உதிர்ந்து...அடங்கிக் கிடக்கிறது என் எண்ணங்கள்.
எண்ணச் சருகுகளுக்குள்
ஒளிந்து கிடக்கிறது என் ஓலங்கள்.
தவிப்பின் காற்று அசைத்தாலும்
தத்தளித்துத் தத்தளித்து
படபடத்து விட்டுப் படுத்துக்கொள்கிறேன்.
உங்களையும் என் எழுத்துக்களையும்
மறந்துவிட்டதாய் நினைக்கிறீர்களா நீங்கள்?
எப்படியாகும் அது !
பறவையின் இறக்கைகள்
விட்டுப் பிரிந்தபிறகும்
பறத்தல்போலவே நானும் அலைந்தபடி.
தடுக்கி முட்டி மோதும் அத்தனை திசைகளிலும்
உள் உணர்வின் வலியோடு
பறந்துகொண்டுதான் இருக்கிறேன் இன்னும்.
மனம் பறந்து
முட்கம்பிகளுக்கூடான என் தேசத்தில்.
என்னைமாத்திரம்
ஏதோ என்னையுமறியா
ஒரு இயற்கையின் இயல்பு
ஏந்தியபடியே
திரும்பவும் இங்கே !!!
ஹேமா(சுவிஸ்)
எண்ணச் சருகுகளுக்குள்
ஒளிந்து கிடக்கிறது என் ஓலங்கள்.
தவிப்பின் காற்று அசைத்தாலும்
தத்தளித்துத் தத்தளித்து
படபடத்து விட்டுப் படுத்துக்கொள்கிறேன்.
உங்களையும் என் எழுத்துக்களையும்
மறந்துவிட்டதாய் நினைக்கிறீர்களா நீங்கள்?
எப்படியாகும் அது !
பறவையின் இறக்கைகள்
விட்டுப் பிரிந்தபிறகும்
பறத்தல்போலவே நானும் அலைந்தபடி.
தடுக்கி முட்டி மோதும் அத்தனை திசைகளிலும்
உள் உணர்வின் வலியோடு
பறந்துகொண்டுதான் இருக்கிறேன் இன்னும்.
மனம் பறந்து
முட்கம்பிகளுக்கூடான என் தேசத்தில்.
என்னைமாத்திரம்
ஏதோ என்னையுமறியா
ஒரு இயற்கையின் இயல்பு
ஏந்தியபடியே
திரும்பவும் இங்கே !!!
ஹேமா(சுவிஸ்)
Tweet | ||||
54 comments:
மீண்டும் வருக ..
தினமும் கடை திறக்கபப்படும்னு உறுதி கொடுத்தாதான் பின்னூட்டம் போடுவேன்
வந்தாச்சு வந்தாச்சு ஹேமா. எல்லோரும் சீக்கிரம் வாங்க.
நல்வரவு,
வாங்க நசரேயன்.உங்க எல்லாரையும் சந்திச்சு ரொம்ப நாள் ஆச்சு.
சுகம்தானே !
முடிஞ்ச அளவுக்கு மனசை என் வசம் ஆக்கிக்கிட்டு பதிவைத் தொடர முயற்சிப்பேன்.உண்மையான உறுதி இது.போதுமா.நசரேயன் உண்மையில் இன்னும் ஒரு நிலைப்பாட்டில் இல்லை.சரிப்படுத்தவும் முடியவில்லை.
நன்றி உங்கள் அன்பிற்கு.
நன்றி நவாஸ்.முடிஞ்ச அளவு எங்கள் மன எண்ணங்களைத் தொடருவோம்.சுகம்தானே நீங்கள்.
வாங்க தோழி! நீண்ட இடைவெளிக்குப் பின்பு வந்திருக்கிறீர்கள். உங்களுக்கு முதலே பட்டாம் பூச்சி விருது கிடைத்தது தெரியாமல் நான் பிறிதொன்றை உங்கள் கடைசிப் பதிவுக்கு அனுப்பியிருந்தேன். உங்கள் பதிவுகளில் தமிழரின் வலி நன்றாகத் தெரிகிறது.
என் வாழ்த்துக்கள்.
வாங்க அகநாழிகை.எப்படி இருக்கிறீர்கள்.இனிப் பதிவுகளோடு சந்திக்கலாம்.சுகம்தானே !
வாருங்கள் ஹேமா!
நீங்கள் மறப்பதில்லை
நாங்களும் மறக்கவில்லை
உங்களுடைய நிலைபாடுகளுக்கு இன்னும் ஆறுதல் சொல்லும் பக்கவும் எனக்கில்லை ...
வாருங்கள் சேர்ந்து காயங்கள் ஆற்றுவோம் ...
குட்டி நிலா எப்படி இருக்காங்க ...
நீண்ட இடைவெளியாயினும், பரவாயில்லை. திரும்பி வந்தது ரொம்ப சந்தோசம். தொடரட்டும் மீண்டும் உங்கள் பணி. வரட்டும் பிரகாசம் உங்கள் வலையிலும், வாழ்க்கையிலும்
வணக்கம் தோழி ஜெஸ்வந்தி.இனிய வணக்கமும் கூட உங்களுக்கு.உங்கள் பட்டாம் பூச்சி விருது இன்னும் எனக்கு ஊக்க மாத்திரைதானே !
அன்புக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும் என் அன்போடு உங்களுக்கு என்றும்.இனி அடிக்கடி சந்திக்கலாம் என்றே நம்புகின்றேன்.
பட்டாம்பூச்சி குழந்தைநிலாவில் உங்கள் ஞாபகத்தோடும் பறந்தபடிதான்.
ஜமால் எப்பிடி இருக்கீங்க.நீங்களும் உங்க வீட்லயும் எல்லாரும் சுகம்தானே !
நிலாக்குட்டி நல்ல சுகம்.இப்போ எல்லாம் நிறையக் கதைக்கிறா.பதில் சொல்லவே முடியல.உங்க செல்லம் எப்பிடி? ஊருக்குப் போனீங்கதானே.
ஜமால் யாருக்கு யார் ஆறுதல் சொல்ல என்கிற நிலைதான் தமிழனுடையது.என்றாலும் தொடருவோம்.நன்றி உங்கள் அன்பிற்கு.
ம்ம்ம்...
வாங்கோ ஹேமா...
நிலாக்குட்டி நல்ல சுகம்.இப்போ எல்லாம் நிறையக் கதைக்கிறா\\
ரொம்ப சந்தோஷம்.
ஆம்! ஊருக்கு போய் வந்து இன்னும் உயிர்ப்பில்லாமல் இருக்கிறேன் எனது குழந்தையை அங்கு விட்டு விட்டு ...
வணக்கம் தமிழன்.சுகம்தானே.உங்கட கறுப்பியும் கூட.
மனங்கள் அழுதாலும் சும்மா சிரிச்சுக்கொண்டு வாழத்தானே வேண்டிக்கிடக்கு.என்ன செய்ய !
ஜமால் என்ன செய்யலாம்.இங்கும் அதே நிலைமைதான்.இன்றைய விஞ்ஞான உலக உதவியால் web cam ஓரளவு மன ஆறுதலைத் தருகிறது.
இன்றைய விஞ்ஞான உலக உதவியால் web cam ஓரளவு மன ஆறுதலைத் தருகிறது.\\
எங்கட வீட்ல அதுவும் இல்லை தான்.
தொலை பேசியில்
தொலைந்து போகிறது வாழ்க்கை ...
அருமை சகோதரி...!! உங்கள் ஆதங்கம் கவிதையின் வெளிப் பாடாக.....!!!
நல வரவு...!! வாழ்த்துக்கள்...!! வாழ்க வளமுடன்...!!!
Welcome Back
வாங்க ஹேமா.... நலமா?
வாங்க ஞானசேகரன்.சுகம்தானே...!நானும் சுகம்.
என்ன அதிசயம்!இப்போதான் உங்கள் துவரங்குச்சியின் பதிவு பார்த்துவிட்டு வந்தேன்.
வாங்க லவ்டேல் மேடி.உங்கள் முதல் வருகைக்கும் நன்றி.இனி அடிக்கடி சந்திக்கலாம்.
வந்தேன்...வந்தேன்.வாங்க அபு.சுகம்தானே...!
வாங்க வாங்க ....
நான் இன்னும் என்ன எழுதி இருக்கீங்க கூட பார்க்கவில்லை.
உங்கள் பெயரை பார்த்த உடன் பின்னோட்டோம் எழுது ஆரம்பித்து விட்டேன். சுகம் தானே ???
வீட்டில் அனைவரும் சுகம் தானே???
நாட்டு நிலவரம் எல்லாம் எப்படி இருக்கு ????
நிறைய எழுதுங்க .....
ஒரு வேளை மனதில் தெளிவு பிறந்தாலும் பிறக்கும்
அன்பு மேவி,சுகம்தானே.மனநலம் குறைந்திருந்தாலும் உடல்நலம் குறைவில்லை.நீங்களும் அப்படித்தானே...!
மனதின் தெளிவு என்பது ஈழத்தமிழன் அநாதை ஆகிவிட்டான் என்பதுபோல.நாட்டின் நிலைமை நீங்களும் அறிந்ததுதானே.
சிலசமயங்களில் அதுவும் நன்மைக்கோ என்பதுபோல...!
உங்கள் அன்புக்கும் ஆறுதலுக்கும் நன்றி மேவி.நிச்சயம் உங்களின் பதிவின் பக்கமும் இனி மனதைச் செலுத்தி வர முயற்சிப்பேன்.
திரும்பவும் இங்கே !!!
.....
நான் கூட என்னடா ஆளை காணுமேன்னு தான் நினச்சுட்டு இருந்தேன்....
வாங்க வாங்க
வருகை அருமை....
கவலை வேண்டாம். ஈழ தமிழர்களுக்கு இந்தியாவில் பல கோடி உறவுகள் இருக்கிறது.
நல்வரவு ஹேமா...
உதிர்ந்து...அடங்கிக் கிடக்கிறது என் எண்ணங்கள்.
எண்ணச் சருகுகளுக்குள்
ஒளிந்து கிடக்கிறது என் ஓலங்கள்.
ஆரம்ப வரிகளில் தெரிகின்றது உங்களின் மன நிலை என்ன செய்ய சகோதரி....
காலக்கொடுமையிது...
நலம் தானே தோழி
/உதிர்ந்து...அடங்கிக் கிடக்கிறது என் எண்ணங்கள்.
எண்ணச் சருகுகளுக்குள்
ஒளிந்து கிடக்கிறது என் ஓலங்கள்./
வார்த்தை இல்லை
வலிகள் இன்னும்,
வடுவாய் இதயத்தில் என்பதால்
திரும்பவும் வாங்கோ வாங்கோ
வாங்க ஹேமா... நல்வரவு...சுகமா...
மனநிலையை கவிதையில் காட்டி விட்டீர்கள்...
வாங்க நிலாவும் அம்மாவும்.
சுகம்தானே நீங்களும் நிலாக்குட்டியும்.
நீங்கள் என்னில் தொடக்கிவிட்ட 31 கேள்விகளின் தொடர் இன்னும் முடிந்தபாடாய் இல்லை.இன்றும் சில பதிவர்களின் பக்கங்களின் பார்த்தேன்.
அருமைதான்.உங்களுக்குத்தான் வாழ்த்துக்கள்.
சக்தி நலமா.திரும்பவும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.மெல்ல மெல்லமாய் இயல்பு நிலைக்கு இல்லாவிட்டாலும் இனி அடுத்ததைத் தொடர வேண்டிய சூழ்நிலையில் உள்ளோம்.
செயல்படுவோம்.உங்கள் பதிவின் பக்கமும் வருவேன்.நன்றி தோழி.
திகழ் எப்படி இருக்கிறீர்கள்.உங்கள் பதிவுகள் சில பார்த்தேன்.அருமை.
மனங்கள் அமுங்கிக் கிடப்பதும் வேதனைதான்.மீண்டும் என்னைச் சரிசெய்ய முயற்சி செய்கிறேன்.தோழி உங்கள் அன்புக்கு நன்றி.
வாங்கோ வாங்கோ பிரபா."ஈழத்து முற்றம்"பார்த்தேன்.அருமையான பதிவுகள்.என்னையும் இணைச்சிருக்கிறீங்க.எதையாவது எழுதப் பாக்கிறன்.
பிரபா,மனம் உடைஞ்சு கிடக்கு.எங்க என்னத்தைச் சமாதானப்படுத்தினாலும் எங்கட சனங்களை நினைச்ச ஒண்டுமே செய்ய முடியேல்ல.
நன்றி பிரபா.
வாங்கோ தமிழ்ப்பறவை அண்ணா.
சுகம்தானே.இப்போது நான் இயல்பாய் இல்லை.இன்னொருவரின் தூண்டலிலேயே கொஞ்சம் எழும்பியிருக்கிறேன்.இன்னும் முடியுமா ? என்கிற கேள்வியோடுதான் இப்போதும்.
உப்புமடச்சந்தியில்கூட நிறைய நகைச்சுவையான பதிவுகள் இட என்று நினச்சிருந்தேன்.
முடங்கிக்கிடக்கு உப்புமடச்சந்தி.
Uthinthu adangi-the start itself is nice.Wishing u Happy comeback.
வாருங்கள் ஹேமா.. welcome back... நிலாக்குட்டி நலம் என நம்புகிறேன்..:-)))))))))
வாங்க முனியப்பன்.
சுகம்தானே.தவறவிட்ட உங்கள் பதிவுகளை நேற்றே பார்த்தேன்.ரசித்தேன்.நன்றி முனியப்பன்.
வாங்க பாண்டியன்.உங்கள் எல்லாரையும் திரும்பவும் சந்திக்கிறதில எனக்கு எவ்வளவு சந்தோஷம்.
நிலாக்குட்டி நல்ல சுகம் பாண்டியன்.இப்போ எல்லாம் நிறையவே கேள்விகள் கேக்கிறா.
பதில் சொல்லி முடியாமல் போகுது.
சரி இனி நான் எல்லோரது பதிவுகளுக்கும் போய் நான் விட்ட கணக்கெல்லாம் சரிபண்ணணும்.
பெரிய வேலை இருக்கு.நன்றி உங்கள் எல்லோரது அன்புக்கும்.
சரி இனி நான் எல்லோரது பதிவுகளுக்கும் போய் நான் விட்ட கணக்கெல்லாம் சரிபண்ணணும்.
பெரிய வேலை இருக்கு.நன்றி உங்கள் எல்லோரது அன்புக்கும்.\\
வாங்க வாங்க
உங்கட கருத்துக்காக எங்கட கருத்துப்பெட்டி காத்து இருக்கின்றது ...
வரவேண்டும் வரவேண்டும் ஹேமா. உங்கள் தவிப்பு புரிகிறது. மனதுக்குள் புழுங்கி தவிப்பதை விட நம்மால் என்ன செய்ய முடியும்? உங்கள் பிரயாணம் நலமாக இருந்திருக்கும் என்றே நம்புகிறேன். அங்கு எடுத்த புகைபடங்களை வெளியிடுங்களேன்.
'தூள்" அப்படியே ஷாக் ஆயிட்டேன். தொடருட்டும்
எங்களுக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் வருதில்ல.
நம்ம பக்கம் வார ஐடியா இல்லையா???
நம் வலி உங்கள் எழுத்தில்
ஜமால் ஏனோ தெரியேல்ல.உங்கட பக்கம் வர முடியுதில்ல.எங்க என்ன பிரச்சனை ?
(உங்கள் பக்கம் மட்டுமல்ல.சில பக்கங்களுக்கும் கூட.)
முகிலன்.எப்படி இருக்கிறீர்கள் ?இப்போ பதிவுகள் அடிக்கடி இடுகிறீர்களா ?நல்லது.நன்றியோடு இனி அடிக்கடி சந்திக்கலாம்.
பிரபா...
தொடர்பவன், வாங்கோ...வாங்கோ.உங்கள் பதிவுகளும் பார்த்தேன்.சந்திப்போம்.
உங்கள் கவிதை அருமை, உங்கள் பதிவுகள் அருமை...
தொடருங்கள் வாழ்த்துக்கள்....
நம்ம பக்கமும் வந்து பாருங்க... பிடிச்சிருந்தா அடிக்கடி வாங்க....
ஹேமா வந்தாச்சா? வருக...வருக...வருக...
மனிதத்தை மறுதலித்து
மக்களை அரணாக வைத்து
தாம் தப்பினால் போதுமென
பல்லாயிரம் மக்களை பலியெடுத்து
வரலாற்றில்
புத்திஜீவிகளின் தடமழித்து
துரோகத்தனத்தை இந் ஜென்மத்துப்
பதிவேட்டில் நிரந்தரமாய் பதிவாக்கி
முட்கம்பி வேலிக்குள்
முகமறியாமல் மக்களை முடக்கி
ஊனமுற்ற சந்ததியை பிரசவித்து
தாங்களும் தடமின்றி அழிந்த கதை
இனி எமக்கெதற்கு !
வானம் வெளித்த பின்பும்
வேட்டோசை தணிந்த மண்ணில்
சுதந்திரச் சுவாசம்
நிம்மதியாய் பரவட்டும் !
சனநாயகக் கவி வரிகள்
கருத்துடன் மலரட்டும்!!
சந்ரு உங்கள் முதல் வருகைக்கும் நன்றி.எனக்கு உங்கள் தளத்திற்கும் வர என்னவோ முடியாமல் இருக்கிறது.மீண்டும் முயற்சி செய்கிறேன்.நன்றி சந்ரு.
வாங்கோ வாங்கோ ஆனந்து.
சுகம்தானே.உங்கள் தளம் பார்த்து கவலைப்பட்டுவிட்டேன்.
இனிமேல் வரமாட்டீங்களோன்னு.
சந்தோஷமாயிருக்கு உங்க பின்னூட்டம் கண்டு.
ஆனந்த்,உங்களால் நேரம் கிடைக்கிறப்போ எழுதுங்க.உங்கள் அனுபவப் பதிவுகள் இயல்பானதாய் இருக்கும்.கோவில் திருவிழாக்கள்,
கிராமம்,திரை விமர்சனங்கள் என்று அசத்த உங்களால் மட்டுமே முடியும்.உங்கள் தளத்தில் சந்திக்க ஆசையோடு இருக்கிறேன்.
ஈழவன்,சுகம்தானே.கனநாட்களுக்குப் பிறகு உங்கட பின்னூட்டம்.நன்றியும் சந்தோஷமும்.ஈழத்தமிழனின் நினைவுகளை என்றும் குழந்தைநிலா சுமந்திருப்பாள்.
Post a Comment