*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Thursday, November 27, 2008

நினைவின் நாள் 2008

ஈழமதில்...
மண்ணுக்காய் மரணித்தீர்
மறவோம் உங்களை நாம்.

மிருகங்கள் முதல்
பறவைகள் வரை
பூச்சிகள் முதல்
புளுக்கள் வரை
விடுதலைக்காய்
விட்ட சுவாசத்தில்தான்
விட்டு எடுக்கும்
எங்கள் சுவாசம்.

மறந்துவிட்டால்
மனிதரல்ல நாம்.
தெய்வங்களாய்
துணையிருந்து
பெற்றுத்தாரும்
எம் விடுதலையை!!!

ஹேமா(சுவிஸ்)

8 comments:

Anonymous said...

மறந்துவிட்டால்
மனிதரல்ல நாம்.
தெய்வங்களாய்
துணையிருந்து
பெற்றுத்தாரும்
எம் விடுதலையை!!!

தமிழன் said...

மறந்துவிட்டால்
மனிதரல்ல நாம்.
தெய்வங்களாய்
துணையிருந்து
பெற்றுத்தாரும்
எம் விடுதலையை!!!/////////////////////////

ஹேமா உங்கள் தலைமுறை மட்டும் அல்ல, உங்கள் அடுத்த தலைமுறைக்கும் சொல்லுங்கள் இந்த தியாகத்தை. அனைவர் நெஞ்சிலும் வாழும் அந்த தெய்வங்களுக்கு என் வணக்கங்கள்.

Unknown said...

கவிதை அருமை ஹேமா,
இன்னும் கொஞ்சம் செம்மைப் படுத்தியிருக்கலாம், அத்துடன் எழுத்துப் பிழையும் உள்ளது திருத்தி விடுங்கள்.

Vishnu... said...

ஈழமதில்...
மண்ணுக்காய் மரணித்தீர்
மறவோம் உங்களை நாம்...

தலை வணங்குகிறேன் ...
உயிர் நீத்த
ஒவ்வொரு
தமிழ் வீரனுக்கும் ...

விரைவில்
விடுதலை
நம் கைகளில்
அந்த நன்னாளை
எதிர்நோக்கி ...

அன்புடன்
விஷ்ணு

ஹேமா said...

நன்றி கமல்,திலீபன்,ஈழவன்,விஷ்ணு.மண்ணுக்காய் மரணித்த அத்தனை உயிர்களுமே மாஉயிர்கள்தான்.
வணங்குவோம்.தியாகங்களைத் தொழுவோம்.மதிப்போம்.

தமிழ் மதுரம் said...

ஹேமா, said...
கமல்,உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.யாராவது ஒரு சிலரின் காதுகளுக்குளாவது தமிழ் கொஞ்சம் நுழைந்தால் நல்லதுதான்.

அப்புக்குட்டி யாரிட்டையாவது அடி வாங்கப் போறார்.தேவையில்லாம பொம்பிளைகளைப் பற்றி,பிறகு தமிழைப் பற்றி....இதெல்லாம் இப்போ சிலதுகளுக்குத் தேவையில்லாத விஷயமா எல்லோ போச்சு.

தங்கள் கருத்துக்களுக்கு நன்றி அக்கா. அப்புக் குட்டி அடிவாங்கி வாங்கியே பழகி விட்டார். அது சரி நீங்கள் இந்த இடத்தில ''இதெல்லாம் இப்போ சிலதுகளுக்குத் தேவையில்லாத விஷயமா எல்லோ போச்சு''
சொல்ல வாற விசயம் மட்டும் விளங்கவில்லை. கொஞ்சம் புரிய வைக்க முடியுமா???
அக்கா உங்களிடம் புதுவை இரத்தினதுரை ஜயாவின் யாழ் இடப் பெயர்வு பற்றிய கவிதை ஒலி வடிவில் இருந்தால் எனக்கு அனுப்ப முடியுமா??? எனது mail id: melbkamal@gmail.com

இரசிகன் said...

http://thiraii.blogspot.com/ இந்த சுட்டிக்கும் உலா வரலாம், இது ஒரு பொழுது போக்குக்கான சினித் திரை.

Muniappan Pakkangal said...

It is them who will get freedom for the future generation.let me join u all in remembering them.

Post a Comment