*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Monday, January 07, 2013

தாகம்....

ஒரு
சிறு துளி நீரை
பாதுகாக்கிறேன்
உள்ளங்கையில்.

தணித்திருக்கும் தாகம்
நா வறண்டு இறந்த
என் தேசத்து
உயிர்களுக்கு
இந்த ஒரு துளி.

கவிதைகளுக்குள் தாகம்
தணிக்கும் எனக்கும்
இரத்தம் குடிக்கும்
நுளம்புக்கும்
முலைக்குள்
முகம் புதைத்தழும்
குழந்தைக்கும்
தாகம் குறித்து
ஏதும் சொல்ல வராது.

அடிக்கடி
என் உதடு நனைத்து
உயிரெடுக்கும்
அவன்
அறிந்திருக்கக்கூடும்....

விட்டுப் போன
நத்தை ஓடுகளில்
மழை நீரை
தேடிவரும்
பாலைவனப் பறவைகளின்
தாகம் பற்றியும்
பேசவும் புன்னகைக்கவுமின்றி
தனக்கான
ஈரலிப்பைத் தரும்
என்
ஈர உதடுகளின்
தேவை பற்றியும்...!

ஹேமா(சுவிஸ்)

12 comments:

சசிகலா said...

பேசவும் புன்னகைக்கவுமின்றி ....
வறண்டே போனது உனக்கான வார்த்தைகளும்.

விச்சு said...

அடிக்கடி
என் உதடு நனைத்து
உயிரெடுக்கும்
அவன்
அறிந்திருக்கக்கூடும்....// Nice...

சித்தாரா மகேஷ். said...

//தணித்திருக்கும் தாகம்
நா வறண்டு இறந்த
என் தேசத்து
உயிர்களுக்கு
இந்த ஒரு துளி.//
ஏக்கங்களை விட்டுச் செல்லும் உங்கள் கவிதை இனிமை அக்கா.

Seeni said...

mmmm.....


nalla kavithai...

கவியாழி said...

நல்ல சிந்தனை !ஒருத்துளி உயிர்நீர் அருமை

அருணா செல்வம் said...

வரண்டுவிட்ட இதயத்திற்கு
ஒரு துளி நீர்... உங்கள் கவிதை ஹேமா.

இளமதி said...

தணியாத தணிக்க முடியாத தாகம்..அருமை.
வாழ்த்துக்கள் ஹேமா....:)

kandeepan said...

nice...

மகேந்திரன் said...

தவிப்பினால் தணியும்
தாகத்திற்கு தெரியாது
எனது தாகத்தின் அகம்பற்றி!
என் தவிப்பினை
தணிக்கும் தனிப்பிறவிக்குத்தான்
அதன் தாக்கம் புரியும்!!

பால கணேஷ் said...

நத்தை ஓடுகளில் மழைநீர் தேடிவரும் பாலைவனப் பறவைகள்.... மனதில் ஒட்டிக் கொண்டன வரிகள். பிரமாதம் ஃப்ரண்ட்.

வெற்றிவேல் said...

நல்லாருக்கு கவிச்சக்கரவர்த்தினி....ஹேமாவதி....

ஸ்ரீராம். said...


அருமை ஹேமா.

Post a Comment