*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Friday, September 19, 2014

சூரியத் தேடல்...

என் சூரியனைக்
கண்டீர்களா யாராவது?

பூவரசு பூத்திருக்கும்
குச்சொழுங்கைகளில்
ஒளிந்திருக்கலாம்
அல்லது
கறையான் புற்றிடை
சிதறியிருக்கலாம்....

சூரிய விசாரிப்பை விடுத்து
இப்போதெல்லாம்
எனைத் தொட்டு விழும்
விம்பத்தைக்கூட
விழுங்கத் தொடங்கியிருக்கிறேன்
பெரும் பாம்பாக.

உச்சி முடியை
எரிக்கத் தொடங்கியிருந்தான்
அவன்!!!

குழந்தைநிலா ஹேமா !

5 comments:

ஆ.ஞானசேகரன் said...

//என் சூரியனைக்
கண்டீர்களா யாராவது?//
வணக்கம் ஹேமா,
இன்னும் அதே அசத்தல்...

Unknown said...

இன்னும் விட்டுப் போகாத சோகம்

'பரிவை' சே.குமார் said...

உச்சி முடியை எரிக்கத் தொடங்கியிருக்கிறான் அவன்...

சோகம் சொல்லும் கவிதை...

மகேந்திரன் said...

என் உச்சியை நீ எரிக்கத் தொடங்கினாலும்..
உனக்கான அஸ்தமனம் ஒன்று உண்டு..
அப்போது உன் உச்சிமுடியை நான் பிடிப்பேன்..

தனிமரம் said...

பாம்பு விழுங்க முடியுமா சூரியனை அவன் எப்போதும் சூரியன் தான்.அருமைக்கவிதை.

Post a Comment