*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Thursday, December 11, 2014

இறுக்கிய அனத்தம்...

மனம் சலிக்கிறது
கை விடப்பட்ட நாடோடியின்
கனவுப் பாடல்போல் தனித்து.

பேசித் திட்டி
உக்கிரச் சண்டையின் பின்
வார்த்தைகள்
நிறம் வழிந்து வேலியோரமிறந்த
பட்டுப்பூச்சியின் சிகப்பாய்
வயிறு பருத்து.

குட்டிச் சாக்குகளுக்கும்
தன் தந்தைக்கும்
ஏதுமில்லா முலையை
சூப்பிச் சப்பும்
நாய்க்குட்டிகளுக்கும் நடுவில்
பின்னிரவில் காத்திருக்கும்
சிறுமியாய் சிலசமயம்.

கூடிழந்த பறவையொன்றின்
நகச்சிலிர்ப்பை உணர்வதில்லை
காடு தொலைத்தவர்கள்.

அகமும் புறமும் சலித்து
கழுமரப் பழங்கறை
நனைத்து நுழைய
ஏந்திக் கொள்கிறது
வார்த்தைக் கொலைவாள்.

எச்சரிக்கையற்ற சில நிழல்கள்
பின்தொடரும்
செவிமடல்ப் பேய்களாய் !!!

குழந்தைநிலா ஹேமா(சுவிஸ்)

3 comments:

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ரசிக்கவைக்கும் வரிகள் பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

தனிமரம் said...

சில நிழல்கள்
பின்தொடரும்
செவிமடல்ப் பேய்களாய்/// நேசிக்கும் உறவுகளும் தொடரும் பேய்கள் போலத்தான் .கவிதை அருமை.

”தளிர் சுரேஷ்” said...

உவமைகளை எங்கிருந்து பிடிக்கிறீங்க? அருமை!

Post a Comment