குழந்தைநிலாவின் குட்டி நிலா!
வானம் வெளித்து வந்த கவிதை நிலா!
நான்கு வயதின் நாயகி நிலா!
பிறந்த நாளின் பிள்ளை நிலா!
பூக்களும் அழகோ உன்னைவிட!
நிலவும் உன்னைவிட ஒளி தருமா!
மயிலும் பதமிடுமோ உன் பாதம் போல்!
தேனும் சுவைக்குமோ உன்னைவிட!
என் வானம் வெளிக்க வந்த
நிலவடி நீ எனக்கு!
கவிதைகள் தந்த
கருவடி நீ எனக்கு!
தனிமை தொலைக்க வந்த
தோழியடி நீ எனக்கு!
நிலா,உனக்கொன்று தெரியுமா!
வானம் தேடுகிறது
தன் நிலவைக் காணவில்லையாம்!
நான் எடுத்து வந்ததை அறியாமல்
நட்சத்திரங்களும்
வான் அழுத மழையில் கரைகிறதாம்!
ஏன்...குட்டியம்மா
இன்றைய உன் புன்னகையை
உனக்குள் சேமிக்கிறாய்.
வாய் விட்டுத்தான்
கொஞ்சம் சிரியேன்.
அகரம் எழுத மறுத்தாயோ!
முத்தம் இல்லை...போடி
என்றாளோ அம்மா!
அதனால் என்ன இப்போ.
வானின் மை எடு.
மேகத்திரையில்
ஒரு பொம்மை கீறு.
ஒரு முழக்கம் போடு.
வீடே அதிருமடி.
இனி என்ன...உன் கைக்குள்
மந்திரமாய் ஒரு பொம்மை
உன்னோடு விளையாட!!!
ஓராயிரம் நட்சத்திரங்களும்
வண்ணத்துப் பூச்சிகளும்
வாழ்த்துப் படிக்க
புன்னகை சுமந்ததாய்
உன் பாதைகள்.
விழிகளில்
குறுநகைக் குமிழி!
தேன் தமிழின் பிறப்பிடம்
உன் மொழி!
பிளந்த மாதுளையடி
உன் கன்னம்!
என் வானின் நிலவடி நீ!
நிலவுக்கு வகிடெடுத்த
மின்னலடி நீ!
இந்த நாளின் புன்னகை மறவாதே.
இயல்பின் புரிதல்கள்
என்றும் உன்னுடன் வலம் வர,
மனிதம்...
உனக்குள் முழுமையாய் வாழ,
எதிர்காலக் கனவுகளை
ஞாபகப்படுத்திக்கொண்டே
பிரவாகமாய் ஒளிரட்டும்
உன்
நாளைய நாட்கள்.
அன்பை...
உனக்குத் தர வழிகள்
தேடியபடி
எட்டாத் தூரத்தில் நான்.
குழந்தை நிலாவுக்குள் கொஞ்சம்
தொட்டுச் செல்லும்
தென்றலின்
முதுகில் கொஞ்சமுமாய்!
பிரித்துப் பார் கண்ணே.
வாங்கிக்கொள்
என் அன்பை.
கள்ளமில்லா
வெள்ளைச் சிரிப்பும்
களங்கமில்லா
உன் பூ முகமும்
சாயங்கள் ஏந்தாமல்
இயல்போடு வாழட்டும் !!!
ஹேமா(சுவிஸ்)
மனம் நிறைந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நிலாக்குட்டிக்கு!!!
Tweet | ||||
129 comments:
அடடே யாருங்க அந்து குட்டீ???? ச்சோ ஸ்வீட்ட்..... என் அன்பு முத்தங்கள்....
ஆதவா,உங்கள் வாழ்த்துக்கள்தான் முதன் முதலாக.மனதார வாழ்த்துங்க.உங்கள் முத்தங்கள் கனடா-மொன்றியல் பறக்கிறது இப்பவே.
வாழ்த்துக்கள் நிலா குட்டிக்கு
வழக்கம் போல கவிதை இனிமை.... அதிலும் சொற்களிலும் கற்பனைகளிலும் விளையாடியிருக்கிறீர்கள்..
நான் ரசித்த வரிக்ளை ஒவ்வொன்றாக அடுக்குகிறேன்...
வானின் மை எடு.
மேகத்திரையில்
ஒரு பொம்மை கீறு.
ஓராயிரம் நட்சத்திரங்களும்
வண்ணத்துப் பூச்சிகளும்
வாழ்த்துப் படிக்க
புன்னகை சுமந்ததாய்
உன் பாதைகள்.
விழிகளில்
குறுநகைக் குமிழி!
நிலவுக்கு வகிடெடுத்த
மின்னலடி நீ!
எனது வாழ்த்தைச் சொல்லுங்கள்..... பிறந்தநாள் வாழ்த்துக்கள் குழந்தைநிலா.... (பெயர் என்னங்க?)
ஆதவா,என் அப்பாவின் பெயர் குழந்தைவேலு.இவள் நிலா.
இருவரின் பெயரை இணைத்ததுதான் என் குழந்தைநிலா.
நன்றி நசரேயன்.வாழ்த்துக்களை நிலா கனடாவில் இருந்துகொண்டு பார்த்தபடிதான் இருக்கிறாள்.
அதுசரி...ஏன் பேய் எல்லாம் சொல்லி ரொம்பவே பயம் காட்டுறீங்க.பயந்துப்போய் ஓடி வந்திருக்கேன்.
ஹேமா said...
ஆதவா,உங்கள் வாழ்த்துக்கள்தான் முதன் முதலாக.மனதார வாழ்த்துங்க.உங்கள் முத்தங்கள் கனடா-மொன்றியல் பறக்கிறது இப்பவே////
ஆஹா.... பறக்கட்டும் பறக்கட்டும்!!!!! என்ன ஸ்பெஷல் இன்னிக்கு?? ஆலயத்திற்குச் சென்றீர்களா???
ஆதவா,இங்க ஊர்ல மாதிரி எப்பவும் ஆலயம் திறக்காது.வெள்ளி,
செவ்வாய்ல மட்டும்தான்.வீட்ல இருந்து சாமி கும்பிட்டா போச்சு.
நிலாக்குட்டிக்கு இன்னும் 7ம் திகதி ஆகல.அதுதான் பாத்திட்டு இருக்கேன் தூங்காம.வாழ்த்துச் சொல்ல எனக்கும் காலை 6 மணி ஆயிடும்.நிலாவுக்குப் பிறந்தநாள்.எனக்குச் சிவராத்திரி.
அவங்களுக்கு இன்னைக்கு நல்ல காய்ச்சலும் கூட.
ஆஹா...யார் இந்த அழகு நிலா...?
//நிலா,உனக்கொன்று தெரியுமா!
வானம் தேடுகிறது
தன் நிலவைக் காணவில்லையாம்!
நான் எடுத்து வந்ததை அறியாமல்
நட்சத்திரங்களும்
வான் அழுத மழையில் கரைகிறதாம்!//
வாவ்...உண்மையில் இப்படியொரு அழகு குட்டி நிலாவை வானம் தேடாமல் என்ன செய்யும்...
நன்றி புதியவன்.நிறைந்த வாழ்த்துகள் சொல்லுங்க அவளுக்கு.
கவிமாலை மிக அழகு ஹேமா...ஒவ்வொரு வார்த்தையிலும் பாசம் தெரிகிறது...
குட்டி நிலா பெண்ணுக்கு என் அன்பு முத்தங்களுடன் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...எல்லா வளமும் பெற்று
நலமோடு வாழட்டும்...
குழந்தை நிலா அக்காக்கு இந்த குட்டி நிலாவின் பிறந்த நாள் வாழ்த்துக்கள்
நன்றி நிலாக் குட்டி.நீங்களும் அம்மாவும் சுகம்தானே.நிலா அக்காவும் உங்களைப் பாக்கிறாங்க.சுகமும் சொல்லச் சொன்னாங்க.
அன்பின் வாழ்த்துக்கள்...
//நிலா,உனக்கொன்று தெரியுமா!
வானம் தேடுகிறது
தன் நிலவைக் காணவில்லையாம்!
நான் எடுத்து வந்ததை அறியாமல்
நட்சத்திரங்களும்
வான் அழுத மழையில் கரைகிறதாம்
//
அருமை
ஆகா! அருமை!!
இதயங்கனிந்த வாழ்த்துகள்!
நிலா,உனக்கொன்று தெரியுமா!
வானம் தேடுகிறது
தன் நிலவைக் காணவில்லையாம்!
நான் எடுத்து வந்ததை அறியாமல்
நட்சத்திரங்களும்
வான் அழுத மழையில் கரைகிறதாம்!//
பிள்ளை! வணக்கம் எப்பிடி இருக்கிறீர்?? வாழ்த்துக்கள் உம்மடை நிலாவுக்கும் உம்மடை கவிதையளுக்கும்..!
நல்லாத் தான் எழுதுறீர் மோனை?
நான் கொஞ்ச நாளா உந்தப் பதிவுலகப் பக்கமே கால் வைக்கையில்லை?
நாரிப் பிடிப்பு வந்து உந்த லண்டன் ஈஸ்லிங் ஆசுப்பத்திரியிலை இருந்தனான்?
அது தான் தாமதம் பிள்ளை...
நல்லாத்தான் எழுதுறீர்! தொடர்ந்தும் எழுதும்?
அப்ப நிலாக் குட்டி வவாவிண்டை பிறந்த நாளுக்குப் பலகாரம் ஒண்டும் இல்லையோ???
இதயங்கனிந்த வாழ்த்துகள்!
//நிலா,உனக்கொன்று தெரியுமா!
வானம் தேடுகிறது
தன் நிலவைக் காணவில்லையாம்!
நான் எடுத்து வந்ததை அறியாமல்
நட்சத்திரங்களும்
வான் அழுத மழையில் கரைகிறதாம்!//
அருமை....
ஹேமா வாழ்த்துக்கள் உங்கள் நிலாவிற்கு...
அது சரி எங்கை பிறந்த நாள் பரிசு...
கவிதை வழமை போலவே தெளிந்த நடை....
'வானம் வெளித்ததன் பின்னால்' ஒரு நிலா இருக்கும் என்று நினைத்திருந்தேன்.
அழகுநிலவுக்கு அண்ணனின் வாழ்த்துகள்.
நிலா செல்லத்துக்கு மனமார்ந்த வாழ்த்துகள்!
அழகுப் பெண் நிலாவுக்கு என் அன்பான பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
எல்லாம் வல்ல ஆண்டவன் குட்டி பெண்ணுக்கு எல்லா நலமும், வளமும் அருளுவாராக.
கவிதை.......வழக்கம் போலவே அருமை!
// பூக்களும் அழகோ உன்னைவிட!
நிலவும் உன்னைவிட ஒளி தருமா!
மயிலும் பதமிடுமோ உன் பாதம் போல்!
தேனும் சுவைக்குமோ உன்னைவிட! //
ரொம்ப... ரொம்ப... ரொம்ப ... ரசிசேனுங்க இந்த வரிகளை...
// தனிமை தொலைக்க வந்த
தோழியடி நீ எனக்கு! //
பெற்றோர்களுக்கு தனிமை தொலைக்க வந்த ஒரு அருமையான தோழிதான் நிலா.
/
நிலா said...
குழந்தை நிலா அக்காக்கு இந்த குட்டி நிலாவின் பிறந்த நாள் வாழ்த்துக்கள்/
ஹை...நிலா பாப்பா வந்து இருக்காங்க...எப்படி இருக்கீங்க?
நிலா என்றாலே குளிர்ச்சிதான். அழகு பாப்பாவும் நிலா மாதிரி சோ சுவீட்.
உங்க கவிதை குட்டி மேல் உங்களுக்கு உள்ள பாசத்தை காண்பித்து விட்டீர்கள்.
உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்.
// ஹேமா said...
ஆதவா,இங்க ஊர்ல மாதிரி எப்பவும் ஆலயம் திறக்காது.வெள்ளி,
செவ்வாய்ல மட்டும்தான்.வீட்ல இருந்து சாமி கும்பிட்டா போச்சு.
நிலாக்குட்டிக்கு இன்னும் 7ம் திகதி ஆகல.அதுதான் பாத்திட்டு இருக்கேன் தூங்காம.வாழ்த்துச் சொல்ல எனக்கும் காலை 6 மணி ஆயிடும்.நிலாவுக்குப் பிறந்தநாள்.எனக்குச் சிவராத்திரி.
அவங்களுக்கு இன்னைக்கு நல்ல காய்ச்சலும் கூட.//
பாப்பவுக்கு இப்ப எப்படி இருக்கும்மா? தேவலாமா?
தோழி ஹேமா.. உங்கள் குட்டிநிலா கொள்ளை அழகு.. அவளுக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்களும் அன்பு முத்தங்களும்.. குழந்தைக்கு காய்ச்சல் என்று சொல்லி உள்ளீர்கள்.. சீக்கிரமே குணம் அடையட்டும்.. again.. a very very happy birthday to nila..
குட்டி செல்லம்...
"இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்"
//ஓராயிரம் நட்சத்திரங்களும்
வண்ணத்துப் பூச்சிகளும்
வாழ்த்துப் படிக்க
புன்னகை சுமந்ததாய்
உன் பாதைகள்//
இந்த வாழ்த்தை வழிமொழிகிறேன்...
குழந்தை நிலவுக்கு காய்ச்சல் என்று சொல்லி உள்ளீர்கள்.. சீக்கிரமே குணம் அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.
குட்டியின் படங்கள் அருமை ....!
குட்டி நிலாவிற்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
உங்க பேரைச் சொல்லி நான் ஒரு கேக் வாங்கி சாப்பிட்டுக்கறேன்.
வணக்கம் எட்வின்.நிலாக்குட்டியின் பிறந்தநாளோடு உங்கள் முதல் வருகைக்கு நன்றி.
வணக்கம் ஜோதிபாரதி.உங்களைப் போன்றவர்களின் வாழ்த்துக்கள் நிறைவாய் அவளுக்குத் தேவை.நன்றி உங்களுக்கு.
உங்கள் முதல் வருகைக்கு நன்றி.உங்கள் கவிதைகள் நிறையவே படித்திருக்கிறேன்.இன்னும் வாருங்கள்.
அப்பு சங்கடத்தார் வாங்கோ...வாங்கோ.எங்க கன நாளா ஆளைக் காணேலையெண்டு நினைச்சனான்.அப்பு அப்ப நாரிப்பிடிப்பு இப்ப சுகம்தானே.யார் உங்களைக் கவனிச்சுக்
கொண்டவை.இனிப் பதிவுகள் போடுவியள்தானே.கதிரைல இருந்து கணணில வேலை செய்ய ஏலும்தானே.அப்பு நான் தூர இருக்கிறபடியால் உங்களுக்கு உதவி செய்ய முடியேல்ல.கவலையாத்தான் இருக்கு.இனிப் பக்குவமா இருங்கோ. அப்பு பலகாரமோ...நாரிப்பிடிப்புக்கு பலகாரம் ஒண்டும் சாப்பிடக் கூடாதெல்லோ.உங்களுக்கு நல்ல சுகம் வரட்டும்.பிறகு அனுப்புறன்.
நிலா உங்களுக்கு நன்றி சொல்லட்டாம்.சரி வரட்டே அப்பு.
அப்பு உந்த கவின்,ஆதவா,கமல் மூண்டு பேரையும் கண்டனீங்களே.
பெடியளைக் கொஞ்சம் கவனிச்சுக்கொள்ளுங்கோ.பெடியள் அவ்வளவு பிரச்சனை இல்லை.
எண்டாலும் ஒரு கண் வையுங்கோ.
இவன் கவின் தான் கொஞ்சம் கூடக் குழப்படி.ஆதவா ம்ம்ம்..பரவாயில்ல.
ஒண்டு தெரியுமோ அப்பு.அவர் இப்ப எங்கட தமிழ் கதைக்கவும் எழுதவும் தொடங்கிட்டார் எல்லோ.ஆனா பெடியன் நல்லா கவிதைகள் எழுதுறான்.கமல் நாடு,வீடு எண்டு ஒரே...அவன் மனசால களைச்சுப் போறான்.பாவம்.உங்களைக் கனநாள் காணேல்ல எண்டோன பாருங்கோ... நிறையக் கதைச்சுப்போட்டன்.
வாங்கோ ஜீவா,நீங்களும் திருகோணமலையும் சுகம்தானே!
கன நளா உங்களைக் காணேல்ல.
புதுசா பதிவுகள் போட்டீங்களா?நிலாவுக்கு உங்கள் வாழ்த்தும் கிடைச்சிருக்கு.நன்றி ஜீவா.
கமல் வாங்கோ.என்ன பரிசோ...
வாங்கோ தாறன்.கனநாளுக்குப் பிறகு சங்கடத்தார் இந்தப் பக்கம் வந்திருக்கிறார்.நல்லா அண்டி வச்சிருக்கிறன் உங்கள் மூண்டு பேருக்கும்.இனி அவர் பரிசு தருவார்.
நிலாக்குட்டி கமல் அண்ணாவுக்கு நன்றியும் சுகமும் சொல்லட்டாம்.
குட்டி நிலாவிற்கு அன்பு முத்தங்கள். வாழ்வில் சந்தோஷங்களை மட்டுமே கண்டு, ஏற்றங்கள் காண வாழ்த்துகிறேன்.
இந்த வையகம் எங்கும் ஒளி வீசும் நிலாவாக புகழ் ஏணியில் நின்று வாழ மனமார வாழ்த்துகிறேன்.
வாழ்வில் என்றும் மகிழச்சிகரமாக குட்டி நிலா சிறக்க எல்லாம் வல்ல ஆண்டவனை பிராத்திக்கிறேன்.
குட்டி தேவதைக்கு இந்த அண்ணனின் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
ஹம்துன்குட்டி,வாங்க...வாங்க.இன்னைக்கு பள்ளிக்கூடம் விடுமுறைதானே.குழப்படி பண்ணாம சமத்தா இருக்கணும் என்ன.
நிலாக்குட்டி,தனக்குத்தானே பிறந்தநாள் வாழ்த்துப் பாட்டைப் பாடிகிட்டு இருக்கிறா.அவ இப்போதான் அ,ஆ...1,2,3...எழுதப் பழகுறா.ஆனா பிரென்ஞ்,ஆங்கிலமும் கொஞ்சம் கொஞ்சமா பழகிட்டு வாறா.அதனால் எல்லா மொழியும் கலந்து குழப்பமா பேசுவா.கேக்க நல்லா இருக்கும்.நிலாக்குட்டி,அவங்க ஊர்ல இப்போ நல்ல தூக்கம்.
எழும்பினதும் உங்க போட்டோவைப் பாத்துக்குவா.நன்றி ஹம்துன் குட்டி.இனியும் வாங்க.
நிஜமா நல்லவன் வாங்க.உங்க வாழ்த்தும் கனடா போய்க்கிட்டே இருக்குது.நன்றி நல்லவன்.
//இராகவன் நைஜிரியா...
பாப்பாவுக்கு இப்ப எப்படி இருக்கும்மா? தேவலாமா?//
வாங்க இராகவன்.எங்கே ரொம்ப நாளா காணோம்.சுகம்தானே உங்கள் கணணியும் நீங்களும்.ஜமால் எங்க?இண்ணைக்குக் காணோமே. இராகவன் நன்றி உங்க வாழ்த்துக்கு.
இப்போவும் போன் பண்ணினேன்.
காய்ச்சல் நல்ல சுகம் இல்ல.
ஆனாலும் தனக்குத் தானே பிறந்தநாள் பாட்டுப் பாடிக்கிறா.
கார்த்திகைப் பாண்டியன் உங்க வாழ்த்தும் பறந்து போய்க்கிட்டே இருக்கு.நிலா காயச்சல் ன்னாலும் சந்தோஷமா இருக்கிறா.நன்றி உங்களுக்கு.
இரவீ,உங்களைப் பார்த்ததே சந்தோஷமா இருக்கு.
சுகம்தானே.நிலாக்குட்டிக்குப் பிறந்தநாள்ன்னு சொன்னதும் ஓடி வந்து வாழ்த்துச் சொல்லிட்டீங்க.நான் எத்தனை கவிதை,உப்புமடச் சந்தில பதிவுகள் போட்டேன்.எனக்கு வாழ்த்து இல்லையா?சரி பரவால்ல.நான் உங்க கூட கோவம்தான்.நிலாவுக்காக நன்றி சொல்லிக்கிறேன்.
நிலா,காய்ச்சல்ன்னு ஒரு இடத்தில இல்லாம ஒரே கொண்டாட்டமா இருக்கா.இப்பவே கேக் வெட்டணுமாம்.அங்க இப்பதானே காலேல 8 மணி!
//கணினி தேசம் ...
குட்டி நிலாவிற்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
உங்க பேரைச் சொல்லி நான் ஒரு கேக் வாங்கி சாப்பிட்டுக்கறேன்.//
இப்பிடியெல்லாம் சுலபமா பிறந்தநாள் கொண்டாடிலாமோ!நன்றி தேசம்.
நிலா சொன்னா.
ஆனந்த்,மனநிறைவாய் வாழ்தியிருக்கிறீர்கள்.நிறைந்த நன்றி நிலாக்குட்டியின் சார்பில்.தமிழ் வாசிக்கத் தொடங்கினதும் கண்டிப்பா இதையெல்லாம் பார்த்து சந்தோஷப்படுவா.
அன்பு நிலாவுக்கு
அன்பான வாழ்த்துகள்
அழகு நிலவின் அறிமுகம்
அறியும் முகமாக
அகமகிழ்ந் தேன்
அழகு நிலாவின் அறிமுகம்
அழகு கூட்டும் வரிகளோடு
அன்பானவனின் வாழ்த்துகள் மீண்டும்.
\\வானின் மை எடு.
மேகத்திரையில்
ஒரு பொம்மை கீறு.
ஒரு முழக்கம் போடு.
வீடே அதிருமடி\\
சந்தோஷ அதிரல் இங்கும்
எங்கும்
அன்பு நிலாவே வா
அழகு நிலாவே வா
ஆசை நிலாவே வா
உன்னை முதன் முதலில் கண்ட பிரகாசம் என் அகத்திலும் முகத்திலும்
இன்றும் இடியும் மின்னலும் அதிகம் இங்கே
நிலவொன்று கண்டேன் என் ஜன்னலில்
(விண்டோஸ் ...)
என் வீடு தேடி வந்துவிட்டன சாரல்களும் தூரல்களும்
நிலா என்னிடம் இல்லையென்று சொல்லி விட்டேன் அழத வண்ணம் போய் விட்டன
நிலவிடம் தான் நான் இருக்கின்றேன் இது அறியாமல் ...
உன்னை
உன் சிரிப்பை
இரசித்து கொண்டே இருக்க வேண்டும் போல் உள்ளது
வார்த்தைகளை கோர்த்து உன் தாய் போல் கவி பாட வரவில்லை எனக்கு
ஒரு கவிதையை பற்றி கவி பாட நான் ஒன்றும் கவி இல்லையே!
ஆனால் இரசிக்க தெரிந்தவன்!
இதுவே மெத்த மகழ்ச்சி எனக்கு
நீ வாழிய பல்லாண்டு
அன்பு நிலவே!
இன்னும் உன்னோடு பேசி(க்) கொண்டிருக்கின்றேன் நிலவே!
நீ கேட்டுக்கொண்டிருக்கின்றாய் தானே!
என் பாச நிலாவே!
ஜமால்,இண்ணைக்கு உங்க இடத்தை ஆதவா பிடிச்சிட்டார்.எங்கே போயிருந்தீங்க.அட....உங்களுக்கு இவ்வளவு அழகா கவிதை வருதே!ஒரு வேளை நிலாவைக் கண்டதாலோ!
குட்டிம்மா அழகோ அழகு கொள்ளை அழகு!!!
//நட்புடன் ஜமால் ...
இன்றும் இடியும் மின்னலும் அதிகம் இங்கே
நிலவொன்று கண்டேன் என் ஜன்னலில்
(விண்டோஸ் ...)
என் வீடு தேடி வந்துவிட்டன சாரல்களும் தூரல்களும்
நிலா என்னிடம் இல்லையென்று சொல்லி விட்டேன் அழத வண்ணம் போய் விட்டன
நிலவிடம் தான் நான் இருக்கின்றேன் இது அறியாமல் ...//
ஜமால், நிலாக்குட்டி உங்களையும் கவிஞராக்கி அசத்திவிட்டாள்.
இப்போதே போகிறது உங்கள் வாழ்த்துக்கள்.நிலா இன்னும் கேக் வெட்டவில்லையே என்று அடம் பிடித்தபடி இருக்கிறாள்.இன்னும் நேரம் இருக்கே!அங்கே இப்போதானே பகல் 12.30.
//
குழந்தைநிலாவின் குட்டி நிலா!
வானம் வெளித்து வந்த கவிதை நிலா!
நான்கு வயதின் நாயகி நிலா!
பிறந்த நாளின் பிள்ளை நிலா!
//
நானும் இதை கன்னா பின்னாவென்று வழி மொழியறேன்!!
//நிலா,உனக்கொன்று தெரியுமா!
வானம் தேடுகிறது
தன் நிலவைக் காணவில்லையாம்!
நான் எடுத்து வந்ததை அறியாமல்
நட்சத்திரங்களும்
வான் அழுத மழையில் கரைகிறதாம்!//
அழகுதேவதையின் பிறந்தநாளில்
வானம் வெளித்தபின் என்ற பதிவில்
தேவதையை தள்ளிகிட்டு வந்த
என் தோழி ஹேமா மிகவும் அருமையான மென்மையான உணர்வுகளை கொட்டி கவிதை
எழுதி இருக்கின்றீர்கள்.
ரம்யா.சுகமா!நிலாக்குட்டி உங்களை இப்பிடி கன்னாபின்ன வென்று பேச வைக்கிறாளே.பார்த்துக்கொண்டுதான் இருக்கிறாள்.ரம்யா அக்கா இப்பிடி இருக்கிறாங்களேன்னு.சந்தோஷமா கை தட்டி நன்றி சொல்றா.
குட்டி நிலா பெண்ணுக்கு என் அன்பு முத்தங்களுடன் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
எல்லா வளமும் பெற்று வாழ்வாங்கு வாழ என் வாழ்த்துக்கள் தோழி !!
//
ஹேமா said...
ரம்யா.சுகமா!நிலாக்குட்டி உங்களை இப்பிடி கன்னாபின்ன வென்று பேச வைக்கிறாளே.பார்த்துக்கொண்டுதான் இருக்கிறாள்.ரம்யா அக்கா இப்பிடி இருக்கிறாங்களேன்னு.சந்தோஷமா கை தட்டி நன்றி சொல்றா
//
ஹா ஹா ஹேமா வந்தீங்களா
வாங்க வாங்க, நிலா குட்டிம்மா
உனக்கு என் அன்பு முத்தங்க
பல கோடிடா குட்டிம்மா !!!
\\வானின் மை எடு.
மேகத்திரையில்
ஒரு பொம்மை கீறு.
ஒரு முழக்கம் போடு.
வீடே அதிருமடி
\\
ஹேமா இந்த வரிகள் என் கண்களில் நீரை வரவழைத்து விட்டன.
அருமையான அம்மா, பாசமான அம்மா
நிலா நீ ரொம்ப கொடுத்து வைத்தவள் தாயே !!!
ரம்யா சந்தோசமா இருக்கு.உங்களை மாதிரி ஒரு வாலுதான் நிலா.ரொம்ப அடம் பிடிக்கிறா.கேக் இன்னும் வரல.தன்னோட பிறந்தநாள்ன்னு இன்னும் சரியா நிறைவா இல்லன்னு இருக்கு அவவுக்கு.
நான் சுகமாக இருக்கின்றேன் ஹேமா
பிறந்த நாள் treat எப்போ ஹேமா???
//RAMYA said...
நான் சுகமாக இருக்கின்றேன் ஹேமா
பிறந்த நாள் treat எப்போ ஹேமா???//
நிலாவைப் பற்றிச் சொல்லிக்கிட்டே இருக்கிறேனே.என்னால் வேற என்ன செய்ய முடியுது.
//
ஹேமா said...
ரம்யா சந்தோசமா இருக்கு.உங்களை மாதிரி ஒரு வாலுதான் நிலா.ரொம்ப அடம் பிடிக்கிறா.கேக் இன்னும் வரல.தன்னோட பிறந்தநாள்ன்னு இன்னும் சரியா நிறைவா இல்லன்னு இருக்கு அவவுக்கு.
//
அடம் பிடிக்கக் கூடாதுடா நிலா குட்டி
இன்னைக்கு உனக்கு பிறந்த நாளாம்
அம்மா கேக் வாங்க ஆளு அனுப்பி இருக்காங்களாம்.
கேக் கடையிலே ஒரே கூட்டமா இருக்காம்.
கூட்டம் குறைந்தவுடன் கேக் வாங்கிகிட்டு ஓடோடி வந்திடுவாங்களாம்
சரியா எங்கே சிரி பார்க்கலாம் சிரிடா
ம்ம்ம் நிலா சிரிச்சுட்டாங்க.
ம்ம்ம், இப்போதான் நிலா குட்டி ரொம்ப சமத்து பாப்பா !!!
//
ஹேமா said...
//RAMYA said...
நான் சுகமாக இருக்கின்றேன் ஹேமா
பிறந்த நாள் treat எப்போ ஹேமா???//
நிலாவைப் பற்றிச் சொல்லிக்கிட்டே இருக்கிறேனே.என்னால் வேற என்ன செய்ய முடியுது.
//
அதுவே போதும் ஹேமா
மனம் நிறைந்து விட்டது தோழி!!
சரி நான் வரேன் ஹேமா
அப்புறம் சந்த்திப்போமா??
நிலாவுக்கு என் அன்பு முத்தங்கள்!!
ரம்யா,இதைதானே நானும் இண்ணைக்குப் பூரா சொல்லிகிட்டே இருக்கிறேன்.கேட்டாதானே.வெளியில நல்ல பனி கொட்டிக் கிடக்கு.தானே வெளியில போறா.கேக் வாங்க போறாவாம்.வா...லு.
நிறைந்த நன்றி ரம்யா.சுகமா சந்தோஷமா இருங்க எப்பவும்.நன்றி ரம்யா அக்கா...நிலா சொல்றா.
//நிலா,உனக்கொன்று தெரியுமா!
வானம் தேடுகிறது
தன் நிலவைக் காணவில்லையாம்!
நான் எடுத்து வந்ததை அறியாமல்
நட்சத்திரங்களும்
வான் அழுத மழையில் கரைகிறதாம்!//
இந்த வரிகளுக்கும் ரொம்ப சரியாக பொருந்தும் அழகு உங்க நிலா
//பிரவாகமாய் ஒளிரட்டும்
உன்
நாளைய நாட்கள்.
//
ஆம் ஒளிக்கட்டும் இன்று மற்றும் நாளைய நாட்கள்
எல்லா வளமும் பெற்று வாழ
என்னுடைய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
அக்கோய்.. நிலாவுக்கு பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...
அப்பு உந்த கவின்,ஆதவா,கமல் மூண்டு பேரையும் கண்டனீங்களே.
பெடியளைக் கொஞ்சம் கவனிச்சுக்கொள்ளுங்கோ.பெடியள் அவ்வளவு பிரச்சனை இல்லை.
**************
இதை ஏத்துக்கிறன்
**************
எண்டாலும் ஒரு கண் வையுங்கோ.
இவன் கவின் தான் கொஞ்சம் கூடக் குழப்படி.,
***************
யக்கோய் ஊரிலை கேட்டு பாருங்க ரொம்ப நல்லவன்னு எல்லா பொண்ணுகளும் சொல்லுவாங்க ஆமா
மிதிச்ச இடத்து புல்லு கூட சாகாதுங்கோஓஓஓ என்னையைபோயி!
********************
//இரவீ,உங்களைப் பார்த்ததே சந்தோஷமா இருக்கு.//
இப்போது உங்கள் வலைப்பதிவே ஒரே ஜில்லுனு கொண்டாட்டமா இருக்கு...
என்றென்றும் இப்படியே சந்தோசம் நிறைந்திருக்கட்டும்.
//நிலாக்குட்டிக்குப் பிறந்தநாள்ன்னு சொன்னதும் ஓடி வந்து வாழ்த்துச் சொல்லிட்டீங்க.//
பின்ன நிலாக்குட்டினா சும்மாவா???
//நான் எத்தனை கவிதை,உப்புமடச் சந்தில பதிவுகள் போட்டேன்.எனக்கு வாழ்த்து இல்லையா?//
இது கூட உங்களுக்கு நிலாவால தான கெடச்சுது ?
இருந்தாலும் பரவாயில்லை - உங்களுக்கும் மனமுவந்த வாழ்த்துக்கள்.
//நிலா,காய்ச்சல்ன்னு ஒரு இடத்தில இல்லாம ஒரே கொண்டாட்டமா இருக்கா.//
காய்ச்சல் காணமல் போகட்டும் ... நிலவு துள்ளி திரியட்டும்.
//இப்பவே கேக் வெட்டணுமாம்.அங்க இப்பதானே காலேல 8 மணி!//
இப்ப வெட்டியாச்சா? நிலாவுக்கு சந்தோஷமா ?
மீண்டும் ஒருமுறை இனிய நிலாவுக்கு "பிறந்த நாள் வாழ்த்துக்கள்".
அபு,நன்றி.நிலாக்குட்டி வாழ்த்துக்களால் நிரம்பிப்போய் சந்தோஷமாய் இருக்கிறா.நிலா கை காட்டுறா பாருங்க.
இரவீ,எனக்கும் வாழ்த்து சொன்னதுக்கு நன்றி.என்றாலும் நான் கேட்டுத்தான் வாங்க வேண்டியிருக்கு.
ம்ம்ம்...
நிலா,நிறைஞ்ச சந்தோஷத்தோட கேக் வெட்ட ஆயத்தம் செய்திட்டு இருக்கிறா.சல்வாரோட ரொம்ப
அழகா இருக்கிறா.எப்பவும் இப்பிடியே அவ சந்தோஷமா இருக்கணும்.
எல்லா வாழ்த்துக்களும் இறைவனின் ஆசியோடு அவள் வாழ்வை நிறைக்கட்டும்.நன்றி இரவீ.
இரவீ,ஏன் உங்க logo மாத்திட்டீங்க.இருளா இருக்கு.
பிடிச்சிருக்கா அது?
//கவின்...யக்கோய் ஊரிலை கேட்டு பாருங்க ரொம்ப நல்லவன்னு எல்லா பொண்ணுகளும் சொல்லுவாங்க ஆமா
மிதிச்ச இடத்து புல்லு கூட சாகாதுங்கோஓஓஓ என்னையைபோயி!//
பாருங்க ...நீங்களே சொல்றீங்கள்.பெட்டையள்தான் சொல்லுவினம் எண்டு.
நல்லவை,பெரியவையெல்லோ சொல்ல வேணும்.அதுதான் சங்கடத்தாரிட்ட சொல்லி வச்சிருக்கன்.
நன்றி கவின்,கவின் அண்ணாவின் வாழ்த்தையும் நிலாக்குட்டி வாங்கீட்டா.
மலேசியே சென்றிருந்தேன்
ஆதலால் தான் வெகு லேட்.
நிலாவை பார்த்த எவரும் கவிதை சொல்லாமல் இருப்பதில்லை
கவிதைகளை படிக்கும் போதும் மட்டுமல்ல
கவிதையை பார்த்தாலே கவிதை வரும் தானே
அதிலேயும் அழகு கவிதை
நிலாவே அழகு தான்
அதிலும் அழகு நிலா
அமாவாசை அன்றும் ஒளிரும் இந்த நிலா
அன்பு நிலாவுக்கு எனது அன்பு
(கேக் வந்துருசுச்சாடா ...)
My greetings to Nila Kutty.Yella mozhium kalanthu kuzhappama pesuvaa,kekka nalla irukkum.You are in a great period enjoying it.The photos of Kutty Nila are nice.
மனமார்ந்த வாழ்த்துக்கள் அந்த குட்டிக்கு
//வாங்கிக்கொள்
என் அன்பை.
கள்ளமில்லா
வெள்ளைச் சிரிப்பும்
களங்கமில்லா
உன் பூ முகமும்//
இதனால் தான் குழந்தயும் தெய்வமும் ஒன்றென்பார்களே!!
நிலா குட்டிக்கு மகளிர்தின வாழ்த்துக்கள்.
நன்றி ஜமால்.எப்போதும் பின்னூட்டங்களில் முன்னுக்கு நிற்பீர்கள்.ஊக்கம் தரும் உங்கள் ஊக்கங்கள் எங்களை ஊக்குவிக்கும்.
நிலா கேக் வெட்டி நிறைவான சந்தோஷத்தோடு நேற்று இரவு 2 மணியாச்சு தூங்கவே!
இனி நிலா வருகிற வருடம் வருவாள்.
முனியப்பன் நீங்கள் நிலாவுடன் பேசினால் நிறைய சந்தோஷப்படுவீர்கள்.அவ்வளவு சுட்டித்தனம்.வயதுக்கு மீறிய அறிவு.நிலாக்குட்டியும் உங்களுக்கு ஹலோ சொல்கிறாள்.
கலை - இராகலை...
//வாங்கிக்கொள்
என் அன்பை.
கள்ளமில்லா
வெள்ளைச் சிரிப்பும்
களங்கமில்லா
உன் பூ முகமும்//
இதனால் தான் குழந்தயும் தெய்வமும் ஒன்றென்பார்களே!!//
உண்மைதான் கலை.குழந்தை குழந்தையாகவே இருந்துவிட்டால் எவ்வளவு நல்லது.குழந்தைத்தனம் மாறி சுயநலம் கூடிய ஒரு மனுஷியாய் மாறும்போதுதான் நிலாக்குட்டியின் அழகு கூடுதலாய் தெரிய வரும்.நன்றி கலை.
கலை மாமாவுக்கும் ஒரு ஹாய் சொல்கிறாள் நிலா.
//கடையம் ஆனந்த் said...
நிலா குட்டிக்கு மகளிர்தின வாழ்த்துக்கள்.//
பாருங்களேன்.நேற்றுக் கண்ட நிலாவுக்கு மகளிர் தின வாழ்த்துக்கள் சொல்லியிருக்கிறார்.ஆனந்த்.நான் இப்போ யாரோ ஆகிவிட்டேன்.
சரி....சரி. நானும் கவனிச்சுக்கொள்றேன் ஆனந்தை.
என்றாலும் நன்றி சொல்லி வைக்கிறேன் கோவத்தோடு.
ஹேமா...
மகளிர்தின வாழ்த்துக்கள்!!!
ம்ம்ம்...அது.பாருங்க இரவீ நல்ல பிள்ளையா எனக்கு வாழ்த்துச் சொல்லியிருக்கார்.நன்றி இரவீ.
உங்கள் வானத்து நிலவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...
ரொம்ப அருமையா இருக்கு....நானும் நிலாவோட முதல் பிறந்த நாளுக்கு ஒரு கவிதா எழுதி இருக்கிறேன்.....முடிந்தால் விஜயம் செய்யுங்க ..உங்க கருத்தையும் சொல்லுங்க
http://sandaikozhi.blogspot.com/2008/10/blog-post_25.html
நிலா குட்டி ரொம்ப அழகா இருக்கா....இன்று போல் என்றும் புன்னகை மறையாமல் வாழ இந்த அத்தையின் ஆசிகள்
ஹேமா said...
//கடையம் ஆனந்த் said...
நிலா குட்டிக்கு மகளிர்தின வாழ்த்துக்கள்.//
பாருங்களேன்.நேற்றுக் கண்ட நிலாவுக்கு மகளிர் தின வாழ்த்துக்கள் சொல்லியிருக்கிறார்.ஆனந்த்.நான் இப்போ யாரோ ஆகிவிட்டேன்.
சரி....சரி. நானும் கவனிச்சுக்கொள்றேன் ஆனந்தை.
என்றாலும் நன்றி சொல்லி வைக்கிறேன் கோவத்தோடு.
//
அப்டில்லாம் ஒன்றுமில்லை சகோதிரி. குழந்தைகளுக்கு தானே முதல் வாழ்த்து கிடைக்க வேண்டும். உங்களும் மகளிர் தின நல்வாழ்த்துக்கள்.
குட்டி நிலா இப்போது எப்படி இருக்கிறhர்?
ரெடி...
100-வது நான் தான்.
நிலா அம்மா வாங்க.நிலாக் குட்டி சுகம்தானே.எங்க நிலாவும் சுகம்.இணையத்தில அவவுக்கு ஒரு அத்தை கிடைச்சிருக்கா.
சந்தோசமாயிருக்கு.நிச்சயமா உங்க பதிவைப் பார்க்கிறேன்.உங்க வாழ்த்து அன்பாய் போய்ச் சேருது நிலாக்குட்டிக்கு.
100 அடிச்ச(பின்னூட்டத்தில)ஆனந்த்துக்கு வாழ்த்துக்கள்.எனக்கும் மகளிர் தினம் சொன்னதுக்கும் சேர்த்து.
நிலாக்குட்டி கொஞ்சம் சுகம்-சுகம் இல்லை மாதிரி.ஓய்வா இருந்தா சரியா சொல்லலாம்.நன்றி ஆனந்த்.
நிலாவுக்கு (தாமதமான)பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
மகளிர் அனைவருக்கு மகளிர் தின வாழ்த்துக்கள்
மகளீர் அனைவருக்கும் வாழ்த்துகள்
ஆளவந்தான் வாங்க நீண்ட நாட்களுக்குப் பிறகு.நிலா இன்று கூட்டி வந்திருக்கிறாள்.
நன்றி.நிலாவுக்கு இன்னும் குறைவில்லாத வாழ்த்துக்கள்.
ஜமால்,உங்கள் வாழ்த்துக்களை அள்ளிக்கொண்டே இருக்கிறேன் இரண்டு நாட்களாய்.மனம் நிறைகிறது.
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
ஓ...திகழ் மாமியின் வாழ்த்தும் என் நிலாக்குட்டிக்கு.இப்பவே மொன்றியல் பறக்கிறது திகழ்.நன்றி.
Oh My God, I am too late...
But always latest.
To : Nila Kutty
From : Rad Madhav Uncle.
"Many more happy returns of the day"
ஐந்து மீன்களும், சில அப்பங்களையும் கொண்டு ஆண்டவன் விருந்து படைத்தது போல் இருக்கின்றது, நட்பும் பாசமும் பங்கு வைக்கும்போது......
//மாதவ்...
ஐந்து மீன்களும், சில அப்பங்களையும் கொண்டு ஆண்டவன் விருந்து படைத்தது போல் இருக்கின்றது, நட்பும் பாசமும் பங்கு வைக்கும்போது......//
நிலாக்குட்டி பார்....மாதவ் மாமா எவ்வளவு அழகாக தன் பாசத்தைத் தந்திருக்கிறார்.பிந்தினாலும் பாசத்தில் முந்திக்கொண்ட வாழ்த்து.
வாங்கிக்கொள்.நன்றி மாதவ்.
Happy Bday Nila :)
நன்றி தூயா.நிலாக்குட்டிக்கு தூயா அக்காவும் கடைசியா ஓடி வந்து வாழ்த்துச் சொல்லிட்டா.சரியான சந்தோஷம் அவவுக்கு.
நாலு வயதின் நடை பயிலும்
நாயகி நிலாவே நல்லவளாய்
வலுக்கொண்ட பௌர்ணமியாய்
வையகத்தில்நீடூழிவாழவாழ்த்துகிறேன்!
அன்புடன்
ஈழவன் மாமா
ஈழவன் மாமாவும் வாழ்த்துச் சொல்லிட்டார்.அவர் ஒளிச்சு இருந்துகொண்டு எங்களைக் கவனிச்சுக்கொண்டுதான் இருக்கிறார்,அதுதான் ஓடி வந்து நிலாக்குட்டிக்கு வாழ்த்தும் சொல்லிட்டார்,நன்றி ஈழவன்.
romba late agiruche....
anyways belated பிறந்த நாள் வாழ்த்துக்கள் நிலாவிற்கு.....
போட்டோ எல்லாம் நல்ல இருக்கு .....
செம cute அவங்க ....
என்ன வயசு அவங்களுக்கு ?????
குழந்தை நிலாக்கு வாழ்த்துக்கள் சொல்ல்வது மேவி அண்ணன் .........
kavithai arumai hema(swiz)
மேவி அண்ணா மேல நிலாக்குட்டி ரொம்பக் கோபமா இருக்காங்களாம்.அடுத்த வருஷம் முன்னுக்கே சொக்லேட்டோட வரணுமாம்.
நன்றி மேவி.நிலாக்குட்டி 07.03.06 பிறந்தாங்க.
நிலாக்குட்டிக்கு எனது சற்றே தாமதமான வாழ்த்துகள். கவிதை அருமை, இனிமை... துள்ளுகிறது அன்பும் பாசமும் வரிகளில். வாழ்த்துகள்
அப்பாடி...அமுதா மாமி கடைசிப் பந்தியில கேக் சாப்பிட வந்தாச்சு.நன்றி அமுதா.
வாழ்க வளமுடன்
நன்றி சக்தி.நிலாக்குட்டிக்குப் போகிறது உங்கள் வாழ்த்து.
நிலா குட்டி அவ்வளவு அழகு. திருஷ்டி சுத்தி போடுங்கள். காலம் தாழ்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
நிலாக்குட்டிக்கு முகிலின் வாழ்த்தும் கிடைச்சாச்சு.நன்றி முகிலன்.
நிலா குட்டி எப்படி இருக்கீங்க
நிலா எனக்கு அறிமுகமாகி இரண்டு மாதங்கள்தான் இருக்கும் . ஆனாலும்
மனதிற்குள் பதிந்த முழுநிலா ........
வாழ்த்துவதில் உவகை கொள்கிறேன்
நிலா !
கல்வியும் , செல்வமும் ,நலமும் , வளமும் , புகழும் ....ஏனைய அனைத்தும் .,
உன்னால் பெருமைப்படட்டும் . தமிழ் போல் நீடூழி ! வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறேன் ....
அன்பு முத்தங்களுடன் ....
அன்பன்
சின்னபாரதி.
பாரதி....என் நிலாவுக்கு இப்போ 6 வயதாகப்போகிறது.பாலர் பாடசாலை போகத்தொடங்கிவிட்டாள் கனடாவில்.பிரெஞ்,ஆங்கிலம்,தமிழ் கலந்து கதைத்து செல்லமாய் உலவுகிறாள் எஙக்ளோடு.நன்றி.பாரதி மாமாவின் வாழ்த்து அவளிடம் போய்ச்சேரும் இன்றே !
128 வது ஆளா நான்.
என்ன செய்வது உங்ககிட்டே திட்டு வாங்க கடைசியாகவே வர்றேன்.
குழந்தைவேலு
குழந்தைநிலா
ம்ம் ரொம்பவே ரசித்தேன்.
கனடாவில் இருக்கிறாரா? இந்த முறை பின்னூட்டத்தில் ஒவ்வொருவரிடமும் உரையாடிவிதத்தை கடைசிவரையிலும் கடைபிடிங்க.
எனக்கு பிடித்து இருந்தது.
ஜோதிஜி.....அப்பாடி...எங்க தேடிப் பிடிச்சீங்க இப்ப இந்த நிலாக்குட்டி கவிதையை.இப்ப நிலாக்குட்டியோட கதைச்சேன்.அடுத்த வருஷம் பிறந்த நாள் இனிப்பு,பலகாரம் எல்லாம் தாறதாச் சொல்லியிருக்கிறாள்.
பிந்தினாலும் ஜோதிஜி அங்கிள் தேடி வாழ்த்துச் சொல்லிட்டாராம்.நிறையச் சந்தோஷம் சொல்லச் சொன்னாள் !
ஜோதிஜி...இந்தக் கவிதைக்குமாதிரிப் பின்னூட்டம் போட்டா....எனக்கு மட்டும் போட்டுக்கிட்டே இருக்கவேண்டியதுதான்.மற்றவர்கள் பதிவு பார்க்கவோ அவங்களுக்குப் பின்னூட்டம் போடவோ,வேலைக்குப் போகவோ,சமைக்கச் சாப்பிடவோ நேரமே வராது எனக்கு.ஏதாவது உருப்படியா ஆலோசனை சொல்லுவீங்கன்னு பாத்தா....!
குழந்தை + நிலா = குழந்தைநிலா !
Post a Comment