ஒதுங்கிய பகலவன்.
இருட்டின் அரசாட்சி.
பனி மூடிய மலைகள்
வழிய வழி இல்லை.
நாட்கள் விறைத்தபடி.
காற்றில் ஈரம் இறுகி
பனிப் பாதையாகி,
வழுக்கி வழுக்கி
தெருவில் திரிவதோ
செப்படி வித்தையாய்.
உடைகள் பாதணிகள் பாரமாய்
மனம் அதைவிட கனமாய்.
என்றாலும் ஓர் இதம்
பனியின் உறைதலில்.
பனி கிழித்து
சாணகம் தெளித்து
கோலம் வரைய நினைக்கிறேன்.
நிமிடங்கள் சேமித்து
ரசிக்க மறுக்கும்
தெருப்பாடகனின் பாடலாய்,
அவரவர்க்கான
அவசர அழைப்புக்களாய் அலுவல்கள்.
கம்பளிப் பூச்சிகளாய் சிறுவர்கள்.
பூச்சாண்டி மனிதர்கள்.
பனி ரசித்து
பார்வைகள் கண்ணாடி உடைக்கும்
படியோடு நடை நிறுத்தும்
பூனைக்குட்டிகள்.
புகைத்தல் தடை
என்றாலும்,எல்லோருமே புகைத்தபடி.
மதுக்கடை வியாபார அமளி.
குருவிகள் காக்கைகள் எங்கே.
புறாக்கள் தவிர
பறப்பன கண்ணில் இல்லை.
பனிபூண்ட வெள்ளை மரங்கள்.
உருக் கொடுத்து உடைபோட்டு
கண்ணாடி அணிவித்த
மதிலோர பனி மனிதர்கள்.
துன்பம் மழித்து
தோளில் தூக்கா
வெள்ளை மனிதர்கள்.
ம்ம்ம்...
எங்கள் இருப்புக்கள்?
யுகங்கள் வேண்டும்
வெளுத்த வாழ்வுக்கு.
குளிரூட்டி இல்லாமல்
குளிரின் விறைப்பில்
பனியின் முகத்தை
பார்த்து ரசிக்க இலகுவாய்.
பறவை இறக்கையில்
மெத்தென்ற போர்வைக்குள்
குடங்கி முடங்கி
நானே என்னைக் கட்டிய தூக்கம்.
ரம்மியக் கலவியில்
குளிர் ஒரு கவிதையாய்.
பல கால ஆசை
பனி திரட்டி உருட்டிய மனிதன்
கை அளைந்த வண்ணமாய்.
வந்த புதிதில்
பனியை...
சுவைத்ததும் ரசித்ததும்
திருட்டுத்தனமாய்,
சிரிப்பாய் எனக்குள் இப்போ !!!
ஹேமா(சுவிஸ்)
Tweet | ||||
60 comments:
\\குளிருக்குப் பயந்து
ஒதுங்கிய பகலவன்.
இருட்டின் அரசாட்சி.
பனி மூடிய மலைகள்\\
நல்ல வர்ணனை.
\\நிமிடங்கள் சேமித்து
ரசிக்க மறுக்கும்
தெருப்பாடகனின் பாடலாய்,
அவரவர்க்கான
அவசர அழைப்புக்களாய் அலுவல்கள்.
கம்பளிப் பூச்சிகளாய் சிறுவர்கள்.
பூச்சாண்டி மனிதர்கள்.\\
காட்சிகள் விரியுது ...
\\புகைத்தல் தடை
என்றாலும்,எல்லோருமே புகைத்தபடி.
மதுக்கடை வியாபார அமளி.
குருவிகள் காக்கைகள் எங்கே.
புறாக்கள் தவிர
பறப்பன கண்ணில் இல்லை.
பனிபூண்ட வெள்ளை மரங்கள்.
உருக் கொடுத்து உடைபோட்டு
கண்ணாடி அணிவித்த
மதிலோர பனி மனிதர்கள்.
துன்பம் மழித்து
தோளில் தூக்கா
வெள்ளை மனிதர்கள்.\\
அதிகாலை நிகழ்வுகள்
//உடைகள் பாதணிகள் பாரமாய்
மனம் அதைவிட கனமாய்.
என்றாலும் ஓர் இதம்
பனியின் உறைதலில்.
பனி கிழித்து
சாணகம் தெளித்து
கோலம் வரைய நினைக்கிறேன்.//
”பனி கிழித்து” அழகான சொல்லாடல் ஹேமா...
//குளிரூட்டி இல்லாமல்
குளிரின் விறைப்பில்
பனியின் முகத்தை
பார்த்து ரசிக்க இலகுவாய்.
பறவை இறக்கையில்
மெத்தென்ற போர்வைக்குள்
குடங்கி முடங்கி
நானே என்னைக் கட்டிய தூக்கம்.
ரம்மியக் கலவியில்
குளிர் ஒரு கவிதையாய்.//
இந்த வரிகளைப் படிக்கையில் உண்மையில் குளிரடிக்கத் தான் செய்கிறது...மனதிற்குள்...
ஜமால்,ஓடி வாங்க.குளிரான கடை போட்டிருக்கேன்.ஓட்டும் போடுங்க.
புதியவன், பங்குனி தொடங்கியும் குளிரின் அட்டகாசம் தாங்க முடில.அதன் தாக்கம்தான்.வேற என்ன!
//குளிருக்குப் பயந்து
ஒதுங்கிய பகலவன்.
இருட்டின் அரசாட்சி.
பனி மூடிய மலைகள்
வழிய வழி இல்லை.
நாட்கள் விறைத்தபடி.
காற்றில் ஈரம் இறுகி
பனிப் பாதையாகி,
வழுக்கி வழுக்கி
தெருவில் திரிவதோ
செப்படி வித்தையாய்.//
//பனி ரசித்து
பார்வைகள் கண்ணாடி உடைக்கும்
படியோடு நடை நிறுத்தும்
பூனைக்குட்டிகள்.//
எப்படிங்க உங்களால மட்டும் முடியுது? அருமையான வர்ணனை.. வாழ்த்துக்கள்..
வாங்க... கார்த்திகைப் பாண்டியன்.
ரொம்பவும் குளிருதோ! கவிதை.
பனியையும், குளிரையும் கண்முன் நிறுத்தும் வரிகள்
உங்கள் வரிகளி படிக்கும்போது
மனது சூடான டீ தேடி அலையுது
ஒரு மணி உச்சி வெயிலின் சூடு ஒட்டு மொத்தமாய் தனத்து விட்டது. ஓஹோ....
கவிதையின் குளிரோ ???
//ஹேமா said...
புதியவன், பங்குனி தொடங்கியும் குளிரின் அட்டகாசம் தாங்க முடில.அதன் தாக்கம்தான்.வேற என்ன!
//
சூடு கிளம்பி ரொம்பா நாளாகிவிட்டது, இப்போது பங்குனி குளிரா
பரவாயில்லை இந்த கோடையில் ஒரு குளிரான கவிதை திருவிழா
அபு...உங்களுக்குச் சூடுன்னா!நாங்க இன்னும் பனிக்குள்ளதான் கால் புதைய நடக்கிறோம்.
யார் அங்கே....நல்ல சூடா ஒரு தேத்தண்ணி(பால் விடாம)குடுங்க அபு...க்கு.
மாதவ்,இந்தக் குளிர் அங்க அடிக்குதா?சந்தோஷமாயிருக்கு.
நான் பட்ட கஷ்டம் நீங்களும் அனுபவிக்கணும் தானே!
////ம்ம்ம்...
எங்கள் இருப்புக்கள்?
யுகங்கள் வேண்டும்
வெளுத்த வாழ்வுக்கு//
கடும் குளிரிலும் ஒரு பஞ்சிங்!!!
ஹேமா கவிதை அருமை
எதை வர்ணிக்க??
எதை விட எல்லாமே ரொம்ப அருமையா எழுதி இருக்கீங்க!!
//
உருக் கொடுத்து உடைபோட்டு
கண்ணாடி அணிவித்த
மதிலோர பனி மனிதர்கள்.
துன்பம் மழித்து
தோளில் தூக்கா
வெள்ளை மனிதர்கள்.
//
அதிகாலை பூபாளமோ ???
//
அவரவர்க்கான
அவசர அழைப்புக்களாய் அலுவல்கள்.
கம்பளிப் பூச்சிகளாய் சிறுவர்கள்.
பூச்சாண்டி மனிதர்கள்.
\\
அருமை அருமையான வர்ணனை!!!
நலம் நலமறிய ஆவல்
http://www.valpaiyan.blogspot.com/
===============================
இந்த லிங்க்லே இன்னைக்கு என்னோட interview முடிந்தால் படிங்க.
கருத்து சொல்லவும்.
அன்புடன்
ரம்யா
கோடையில் குளிர் கவிதை. அருமை.
ரம்யா, வாங்க.சுகம்தானே!உங்க நேர்காணல் படிச்சேன்.கருத்தும் சொல்லிட்டேன்.
//குளிருக்குப் பயந்து
ஒதுங்கிய பகலவன்.
இருட்டின் அரசாட்சி.
பனி மூடிய மலைகள்
வழிய வழி இல்லை.//
ஆரம்பமே அசத்தல். நல்லாயிருக்குங்க
ஆனந்த் இப்போகூட இங்க குளிர்தான்.குளிர்ச்சட்டை போட்டபடிதான் இதை எழுதிக்கொண்டிருக்கிறேன்.நான் அடிக்கடி சொல்லுவது.
"கொடுத்து வைத்தவர்கள் நீங்கள்".
நல்ல வர்ணனை....நான் போயி கம்பளி எடுத்துட்டு வாறேன் ...
ஹேமா, நீங்க என்னிக்காவது என் பதிவு வந்து பார்க்க மாட்டேங்களான்னு நிறைய நான் யோசிச்சுருக்கேன்....உங்கள் எழுத்துக்கு முன்னாள் நாங்க எல்லாம் ரொம்ப சின்னவங்க...
அப்டியே இலங்கைத் தமிழ் விளையாடுமே உங்கள் மூச்சு காற்றில்.....
நன்றி மீண்டும் வருக
நன்றி நிலாவுக்கும் அம்மாவுக்கும்.உங்கள் நிலாவின் தமிழை எந்தத் தமிழ் வெல்லும்.
கவிதைப் பனி ரொம்பக் குளிருதோ!
Pani poonda vellai marangal,u r lucky to b in a heavanly place Hema.
Koothal maalai padicha odane koothadikkuthu.
கூதிர், கூதை... பழைய தமிழ்ச் சொற்கள்... குளிர்காலம் என்பதற்கு!! குளிர்காலம் என்பதைக் காட்டிலும் பனிக்காலம் என்று சொல்லலாம். தமிழகம் அத்தகைய ஒரு சூழ்நிலையை இழந்துவிட்டது. ஈழம் இயற்கை சூழ்ந்திருப்பதால் ஒருவேளை இருக்கலாம்.
குளிருக்கு பயந்த பகலவன்.. அருமையான கற்பனை.
வழிய வழியில்லாத மலை
நாட்களின் விறைப்பு
போன்ற வரிகள் பிரமாதம்.
பனியில் எப்பொழுதுமே உடைகள் பாரமாக இருக்கும்.. பனிக்காலத்திற்கு ஏற்ப உடைகள் கனமாக இருக்கும். நான் ஊட்டியில் (தமிழகத்தில் ஒரு குளிர்பிரதேசம்) இருந்தபொழுது அந்த குளிரை அனுபவித்தேன். அதன் சுகமே தனிதான்.... அதீத குளிர் உடலுக்கு ஒவ்வாது.....
நிமிடங்கள் சேமித்து
ரசிக்க மறுக்கும்
தெருப்பாடகனின் பாடலாய்,
இந்த வரிகள் திரும்பத் திரும்பப் படித்தும் பொருள் விளங்கவில்லை. நீங்கள் அதனுள் என்னை பதுக்கி வைத்திருக்கிறீர்கள்?
நான் பலமுறை வியந்ததுண்டு... எத்தனை குளிரிலும் பூனைகள் நடுங்குவதில்லை என்று.. ரோமங்கள் மனிதனுக்கு இல்லாமல் போனதென்று வருத்தப்பட்டதுண்டு.
அதன்பின் வந்த வரிகளின் விவரிப்புகள் அருமை... இடையிடையே இல்லம் நினைத்து ஏங்கும்வரிகளும் பிரமாதம்.
பறவை இறக்கை மெத்தை... அழகான கற்பனை.
ஆனால் ஒட்டுமொத்தமாக கவிதையின் கரு என்ன என்பது முடிவுக்கு வரமுடியவில்லை... ஒரு அனுபவக் கவிதை.. அதில் ஒன்றிரண்டு வரிகளின் இடுக்குகள் உடைந்து போனதைப் போன்று இருக்கிறது. என் வாசிப்பின் வட்டம் மிகக் குறுகலானது.... கொஞ்சம் தெளிவுபடுத்துங்களேன்!!!!
அன்புடன்
ஆதவா./
நல்ல குளிர், வாழ்த்துக்கள். ஹேமா.
உடைகள் பாதணிகள் பாரமாய்
மனம் அதைவிட கனமாய்.
என்றாலும் ஓர் இதம்
பனியின் உறைதலில்.
பனி கிழித்து
சாணகம் தெளித்து
கோலம் வரைய நினைக்கிறேன்.//
தங்கள் சுவிசின் குளிருக்குள் இது சாத்தியமா???
அவசர அழைப்புக்களாய் அலுவல்கள்.
கம்பளிப் பூச்சிகளாய் சிறுவர்கள்.//
ஹேமா இதெப்படி??
நல்ல லயம்..நீண்ட காலத்திற்குப் பின்னர் இப்படியொரு அணியினைக் காண்கிறேன்...
இவ்விடத்தில் ’’ஊருக்குக் கிழக்கே உள்ள பெருங்கடல் ஓர மெல்லாம்,
கீரியின் உடல் வண்ணம் போல் மணல் மெத்தை; அம்மெத் தைமேல்
நேரிடும் அலையோ கல்வி நிலையத்தின் இளைஞர் போலப்
பூரிப்பால் ஏறும் வீழும்; புரண்டிடும்; பாராய் தம்பி’’
எனும் பாரதிதாசனின் அணி நயத்திற்குச் சமமாக இக் காலத்திலும் இலக்கியம் நயம் சிதறக் கவி படைத்திருப்பதைக் காணக் கூடியதாக உள்ளது.
கூதல்
என்ன அழகான வார்த்தை... அனுபவிக்கவும் நன்றாக இருக்கும்!!
//உடைகள் பாதணிகள் பாரமாய்
மனம் அதைவிட கனமாய்.
//
அருமை:0
//பல கால ஆசை
பனி திரட்டி உருட்டிய மனிதன்
கை அளைந்த வண்ணமாய்.
வந்த புதிதில்
பனியை...
சுவைத்ததும் ரசித்ததும்
திருட்டுத்தனமாய்,
சிரிப்பாய் எனக்குள் இப்போ !!!
//
அருமையான ரசனை!!
மெத்தென்ற போர்வைக்குள்
குடங்கி முடங்கி
நானே என்னைக் கட்டிய தூக்கம்.
ரம்மியக் கலவியில்
குளிர் ஒரு கவிதையாய்.//
ஹேமா அருமையாகப் புலம் பெயர் வாழ்க்கையைப் புடம் போட்டுக் காட்டியுள்ளீர்கள்??
கவிதை யதார்த்தமும் வாழ்வியலும் கலந்து குளிரடிக்குடிக்குது???
கவிதையின் வரியமைப்புகள் வார்த்தைகள் அழகு... ஆனால் நிச்சயம் இந்த கவிதை எதை நோக்கி பயணிக்கிறது என்பது எனக்கு விளங்கவில்லை...
விளக்கினால் கவிதையின் சாராம்சத்தை ரசிக்க இயலும் என்னால்...
வாழ்த்துக்கள் தோழி!
வாங்க கலை.உங்களை அன்போடு குழந்தைநிலாவுக்குள் வரவேற்றுக் கொள்கிறேன்.உங்களுக்கும் கடும் குளிர் என்பது புதிது அல்ல என்று நினைக்கிறேன்.நானும் உங்கள் ஊர்தான்.இனி அடிக்கடி சந்திப்போம்.
முனியப்பன் இந்தக் குளிர் போதுமா...இன்னும் கொஞ்சம் வேணுமா!
வாசவன்,குளிருக்குப் பயந்து இவ்வளவு நேரம் யோசிச்சுக்கிட்டு இருந்தீங்களா...குழந்தைநிலாவுக்குள் நுழைய!
போத்திக்கிட்டு வந்திருக்கலாம்தானே.
//கமல் ... தங்கள் சுவிசின் குளிருக்குள் இது சாத்தியமா???//
ஏன் கமல்,சாணகம் தெளிக்காமல்,பனியிலேயே கோலம் போடலாமே.வழுக்கியும் விழலாம்.
//கமல் ...
அவசர அழைப்புக்களாய் அலுவல்கள்.
கம்பளிப் பூச்சிகளாய் சிறுவர்கள்.//
ஹேமா இதெப்படி??
நல்ல லயம்..நீண்ட காலத்திற்குப் பின்னர் இப்படியொரு அணியினைக் காண்கிறேன்.//
அப்போ இவ்வளவு நாள் எழுதினதில இல்லையா!இப்பிடிச் சொல்லிப்போட்டீங்களே கமல்!
பூர்ணி,நான் சுவிஸ் வந்த புதிதில் பனி கொட்டுவது...என்னவோ ஓர் அதிசயம் நடப்பது போல.நின்று பார்ப்பேன்,நடந்து பார்ப்பேன்,
அதுபோல் களவாகச் சாப்பிட்டும் பார்த்தேன்.ஆனால் இப்போ....!
அதுபோல உருட்டி யார் மீதாவது எறிந்து விளையாட இன்னும் ஆசை.இந்த வருடம் எங்கள் வீட்டுக்கு முன் பனி மனிதன் செய்தேன்.அதுவும் ரொம்பநாள் ஆசை.அதுதான் கவிதையில்...!
ஷீ.நிசி...உங்கள் வருகை சந்தோஷம் தருகிறது.உங்களைப் பல காலங்களுக்குப் பிறகு தளங்களில் சந்திக்கிறேன்.உங்களை அரவிந்(Lee) ஒரு வருடத்திற்கு முன் அறிமுகப்படுத்தியிருந்தார்.அந்த
ஷீ-நிசி தானே நீங்கள்!இடையில் உங்கள் பதிவுகள் எதையும் காணவில்லையே!
ஷீ.நிசி கவிதை எதையும் நோக்கிய பயணம் அல்ல.குளிரின் அனுபவம்.புரியவில்லையா?ஆதவாவுக்கும் புரியவில்லை என்றிருக்கிறார்.
ஆதாவா,ஷீ-நிசி க்காக மீண்டும் ஒரு முறை..."ஒரு கூதல் மாலை."
ரொம்ப குளிருது....கை நடுங்குது...டைப் பண்ணவே முடியலை....மிக நல்ல வர்ணனை...ரசித்தேன்...!
ஆதவா,"ஒரு கூதல் மாலை" உப்புமடச் சந்தியில் விளக்கத்தை ஒரு பதிவாகவே தர நினைக்கிறேன்
நல்லவன்,கூப்பிட்டாத்தான் வருவிங்க.ம்ம்ம்ம்....
தமிழ்நாட்டில ஒரே வெக்கைன்னுதான் இங்க கூப்பிட்டேன்.கொஞ்ச நேரமாவது மனசு குளிர்மையா இருக்கும்தானே!
kavithai nalla irukku...
office la work jasthiyaga irupathal piragu vanthu detaila comment pannugiren....
மேவி,சீக்கிரமா வந்து தமிழ்ல பின்னூட்டம் போடுங்க.சரி...ரொம்ப வேலையா?ஆறுதலாவே வாங்க.
50th
கடுங்குளிராக்கிடக்கு...:)
நாங்களெல்லாம் குளிர் கூடினால் பியர்தான் அடிக்கிறது... ;)
தமிழன் கவனம்.வேலை இடத்தில இருக்கிறீங்க எண்டு நினைக்கிறன்.
பியர்-கியர் எண்டு புலம்பாமல் இருங்கோ.அப்பிடியே உப்புமடச் சந்திக்கும் போய்ட்டு வாங்கோ.
நாட்கள் விறைத்தபடி.
காற்றில் ஈரம் இறுகி
பனிப் பாதையாகி,
வழுக்கி வழுக்கி
தெருவில் திரிவதோ
செப்படி வித்தையாய்.
///
வாழ்வே ஒரு வித்தைதானே
உடைகள் பாதணிகள் பாரமாய்
மனம் அதைவிட கனமாய்.
என்றாலும் ஓர் இதம்
பனியின் உறைதலில்.
பனி கிழித்து
சாணகம் தெளித்து
கோலம் வரைய நினைக்கிறேன்.///
மனதில் ஏன் கணம்/
நிமிடங்கள் சேமித்து
ரசிக்க மறுக்கும்
தெருப்பாடகனின் பாடலாய்,
அவரவர்க்கான
அவசர அழைப்புக்களாய் அலுவல்கள்.
கம்பளிப் பூச்சிகளாய் சிறுவர்கள்.
பூச்சாண்டி மனிதர்கள்.///
சூழலின் அன்னியம் தெரிகிறது!!!
நன்றி தேவா,பல நாட்களின்பின் உங்கள் பின்னூட்டம்.சந்தோஷம்.
பசுமையான கவிதை
கவின் எங்க போய்ட்டீங்க?சுகமா?பசுமையான கவிதை எண்டு சொல்றதைவிட குளிர்மையான கவிதை எண்டு சொல்லலாமே!
O, it's a nice picture *-*
Post a Comment