பிரிவின் புதைகுழிக்குள்
புதையுண்டு போயிருக்கிறாயா
பிரிவின் வதையை
அனுபவித்திருக்கிறாயா எப்போதாவது !
என்ன நடந்ததாக
என்னை விட்டுப் பிரிந்தாய்
என்ன சாதிக்கிறாய்
வானுயர சிறகடிக்க
சிறகு தந்து சேர்ந்து பறந்த
நீ.....
ஏன் பாதை மாறினாய்
பிரிவின் வழி சுகமானதா !
மரண தண்டனைக்குள்
தள்ளப்பட்ட எனக்காய் வாதாடி
விடுதலை தருவாய்
எனப் பார்த்திருக்க
மீண்டும்
சோகச் சிலுவைக்குள் அறைந்தவனே
என் கல்லறைக் கற்கள்கூட
கண்ணீர் சுரக்கும்
உன் பெயர் கேட்டால் !
எனக்கும் தெரியாமல்
என்னைத் திருடிவிட்டு
என் விருப்பம் தெரிவிக்க
ஒன்றுமே தெரியாதவனாய் மறுத்தது
படமாய் விரிகிறது மனக்கண்ணில் !
ம்ம்ம்.....
இனி நான் தரவும்
நீ மறுக்கவும் என்ன மிஞ்சியிருக்கிறது.
புரையோடிய மனதையாவது
திருப்பித் தந்துவிடு !
கட்டிய கோட்டைகளை நீயே சுக்கு நூறாக்கு.
நீ வளர்த்த பூக்களுக்கு நீயே புயலாகு.
உன் அன்பால் கட்டுண்ட என்னை
நீயே சுட்டுப் பொசுக்கு.
செய் ...
உன்னால் முடிந்த எல்லாமே செய் !
பைத்தியக்காரனே
யாருமே பிரிக்கமுடியாது
என்ற எங்களை பிய்த்தவன் நீ.
இரத்த வரிகள் மட்டுமே இனி உன்னால்
ஒவ்வொரு நிமிடத்திலும்.
வருகின்ற கண்ணீர்த் துளிகளைச்
சேகரித்து கவிதைகளாக்கி
காயமுன்
எழுதப்பழகிக் கொள்கிறேன் !
எத்தனையோ சோகங்களை
சுட்ட பழம்போல ஊதித் தின்று
செரிக்கப் பழகிக்கொண்ட என்னால்
நீ தந்துவிட்டுப் போன சோகத்தை
ஏனோ பழக மறுக்கிறேன் !
இப்போ என்னால் முடிந்ததெல்லாம்
இரவுப்பாயில் புரண்டுகொண்டு
இதயத்து நினைவுகளை உதறி
உன் நினைவுகளை மட்டும்
தனியாகப் பொறுக்கி
இறுகிய உன் இதயத்தில்
எங்காவது ஓர் இடமிருந்தால்
பொறுக்கிய சிறுதுண்டு
ஒன்றையாவது
பொருத்தலாமா என்று யோசித்தபடி !!!
வலியோடு ஹேமா(சுவிஸ்)
Tweet | ||||
49 comments:
ரொம்ப வலிக்குது ஹேமா..
அட..
நான் உன் வீட்டில் இருந்திருக்கிறேன்.நீ,என் வீட்டில் இருந்திருக்கிறாய்!!
//எனக்கும் தெரியாமல்
என்னைத் திருடிவிட்டு
என் விருப்பம் தெரிவிக்க
ஒன்றுமே தெரியாதவனாய் மறுத்தது
படமாய் விரிகிறது மனக்கண்ணில் !//
ரொம்ப ரசித்தேன் இவ்வரிகளை.....
//இரவுப்பாயில் புரண்டுகொண்டு
இதயத்து நினைவுகளை உதறி
உன் நினைவுகளை மட்டும்
தனியாகப் பொறுக்கி
இறுகிய உன் இதயத்தில்
எங்காவது ஓர் இடமிருந்தால்
பொறுக்கிய சிறுதுண்டு
ஒன்றையாவது
பொருத்தலாமா என்று யோசித்தபடி !!!//
ஹேமா,
வலி அழகல்ல.
நான் சுட்டியிருக்கும் வரிகள் (எனக்கு-ரசிக்க மட்டும்) அழகு.
உள்ளுக்குள் காதல் இருக்கிறது. கவிதையைப் போல.
ஹேமா,
நான் இன்னிக்கும் “பென்ச்”-சு மேல ஏறி நிக்கனுமா?
... அதுக்கும் மேல உன் விருப்பம்...!
யாருன்னு சொல்லுங்க ஹேமா.. தட்டி தூக்கிட்டு வந்துர்றேன்...
வலிக்குது....
//எத்தனையோ சோகங்களை
சுட்ட பழம்போல ஊதித் தின்று
செரிக்கப் பழகிக்கொண்ட என்னால்
நீ தந்துவிட்டுப் போன சோகத்தை
ஏனோ பழக மறுக்கிறேன் !//
//இறுகிய உன் இதயத்தில்
எங்காவது ஓர் இடமிருந்தால்
பொறுக்கிய சிறுதுண்டு
ஒன்றையாவது
பொருத்தலாமா என்று யோசித்தபடி !!!//
வார்த்தைக்கோலங்கள் அழகு...வார்த்தைகளாய் மட்டுமிருப்பின்.
//////இரவுப்பாயில் புரண்டுகொண்டு
இதயத்து நினைவுகளை உதறி
உன் நினைவுகளை மட்டும்
தனியாகப் பொறுக்கி
இறுகிய உன் இதயத்தில்
எங்காவது ஓர் இடமிருந்தால்
பொறுக்கிய சிறுதுண்டு
ஒன்றையாவது
பொருத்தலாமா என்று யோசித்தபடி !!!///////
ஹேமா! என்ன சொல்றதுன்னே தெரியலை. வலியையும் உணர்ந்தேன், வரிகளையும் ரசித்தபடி.
\\\\\எனக்கும் தெரியாமல்
என்னைத் திருடிவிட்டு
என் விருப்பம் தெரிவிக்க
ஒன்றுமே தெரியாதவனாய் மறுத்தது
படமாய் விரிகிறது மனக்கண்ணில் !\\\\\\\
மக்குப் பெண்ணே..!
நாகபாம்பென்று தெரியாமல்..
{பேசிய}எடுத்த படத்தில் மயங்கி...
நீ ஆடிருக்கின்றாய்..
காலம் கடந்த பின் யோசித்து என்ன
பயன்!!
சில..ஆண்கள் வர்க்கம்
அதில் உன்னவனும் அடக்கம்.
சேற்றைக் கண்டவுடன் மிதித்து...
தண்ணீரைக் கண்டவுடன் கழுவும்
ஜாதியடி உன் காதலன்{கயவன்}
ஹேமா அந்தப் படம் ஒன்றே
போதும் அப் பெண்ணின்
வலி சொல்ல...வளிந்து வந்து...
ஒவ்வொரு துளிகளாய் விழும்
இரத்தம்
ஒவ்வொரு சொல்லிலும், ஒவ்வொரு
வரிகளிலும் இறந்த காலத்தின்
வலி கூறும்
அடையாளங்கள்!!
வார்த்தைகள் இத்தனை வலி-மையோடு! நேசிப்பு புரிதலற்ற உலகம் கொடுமை..
\\\மரண தண்டனைக்குள்
தள்ளப்பட்ட எனக்காய் வாதாடி
விடுதலை தருவாய்
எனப் பார்த்திருக்க\\\
என் காதல் உணர்வை,காதலை,நம்பிக்கையை
சுருக்கிட்டு நெரித்துக் கொன்றுவிட்டாய்..!!
நானோ..தனிமையில்
உனக்கோ..உன் துணை அருகில்
நான் மீண்டுவர நினைக்கின்றேன்...
நீ மீட்டுகிறாய்{மீண்டும்} காதலை
உன் துணையுடன்...
அதனால்.........
மீண்டும்
சோகச் சிலுவைக்குள் அறைந்தவனே
என் கல்லறைக் கற்கள்கூட
கண்ணீர் சுரக்கும்
உன் பெயர் கேட்டால் !
வலி நிரம்பிய சொற்கள் ...மிக அழகான வெளிப்பாடு.. நிஜமா புனைவா என்று பகுக்க வியலாமல் எழுதுவதில் உங்களுக்கு நிகர் நீங்கள் தான்
கஷ்டம்தான்...
//ஏன் பாதை மாறினாய்
பிரிவின் வழி சுகமானதா !//
பிரிவின் வழி சுகமே ஆனாலும் அது வேண்டாமே! பழகிய பின் பிரிவது கொடுமை!
உங்கள் கவிதை வரிகளில் உள்ளது போல் எத்தனையோ சோகங்களை,சுட்ட பழம்போல ஊதித் தின்றுசெரிக்கப் பழகிக்கொண்டாலும் இதை பழகிக்கொள்ள முடியாது. மனம் துடித்து துடித்து சேர்ந்த பின் தோல்வி காணக் கூடாது!
காதல் என்றாலே வலியும், வேதனையும் தானே. பலவீனமானவர்கள் காதலிக்கக் கூடாது. கவிதை நன்றாக இருந்தது ஹேமா.
வலியோடு படித்தேன் வரிகளில்
பிரிவின் வலி வார்த்தைகளில்.. புரையோடிய மனதை திருப்பி வாங்கி மீண்டும் இறுகிய அந்த மனத்தில் ஒட்ட வைக்க என்ன இருக்கிறது?
கவிதைக்கு சோகம் சுகமும் அழகும் சேர்க்கிறது. வார்த்தைகள் கட்டி இழுக்கின்றன...
கல்லறைக் கற்களும், தனக்கே தெரியாமல் திருடப் பட்ட அனுபவமும்..
கண்ணீர்த் துளிகள் காயுமுன் எழுதுவது சோகம்...காய்ந்தபின் மகிழ்ச்சி மலரட்டும்.
சோகம் கவிதையில் மட்டுமே இருக்கட்டும். மீண்டும் ஒரு அற்புதக் கவிதை...பாராட்டுக்கள் ஹேமா
கவிதை அழகு என்று சொல்லிப் போக மனமில்லை. இந்தக் கவிதையும் படமும் என் இதயத்தைப் பிசைகிறது. ஒன்று மட்டும் சொல்வேன். இது தான் காதல். கண் மண் தெரியாத காதல். வேண்டாம் என்று உதறிப் போனவனை தூக்கி எறிய முடியாததவிப்பு.
பிரிவுத் துயரம் கவிதையில் பச்சை மரத்தையும் சுட்ட மரமாக்குகிறது.
நல்லக் கவிதை ஹேமா,
வாழ்த்துகள்.
அருமை அருமை ஹேமா ..
முடியல என்ன சொல்றதுன்னே தெரியல ...
காதலின் பிரிவின் வலி ரொம்ப கொடியது .
//இப்போ என்னால் முடிந்ததெல்லாம்
இரவுப்பாயில் புரண்டுகொண்டு
இதயத்து நினைவுகளை உதறி
உன் நினைவுகளை மட்டும்
தனியாகப் பொறுக்கி
இறுகிய உன் இதயத்தில்
எங்காவது ஓர் இடமிருந்தால்
பொறுக்கிய சிறுதுண்டு
ஒன்றையாவது
பொருத்தலாமா என்று யோசித்தபடி !!!//
சீக்கிரமா டாக்டரை எம்புட்டு நேரமா தான் இதயத்தை கையிலே எடுத்துகிட்டு இருப்பீங்க
ஒட்டாத ஒன்றோடு ஏன் ஹேமா ஒட்டுறவு
உதறித்தள்ளக் கற்றுக் கொள்ளுங்கள்
pirivin vali aalam. purikirathu ithu karpanaiyaakave irukkattum. arumaiyaana pataippu
வழக்கம் போல கலக்கல். அது என்ன இதயத்திலிருந்து ரத்தம் வடிஞ்சுகிட்டே இருக்கு?. அத கொஞ்சம் நிப்பாட்டுங்க ஹேமா.
//இறுகிய உன் இதயத்தில்
எங்காவது ஓர் இடமிருந்தால்
பொறுக்கிய சிறுதுண்டு
ஒன்றையாவது
பொருத்தலாமா//
வேண்டாம் ஹேமா! கட்டாய காதலில் இன்பம் இல்லை. நேசம் என்பது இருவர் மனதிலும் இயல்பாக வரவேண்டும். இதில் ஒரு மனதில் நேசம் குறைந்தாலும் அந்த காதலில் இன்பம் இருக்காது. கடமைக்காக எதையும் செய்யலாம்,
ஆனால் காதலிக்க முடியாது. நேசம் இல்லாத நெஞ்சத்தில், காதல் வளராது. அங்கு வார்க்கப்படும் அன்பென்ற நீரும் 'விழலுக்கு இறைக்கும் நீர்தான்'. அதனால் இந்த காதலில் பிரிதலே நலம். மீண்டும் தொடரவேண்டாம். அப்படி தொடர்ந்தாலும் இந்த காதலில் உண்மை இருக்காது. இது உண்மையான காதலாக இருந்திருந்தால் இந்த பிரிவே ஏற்பட்டிருக்காது, இல்லையா?
கொஞ்சம் சந்தோஷமான கவிதை ஒண்ணு போடுங்க. இது ரொம்ப சோகம்.
//இறுகிய உன் இதயத்தில்
எங்காவது ஓர் இடமிருந்தால்
பொறுக்கிய சிறுதுண்டு
ஒன்றையாவது
பொருத்தலாமா//
வேண்டாம் ஹேமா! கட்டாய காதலில் இன்பம் இல்லை. நேசம் என்பது இருவர் மனதிலும் இயல்பாக வரவேண்டும். இதில் ஒரு மனதில் நேசம் குறைந்தாலும் அந்த காதலில் இன்பம் இருக்காது. கடமைக்காக எதையும் செய்யலாம்,
ஆனால் காதலிக்க முடியாது. நேசம் இல்லாத நெஞ்சத்தில், காதல் வளராது. அங்கு வார்க்கப்படும் அன்பென்ற நீரும் 'விழலுக்கு இறைக்கும் நீர்தான்'. அதனால் இந்த காதலில் பிரிதலே நலம். மீண்டும் தொடரவேண்டாம். அப்படி தொடர்ந்தாலும் இந்த காதலில் உண்மை இருக்காது. இது உண்மையான காதலாக இருந்திருந்தால் இந்த பிரிவே ஏற்பட்டிருக்காது, இல்லையா?
//
ரிப்பீட்டேய்.....
ஹேமா அத்தாச்சி சீக்கிரம் சந்தோசமான கவிதையொன்னு போடுங்க ஆமா இல்லாட்டி கலா பாட்டி எல்லாமே உண்மையின்னு நம்பி இன்னும் என்ன என்ன சொல்லணுமோ அதெல்லாம் சொல்லி திட்டிடுவாங்க...
கவிதையும் படமும் மிகுந்த வலி தருகிறது ...ஒட்டாத உறவோடு உங்களுக்கு ஏன்,ஒட்டுறவு.......புதுமைபெண் அல்லவா நீங்கள் வாழ்ந்து காட்டுங்கள். மீண்டும் மீண்டும் சோகத்தை நினைத்தால் வலி தான் ...பயணத்தை மாற்றி பயணியுங்கள். வாழ்த்துக்கள்
வந்த துன்பம் எது வந்தாலும் ஓடுவதில்லை...
ஹேமா முதல் படம் மனம் கனக்க செய்கின்றது... முடிந்தால் மாற்றிவிடுங்களேன்..
வரிகள் அனைத்தும் மனதை நெருடிவிட்டது
ம்ம்ம்.....
இனி நான் தரவும்
நீ மறுக்கவும் என்ன மிஞ்சியிருக்கிறது
ம் ம் இதற்கு மேல் நான் என்னத்த சொல்ல
வலியை கூட அழகாக கவிதை மொழியில் சொல்ல முடியும் என்று சொன்ன ஹேமாவின் சோகங்கள் தீரட்டும்.
ஹேமா, உங்கள் வலியை புரிந்து கொள்ள முடிகிறது!!
அப்புறம் எப்படி இருக்கிறீர்கள்? ரொம்ப நாளாச்சு!!
எழுதாமல் போன வார்த்தைகளின் வலி இதை விட அதிகம் இல்லையா ஹேமா.
பிரிவின் புதைகுழிக்குள் புதையுண்டு போயிருக்கிறாயா பிரிவின் வதையை அனுபவித்திருக்கிறாயா எப்போதாவது..
கவிதையின் ஒவ்வொரு வரியும் பிரிவின் வலியால் ரணமாகிபோன ஒரு மனதின் வெளிப்பாட்டைக் காட்டி நிற்கிறது.
ஹேமா இன்று அநேகமாக ஒவ்வொரு மனமும் ஏதோ ஒரு புதை குழிக்குள் புதையுண்டு பிரிவின் வதையை அனுபவித்துக் கொண்டு தான் வாழ்கிறோம்.பிரிவுகள் வேறு வேறாக இருந்தாலும் வலிகளும் ரணங்களும் ஒன்று தான்.
எத்தனையோ சோகங்களை
சுட்ட பழம் போல ஊதித்தின்று
செரிக்கப் பழகிக்கொண்ட என்னால்
நீ தந்து விட்டுப் போன சோகத்தை
ஏனோ பழக மறுக்கிறேன்!
இதுவே நிஜம்.
சொட்டுச்சொட்டாய் இரத்தம் வடியும் படம் உண்மையாக கலா கூறியது போல வலியின் அடையாளம்*****
செதுக்கிய..வார்த்தைகள்...?
//கட்டிய கோட்டைகளை நீயே சுக்கு நூறாக்கு.
நீ வளர்த்த பூக்களுக்கு நீயே புயலாகு.
உன் அன்பால் கட்டுண்ட என்னை
நீயே சுட்டுப் பொசுக்கு.
செய் ...
உன்னால் முடிந்த எல்லாமே செய் !//
//என்னால் முடிந்ததெல்லாம்
இரவுப்பாயில் புரண்டுகொண்டு
இதயத்து நினைவுகளை உதறி
உன் நினைவுகளை மட்டும்
தனியாகப் பொறுக்கி
இறுகிய உன் இதயத்தில்
எங்காவது ஓர் இடமிருந்தால்
பொறுக்கிய சிறுதுண்டு
ஒன்றையாவது
பொருத்தலாமா என்று யோசித்தபடி !!!//
காதல் செய்தால் பாவம். பாவத்தின் தண்டனை (சோக) கவிதை.
காதலில் சோகம் சுகம்! மிகவும் சுகமான கவிதை! கவிதையும் அதற்க்கான படமும் கடற்கரை மணலில் வராத, வரமாட்டாள் என்று தெரிந்தும் தன்னவளுக்காக காத்திருக்கும், விவரிக்க முடியாத அந்த சுகத்தை கொடுத்தது..! அருமை!!!
//இனி நான் தரவும்
நீ மறுக்கவும் என்ன மிஞ்சியிருக்கிறது.
புரையோடிய மனதையாவது
திருப்பித் தந்துவிடு !//
வலி தந்த வரிகள்...வலிக்கிறது ஹேமா
ரசித்தேன் வரிகளை
ரணம் தெரிகிறது
மனம் தவிக்கும்
தவிப்பு புரிகிறது..
உங்கள் வேதனையை நன்கு உணர்த்துகிறது கவிதை.
மரங்கள் அமைதியாக இருந்தாலும் காற்று விடுவதில்லை.
பெருங்கடலும் சிலநேரம் வெறிச்சென இருக்கும். அலைகள் ஓய்ந்து அமைதியை கரை ஒதுக்கியபடி.
உறவுகளும் சிலநேரம் அலைகள் தொலைத்து அடங்கிக் கிடக்கும்.
ஆனாலும் அலைகள் ஓய்வதில்லை -அது கடலுக்கும் தெரியும் கரைக்கும் புரியும்.
ஆறுதலாயிருங்கள் மேடம்!
கலா மேடம் கவிதையைப் படிச்சிட்டு செம டென்ஷனாயிட்டாங்க போல!
//சேற்றைக் கண்டவுடன் மிதித்து...
தண்ணீரைக் கண்டவுடன் கழுவும்
ஜாதியடி உன் காதலன்{கயவன்}//
பயங்கரம்...! பயங்கரம்..!!!
பிரிவின் வலி கொடியது
அவரவர் மட்டுமே உணர்தல் சாத்தியம்
கவிதை மூலம் எங்களையும் உணர வைத்துவிட்டீர்கள் ஹேமா
விஜய்
//இப்போ என்னால் முடிந்ததெல்லாம்
இரவுப்பாயில் புரண்டுகொண்டு
இதயத்து நினைவுகளை உதறி
உன் நினைவுகளை மட்டும்
தனியாகப் பொறுக்கி
இறுகிய உன் இதயத்தில்
எங்காவது ஓர் இடமிருந்தால்
பொறுக்கிய சிறுதுண்டு
ஒன்றையாவது
பொருத்தலாமா என்று யோசித்தபடி !!!//
அருமையான வரிகள் ஹேமா.
hello heama this pain is in my heart.
sorry ma i dont know english very well
we have a same feel
by
PRADEEP
ஹேமா அந்தப் படம் ஒன்றே
போதும் அப் பெண்ணின்
வலி சொல்ல...வளிந்து வந்து...
ஒவ்வொரு துளிகளாய் விழும்
இரத்தம்
ஒவ்வொரு சொல்லிலும், ஒவ்வொரு
வரிகளிலும் இறந்த காலத்தின்
வலி கூறும்
அடையாளங்கள்!!
ரொம்ப நல்ல இருக்கு ஹேமா same feeling
வலிகளை வில்லைகளாக்கி நிவாரணிஅளித்த கோமாவே வாழ்க உன்கவி
Post a Comment