*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Monday, December 22, 2014

இருட்டு இரவு...

முயல்குட்டியென
மிரட்சியுடன்
மிழற்றிக்கொண்டிருக்கிறது
ஸ்தலவிருட்சமாய்.

தொங்கு சதைகளில்
எதுக்களித்து
தெறித்த வாந்திபோல
முகம் சுளித்தாலும்
வயசுப் பொத்தல்கள்
தூர்வழி தெந்தனமாட....

பூக்களற்ற காலத்தில்
தேனும் வண்டுகளும்
பனிகுடைந்து
நுனிப்பாதம் விறைக்க
வெண்சுருட்டுப் புகையாய்.

காதலில் நலிந்தவன்
காமத்தால் நனைகிறான்.

துகிலாய்ப் போர்த்த
நுரை பூத்த
இலேசான இரவுகளை
வேண்டச் சொல்கிறான்
புதிரற்ற
ஒரு புதிய இரவிடம்.

கொத்திய கொக்கின்
நீர்வட்டமென வாழ்வை
எப்படிச் சொல்லலாம்
இறுக்கி வதைக்கும்...

பண்பாட்டுப் புடவை நுனியில்
தொட்டில் கட்டியசைத்து
பருவத்தை விழுங்கி
கூழாங்கல்லில்
கட்டித்தூக்கிய காமத்தை....?!!!

குழந்தைநிலா ஹேமா(சுவிஸ்)

4 comments:

விச்சு said...

பண்பாடு ஒன்றுதான் கட்டுக்கோப்போடு வைத்திருக்கிறது. நல்ல கவிதை ஹேமா.

ஹேமா said...

விடிகாலை அன்பு வணக்கம் விச்சு.மகிழ்ச்சியும் கூட .நன்றி :)

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
இரசிக்கவைக்கும் வரிகள் பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

விச்சு said...

அன்பு வணக்கம் ஹேமா.. எனக்கும் அதே மகிழ்ச்சி.. பதில் உரைத்தமைக்கு மிக்க நன்றி.

Post a Comment