பில்” என்ற வசனம் இரு பொருள் தருவதாக உணர்கிறேன்! ஏனையவர்களுக்கு எப்படியோ??
சிறு கவிதையில் வார்த்தைகளில் விளையாடுகிறீகள் ஹேமா.மெலேனா பார்க்கவில்லை. ஆனால் உங்கள் கவிதையின் மூலம் அதன் வீரியம் புரிகிறது.
நான் சினிமாப் பாக்கறதே ரொம்பக் கம்மி. உங்களோட கவிதை வரிகள்ல மெலேனா பத்திப் படிச்சது மனசைத் தொட்டுதுங்க. அப்பப்ப இதுமாதிரி நீங்க பாக்கறதையும் Share பண்ணிக்குங்க, Please.
மனசுக்குள் தவித்த படி
ஏராளமான ”மெலனா”-க்கள் நம்மிடையே இருக்கிறார்கள்.
உயிர்களின் இயற்கைத்தன்மை வேறு என்பதை நாம் என்றென்றைக்கும் புரிந்துக்கொள்ள போவதில்லை.
புண்பட்ட மனதின் புரையோட்டின் மீது சமூகக் கட்டமைப்பை எழுப்பியிருப்பவர்கள் நாம். எது சரி, எது தீங்கு என்பதை பிரித்தறிவதும் மிகச் சிரமம்.
கட்டாயப் படுத்தியும், காயப்படுத்தியும், பயமுறுத்தியும் தான் சமூக ஒழுக்கத்தை நிறுவியும், காப்பற்றியும் வருகிறார்கள் என்பதை,
உங்கள் கவிதையின் இறுதி வரிகள்
எளிமையாக உணர்த்திச் செல்கிறது.
பாராட்டுக்கள், ஹேமா.
காலை வணக்கம்,ஹேமா!!!
உங்கள் கவிதை அனைத்தும் அருமையாய் இருக்கிறது
keeri vittathu-
ungalathu varikal!
முறை மீறிய தவறான கற்பிதங்களும் மீறல் களும் போலித்தனங்களும் கற்பையும் பின்ன எல்லாவற்றையும் கவு கேட்கலாம் பாலியல் கண்ணோட்டங்கள் இங்கு சரியென பாலியல் தோழிகள் போல எல்லா அரசுகளும் சரியென தொட்டு அணைக்கலாம் ம் சரி உங்கள் கவி பிறமொழி படங்களின் மொழிபெயர்ப்பாக நல்ல ஆக்கம் ...
தவிப்பின் வரிகள் எங்கோ இழுத்துச் செல்கின்றன .
பட்ம் பார்த்தபோது ஏற்பட்ட உணர்வினை
அப்டியே தங்கள் பதிவில் கண்டு வியந்தேன்
எல்லோராலும் ஆகக்கூடியதில்லை இது
அருமையான பதிவு
தொடர வாழ்த்துக்கள்
வன்முறையின் பின்னே அவளே வன்முறைக்கு தீர்வு சொன்னாளா ஜோசிக்க வைகும் முடிவு மிலானா வந்த புதிதில் பார்த்தேன் நேற்று லிங்கு தரும் போது வெற படமோ என்று எண்ணி விட்டேன்.
காதல் எரிக்க
காமம் அதை முந்த இன்றை காதல் இப்படித்தான் போலும் அவசரத்தில் பல ஜன்னல் ஏறும் காதலர்கள்!
*****முகத்தில் தெரியும் பாவனைகளை விட இதயத்தில் இருக்கும் உணர்வுகளை மதிப்போம்.ஏனென்றால் பாவனைகள் சம்பிரதாயம்.உணர்வுகள் உண்மை. !!!***** உண்மை தான் ஹேமா
FB அட்டர்ஸ் DURAISWAMY MARAPPAGOOUNDER CAN YOU GIVE YOUR FACEBOOK ID
அருமையான படம்.., அருமையான கவிதை.... படத்தின் முன்பாதியில் மெலேணாவை அந்த சிறுவன் சைக்கிளில் ஃபாலோ பண்ணும் காட்சியிலிருந்து கடைசி காட்சி வரை ஒண்ணரை மணி நேர சினிமாவை சிறு கவிக்குள் அடக்கி விட்டீர்களே.... உணர்வுகள் சிதையாமல்... பலே.....
படங்களின் தாக்கத்தில் வரும் கவிதைகள் என்பது அரிய நிகழ்வு!
முன்பு இப்படம் பற்றிய விமர்சனம் படித்திருக்கிறேன், விரைவில் பார்க்கனும்!
Post a Comment