*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Tuesday, September 17, 2013

நான் அவன் மழை...


தமிழாய்...
சோவெனப் பெய்தவன்
சொல்கிறான் வாயாடியாம்
மழைத்தேவனும் மாறுகிறான்
சாதாரண மனிதனென
அடித்துப்பெய்த மழையில்
கரையொதுங்கும் பட்டுப்பூச்சியென
அவன் மனதில்
ஒட்டிக்கிடப்பதறியானோ.

உள்நுழைந்து
அதே பாதையில் வெளியேற
எளிதாயிருக்கிறதுனக்கு
ஒரு நாளும்
அறிந்திருக்கப்போவதில்லை
உயிர்ப்பறவைச் சிறகொன்றை
பிய்ப்பதில் வலியையும்
அதன் ஓலத்தையும்.

இதில் வேறு
அதே சிறகால் கண்மூடி
காதும் குடையும் காட்சி
ஆகா.....கிராதகா.

உருண்டோடும் மழைச்சகதியில்
ஒட்டிக்கொண்ட சேறாய்
உன்பாட்டுக்கு உருட்டுகிறாய்
என் தேகம்
உதிர்ப்பது உதிரமல்ல
தேவனே
ஆராய்ச்சியும் அறிவியலும் தேடும்
உனக்கெங்கே தெரியப்போகிறது
மனமும் மண் உருட்டலும்.

காலச்சகதியில்
நனைந்தும்
உருண்டுகொண்டும்தான் நான்
ஒவ்வாமைகளே உடையாய்.

இப்போதைக்கு
கொஞ்சம் அணைத்துக்கொள்ளேன்
குளிர்கிறது!!!

ஹேமா(சுவிஸ்)

7 comments:

சாந்தி மாரியப்பன் said...

ஜூப்பரு ஹேம்ஸ்..

Bibiliobibuli said...

ஹேமாஆஆஆஆஆஆ..... எப்பிடி இருக்கிறீங்க :)) நான் தான் இந்தப் பக்கம் வர்ரதில்லை....ம்ம்ம்ம்.

உங்கட கவிதைக்கென்ன பாராட்டி, பாராட்டி எனக்குத் தான் அலுக்குது :)) நல்லாருக்கு, ஹேமா.

Seeni said...

adengappaaaaa....!!

Anonymous said...

வணக்கம்
கவிதையின் வரிகள் அருமை மேலும் கவிதைகள் படைக்க எனது வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

இந்திரா said...

//அடித்துப்பெய்த மழையில்
கரையொதுங்கும் பட்டுப்பூச்சியென
அவன் மனதில்
ஒட்டிக்கிடப்பதறியானோ.//

உவமை அழகு..
:)

logu.. said...

ஆஹா.. ரொம்ப குளுரு...

விச்சு said...

நல்லாயிருக்கு ஹேமா.

Post a Comment