*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Thursday, April 14, 2011

பங்கு நீ சித்திரையில்...

வெப்பம் சிதறும்
வெள்ளை வானவில்லில்
இன்றைய நாளில்தான்
இருவருக்குமான
உரையாடல்கள் ஆரம்பித்து
ஆன்மாக்கள்
கை கோர்த்துக்கொண்டன.

மற்றைய நிறங்களை
நீயே நிறமற்றதாய்
உருமாற்ற இணங்கியுமிருந்தாய்.

நிராகரிக்காத உன் நேர்மையை
சுட்டுக் காய்ச்சிய நெருப்பிலிட்டு
சம்மட்டியாலும் அடித்தே
உறுதியாக்கிக்கொண்டேன்.

சறுக்காத உன் வார்த்தைகள்
சிவந்த தீயின் கண்களால்
உருமாற்றும்
கொல்லனின் உலைக்களத்தில்
அழகாய் வார்த்தெடுத்த
நெடிந்து அகன்ற கூரான வேல்போல!!!

ஹேமா(சுவிஸ்)

என் எல்லா நண்பர்களுக்கும் இனிய சித்திரைப்புத்தாண்டு வணக்கங்கள் !

56 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

சித்திரை திருநாள் வாழ்த்துக்கள்..

நிரூபன் said...

பங்கு நீ சித்திரையில்..//

வணக்கம் சகோதரம்,
கவிதையின் தலைப்பே...உருவகத்தால் மனதைக் கொள்ளை கொள்கிறதே.

நிரூபன் said...

வெப்பம் சிதறும்
வெள்ளை வானவில்லில்
இன்றைய நாளில்தான்
இருவருக்குமான
உரையாடல்கள் ஆரம்பித்து
ஆன்மாக்கள்
கை கோர்த்துக்கொண்டன.//

பல வருடங்கள் பின்னோக்கிப் போறீங்க.. ஞாபகங்களை மீட்டுவதற்காக....

வானவில் மழை விட்டதன் பின்னர் தானே வானில் தோன்றும். அப்படியாயின் வானவில்ல் தோன்றும் நேரத்தில் வெப்பம் இருக்காதே, குளிர் நிறைந்த ஈரப்பதன் தானே வானில் இருக்கும். இங்கே வெப்பம் சிதறும் வானவில்லில் என ஒன்றை உயர்த்தி, அளவற்ற கற்பனை மூலம் கூறியிருக்கிறீர்கள்.

இது தற் குறிப்பேற்ற அணி....

கற்பனைக்கு ஒவ்வாத விடயம் எனினும் இலக்கியத்தின் பார்வையில்.... உள்ளார்ந்த பொருள் கவிதைக்கு உரமூட்டுகிறது.

நிரூபன் said...

மற்றைய நிறங்களை
நீயே நிறமற்றதாய்
உருமாற்ற இணங்கியுமிருந்தாய்.//

ஏழு வர்ணங்கள் வானவில்லில் தோன்றும், அப்படியாயின் மீதி நிறங்களை மாற்றும் சக்தி காதலுக்கு உண்டா.... நீங்கள் கொடுத்து வைத்த ஆட்கள்...

Unknown said...

பிரமாதம்...

நிரூபன் said...

பங்கு நீ சித்திரையில்..//

வணக்கம் சகோதரம்,
கவிதையின் தலைப்பே...உருவகத்தால் மனதைக் கொள்ளை கொள்கிறதே.


//
வெப்பம் சிதறும்
வெள்ளை வானவில்லில்
இன்றைய நாளில்தான்
இருவருக்குமான
உரையாடல்கள் ஆரம்பித்து
ஆன்மாக்கள்
கை கோர்த்துக்கொண்டன.//

பல வருடங்கள் பின்னோக்கிப் போறீங்க.. ஞாபகங்களை மீட்டுவதற்காக....

வானவில் மழை விட்டதன் பின்னர் தானே வானில் தோன்றும். அப்படியாயின் வானவில்ல் தோன்றும் நேரத்தில் வெப்பம் இருக்காதே, குளிர் நிறைந்த ஈரப்பதன் தானே வானில் இருக்கும். இங்கே வெப்பம் சிதறும் வானவில்லில் என ஒன்றை உயர்த்தி, அளவற்ற கற்பனை மூலம் கூறியிருக்கிறீர்கள்.

இது தற் குறிப்பேற்ற அணி....

கற்பனைக்கு ஒவ்வாத விடயம் எனினும் இலக்கியத்தின் பார்வையில்.... உள்ளார்ந்த பொருள் கவிதைக்கு உரமூட்டுகிறது.


மற்றைய நிறங்களை
நீயே நிறமற்றதாய்
உருமாற்ற இணங்கியுமிருந்தாய்.//

ஏழு வர்ணங்கள் வானவில்லில் தோன்றும், அப்படியாயின் மீதி நிறங்களை மாற்றும் சக்தி காதலுக்கு உண்டா.... நீங்கள் கொடுத்து வைத்த ஆட்கள்...

நிராகரிக்காத உன் நேர்மையை
சுட்டுக் காய்ச்சிய நெருப்பிலிட்டு
சம்மட்டியாலும் அடித்தே
உறுதியாக்கிக்கொண்டேன்.//

இது பெண்களுக்கே உரிய குணத்தினைப் பூடகமாய்ச் சொல்வது போன்று உள்ளது. ஆண்கள் தட்டிக் கழித்தாலும் ஆவலுடன் அதனைப் பொருட்படுத்தாது அன்பு மழை பொழியும் உள்ளத்தின் உணர்வுகள் இங்கே வெளிப்பட்டு நிற்கின்றன.

சிவந்த தீயின் கண்களால்
உருமாற்றும்
கொல்லனின் உலைக்களத்தில்
சறுக்காத உன் வார்த்தைகள்
அழகாய் வார்த்தெடுத்த
நெடிந்து அகன்ற கூரான வேல்போல!!//

கவிதையின் ஆரம்பம்.......அழகான ஊடல் நிறைந்த, அன்பினைப் பொழியும் ஒரு ஆண் மகனின் உணர்வுகளினூடாகத் தொடங்கியிருக்கிறது, ஆனாலும் பின் வரிகள் வஞ்சிக்கப்பட்ட ஒரு பெண்ணின் உணர்வுகளினையும், ஆணாதிக்க வார்த்தைகளின் கொடூரமான வலிகளின் வெளிப்பாட்டினையும் எடுத்தியம்பி நிற்கிறது.

பங்கு நீ - பங்குனி நீ சித்திரையில் என என் காதில் ஒலிக்கிறது. எமது ஊர்களில் பங்குனியில் குளிர்காலம் அல்லது பனிக் காலம் இருக்கும், சித்திரையில் வெய்யில் சூடு பிடிக்கத் தொடங்கும்....

முன் பாதியில் அரவணைப்பினையும், அளவற்ற அன்பினையும் பேசி நிற்கும் ஆண்மகனின் உணர்வுகளையும், பின் பாதியில் ’’கூரான வேல் போன்ற’’ வார்த்தைகளால் காயப்படுத்தும் ஆணின் உள்ளத்தினையும் அழகாக காட்சிப்படுத்தியுள்ளீர்கள்...

பங்கு நீ.. சித்திரையில்... வெப்பத்தினை மட்டுமே வலிகளாக்கி வாழ்வின் வசந்த காலத்தை இழக்கச் செய்யும் பங்கு காதலனால் கிடைக்கப் பெற்றிருக்கிறது என்பதனை உணர்த்தும் வகையில் புனையப்பட்டிருக்கிறது.

சக்தி கல்வி மையம் said...

அசத்தல் + வாழ்த்துக்கள்.

கவி அழகன் said...

விளங்கினமாதிரி இருந்திச்சு அனா விளங்கல இரண்டாம் தரம் வாசிக்கேகேதான் கொஞ்சம் விளங்கிச்சு அஞ்சு தரம் வாசிச்சிட்டு வாறன்

கவி அழகன் said...

சித்திரை திருநாள் வாழ்த்துக்கள்.

நட்புடன் ஜமால் said...

சித்திரையிலும் பங்கு வாங்கிட்டாங்களா


[[மற்றைய நிறங்களை
நீயே நிறமற்றதாய்
உருமாற்ற இணங்கியுமிருந்தாய்.
]]

ம்ம்ம் ...

மாலதி said...

அக்கா உங்களின் எழுத்துகள் என்னை கவ்ர்ந்துவருகிறது .ஒவ் ஒவொரு இடுகையும் வேறுபட்டதாக இருக்கிறது . உங்களின் இந்த எண்ணம்கடந்த காலம் பற்றியதா ? கடந்த காலம் எனின் அது உங்களுக்கு சுமையாகும் நிகழ் காலம் என்றகால் வசந்தத்திர்க்கான மெல்லிய அழைப்பாக கொள்ள இடம் உள்ளது அருள் கூர்ந்து உங்களவர் யார் சொல்லுங்களேன் ..

தமிழ் உதயம் said...

நன்றாக எழுதி இருக்கிறிர்கள். கடைசி சில வார்த்தைகளில் சொல்லப்பட்ட உவமை அருமை.

Rathnavel Natarajan said...

நல்ல கவிதை.
புத்தாண்டு வாழ்த்துக்கள்.

ஸ்ரீராம். said...

கவிதை அருமை. நிரூபனின் பின்னூட்டங்களையும் ரசித்தேன்.

கலா said...

பங்கு நீ சித்திரையில்....????
இல்லையா?
பங்குக்காரரிடம் உண்மையன்பு
இல்லை போலும்...
ஆதலால்
திரை போட்டு மூடிவிட்டார்

Chitra said...

இனிய சித்திரைத் திருநாள் வாழ்த்துக்கள் !!!

கலா said...

சறுக்காத உன் வார்த்தைகள்
சிவந்த தீயின் கண்களால்
உருமாற்றும்
கொல்லனின் உலைக்களத்தில்
அழகாய் வார்த்தெடுத்த
நெடிந்து அகன்ற கூரான வேல்போல!!!\\\\

வாவ்... அழகான உவமை{உண்மை}
பாய்ந்த வேலினால்...
கொட்டிய குருதியெடுத்து
கோர்வையாய் நீ
தொடுத்து கொட்டிவிட்டாய்
உன் ஆதங்கத்தை
குளவிபோல் கொட்டட்டும்
உன்னைக் குடி வைத்த
இதயத்தில்!!

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

தண்மையும் வெம்மையும் சந்தித்ததாய் உணர்ந்தேன் பங்குனியும் சித்திரையும் இணையும் புள்ளியில்.

அற்புதம் ஹேமா.

மாதேவி said...

சித்திரை புதுவருடவாழ்த்துகள் ஹேமா.

Unknown said...

:)

இராஜராஜேஸ்வரி said...

இனிய சித்திரைத் திருநாள் வாழ்த்துக்கள்.

Ram said...

//வெப்பம் சிதறும்
வெள்ளை வானவில்லில்
இன்றைய நாளில்தான்
இருவருக்குமான
உரையாடல்கள் ஆரம்பித்து
ஆன்மாக்கள்
கை கோர்த்துக்கொண்டன.//

அருமையான நேரத்தில தான் பேசி இருக்கீங்க..

Ram said...

கவிதையில் எனக்கு தோன்றியதை மிகவும் அழகாக விவரித்து விட்டார் நீருபன்.. ஆரம்பத்தில் அந்த தலைப்பை பார்த்தவுடன் தோன்றிய இரண்டு வெவ்வேறு கோணங்களையும் சிறப்பாக சொன்னார் நிரூ.. சபாஷ்.. அவரின் கருத்தை விடுத்து எனக்கு வேறெதுவும் தோன்றவில்லை.. அழகாக அமைத்த வரிகள்.. நன்று

DR.K.S.BALASUBRAMANIAN said...

பங்கு நீ சித்திரையில்...........
பிர'மாதம்'

Angel said...

வழக்கம் போல் அருமை ஹேமா .
உங்களுக்கும் சித்திரை திருநாள் வாழ்த்துக்கள் .

கீதமஞ்சரி said...

கூரிய நேர்மை பல சமயங்களில் தற்காத்துக்கொள்ளவும், தேவையெனில் குத்திக்கொல்லவுமாய்...

எங்கே எப்படி என்பதில்தான் வித்தியாசப்படுகிறது. உவமைகளும் உபயோகித்த விதமும் அழகு.

சி.பி.செந்தில்குமார் said...

>>சறுக்காத உன் வார்த்தைகள்
சிவந்த தீயின் கண்களால்
உருமாற்றும்
கொல்லனின் உலைக்களத்தில்

வார்த்தைகளை கோர்ப்பதில் வல்லமை பெற்றிருக்கிறீர்கள் ஹேமா..

சந்தான சங்கர் said...

அருமையான கவிதை தோழி.
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்..

arasan said...

நச் ...
தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

Ashok D said...

நல்லாவந்திருக்குங்க.. :)

Yaathoramani.blogspot.com said...

சுட்டுக் காய்ச்சிய நெருப்பிலிட்டு...
உண்மையில் சொற்ப்ரயோகம் படித்து
சிறிது நேரம் அசந்து போனேன்
நெருப்புதான் எதையும் சுட்டுக் காய்ச்சும்
அந்த நெருப்பே சுட்டுக்காய்ச்சியது எனில்....
அருமை அருமை
நல்ல படைப்பு
தொடர வாழ்த்துக்கள்

http://thavaru.blogspot.com/ said...

"நிராகரிக்காத உன் நேர்மையை
சுட்டுக் காய்ச்சிய நெருப்பிலிட்டு
சம்மட்டியாலும் அடித்தே
உறுதியாக்கிக்கொண்டேன்."

ஹேமா....ம்ம்ம்...

சாய்ராம் கோபாலன் said...

பங்கு நீ சித்திரையில் - கவிதையின் தலைப்பே - Super

ராமலக்ஷ்மி said...

சித்திரை திருநாள் வாழ்த்துக்கள் ஹேமா. கவிதையும் தலைப்பும் மிக அருமை.

Anonymous said...

வாவ்.. என சொல்ல வைக்கிறது ஒவ்வொரு வரிகளும்...

அருள் said...

அவசரம்: ராஜபட்சேவை தண்டிக்க உதவுங்கள்

http://arulgreen.blogspot.com/2011/04/blog-post_16.html

(இது TIMES வாக்கெடுப்பு அல்ல)

ப்ரியமுடன் வசந்த் said...

//ஆன்மாக்கள்
கை கோர்த்துக்கொண்டன.//

ஹைய்யய்யோ பேய்கள் :)

ப்ரியமுடன் வசந்த் said...

//வெப்பம் சிதறும்
வெள்ளை வானவில்லில்//

ஏரோப்ளேன் பறக்குது பார் மேலே :)

ப்ரியமுடன் வசந்த் said...

//வெப்பம் சிதறும்
வெள்ளை வானவில்லில்//

வெள்ளைக் காக்கா பறக்குது பார் அங்கே

ப்ரியமுடன் வசந்த் said...

//வெப்பம் சிதறும்
வெள்ளை வானவில்லில்//

வெள்ளை மட்டும் இருந்தால் அதெப்பிடி வானவில் ஆகும் இது ஏதோ வெள்ளையூர் கவிதை போங்க போங்க நம்ப மாட்டேன் :)

ப்ரியமுடன் வசந்த் said...

//நிராகரிக்காத உன் நேர்மையை
சுட்டுக் காய்ச்சிய நெருப்பிலிட்டு
சம்மட்டியாலும் அடித்தே
உறுதியாக்கிக்கொண்டேன்.//

ரொம்ப ரொம்ப நம்பிக்கை :)

ப்ரியமுடன் வசந்த் said...

//சறுக்காத உன் வார்த்தைகள்
சிவந்த தீயின் கண்களால்
உருமாற்றும்
கொல்லனின் உலைக்களத்தில்
அழகாய் வார்த்தெடுத்த
நெடிந்து அகன்ற கூரான வேல்போல!!!//

அது சரி

ரொம்பவே அழகான கவிதை ஹேம்ஸ் கவிதை பிடிச்சிருந்தால்தான் இத்தனை லொள்ளு பின்னூட்டம் போடுவேன்னு உங்களுக்கு தெரியும்தானே!!

தலைப்புக்கு ஸ்பெசல் ஷொட்டுக்கள் !!!

மோகன்ஜி said...

என் அன்பு ஹேமா! நான் அண்மையில் படித்த சிறந்த கவிதை இது. வார்த்தைகளை விரயம் செய்யாமல் எழுதப்பட்ட நேர்த்தியான கவிதை. வாழ்த்துக்கள் ஹேமா!

www.eraaedwin.com said...

அன்பின் ஹேமா,
வணக்கம்.

மிக நல்ல கவிதை. கவிதை சுயம் சார்ந்தெனில் மனதிற்குள் மிகப் பெரியப் போராட்டத்தோடு இருக்க வேண்டும் நீங்கள். மீண்டும் சொல்கிறேன், மிக அற்புதமான கவிதை

ஹேமா said...

சௌந்தர்....வாங்க வாங்க நீங்கதான் முதல் வருகை.நன்றி !

நிரூபன்...உங்கள் பின்னூட்டத்தை வச்சே ஒரு கவிதை எழுதிடலாம்.
எப்படித்தான் இவ்வளவு பொறுமையா யோசிச்சு எழுத வருதோ.உங்கள் கோணத்தில் நானும் சிந்திக்கிறேன்.
அதேபோல எனக்கும் தெரிகிறது !

செந்தில்...நன்றி.சில நேரங்களில் மட்டுமே என் கவிதைகள் சரியாகப் படுகிறது உங்களுக்கு.நன்றி !

கருன்...நன்றி நன்றி !

யாதவன்...அப்பு ராசா இதைவிட விளங்கிறமாதிரி எப்பிடி நான் எழுத.பிகாசோ கவிதை எண்டு நடா சொல்லியிருக்கிறார்.உங்களுக்காக நடாவுக்காக ஒரு விளங்கிற கவிதை போடவேணும் !

ஜமால்...ம்ம்...சித்திரையில் மட்டுமா கடன்...இன்னும் கடன் இருக்கு.நான் உள்வைத்து எழுதினதை யாருமே தொடவில்லை !

மாலதி...கடந்தகாலமும் இல்லை.
நிகழ்காலமும் இல்லை.என் காலம் !

தமிழ்...ஒருவரின் கூர்மையான புத்திக்கூர்மையை நேர்மையை இப்படிச் சொல்லிப் பார்த்தேன் !

இரத்னவேல் ஐயா...நன்றி நன்றி உங்கள் வருகைக்கு !

ஸ்ரீராம்...நிரூபனின் பின்னூட்டம் பெரிய விளக்கம் !

கலா...கலா...குளவியுமில்ல.கொட்டவுமில்ல.இது கவிதை.அதுவும் பிகாசோ கவிதையாம் !

சித்ரா...நன்றி தோழி அன்பான வாழ்த்துக்கு !

ஹேமா said...

சுந்தர்ஜி...எங்க ரொம்பக்காலம் இந்தப்பக்கம் காணோம்.
உங்களைப்போன்றவர்களின் ஆலோசனை அபிப்பிராயம் கட்டாயம் தேவை எனக்கு !

மாதேவி...சுகமா .அன்பான வாழ்த்துக்கு நன்றி தோழி !

டி.சாய்...முதன் முதலா வந்திருக்கீங்க.ஏதாச்சும் சொல்லிட்டுப் போயிருக்கலாமே !

இராஜராஜேஸ்வரி...நன்றி நன்றி !

தம்பி கூர்...கவிதையைவிட பின்னூட்டத்தில் கலக்கி விளக்குகிறார் நிரூ !

டாக்டர் பாலா...நன்றி முதல் வருகைக்கு !

ஏஞ்சல்...அன்பான நன்றி தோழி !

கீதா...நன்றி நன்றி.நேர்மையாய் இருப்பதே சிலசமயங்களில் தவறு !

சிபி...பாராட்டுக்கு நன்றி.நீங்கள் எப்போதோ சொன்ன ஆலோசனையில் இப்போதான் முயற்சிக்கிறேன்.நன்றி !

சந்தானசங்கர்...சுகமா.அடிக்கடி காணமுடிவதில்லை இப்பல்லாம்.விஜய் எங்கே !

அரசன்...நன்றி நச் க்கு !

அஷோக்கு...எப்பிடி இருக்கீங்க !

ரமணி...அன்பான பாராட்டு எனக்கு இன்னும் ஊக்கம் தரும்.நன்றி !

தவறு...ம்ம்ம்...ம்ம்...ம் !

சாய்...கூப்பிட்டாத்தான் வருவீங்களோ !

ராமலஷ்மி அக்கா...வாழ்த்துகள் உங்களுக்கும் !

படைப்பாளி...வாங்க வாங்க.நன்றி !

அருள்...இதைவிட வேறென்ன செய்யப்போகிறோம்.உங்கள் ஆர்வத்தோடு கை கோர்த்துக்கொள்கிறோம் !

வசந்து....அப்பாடி என்னமோ செம ஜாலியா இருக்கீங்கபோல.இல்லாட்டி இப்பிடிப் பின்னூட்டாம் வராது.பேய்,
ஏரோப்பிளேன்,வெள்ளைக்காக்கா எல்லாம் எங்க இருக்கு இந்தக் கவிதையில.சந்தோஷத்தில கற்பனை பறக்குதோ.வெள்ளை வானவில்.
மற்றைய நிறங்களை இல்லாமலாக்க இணங்கப்பட்டிருக்கிறதே.கவனிக்கேலயோ.நிறைய நாளுக்கப்புறம் ஹேம்ஸ் உங்க லொள்ளு கண்டு சந்தோஷப்படறேன் !

மோகண்ணா...நன்றி அன்புக்கு !

எட்வின் ஐயா...வரவுக்கும் கருத்துக்கும் என் வணக்கம்.நன்றி !

சிவகுமாரன் said...

கைகோர்க்கும் ஆன்மாக்கள்
நெருப்பிலிட்ட நேர்மை
உலைக்களத்தில் உண்மை.
--அருமையான படிமங்கள்
வாழ்த்துக்கள்

Muniappan Pakkangal said...

Wishing you Chithirai thirunaal vaazhthukkal Hema.

போளூர் தயாநிதி said...

தேர்வு செய்யப்பட வார்த்தை கள் நல்ல ஆக்கம் பா புனைதிரன் பெற்றவர்கட்கே வந்துவிழும் சொல்லாடல்கள் நறுக்குதரித்தவரிகள் . பாராட்டுகள்...

Raja said...

விடுபட்ட கவிதைகள் வாசித்தேன் ஹேமா ...வழமையை விடவும், மேலும் சரளமான நடையை கவிதைகள் கொண்டிருப்பதாய் தோன்றியது...வாழ்த்துக்கள்...

சாந்தி மாரியப்பன் said...

கவிதையும் தலைப்பும், அருமையோ அருமை. ரொம்ப ரசிச்சு வாசிச்சேன்:-)

அன்புடன் மலிக்கா said...

சித்திரை திருநாள் வாழ்த்துக்கள்.
கவிதையும் அருமை..

Unknown said...

கவிதையும் தலைப்பும் அருமை

கமலேஷ் said...

தலைப்பும் வரிகளும் மிக அழகாக இருக்கிறது சகோதரி.

saravananfilm said...

உங்கள் பதிவு நன்றாக இருந்தது சினிமா சம்பந்தமான செய்திகளை கீழே பதியவும்.
http://www.filmics.com/tamilshare

அப்பாதுரை said...

அருமையான கவிதை.. நீண்ட நாட்களுக்குப் பின் அடிக்கடி படித்த கவிதை.

Post a Comment