*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Thursday, September 12, 2013

கண்டுகொண்டேன்...


கண்டுகொண்டேன்
கண்டுகொண்டேன்
நடுவில் எங்கேயோ
சரிந்த கோடொன்றில்
முழுப் பாகையில்
இல்லாச் சூரியனை.

கடவுள்கள் பிறக்கமுன்
மதங்கள் பிறந்து பரவ முன்
பிறந்த ஒரு மனுஷியின்
சந்தோஷம் எனக்கிப்போ.

கடவுளர்களை
சிறைப்பிடித்து வைக்கப்போகிறேன்
படைப்பில் விடுபட்டுப்போன
மற்றும்...
முன்செய்த பிழைகளை
சரிப்படுத்தலாம் !

சிரிக்கும் முகத்தோடு
தொப்பி போட்ட
பனிமனிதன்
செய்துகொண்டிருக்கிறேன்
இதயம் இல்லாமல் !

ஹேமா(சுவிஸ்)

7 comments:

Yaathoramani.blogspot.com said...

ஆம் இதயமற்றவர்கள் வாழத்தான்
ஏற்றது இந்த பூமி
அந்த மனிதனாவது
சுகமாய் வாழ்ந்துவிட்டுப் போகட்டும்
இதயமற்றே அந்த மனிதனைப் படையுங்கள்
மனம் கவர்ந்த படைப்பு
பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

tha.ma 1

இராய செல்லப்பா said...

கடவுள்கள் பிறக்குமுன் //மதங்கள் பிறந்து பரவு முன்//பிறந்த ஒரு மனுஷியே! வாழ்க நீவிர்! - கவிஞர் இராய. செல்லப்பா (இமயத்தலைவன்), சென்னையிலிருந்து.

இராஜராஜேஸ்வரி said...

இதயம் இல்லாமல் !
அப்போதுதான் சிரித்து
சந்தோஷமாக வாழமுடியும் ..!

திண்டுக்கல் தனபாலன் said...

முன்செய்த பிழைகளை
சரிப்படுத்தலாம் ! - நடக்கட்டும்...

'பரிவை' சே.குமார் said...

அருமையான கவிதை....
வாழ்த்துக்கள் சகோதரி.

விச்சு said...

சிரிக்கும் முகத்தோடு
தொப்பி போட்ட
பனிமனிதன்
செய்துகொண்டிருக்கிறேன்
இதயம் இல்லாமல் !..
இந்த வரிகளும் அதற்குரிய படமும் இதற்குமுன் போட்டிருந்தீர்களா! நான் படித்த ஞாபகம். அதனால்தான் கேட்டேன். தங்கள் எழுத்துக்களின் முன்னால் எல்லாமே தோற்றுவிடுகின்றன.

Post a Comment