*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Friday, July 19, 2013

சொல்லாடை...


உதடு சுழித்துக்
கிழித்த துண்டில்
இழுத்து எறியப்பட்ட
சில வார்த்தைகளால்
துடித்துத் தவிக்கும் சில உயிர்கள்.

ஓடி அடங்கி
அவிழ்த்தோடும்
நாடி நரம்புகள்கூட
செரிக்கமுடியா வார்த்தைகளால்
அவதியுறும்.

தேடி விடியும்
நாளொன்றின் கதவுகள் திறந்து
சாத்தான்களோடு
கூடிவரும்
அந்நாளில்
அந்த வார்த்தைகள்!!!

ஹேமா(சுவிஸ்)

10 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

தவிக்க வைக்கும் வார்த்தைகளை உடனே துப்பி விடுவது நல்லது...

கவியாழி said...

நாடி நரம்புகள்கூட
செரிக்கமுடியா வார்த்தைகளால்
அவதியுறும்.//ம்.....ம்...

சாந்தி மாரியப்பன் said...

//சாத்தான்களோடு
கூடிவரும்
அந்நாளில்
அந்த வார்த்தைகள்//

அருமை. விதைத்தவை மறுபடியும் கிடைக்கத்தானே செய்யும்.

சாந்தி மாரியப்பன் said...

//வலியைவிட வலிக்குமே என்கிற உணர்வுதான் அதிகமான வலியைத்தருகிறது//

ஹை.. சாரல் துளிகள் உங்க தளத்தில். நன்றி ஹேம்ஸ் :-)

பால கணேஷ் said...

வார்த்தைகளின் கனத்தை விளக்கிய கவிதை அருமை!

T.V.ராதாகிருஷ்ணன் said...

ஜீரணிக்கமுடியாதது

அஜீர்ணத்தை மட்டுமே

விழ்ந்தால் எடுக்க இயலாது

விழுந்த வார்த்தைகளை மட்டுமே

வினை வலிதானால்

விதி வலிது

'பரிவை' சே.குமார் said...

ஓடி அடங்கி
அவிழ்த்தோடும்
நாடி நரம்புகள்கூட
செரிக்கமுடியா வார்த்தைகளால்
அவதியுறும்.


------

வார்த்தைகளால் வார்த்தைகளுக்கு கோர்த்த கவிதை அருமை...

திண்டுக்கல் தனபாலன் said...

தங்களின் தளம் : http://jeevanathigal.blogspot.com/2013/07/14-to-20-07-2013.html

ஹேமா said...

எப்போதும் அறியத்தருகிறீர்கள்.நன்றி தனபாலன் பார்க்கிறேன் !

சாரல்....பொன் மொழிகள் சேகரித்து வைப்பேன்.உங்களதா இந்த வார்த்தை.நன்றி !

இராஜராஜேஸ்வரி said...

ஓடி அடங்கி
அவிழ்த்தோடும்
நாடி நரம்புகள்கூட
செரிக்கமுடியா வார்த்தைகளால்
அவதியுறும்.... சொல்லாடை அழகு ..!

Post a Comment