போதையில்
தட்டிக்கொண்டேயிருக்கிறான்
கதவை.
திட்டுவதை
அதட்டுவதைத் தவிர வழியில்லை.
என்ன..... ?
'உப்' பென்று ஊதிவிட்டு
'உர்' ரென்று
பார்த்துக்கொண்டிருக்கிறான்.
என் கோப்பை
வைனின் சாரம் குறைய
வெறுமனே
சிவப்பு நிறத்தில்
மிதந்துகொண்டிருக்கிறது
அவனுக்கான வலி.
ம்ம்ம்....
இப்போது தூங்கியிருப்பான்.
மெல்ல மெல்ல அணைத்து
எனக்குள்
இறங்கிக்கொண்டிருக்கிறது
வெண்பனிக்குளிர் இதமாய்.
நானும் உறங்கலாம்
இனி
நாளை அவன்
கதவு தட்டும்வரை!!!
குழந்தைநிலா(ஹேமா)
தட்டிக்கொண்டேயிருக்கிறான்
கதவை.
திட்டுவதை
அதட்டுவதைத் தவிர வழியில்லை.
என்ன..... ?
'உப்' பென்று ஊதிவிட்டு
'உர்' ரென்று
பார்த்துக்கொண்டிருக்கிறான்.
என் கோப்பை
வைனின் சாரம் குறைய
வெறுமனே
சிவப்பு நிறத்தில்
மிதந்துகொண்டிருக்கிறது
அவனுக்கான வலி.
ம்ம்ம்....
இப்போது தூங்கியிருப்பான்.
மெல்ல மெல்ல அணைத்து
எனக்குள்
இறங்கிக்கொண்டிருக்கிறது
வெண்பனிக்குளிர் இதமாய்.
நானும் உறங்கலாம்
இனி
நாளை அவன்
கதவு தட்டும்வரை!!!
குழந்தைநிலா(ஹேமா)
Tweet | ||||
5 comments:
எக்ஸலண்ட் ஃப்ரண்ட்.
சூடேற்றும் ஒரு கோப்பை வைன் :)
நன்று
ஹேமா.. எளிமையா அழகா இருக்கு. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு இந்த கவிதை. உரிமைப்பட்டவரை திட்டுவதும் கூட சுகம்தானே!!
வைன் கிளாஸையே நொறுக்கிட்டானே அவன்.
இதற்கே இந்த நிலைமை என்றால்....!!!!!
அருமையான கவிதை...
Post a Comment