*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Monday, January 21, 2013

மனம்...

மனங்களைப்
படித்துக்கொண்டிருக்கிறேன்
படித்த புத்தகங்களில்
ஏதும் இல்லை
இவர்கள் முகங்களின்
கிறுக்கல்கள்போல.

முகத்தில் பதியா குணங்களை
அடுக்கி வைத்திருக்கிறார்கள்
கையளவு இதயத்துள்
சேமிப்பறைகளில்
இலக்கமிட்டு.

உலகை மிஞ்சும் எண்ணங்கள்
மனமில்லா உடம்பிற்குள்
எப்படிப் புகும்
திணித்ததெப்படி ?!

பத்தியமிரு
நல்லதை நினை
மனம் கழுவு
புத்தனாய் வாழ்
பெரியாராய் மாறு
உன்னுள் நீயிரு
ஒழுங்கு படுத்தவாவது செய்
மறுபிறப்பெடுத்து
மீண்டும் வாழ்வாய்
இப்பிறவியிலேயே!!!

ஹேமா(சுவிஸ்)

15 comments:

விச்சு said...

மனசைப்பற்றி அருமையான கவிதை.

ஸ்ரீராம். said...

'திருந்து' என்கிறது கவிதை. ;போனது போகட்டும்... இனியாகிலும் நெஞ்சம் புனிதம் ஆகட்டுமே' என்ற சீர்காழியின் குரல் காதில் ஒலிக்கிறது.

Seeni said...

ada....

nalla sollideenga...

பால கணேஷ் said...

மிகச் சிறிய மனதில்தான் ஆழ்கடலளவு விஷயங்களை சேமிக்க முடிகிறது. மனதி்ன் பக்குவம்தான் மனிதனை உயர்த்துகிறது. மனதின் விசித்திரங்களை அறிவது கடினம். கவிதையில் படித்து ரசிப்பது அற்புத அனுபவம். அருமை.

MANO நாஞ்சில் மனோ said...

மனதின் பிரதிபலிப்புகள்தான் அவனவன் வாழ்க்கையில் வெளிப்படும் என்பது கவிதையின் சுருக்...நன்று...!

இளமதி said...

ஹேமா!... மனதைப் படிப்பாதா...:) கண்ணுக்கு ஏன் கருத்துக்கே பிடிபடாத ஒரு மாயா அது. அகப்படால் போட்டு துவைத்திட வேண்டும்.
அடங்கா மனது ஆட்டிப்படைக்கும் மனது...
படிக்க முயல்வோம் நன்று...:)

ராமலக்ஷ்மி said...

/முகத்தில் பதியா குணங்களை
அடுக்கி வைத்திருக்கிறார்கள்
கையளவு இதயத்துள்
சேமிப்பறைகளில்
இலக்கமிட்டு./

உண்மைதான் ஹேமா. நெறிப்படுத்தி வாழச் சொல்லும் நல்ல கவிதை.

”தளிர் சுரேஷ்” said...

அருமையானகவிதை! வாழ்த்துக்கள்!

அருணா செல்வம் said...

உன்னுள் நீயிரு
ஒழுங்கு படுத்தவாவது செய்
மறுபிறப்பெடுத்து
மீண்டும் வாழ்வாய்
இப்பிறவியிலேயே!!!

அடடா... அருமையான வரிகள் ஹேமா.
வாழ்த்துக்கள்.

மாதேவி said...

நல்லதை நினைத்தாலே மனதில் தூய்மை வந்துவிடும் நல்ல கருத்தை எடுத்துச் சொல்கின்றது கவிதை.

கவியாழி said...

மனம் ஒரு புதிர் உண்மைதானே?

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

மனம் விந்தையானது அதைப் படிக்க முயற்சி செய்யும் கவிதை

Anonymous said...

நலமா ஹேமா?

நல்லதொரு கவிதைப்பகிர்வு...

http://bharathidasanfrance.blogspot.com/ said...


வணக்கம்!

ஆசைப் பிடியில் சிக்காதே!
அழிவை என்றும் எண்ணாதே!
காசைத் தேடி வாழ்நாளைக்
கரைத்துக் கரைத்துத் தேயாதே!
மாசை நீக்க! மண்டியுள
மருளைப் போக்க! ஓமென்னும்
ஓசைக் குள்ளே உன்னுயிரை
உருகச் செய்க! ஒளிபிறக்கும்!

Anonymous said...

ஆளை பார்த்தும் எடை போட முடிவதில்லை. பழகி பார்த்தாலும் உண்மை முகம் வெளிபடுவதில்லை. எல்லோரிடமும் ஒரு அடி விலகி இருப்பதே நம் மனதிற்கு நல்லது என்று தோன்றுகிறது.
கவிதை ரொம்ப நல்லா இருக்கு ஹேமா.

Post a Comment