*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Friday, September 13, 2013

கவிக்காதல்...


விண் நுழைந்த
சாகா விண்மீன்கள்
உதிரா நூலில்
நழுவா அந்தரத்தில்
தொங்குமென் முந்தானையில்.

எனை
சித்திரமெனக் கீறி மறந்த
உன் இதயம்
எண்ணிக்கை அறியாது
அந்தாதி முத்தங்களை.

செவ்விதழ் கௌவி
தேன் நீ
தேனீயென
போதையில்
புலன் தொலைத்து
எழுதுகோல் முனையில்
காதலுரசும் கவிஞனை
முகிழ்த்து மூடிக்கொள்வதெங்கனம்?

சேதனமில்லாச் சொல்லெடுத்து
உதட்டருகில் வெட்கித்து
யாக்கை நடுங்கியிறுக
உயிர் உருகி
கவி சொல்லி....

பாடடி பல்லவியை
தொடர்வேன் சரணமென
காதுக்குள் காதலுரைத்து
காது கடித்து
மீசை நீவி
கொல்லவும்
பின் கொள்ளவும்
துடிக்கும் உன்னை.....

உன் பாரி நானெனக் கூவி
கவியுன்னை
காவிக்கொண்டிருக்கிறேன்
இலக்கியப் பல்லக்கில் !!!

ஹேமா(சுவிஸ்)

6 comments:

arasan said...

பட்டாசு கவிதை அக்கா ... வாழ்த்துக்கள்

Anonymous said...

வணக்கம்

கவிதை அருமை வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

விச்சு said...

”காவிக்கொண்டிருக்கிறேன்..” இந்த மாதிரி வார்த்தைகளைப் பயன்படுத்த தங்களால் மட்டுமே முடியும். செம..

logu.. said...

ம்ம்ம்ம்ம்.....

அம்பாளடியாள் said...

உன் பாரி நானெனக் கூவி
கவியுன்னை
காவிக்கொண்டிருக்கிறேன்
இலக்கியப் பல்லக்கில் !!! //

தொடரட்டும் தொடரட்டும் இன்பக் கவிதை இனிதே தொடர வாழ்த்துக்கள் தோழி .

'பரிவை' சே.குமார் said...

கவிதை அருமை...

Post a Comment