வறுத்தெடுக்க மனிதன்
கொத்திக் குடிக்கப் பாம்பு
இயற்கையும் சிதைக்க....
உறக்கம் விற்று
திசையோடு தவமிருக்கிறது
காக்கும் அடைக்காய்.
ஆகாயக் காவலன்
கண்களில்
மிஞ்சிப் பொரித்த
ஒற்றைக் குஞ்சை
உறிஞ்சும் மரணம்.
அருக்கனையே மறைக்கும்
அதிகாரம் வானில்
அடங்கினால்
அரிகண்டம் மாட்டுவதற்கொப்பு.
இறகு இத்தினிதான்
எம்பி எதிர்க்கிறது
இருப்பு இருக்கும்வரை!!!
கொத்திக் குடிக்கப் பாம்பு
இயற்கையும் சிதைக்க....
உறக்கம் விற்று
திசையோடு தவமிருக்கிறது
காக்கும் அடைக்காய்.
ஆகாயக் காவலன்
கண்களில்
மிஞ்சிப் பொரித்த
ஒற்றைக் குஞ்சை
உறிஞ்சும் மரணம்.
அருக்கனையே மறைக்கும்
அதிகாரம் வானில்
அடங்கினால்
அரிகண்டம் மாட்டுவதற்கொப்பு.
இறகு இத்தினிதான்
எம்பி எதிர்க்கிறது
இருப்பு இருக்கும்வரை!!!
அருக்கன் - சூரியன்.
அரிகண்டம் - தன்னைத்தானே சித்திரவதை செய்துகொள்வதற்காக மாட்டிக்கொள்ளும்
இரும்புச் சட்டம் இல்லை வளையம்.
இத்தினி - கடுகிலும் சிறிதளவு.
எம்பி - உந்தி எழும்புதல்.
அரிகண்டம் - தன்னைத்தானே சித்திரவதை செய்துகொள்வதற்காக மாட்டிக்கொள்ளும்
இரும்புச் சட்டம் இல்லை வளையம்.
இத்தினி - கடுகிலும் சிறிதளவு.
எம்பி - உந்தி எழும்புதல்.
ஹேமா(சுவிஸ்)
Tweet | ||||
37 comments:
அருமை..
வானில் பல கழுகுகள் ம்ம் பாவம் கோழியைப் போல நாம் சிறகை மட்டும் அடித்துக் கொண்டு அரக்கனை வெறித்தபடி! கோழிக்குஞ்சுகளாக.
வித்தியாசமான சிந்தனை வரிகள்.
பகிர்வுக்கு நன்றி.
(த.ம. 2)
பாடல் வரிகளை ரசிக்க : உன்னை அறிந்தால்... (பகுதி 2)
அருமையான கவிதை சகோ!
Kolickunchukalaa em valkaiyaa . vasikka pala aratham thrum kavithai
அழகான வரிகள் = கவிதை......
கோழி படும் பாடு அவஸ்த்தையிலும் அவஸ்த்தை....கழுகு மட்டுமா...எம்மைப் போன்ற காக்காகளும் இருக்கின்றனவே....
முடிந்த வரை போராடும் மிருக இயல்பு மனிதனுக்கும் தேவை.கவிதை அழகு.
அழகான கவிதை ஹேமா...
உங்கள் வரிகளில் ஒரு ஈர்ப்பு உள்ளது தொடருங்கள்
கருத்துள்ள கவிதை! வாழ்த்துக்களும் நன்றியும்!
இன்று என் தளத்தில் எக்ஸ்கியுஸ்மீ கொஞ்சம் பாராட்டுங்களேன் ப்ளீஸ்! http://thalirssb.blogspot.in
அடங்கினால்
அரிகண்டம் மாட்டுவதற்கொப்பு.
இறகு இத்தினிதான்
எம்பி எதிர்க்கிறது
இருப்பு இருக்கும்வரை!!!//
இத்தினியூண்டு சிறகோடு தாய்க்கோழிக்கிருக்கும் போராட்ட உணர்வு நமக்கும் வேண்டியிருக்கு பல சமயங்களில்...வாழ்க்கையே போர்க்களம்... வாழ்ந்துதான் பார்க்கலாம்!
தான்கொண்ட குஞ்சுகளை
காலனெனும் கழுகினிடம்
அடையவிடாதிருக்க..
தாய்க்கோழி தன்னிறகை
படபடவென அடித்து
சுற்றிவரும் தருணம்..
பார்ப்பதற்கே பிரமிப்பாய் இருக்கும்..
அழகான கவிதை சகோதரி..
மனசு லேசாக வலிக்கிறது கவிதை படித்தபின்....!
என் இனிய தோழி ஹேமா...
கோழியும் கழுகும்...கவிதை
தாய்மையின் தவம் தோழி.
unmai thaaye!
arumai !
எனக்குப் புரிகிறமாதிரி இருக்கு, ஆனா இல்ல...
//இறகு இத்தினிதான்
எம்பி எதிர்க்கிறது
இருப்பு இருக்கும்வரை //
முடியும் வரை போராடு.
உனது வெற்றியே
உன் சந்ததியின் உயிர்.
ம்ம்.... இருப்பு இருக்கும்வரைக்கும் எதிர்க்கவேண்டியது தேவையாகிப்போகிறது.
அர்த்தம் நிறைந்த அழகிய கவிதை .. தொடர்க..
அருமையான வரிகள் அற்புதம்ம்ம்ம்......
இறகு இத்தினிதான்| எம்பி எதிர்க்கிறது |இருப்பு இருக்கும்வரை!!!
-இந்த வரிகளே தனிக்கவிதைதான். என்ன அழகான வரிகள். கோழியின் நிலையில் சக்தியும் வேகமும் இருக்கும் வரை எதிர்ப்பு இருந்துகொண்டேதான் இருக்கும். அருமை ஃப்ரெண்ட்!
ஊரில்
தாய்கோழி
தன் குஞ்சுகளுடன் இறை தேடும்போது
ஓய்யாரத்தில் பரந்து வரும் கழுகை
குறுகிய இறகுள்ள தாய்கோழி
ஒரு ஆக்ரோசத்தில் பறக்கும் அந்த காட்ச்சியில்
தாய்மையை உணர முடியும்
அதை பார்க்குபோது நமக்கே புல்லரிக்கும்
இதுபோல் எங்கள் ஈழ வாழ்க்கை என்று
முக நூலில் நீங்க சொன்னதும்
உண்மையில் வலிச்சது மனசு
இருப்பு
இருக்கும் வரை //
உண்மைதானே ஹேமா(நலமா?)
இந்த இருத்தல் தானே தொடர்ந்து போராட சொல்லுகிறது
ம்ம்ம் சிந்தனை மிகு வரிகள அக்கா அருமை.....
தன்{பிளளைகளை}குஞ்சுகளை பாதுகாப்பாய்,கவனத்துடனும்,அக்கறையுடனும் ஒரு குறிப்பிட்ட எல்லைவரை எடுத்துச் செல்வது தாய்மைதான் {காக்காய்கும் தன் குஞ்சு பொன்குஞ்சுபோல்}ஆபத்தென்று வந்தால் ஐந்தறிவாக இருக்கட்டும்,ஆறறிவாக இருக்கட்டும் அத்தாய்மையில் வீரத்தைப் பார்க்கலாம். தாய்மையின் உண்மை உங்கள கவி
தன்{பிளளைகளை}குஞ்சுகளை பாதுகாப்பாய்,கவனத்துடனும்,அக்கறையுடனும் ஒரு குறிப்பிட்ட எல்லைவரை எடுத்துச் செல்வது தாய்மைதான் {காக்காய்கும் தன் குஞ்சு பொன்குஞ்சுபோல்}ஆபத்தென்று வந்தால் ஐந்தறிவாக இருக்கட்டும்,ஆறறிவாக இருக்கட்டும் அத்தாய்மையில் வீரத்தைப் பார்க்கலாம். தாய்மையின் உண்மை உங்கள கவி
போங்க ஹேமா சரியாகப் புரியவில்லை என்று சொல்ல வந்தேன். நன்றி கலா மேடம். அருமை ஹேமா. வாழும் வரை போராடு!
பெற்ற தாயின் அவஸ்த்தை எதுவோ அதை மிக
அழகாக வர்ணித்துள்ளீர்கள் .கவிதை அருமை!..
தொடர வாழ்த்துக்கள் சகோதரி .
இருப்புக்கான போராட்டங்கள் ..................
ஒவ்வொரு உயிருக்கும். அழகான ஒப்புவமை,
இந்த போராட்டங்களால் தானோ வாழ்க்கை இன்னும் மீதமிருக்கிறது அழகாக,
ஏதோ மனதில் வலி... இக்கவிதையை படித்த பின்...
கவிதை சொல் டிக்ஸனரி ஹேமா!
மீண்டும் வாசிக்க தூண்டியதில் இறுதி வரிகள் கவிதையின் பொருளை உணர்த்தியது.
வறுத்தெடுக்க மனிதன்
கொத்திக் குடிக்கப் பாம்பு
இயற்கையும் சிதைக்க....
உறக்கம் விற்று
திசையோடு தவமிருக்கிறது
காக்கும் அடைக்காய்./ குறியீடாய் ஆக்கம் சிறந்த கருத்தை சொல்லவருகிறது சிறந்த ஆக்கம் பாராட்டுகள்
அரிகண்டம் ....
ரொம்ப நாளைக்கு அப்புறம் இந்த வார்த்தையை பார்க்கின்றேன் ..
வார்த்தைகளை நேர்த்தியாக
கோர்த்து கவிப் பாடுவதில் வல்லவர் நீங்கள் ... என்பதை இக்கவிதை உணர்த்துகின்றது .
அத்தனை என் அன்பு உறவுகளுக்கும் மனம் நிறைந்த நன்றி.வேலைப்பளு.தனித்தனியாக பின்னூட்டம் கருத்துத்தர முடியவில்லை மன்னிப்போடு....அடுத்த கவிதைக்குள் போகிறேன் !
2-3 சொற்களுக்குக் கவிதையின் கீழ் விளக்கம் தருகிறேன்.சிலர் மெயிலில் கேட்டிருந்தார்கள்.அந்த அன்புக்கும் மிக்க நன்றி !
"அதிகாரம் வானில்
அடங்கினால்
அரிகண்டம் மாட்டுவதற்கொப்பு."
அருமை.
எமது ஊர்ப்பக்கத்தில் அரிகண்டம்- அரியண்டம் எனப் பேச்சு வழக்கு
வலிமையான வலி கவிதை நன்று:)
Post a Comment