*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Wednesday, February 20, 2013

காலம் கடத்தும் காதல்...


உனக்கான காதலைப்பற்றி
எழுதிக்கொண்டே இருக்கிறேன்
நீயோ...
காதலே தெரியாதவனாய்
நடித்தபடி
உனக்கு யார்
ஆஸ்கார் தரமுடியும்
என்னைத்தவிர.

தள்ளிப்போகிறாய்
காலம் கடந்துகொண்டிருக்கிறது
காலத்திற்காக காத்திருப்பதும்
அதைக் கடந்து நடப்பதும்
கொடுமை.

பேரம் பேசி
போன நேரநிமிடங்களை
பெற்றுக்கொள்வாயா
சமாதானமற்றது காலம்
நம் அரசியல்போல 

இரக்கமற்றது உன்னைவிட.

தொலைந்த ஒன்றிற்காக
தவமிருந்து
காலத்தோடு சமரசம்
பேசிக்கொண்டவள் நான்.

ஒரே ஒரு தரம்
காதலித்துத்தான் பாரேன்
பிடிக்கும் உனக்கு என்னை.


யாரோடும்.....
எதுவும் முடிவதில்லை!!!

ஹேமா(சுவிஸ்)

8 comments:

மீனாக்ஷி said...

பிரமாதம் ஹேமா!

//காலத்திற்காக காத்திருப்பதும்
அதைக் கடந்து நடப்பதும்
கொடுமை.//

ம்ம்ம்ம்... சரிதான்.

காட்டான் said...

ஹேமா,
,
,
,
,
,
,
,
!!!!

ஸ்ரீராம். said...

அலுத்துப் போகிறதோ...! சுகமான அலுப்பு!

குட்டன் said...

//ஒரே ஒரு தரம்
காதலித்துத்தான் பாரேன்
பிடிக்கும் உனக்கு என்னை//
அய்யோ!கொன்னுட்டீங்க!

மாத்தியோசி மணி மணி said...

பேசாம அவரைக் கழட்டிவிட்டுட்டு, இன்னுமொரு ஆளை பாருங்கோ ஹேமா!

ஹா ஹா ஆனாலும் கவிதை வழக்கம் போல சூப்பர்!!!

T.V.ராதாகிருஷ்ணன் said...

காதல்..
ஒரு வழிப்பாதை அல்ல
அவனும் அறிவான்..
பிரச்னையே...
மனம்விட்டு பேசாத
ஈகோவே

Seeni said...

mmm....

Jayajothy Jayajothy said...

யாரோடும் எதுவும் முடிவதில்லை காதலைப் பற்றி எழுதிகொண்டிருப்பதால் .(சம)ரசமான வரிகளில் உங்கள் கவிதை பிடித்துப் போனது

Post a Comment