*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Sunday, July 14, 2013

முன்னிலைக் காதல்...


நான் நட்பென்கிறேன்
நீ காதல் என்கிறாய்
நீ காதல் என்கிறாய்
நான் நட்பென்கிறேன்.

எல்லாவற்றிற்கும்
பாதகமில்லா
விளக்கம் வேறு
யாரையும்
பாதிக்காத
வழிமுறைகளோடு.

நான் நல்லவளா
நீ நல்லவனா
துரோக வழிகளை
அடைக்கிறோமா
திறக்கிறோமா?

எனக்கானது
எனக்கானது மட்டுமே
கொடுத்துத் தின்னமுடியாத
ராஸ்கல் நீ
நானும்தான்...!

இருவருமே
துரோகம் பண்ணவும்
ஏமாற்றவும்
விரும்பவில்ல
ஏமாறவும்
பிடிக்காத
பெருச்சாளிகள்.

உனக்குப் பாசமில்லையோ
போகிறேன் என்றுவிட்டாய்
சுலபமாக
நான்.....?

முடிவில்
முற்றுப்பெறா
அல்லது
முன்னிலைக்
கவிதையொன்றுக்கு
நாயகன்
நாயகி
என்கிற உச்சரிப்புக்கள்
மட்டும்
நம் கதை கேட்பவர் மனதில்.

ஒன்றுக்கும்
உபயோகமில்லா
மழையென
தேங்கிக் கிடக்க
ஈக்களும் கொசுக்களும்
புணர்ந்துகொள்ளும்
ஒரு ஒதுங்குமிடமாய்....

விடு என்னை
போய்விடு நீ!!!

ஹேமா(சுவிஸ்)

9 comments:

பூங்குழலி said...

ஒன்றுக்கும்
உபயோகமில்லா
மழையென
தேங்கிக் கிடக்க
ஈக்களும் கொசுக்களும்
புணர்ந்துகொள்ளும்
ஒரு ஒதுங்குமிடமாய்....

விடு என்னை
போய்விடு நீ!!!


அழகான அழுத்தமான உணர்வுகள் சொல்லும் கவிதை

திண்டுக்கல் தனபாலன் said...

சிலருக்கு சுலபம் சுயநலத்தால்...
சிலருக்கு துயரம் அதனால்...

தனிமரம் said...

விடு என்னை
போய்விடு நீ!!// முற்றும் துறந்த நிலைபோலும்! மிகவும் அழகிய கவிதை.

அம்பாளடியாள் said...

உனக்குப் பாசமில்லையோ
போகிறேன் என்றுவிட்டாய்
சுலபமாக
நான்.....?

முடிவில்
முற்றுப்பெறா
அல்லது
முன்னிலைக்
கவிதையொன்றுக்கு
நாயகன்
நாயகி
என்கிற உச்சரிப்புக்கள்
மட்டும்
நம் கதை கேட்பவர் மனதில்.

வலிகளின் சாரல் கவிதை வரிகளில்
இன்றும் .சிறப்பாக உள்ளது தோழி !

MANO நாஞ்சில் மனோ said...

மனதின் வலி கவிதையில் புரிகிறது...!

கீதமஞ்சரி said...

அழுத்தமான காதல் உணர்வுக்கும் ஆழமான நட்புக்கும் இடையில் அல்லாடும் கவிமாந்தர்களின் மனோவேதனை மனம் அழுத்துகிறது ஹேமா.

sathishsangkavi.blogspot.com said...

.. ஒன்றுக்கும்
உபயோகமில்லா
மழையென
தேங்கிக் கிடக்க
ஈக்களும் கொசுக்களும்
புணர்ந்துகொள்ளும்
ஒரு ஒதுங்குமிடமாய்......

அழகான வரிகள்..

”தளிர் சுரேஷ்” said...

அழகான கவிதை! வாழ்த்துக்கள்!

மாதேவி said...

கவிதை வலிக்கின்றது.

Post a Comment