எம்மைப்பற்றிஎம்மைச் சிந்திக்க விடாமல்
தம்மைப்பற்றியே
எம்மைச் சிந்திக்க வைக்கும்
எம்மை இயக்கும்
மந்திரவாதிகள்.
தமக்குள்
ஒரு பதிலை...
முடிவை...
வைத்துக்கொண்டு
எமதென்ற
எமக்கென்ற பதிலுக்கு
புள்ளிகள் போடாமல்
தள்ளிவிட்டு,
தம் பதிலோடு
ஒத்து வந்தால் மட்டுமே
சித்தி பெறப்
புள்ளிகள் போடும்
சுயநலச் சாமான்யன்கள்.
அவர்களுக்காகவே மக்கள்
தவிர
மக்களுக்காக அவர்கள்
ம்ம்ம்...
கேள்விக்குறிதான்!!!
ஹேமா(சுவிஸ்)
| Tweet | ||||




9 comments:
அரசியல்வாதிகளில் நல்லவர்களும் இருந்து உள்ளனர், இன்றும் இருக்கின்றனர். ஆனால் உங்கள் கவிதையில் கூறியது போல் ஒரு சதவிகிதம் தான்.தொடரட்டும் உங்கள் கவிதை
வாங்க திலீபன்.எனக்கு எங்கள் அரசியல் பற்றித்தான் கொஞ்சம் தெரியும்.நம் நாட்டு அரசியல் இப்படிதான் இருப்பதாக எனக்கு.....
அருமையாக இருக்கு. உண்மை நிலையை அசத்தலா சொல்லியிருக்கிங்க!
//தம் பதிலோடு
ஒத்து வந்தால் மட்டுமே
சித்தி பெறப்
புள்ளிகள் போடும்
சுயநலச் சாமான்யன்கள்.
//
நச் என்று இருக்கிறது இந்த வரிகள்! இதை புரியாத பேதைகளே நம் மக்களும் :)
//அரசியல்வாதிகளில் நல்லவர்களும் இருந்து உள்ளனர், இன்றும் இருக்கின்றனர். ஆனால் உங்கள் கவிதையில் கூறியது போல் ஒரு சதவிகிதம் தான். //
திலீபன் சொல்வதை என்னால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை! அப்படி ஒருவன் இருந்தால் இந்த சுயநல மந்திரவாதிகள் என்றோ பரனேறியிருப்பார்கள்!
தங்கள் ப்ளாக்குக்கு இப்பொழுதுதான் வந்தேன். திடீரெனக் கேட்ட ஆஹா பண்பலை நிகழ்ச்சி என்னை சென்னைக்கு அழைத்துச் சென்று விட்டது.(கேட்ட நிகழ்ச்சி ராஜாங்கம்).ந்ன்றி..
இசையில் நனைந்து கொண்டே தங்களின் தற்போதைய பதிவைப் படித்தால்,சூடு பற்றிக்கொண்டு விட்டது. அரசியல்வாதிகளைப் பற்றிப் பேசினாலே,பற்றிக்கொண்டு வருகிறது எனக்கு.அரசியல்வாதிகளை மட்டும் சுருட்டிக்கொண்டுபோக சுனாமி வரவேண்டும்.இப்போதைக்கு என்னால் கனவுதான் காணமுடியும்.
வணக்கம் ஜெய்சங்கர்.(we tha people)குழந்தைநிலா அன்போடு வரவேற்றுக்கொள்கிறேன்.உங்கள் கருத்துக்கு நன்றி.என் நாட்டு அரசியல் பார்வை மட்டுமே எனக்குக் கொஞ்சம் தெரிந்தது.என்னைப் பொறுத்த மட்டில் அரசியல் என்பது சுயநலதோடு கூடிய ஊழல். ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு கருத்துக்கள்தானே!
வாங்க தமிழ்ப்பறவை.என் திசை பறந்து வந்ததற்கு நன்றி.கருத்து சூடாகவே...ok okஆஹா FM க்கு நன்றி நானும் சொல்ல வேணும். உஙகள் எரிச்சலைத் தணித்ததற்கு. கனவுகளில் கால் நனைப்பவர் நீங்கள்.அரசியல்வாதிகளுக்கும் கனவிலேயே சாபமா!!!
அழகாக எழுதுகிறீர்கள்.
வாழ்த்துக்கள்.
ஆனால் உங்கள் வார்ப்புருவின் நிறத்தை மாற்றினால் நன்றாக இருக்கும்.
அன்புடன்
குந்தவை
வணக்கம் குந்தவி.நல்ல அழகான தமிழ்ப்பெயர்.இப்போதெல்லாம் இப்படியான பெயர்களை வைக்கிறார்கள் இல்லை.நன்றி குந்தவி உங்கள் கருத்துக்கும் பாராட்டுக்கும்.நீங்கள் சொன்ன வார்ப்புரு என்பது புரியவேயில்லை.
I mean the Background colour(Black).
Post a Comment