மதம் மாறக் கேட்டிருந்தேன்
வந்தான் மாறினான்
வானிலிருந்து வழுகிவிழும்
ஒரு பாம்பு போல....
பின் தேவனாக....
கந்தர்வனாக...
புராண காலத்துக்
கடவுளாக....
வீரனாக....
மெல்ல அருகில் வந்தவன்
சின்னச் சுடரென
அணையாமல்
அணைத்தான் என்னை
என் மேனியை ஏணியாக்கி
சொர்க்கம் தேடினான்.
ஏதேதோ கேட்டிருந்தான்
வாய் மட்டுமே அசைந்திருந்தது
சுவர்க்கலோக மாளிகைகள் பற்றியும்
அங்கு விண்மீன்களின்
குடியிருப்புப் பற்றியும்
இனி வரும்
அணுக்குஞ்சுகள் பற்றியும்
கேட்டிருக்கலாமோ...
பிறக்காத
பிரபஞ்சக் குஞ்சுகளைப் பற்றி
நான் விசாரிக்க
எனக்கான பதில்களைத்
தவிர்த்திருந்தான்.
மதம் மாறினால்
தேவர்களை மட்டுமே காண்பாய்
இனி மானிடர்களைக்
கண் மறைக்குமெனச்
சொல்லி மறைந்தே போனான்
வருவானா மீண்டும்!!!
http://www.uyirmmai.com/uyirosai/Contentdetails.aspx?cid=5886
ஹேமா(சுவிஸ்)
வந்தான் மாறினான்
வானிலிருந்து வழுகிவிழும்
ஒரு பாம்பு போல....
பின் தேவனாக....
கந்தர்வனாக...
புராண காலத்துக்
கடவுளாக....
வீரனாக....
மெல்ல அருகில் வந்தவன்
சின்னச் சுடரென
அணையாமல்
அணைத்தான் என்னை
என் மேனியை ஏணியாக்கி
சொர்க்கம் தேடினான்.
ஏதேதோ கேட்டிருந்தான்
வாய் மட்டுமே அசைந்திருந்தது
சுவர்க்கலோக மாளிகைகள் பற்றியும்
அங்கு விண்மீன்களின்
குடியிருப்புப் பற்றியும்
இனி வரும்
அணுக்குஞ்சுகள் பற்றியும்
கேட்டிருக்கலாமோ...
பிறக்காத
பிரபஞ்சக் குஞ்சுகளைப் பற்றி
நான் விசாரிக்க
எனக்கான பதில்களைத்
தவிர்த்திருந்தான்.
மதம் மாறினால்
தேவர்களை மட்டுமே காண்பாய்
இனி மானிடர்களைக்
கண் மறைக்குமெனச்
சொல்லி மறைந்தே போனான்
வருவானா மீண்டும்!!!
http://www.uyirmmai.com/uyirosai/Contentdetails.aspx?cid=5886
ஹேமா(சுவிஸ்)
Tweet | ||||
7 comments:
நீங்கள் அன்போடு அழைத்தால் நிச்சயம் வருவான் அக்கா.அருமையான உணர்வு.
வீட்டில் இருந்தபடி வருமானம் பெறுவதற்கு இலகுவான ஓர் வழி.
ஊக்கமும் ஏக்கமும் துணிவும் கொண்டு அழைத்தால் யார்தான் உங்களுக்காக வரமாட்டார்கள் .முடிவு உங்கள் கையில் என்பதை உணர்த்துங்கள் நிச்சயம் வருவான் நிம்மதி தருவான்
இக் கவிதையின் பாடுபொருள் என்ன...
கேள்விகள் எழுப்பினால்
வேள்விகள் கூட
வேண்டாமென
விருட்டென ஓடிவிடுவார்கள்...
அங்கே ஏணியாய்
மேனியை பயனாக்கும் பொழுதிலேயே
கட்டிப்போட்டு வைக்கவேண்டும்...
மிக மிக அழகான கவிதை சகோதரி...
wow! beautiful hema. ரொம்ப ரசிச்சேன்.
// மதம் மாறினால்
தேவர்களை மட்டுமே காண்பாய்
இனி மானிடர்களைக்
கண் மறைக்குமெனச்
சொல்லி மறைந்தே போனான்
வருவானா மீண்டும்!!!//
சிந்தனை சிறப்பே! கேள்வியின் பிறப்பே!
அருமையான கவிதை ஹேமா.. ரசித்து வாசித்தேன்.
Post a Comment