*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Monday, December 01, 2014

எனதிந்தப் பனியிரவு...

ஒரு மெல்லிசைப் பாடலிலோ
தாழப்பறக்கும் ஈசலின் இறகிலோ
வலசைப் பறவைகளின் ஒலியிலோ
கூட்டலையும் கழித்தலையும் சிலாகிக்கும்
என் நிலாவிடமோ
பனியடக்கி வேர்த்திருக்கும்
சுவர்க் கண்ணாடிகளிலோ
ஒரு கோப்பை பச்சிலைத் தேநீரிலோ
அடங்கா அர்த்தங்களுடன்
ழுழுவதுமாய் வியாபித்திருக்கிறது
எனதான இவ்விரவு.

ஒத்திகையில்லா வாழ்க்கை
ஒத்திகையில்லா மரணம்
நடுவே
ஒத்திகையில்லாக் கனவுகள்.

பிணங்களுக்கான முகங்கள் அவசியமற்றது
ஆனாலும் மனிதனுக்கு அவசியமானது
உறங்கப்போகும் எனக்கும்கூட.

எத்தனை தரம் தப்பித்திருப்பேன்
இந்த இரவிடம்.

நான் இங்கே இப்போ
தெளிவாயிருந்தாலும்
இப்பனியிரவு
பயங்கரமாயிருக்கிறது.

ஒருவேளை
கடைசியாய் இவ்வறையில்
மனித முகமொன்று இருந்ததென்று
சாட்சியும் சொல்லலாம் எனதிந்த இரவு!!!

குழந்தைநிலா ஹேமா(சுவிஸ்)

3 comments:

தனிமரம் said...

ஒருவேளை
கடைசியாய் இவ்வறையில்
மனித முகமொன்று இருந்ததென்று
சாட்சியும் சொல்லலாம் எனதிந்த இரவு!!//இரவில் ரகசியம் பேசக்கூடாது எனபார்கள் மூத்தோர்! கவிதையின் முடிவில் ரகசியம் புதைந்து இருக்கின்றது.

'பரிவை' சே.குமார் said...

கவிதை அருமை அக்கா....

KILLERGEE Devakottai said...

கவி அருமை வாழ்த்துகள்
அன்புடன்
தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி

Post a Comment