*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Thursday, December 31, 2009

2010...ஈழம்

நீ
நான்
போட்டி
பொறாமை
காட்டிக்கொடுப்பு
கட்சி
ஏற்றம்
தாழ்வு
அடிமைத்தனம்
மாற்றமில்லா பூமியில்
ஆண்டின் மாற்றமும்
அதன் வேகமும்
பிடித்தால் என்ன
பிடிக்காவிட்டால் என்றபடி
வந்தும் போய்க்கொண்டும்தான்.

இதைவிடப்
போர்
நோய்
இயற்கை என
அழிப்புக்களும் இடைக்கிடை.
வருந்தாத வருஷம் மாறியபடிதான்.

நாயும் நரியுமாய்
போட்டி போடும் அரசியலின்
நடுவில் இறைச்சித் துண்டாய்
என் இனம் என் தேசத்தில்.
பசி வறுமையோடு
இரத்தம் தோய்ந்த வருடம்
அங்கும் சிவப்பாய் வந்தபடிதான்.

என்றாலும் பனிபடர்ந்த பூமிக்குள்
என் வெப்பக் கண்ணீர் தெளித்தே
உரு(க்)கியபடி வழ்ந்துகொண்டிருக்கிறேன்.

தீபாவளி புத்தாண்டு என்றில்லாமல்
நித்தம்
சிவப்பு வைனும்
ஆட்டிறைச்சியும்
முட்டையும்
சலாட்டுமாய்த் தின்று
திடமாயிருக்கிறேன்.

"உங்களுக்குப் புத்தாண்டு வாழ்த்துகள்"
என்று
எப்படிச் சொல்ல நான்
என் இனத்திற்கு.
வாழ்கிறார்களா அவர்கள் !!!

என் இனிய நண்பர்களுக்கு மனம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துகள்.

ஹேமா(சுவிஸ்)

40 comments:

பிரபாகர் said...

//நாயும் நரியுமாய்
போட்டி போடும் அரசியலின்
நடுவில் இறைச்சித் துண்டாய்
என் இனம் என் தேசத்தில்.
//
எதற்கும் ஒரு விடிவு உண்டு, நம்பிக்கையே வாழ்க்கை.

இவ்வருடம் நம் கவலைகள் நீங்கும் என நம்புவோம்.

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

சகோதரன்.

நசரேயன் said...

புத்தாண்டு வாழ்த்துகள்

நேசமித்ரன் said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

ப்ரியமுடன் வசந்த் said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்...!

எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்

இல்லாமை இல்லாத நிலை வேண்டும்..

ராஜவம்சம் said...

வலிகலே வரிகளாக
வழியைத்தேடி

Admin said...

அனைத்து நண்பர்களுக்கும் இனிய ஆங்கில புதுவருட வாழ்த்துக்கள்...

Thenammai Lakshmanan said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழி..

எப்படி இருக்கீங்க ஹேமா நலமா?

அத்திரி said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

ஸ்ரீராம். said...

நாட்கள் மாறி வருடங்கள் மாறுகின்றன..காணும் காட்சிகளில் மாற்றமில்லை. மாறும் என்ற நம்பிக்கையில் நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையில்......

புத்தாண்டு வாழ்த்துக்கள்.

நாயும் நரியுமாய்
போட்டி போடும் அரசியலின்
நடுவில் இறைச்சித் துண்டாய்
என் இனம் என் தேசத்தில்"//

வலி(ய) வரிகள்...

Muniappan Pakkangal said...

Wishing you a happy New Year Hema.Things will be alright for Eezha thamilar in due course & they also will be happy.

தமிழ்ப்பெண்கள் said...

புதிய ஆரம்பம்..
2010 புதுவருட தினம் உத்தியோகபூர்வமாக தமிழ்ப்பெண்கள் திரட்டி அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.
http://tamilpenkal.co.cc/
உங்கள் நண்பிகளுக்கும் தமிழ்ப்பெண்கள் திரட்டியை அறிமுகப்படுத்துங்கள்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்

Anonymous said...

அங்கும் விடிவெள்ளி தோன்றும்

இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் ஹேமா நம் மற்றும் நண்பர்களுக்கு....

Anonymous said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

தமிழ் உதயம் said...

எல்லாமே சம்பிரதாயமாகி போய் விட்டது. சொல்லிதான் ஆக வேண்டியுள்ளது. பொங்கல், புத்தாண்டு வாழ்த்தை...
எப்படிச் சொல்ல நான்
என் இனத்திற்கு.
வாழ்கிறார்களா அவர்கள் !!!

anujanya said...

இந்த வருடமாவது ஈழ மக்களின் துயரம் நீங்கி, நல்வாழ்வு மலரட்டும்.

உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.

அனுஜன்யா

Subankan said...

WISH YOU A VERY HAPPY AND PROSPEROUS NEW YEAR AKKA

Ashok D said...

வாழ்த்துகள் ஹேமா

rvelkannan said...

இனிய ஆங்கில புதுவருட வாழ்த்துக்கள்...

க.பாலாசி said...

//இரத்தம் தோய்ந்த வருடம்
அங்கும் சிவப்பாய் வந்தபடிதான்.

என்றாலும் பனிபடர்ந்த பூமிக்குள்
என் வெப்பக் கண்ணீர் தெளித்தே
உரு(க்)கியபடி வழ்ந்துகொண்டிருக்கிறேன்.//

நீங்கள் மட்டுமல்ல.

கவிதையில் கலந்த கவலைகள்...விரைந்து களைபடும் என்ற நம்பிக்கையில்... வாழ்த்துக்கள்.

துபாய் ராஜா said...

நடந்தவை நடந்தவைகளாக இருக்கட்டும். இனி நடப்பவை நல்லவைகளாக இருக்கட்டும்.

உங்களுக்கும் வாழ்த்துக்கள் ஹேமா.

Starjan (ஸ்டார்ஜன்) said...

இந்த வருடம் எல்லா வளமும் பெற எல்லாம் வல்ல இறைவனிடம் பிராத்திக்கிறேன் .

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

Anonymous said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்.

கார்த்திகைப் பாண்டியன் said...

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்..:-)))

na.jothi said...

கவலைகள் நீங்கி வழி பிறக்கும்
என்ற நம்பிக்கையுடன்
புத்தாண்டை வரவேற்போம் ஹேமா

புத்தாண்டு வாழ்த்துக்கள்

அரங்கப்பெருமாள் said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்.

//நித்தம்
சிவப்பு வைனும்
ஆட்டிறைச்சியும்
முட்டையும்
சலாட்டுமாய்த் தின்று//

- என்ன ஹேமா, சொல்லவே இல்லை இதுவரை.

புலவன் புலிகேசி said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்

சந்தான சங்கர் said...

ஏற்றத்திலும் தாழ்விலும்
ஏணியாய் இருந்து வழிவிடும்
இந்த வருடம் கடக்கும் நினைவுகளில்
பயணிப்போம் புது வருடம் நோக்கி
புது மனிதனாய்..


புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழி..

S.A. நவாஸுதீன் said...

இந்நாளும் இனி வரும் நாட்களும் சிறப்பாய் அமையட்டும் அனவருக்கும்.

Starjan (ஸ்டார்ஜன்) said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ஹேமா

பூங்குன்றன்.வே said...

மிக்க நன்றி !!! இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். நீங்களும்,உங்கள் குடும்பமும்,நட்பும் நீடுடி வாழ இயற்கையை வேண்டுகிறேன்.

விஜய் said...

இதயம் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்

விஜய்

Nathanjagk said...

ஒவ்​வொரு பருக்​கை​யையும் துளியையும் சங்கடத்துடன் உண்டு வாழும் மனம் புரிகிறது.
இருந்தும் வாழ்த்துக்க​ளை நம்பிக்கையின் சாயல் படர்ந்த பூக்களாக்கி தந்துவிடு​வோம். ​

இருபதும் பத்துமாக தசாவதாரமாக ஒரு இனிய ஆண்டு பூத்திருக்கிறது..
​தோழிக்கு இனிய கிறித்துவ புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

ரிஷபன் said...

இனி நடப்பவையாவது நல்லதாகட்டும்..

அண்ணாமலையான் said...

உங்களுக்கு என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..
நம்ம ப்ளாக் பக்கம் வரலாமா? (ஆனா வந்தா ஓட்டும், உங்க மேலான கருத்தும் பதிவு செய்யனும்.)

நிலாமதி said...

மீண்டும் ஒருபுது ஆண்டில் காலடி பதித்த இந்நாளில் ....வாழ்த்துகிறேன் மனமார, நலமோடும் ,வளமோடும வாழ்க.

ஹேமா said...

என் அத்தனை நண்பர்களுக்கும் என் மனம் நிறைந்த நன்றியும் வாழ்த்துகளும்.

புதிதாய் என் பக்கம் வந்த Mrs.Faizakader க்கும் அனுஜன்யாவுக்கும் என் அன்பான நன்றியும் வரவேற்பும் வாழ்த்தும்.

என்னை உற்சாகப்படுத்திய உங்கள் அனைவருக்கும் மீண்டும் என் நன்றிகள்.

மாதேவி said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ஹேமா.

NILAMUKILAN said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ஹேமா. உங்கள் கவிதைகளை போல இந்த புத்தாண்டு உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் இனியதாய் அமையட்டும்.

ஜெயா said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ஹேமா.

Post a Comment