*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Thursday, August 07, 2014

பச்சைக் கள்ளன்...

நீ...
உதடு
பதித்தெழுதியபோது
தெரியவில்லை
நம்
உயிர் தொட்டெழுதும்
வாழ்வின் உயிலென்று.

உன் நிழலால்
புசிக்கப்பட
என் மிச்சங்கள்
பாசியாய் வழுக்கி
எம்பிப் பறக்கிறது
உதட்டுப் பூக்களென
பச்சை பச்சையாய்.

காதலாய்
மலைப்பாம்பெனப்
பற்றிக்கொண்டு
என் இறகையும்
பறித்துக்கொண்டு
பற்றிக்கொண்டதும்
பறித்துக்கொண்டதும்
நானென
பறையடிக்கிறாயே
இறகுக்கள்வனே.

பறவையாதலும்
பைத்தியமாதலும்
சுகம்தான்
அன்பின் தோள்களில்.

பச்சைக் கள்ளா
உனக்கா தெரியாது
அன்பின் பாரம்!!!

குழந்தைநிலா ஹேமா.

5 comments:

Unknown said...

பச்சைக் கள்ளன்....ஹி!ஹி!!ஹீ!!!

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்

கவிதையின் வரிகளை இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

ரிஷபன் said...

பறவையாதலும்
பைத்தியமாதலும்
சுகம்தான்
அன்பின் தோள்களில்.// வாவ்.. அருமை

அ. வேல்முருகன் said...

அன்பு
சுமையா
சுகமா?

அறிந்த சுமையென்பதால்
சுகம்தான்

விச்சு said...

பச்சை பச்சையாய்...

Post a Comment