*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Friday, October 05, 2012

நான்...பெண்ணடிமை
பெண் நவீனத்துவம்
கவிதைகள் கதைகள்
புலம் பெயர்வு
அந்நிய மனிதரின் நெருக்கம்
தனித்த துணிந்த
நம்பிக்கை வாழ்வு
மாறித்தானிருக்கிறேன் நான்.

"அடங்கியிரு
ஒடுங்கியிரு
பொம்பிளப்பிள்ளையாயிரு
வாய் காட்டாதே"
அம்மாவின் வாதம் மறுத்த
விதண்டாவாதம்.

பெண்ணென்றால்
வெட்கம் வேணுமாம்
வைத்துக்கொண்டா
வஞ்சகம் செய்கிறேன்.

"காலம் மாறியிருக்கம்மா
உங்கட காலம் வேற
எங்கட காலம் இதம்மா"
என்றால்...

உன்னைத் தனிய விட்டதே
பிழையாப்போச்சு
உழைக்கிற திமிர்
போரோ புயலோ
அவலமோ அவதியோ
கஞ்சியோ கூழோ
உன்னை
வெளில அனுப்பினது
என்ர பிழைதான்
அடங்காப்பிடாரி....

அம்மாவுக்குத் தெரியவில்லை
இப்போவெல்லாம்
நான் நிறையவே
வெட்கப்படுகிறேனென்று
நீயே சொல்லிவிடேன்!!!

ஹேமா(சுவிஸ்)

அன்பு நண்பர்களுக்கு வணக்கம்.2-3 மாதமாகவே வேலை அதிகம்.வீடு மாற்றமென ஒரே பதட்டம்.அதோடு இந்த வருடத்தின் பெரும் சுற்றுலா விடுமுறை.மீண்டும் 30-40ன் பின் பதிவுகளோடு சந்திக்கிறேன்.எல்லாரும் சுகாமா இருந்துகொள்ளுங்கோ.......சந்திப்போம் !

47 comments:

Angel said...

உங்கள் வேலைகளையெல்லாம் முடித்து வாங்க ஹேமா
நீங்களும் சுகமா சுற்றுலாவை சந்தோஷமாக என்ஜாய் செய்யுங்க தோழி ..

K said...

ஹா ஹா ஹா சூப்பர் கவிதை! கடைசி வரி கலக்கல்! இன்னும் நல்லா வெட்கப்படுங்கோ ;-))

ஆத்மா said...

பெண்ணென்றால்
வெட்கம் வேணுமாம்
வைத்துக்கொண்டா
வஞ்சகம் செய்கிறேன்.
//////////////////////////

அப்ப இல்லவே இல்லையா.....

சென்று வாருங்கள் அதுவரைக்கும் பழைய பதிவுகளோடு உரையாடிக் கொள்கிறோம்

K said...

என்னது சுற்றுலா போறீங்களோ? பரிஸுக்கு வாறீங்களோ?

வந்தால் என்க்கு,

01 சுவிஸ் கேக்
02.சுவிஸ் சொக்கலேட்
03. ஐ பொட்
04. ஐ பாட்
05. லப் டப்

எல்லாம் கொண்டு வந்து தருவீங்களோ? :))

ஹேமா said...

ஏஞ்சல்....அன்புக்கு மிக்க நன்றி !

சிட்டு....வருவேன் வருவேன் !

மணி...சந்தோஷம்.வெட்கம் முதல் அன்புவரை என்னிடம் குறைவாம்.கொஞ்சம் வாங்கி அனுப்பிவிடுறீங்களோ முதல்ல.பிறகு நீங்கள் கேட்கிறதெல்லாம் வாங்கித் தாறன்.....சரியோ !

Yoga.S. said...

பகல் வணக்கம்,ஹேமா!சென்று வாருங்கள்.எப்போதும் வேலை வீடு,பதிவு,கவிதை என்று...........................கொஞ்சம் மனதுக்கும்,உடலுக்கும் ஓய்வு தேவை தான்!பின்னர்,எல்லாம் வரும்,ஹ!ஹ!ஹா!!!!!!!!

Admin said...

வெட்கப்பட வேண்டுமெனின் காதலிக்க வேண்டியிருக்கிறதே!

/வைத்துக்கொண்டா
வஞ்சகம் செய்கிறேன்/

சரிதான்..

T.V.ராதாகிருஷ்ணன் said...

'வைத்துக் கொண்டா
வஞ்சகம் செய்தேன்'

என்பதே..சரி...\இப்போது வெட்கம் வந்துவிட்டதே!!!

ராமலக்ஷ்மி said...

அருமையான கவிதை ஹேமா.

இனிதாக அமையட்டும் சுற்றுலா.

Anonymous said...

அழகான கவிதை. கடைசி பத்தி கிளாஸ். மிகவும் ரசிச்சேன்.
'அடங்காபிடாரி' 'வாயை காட்டாதே' எங்க அம்மாவும் என்னை இப்படிதான் திட்டுவார்கள். :)
கவிதைக்கு படம் மிகவும் பொருத்தம். கலர் கலர் வளையல்களை பாக்கவே ஆசையா இருக்கு.

நீங்களும் சுகமாய் இருங்க. உங்கள் விடுமுறையை சந்தோஷமா களியுங்க.

அப்பாதுரை said...

//வைத்துக்கொண்டா வஞ்சகம் செய்கிறேன்
ரசித்தேன்.
பிரிவோம் சந்திப்போம்.

vimalanperali said...
This comment has been removed by the author.
சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

படம் க்ளாஸ்.அப்ப கவிதையில்லையா என்று கேட்காதீங்க!

சுகமா சுற்றுலா கிளம்பிட்டீங்களா!அதுக்காகத்தான் இந்த டீஸர்.

நல்ல ஓய்வுக்குப் பின்னால் எழுதவிருக்கிற நல்ல கவிதைகளோடு சந்திப்போம் ஹேமா.

சாந்தி மாரியப்பன் said...

அருமையான கவிதை, அழகான படம்.

விடுமுறை முடித்து புத்துணர்வோடும் நிறையக்கவிதைகளோடும் வாங்க :-)

அருணா செல்வம் said...

கலக்கல் கவிதை...

என் இனிய தோழி ஹேமா... சுற்றுலா முடித்து விட்டு சுகமுடன் சுறுசுறுப்பாக வந்து வெட்கத்துடன் ஒரு கவிதை இடுங்கள்.
காத்திருக்கிறோம்.

vimalanperali said...

வெட்கம் எல்லோருக்கும் வருவதுதானே.இதில் நவீனம் என்ன பழமை என்ன?

சசிகலா said...

வெட்கத்தின் வரிகள் எனையும் வெட்க வைத்தன சகோ இன்பச் சுற்றாலாக்கு தயாராகுங்கள்.

கண்ணன் தொட்டிலை ஆட்டிய அதிரா said...

ஆஹா ஹேமாவுக்கு வெட்கம் வந்திட்டுதாம்ம்ம்ம்.. அப்போ ஹெமா வயதுக்கு வந்திட்டா.. ஓடிவாங்கோ அஞ்சூஊஊஊஉ பிடிங்கோ வெப்பெண்ணை பருக்குவம்:))..

சூப்பர் அண்ட் கலக்கல் கவிதை ஹேமா:)).. ஓவரா வெட்கப் படாதீங்கோ?:))

ஹேமா மணியம் கஃபே ஓனரிடம் இருக்கிறதைக் கேட்டால் டக்கெனத் தருவார்:), இது இல்லாததை அனுப்புங்கோ எண்டால் பாவம் அவர் எங்கின போவார்:))நீங்கள் கேட்ட மூண்டில முதலாவது மட்டும்தான் இருக்காக்கும் அவரிடம்:). ஹையோ மீ எஸ்கேப்ப்ப்:).

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல கவிதை...

சுற்றுலா சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்...

Kala said...

என்னது சுற்றுலா போறீங்களோ? பரிஸுக்கு வாறீங்களோ?

வந்தால்......

01 கேக்
02. சொக்கலேட்
03. ஐ பொட்
04. ஐ பாட்
05. லப் டப்\\\\\
ஹேமா கட்டாயம் உங்க சிநேகிதரை போய் சந்தியுங்கள ஏனென்றால் !இவ்வளவும் உங்களுக்காக வாங்கிக் கொடுக்கப் போகிறார்போலும்....அதில் எனக்கும் கொஞ்சம் பங்கு கொடேன்.........

Kala said...

நான் நிறையவே
வெட்கப்படுகிறேனென்று
நீயே சொல்லிவிடேன்\\\\\\

என்னையா!கேட்டீங்க?
ம்ம்ம்ம....தூதூதானே போனாப்போச்சு!!
இதுக்குப்போய்...காலால கோலம் போட்டுப்போட்டு நிற்காமல் சட்டுப்புட்டெனக் கிளம்புங்கோ

Kala said...

ஹேமா நான் வந்ததில் இருந்து உன்னுடன் பேசமுடியவில்லை{நேரம்தான்} உன்னுடன் தொலைபேசியில் பேசமுயற்சிக்கிறேன்.

மகிழ்வுடன் விடுமுறையை கொண்டாடி வரவேண்டும்
நிலாகுட்டியை நான நலம்விசாரித்ததாகக் கூறவும்.


யோகத்தான் நலமா?இருக்கிறீர்களா!

ஸ்ரீராம். said...

இணைத்திருக்கும் படம் அருமை. ரசிக்க வைத்தது. கவிதையோ சூப்பர்! "வைத்துக் கொண்டா வஞ்சகம் செய்கிறேன்?" ஹா..ஹா.. யோசிக்கவும் வைத்தது இந்த வரிகள். கடைசி வரிகள் அழகு. விடுமுறையை ஜாலியாக் கொண்டாடுங்க.

Unknown said...


பெண்ணென்றால்
வெட்கம் வேணுமாம்
வைத்துக்கொண்டா
வஞ்சகம் செய்கிறேன்.//

நயம் பட உரைத்தீர் ! நல்லது சகோதரி! சுற்றுலா சுகமுடன் அமைய வாழ்த்துத்துக்கள்!

துரைடேனியல் said...

அழகு கவிதை. ஓய்வெடுத்து வேலை முடித்து திரும்புங்கள். நிச்சயம் இப்படி ஓய்வு தேவைதான். நானும் இதே போல ஓய்வெடுத்தே திரும்பியிருக்கிறேன். உங்களை மிஸ் பண்ணுவது வருத்தம்தான் சகோ. மீண்டும் வருக!

தனிமரம் said...

கவிதை அழகு வைத்துக்கொண்டா வஞ்சகம் செய்கின்றேன் அன்பையும் தான் ஹேமா .சந்தோஸமாக விடுமுறையைக் கழித்துவிட்டு வாங்கோ எப்போதும் போல கலகலப்பாக கலக்கல் கவிதையுடன்.

தனிமரம் said...

நான் நிறையவே
வெட்கப்படுகிறேனென்று
நீயே சொல்லிவிடேன்\\\\\\

என்னையா!கேட்டீங்க? 
ம்ம்ம்ம....தூதூதானே போனாப்போச்சு!!
இதுக்குப்போய்...காலால கோலம் போட்டுப்போட்டு நிற்காமல் சட்டுப்புட்டெனக் கிளம்புங்கோ
//பிறகு என்ன நாத்தனார் கலாப்பாட்டி சொல்லியாச்சு ஹேமா !:))) பாட்டி நலம் தானே?? 

Yoga.S. said...

Kala said...
யோகத்தான் நலமா?இருக்கிறீர்களா?////ஆஆஆஆ,மச்சினி!!!!!!!!!!!!!!!!!!கெள ஆர் யூ?????????நான் ரொம்ப,ரொம்ப நல்லாயிருக்கிறேன்.ரிலாக்ஸ் ஆகிட்டீங்க போல தெரியுது,ஆக வேணும்.விசாரிப்புக்கு நன்றி.பின்னர் பேசலாம்.

Kala said...

நேசன்,அத்தான் நன்றி

Kala said...

நேசன்,அத்தான் நன்றி

Unknown said...

அருமை சகோ நீங்களும் எங்கபக்கம் வந்து போகலாமே

அன்பு உள்ளம் said...

உன்னைத் தனிய விட்டதே
பிழையாப்போச்சு
உழைக்கிற திமிர்
போரோ புயலோ
அவலமோ அவதியோ
கஞ்சியோ கூழோ
உன்னை
வெளில அனுப்பினது
என்ர பிழைதான்
அடங்காப்பிடாரி....

அனல் தெறிக்கிறது அம்மாவின் பேச்சில்
அடங்கித்தான் போவாள் பெண் .!!!!!........

அம்மாவுக்குத் தெரியவில்லை
இப்போவெல்லாம்
நான் நிறையவே
வெட்கப்படுகிறேனென்று
நீயே சொல்லிவிடேன்!!!....

ம்ம்ம்ம் இதற்காகத் தானே ஒவ்வொரு தாயும்
பாடுபடுகின்றார்கள் .அழகிய வெக்கம் தொடரட்டும் தோழி .

வெற்றிவேல் said...

நாங்களும் சொல்லிடறோம்... கனடா சுற்றுலா மகிழ்ச்சிகரமாக அமையட்டும். குழந்தை நிலாவை கேட்டதாக சொல்லுங்கள்...

மாதேவி said...

அழகிய கவிதை.
இனிய பொழுதுகளாக மகிழ்ந்திருங்கள்.

Anonymous said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் கவிதாயினி...

கிருஷ்ணப்ரியா said...

கவிதையும் அழகு.... வெட்கமும் அழகு

Bibiliobibuli said...

பெண்ணுரிமை கவிதை என்று ஆர்வமாய் தொடர்ந்தேன், வெட்கத்தில் முடிந்திருக்கிறது கவிதை :)

SELECTED ME said...

நீயே சொல்லிவிடேன்!!! - டச்சிங்

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_20.html) சென்று பார்க்கவும்...

நன்றி...

http://thavaru.blogspot.com/ said...

வணக்கம் ஹேமா....பெண் வெட்கபட வேண்டிய இடத்தில் வெட்கபடுபவள்.

எப்படி இருக்கீங்க...

இராஜராஜேஸ்வரி said...


"காலம் மாறியிருக்கம்மா
உங்கட காலம் வேற
எங்கட காலம் இதம்மா"

அழகான கவிதை !

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே http://blogintamil.blogspot.in/2012/11/4.html) சென்று பார்க்கவும்...

நன்றி...

Dino LA said...

நல்ல கவிதை

மோகன்ஜி said...

ஹேமா! அழகான கவிதை.. வெட்கப்படும் உன் முகத்தைப் பார்க்கவேண்டும் போல் அல்லவா ஆவலாய் இருக்கிறது.. விடுமுறை இனிதாய் தொடர்கிறதல்லவா?
புதுப்பித்துக் கொண்டு வந்து பூக்கவிதைகள் சொல்லு ஹேமா!

நம்பிக்கைபாண்டியன் said...

ரசிக்க வைத்த அழகிய கவிதை.

அம்பாளடியாள் said...

வணக்கம் சகோதரி அருமையான கவிதை வாழ்த்துக்கள் உங்கள் வரவைக் காண ஆவலுடன் உள்ளேன் .ஒரு சிறப்பான நிகழ்வு ஒன்றிற்கு அழைப்பு விட எண்ணுகின்றேன் .முடிந்தால் இந்த தொலைபேசியினூடாக என்னைத் தொடர்பு கொள்ளுங்கள் .மிக்க நன்றி 0764105257

Seeni said...

haaaa......


arumai!

arumai....

Post a Comment