நெய்துகொண்டிருக்கிறேன்
ஒவ்வொரு
நரம்பின் இழையிலும்
உன் குரலை...
வசப்பட்டு வளைகிறேன்
ஓரிழையாய் உனக்காக
உன்னோடு என்னை!
மண்டியிட்டு மறுத்த
மௌனங்களைப் பிசைந்து
பேசும் பெண்ணாக்குகிறாய்
என் சொற்களால்
உன் வார்த்தைகளை
உடைத்த பாவமும் இப்போது!!!
ஒவ்வொரு
நரம்பின் இழையிலும்
உன் குரலை...
வசப்பட்டு வளைகிறேன்
ஓரிழையாய் உனக்காக
உன்னோடு என்னை!
மண்டியிட்டு மறுத்த
மௌனங்களைப் பிசைந்து
பேசும் பெண்ணாக்குகிறாய்
என் சொற்களால்
உன் வார்த்தைகளை
உடைத்த பாவமும் இப்போது!!!
உப்புமடச் சந்தியில்..."ஒரு தந்தையின் பிரசவம்!"
ஹேமா(சுவிஸ்)
Tweet | ||||
64 comments:
என் சொற்களால்
உன் வார்த்தைகளை
உடைத்த பாவமும் இப்போது.
மண்டியிட்டு மறுத்த மௌனமும், குரலை நரம்பில் நெய்வதும்....
அருமை ஹேமா. கவிதைகளில் வரிகளும் உங்களுக்கு வசப்பட்டு அழகாக வளைகின்றன.
தொலை தூர வாழ்க்கையில், தொலைத்து கொண்டிருக்கும் எங்களுக்கான வரிகளாய் படுகின்றது ...
நெய்துகொண்டிருக்கிறேன்
ஒவ்வொரு
நரம்பின் இழையிலும்
உன் குரலை...
மௌனத்தைப் பேசவைக்கும், பேச்சை மரணிக்கவைக்கும் சாதுர்யம் காதலுக்கு மட்டுமே உண்டு. பேசாத பெண்ணைத் தூண்டிவிட்டு, பின் அவளைக் குற்றம் சொல்லிப் பயன் என்ன?
ஹேமா, நீங்கள் நெய்திருக்கும் இக்கவிதையின் ஒவ்வொரு எழுத்திலும் காதல் இழை(ய)க் காண்கிறேன். பாராட்டுகள் ஹேமா.
//நெய்துகொண்டிருக்கிறேன்
ஒவ்வொரு
நரம்பின் இழையிலும்
உன் குரலை...//
அருமை ஹேமா.... வாழ்த்துகள்.
அன்புடன்
பவள சங்கரி
Oops, I cannot act coy or silly for a man's sake :)))
கவிதை நல்லாருக்கு, ரசிச்சேன். ஆனா, மேல சொன்னது தான் உண்மை
மண்டியிட்டு மறுத்த
மௌனங்களைப் பிசைந்து
பேசும் பெண்ணாக்குகிறாய்
நெய்துவைத்த வார்த்தைச் சித்திரம் !
மண்டியிட்டு மறுத்த மௌனமும், குரலை நரம்பில் நெய்வதும்....
அருமை ஹேமா. கவிதைகளில் வரிகளும் உங்களுக்கு வசப்பட்டு அழகாக வளைகின்றன
-எனறு ஸ்ரீராமும்,
ஹேமா, நீங்கள் நெய்திருக்கும் இக்கவிதையின் ஒவ்வொரு எழுத்திலும் காதல் இழை(ய)க் காண்கிறேன். பாராட்டுகள் ஹேமா.
-என்று கீதமஞ்சரியும் சொல்லியிருப்பதை விட நான் என்ன பெரிதாகச் சொல்லி விட முடியும் ஃப்ரெண்ட்? அந்தக் கருத்துக்களை வழிமொழிகிறேன்!
வழமையான கிறுக்கல்களை என் மனதில் தோற்றுவித்து செல்கிறது கவி....
//மௌனங்களைப் பிசைந்து
பேசும் பெண்ணாக்குகிறாய்//
அற்புதத்திலும் அற்புதம்
மண்டியிட்டு மறுத்த
மௌனங்களைப் பிசைந்து
பேசும் பெண்ணாக்குகிறாய்
ஆகா அருமையான வரி அக்கா...
//மௌனங்களைப் பிசைந்து
பேசும் பெண்ணாக்குகிறாய்// எனக்கும் இந்த வரிகள் மிகவும் பிடித்திருக்கிறது... ஆமா! அது யார்?
//நெய்துகொண்டிருக்கிறேன்
ஒவ்வொரு
நரம்பின் இழையிலும்
உன் குரலை...//
ரசித்தேன்..
ம்ம்ம் ...
கவிதை
காதல் குரலின்
நெய்த....ல்
சித்திரம்
கொள்ளையழகு கவிதையைப்போல
azhakiya kaathal kavithai!
காலை வணக்கம்,ஹேமா!கவிதை வரிகள்,எவருக்கும் புரியும்படி!!!வாழ்த்துக்கள்!!!!!!
எளிமையான, அருமையான கவிதை .. :)
காதல் வரிகளில் மட்டுமல்ல அந்த கலை நயம் பொருந்திய படமும் அழகோ அழகு சகோ .
நெய்துகொண்டிருக்கிறேன்
ஒவ்வொரு
நரம்பின் இழையிலும்
உன் குரலை...////ம்ம்ம் வெளிநாட்டு வாழ்க்கையின் இன்னொரு பரிமானம்!
வார்த்தையை உடைத்த பாவமும் !! ஏக்கம் கையறுநிலையின் குறியீடு அருமையான் கவிதை! சிந்தனையைத்துண்டுகின்றது!
அழகான கவிதை ஒன்று பிரசவித்திருக்கு ஹேமாவிடமிருந்து....
முற்றிலும் வித்தியாசமாக இருக்கு.... என் கிட்னியைப் போட்டுப் பிசைந்து எப்படியெல்லாமோ கருத்தெடுத்தும், இரண்டாம் பந்திக்கு கருத்தைப் பொருத்த முடியவில்லை...:)))..
எனக்குப் புரிந்ததைச் சொல்லி, ஏனையோரின் புரிதலைக் கெடுக்க விரும்பாமல் மீ எஸ்ஸ்ஸ்கேப்பூஊஊஊஊ:)).
காதல் கவிதையா ???? சின்ன பையன் நான் படிக்கலாமா ???
கவிதை ரொம்ப சின்னதா இருக்கு. மத்தபடி வழக்கம் கவிதை அருமையா இருக்கு
நரம்பைக் குரலில் நெய்வது. இவ்வளவு அழகான படிமம்.
நீண்ட நாட்களாயிற்று உங்கள் தளம் வந்து. வ்லைத்தளமே வந்து. நலமா
என்னியல்பு நரம்புகளில்
செயற்கை நூலிழையாய்
உங்களின் கவிச் சொற்கள்
பாய்கின்றன சகோதரி....
எளிமையான இனிமையான கருத்து.
காலை வணக்கம்,ஹேமா!
கீதாக்காவின் கருத்தை என் கருத்தும்...
நெய்துகொண்டிருக்கிறேன்
ஒவ்வொரு
நரம்பின் இழையிலும்
உன் குரலை...
ரொம்ப அழகானதொரு வரிகள் ஹேமா க்கா... உங்களையும் அக்கான்னு சொல்லலாமா?....
ஓரிழையாய் உனக்காக
உன்னோடு என்னை!
ஆஹா எத்துணை அருமையான கற்பனையின் வெளிப்பாடுகள்...!!!தலை வணங்குகிறேன் சொந்தமே
காதல் ததும்பும் வரிகள்... ரசித்தேன் ஹேமா!
நெய்துகொண்டிருக்கிறேன்
ஒவ்வொரு
நரம்பின் இழையிலும்
உன் குரலை\\\\\\\\\\\
“பட்டு” ம் நெய்துகொண்டிருக்கிறாய்!
“விட்டு” ப் போன குரலை!
என் சொற்களால்
உன் வார்த்தைகளை
உடைத்த பாவமும் இப்போது!!!\\\\\\
உடைந்த சூரியன்,
தேய்ந்த நிலா.,
சிதறிய நட்சத்திரங்கள்
எல்லாமே....
வெளித்த வானத்தில்தான்!
யார்!யாரைப் பாவம் பார்ப்பது?
ஹேமாஆஆஆஆஆ!!!!!!!
ஓஓஓஓ கா,,,,,,,,,,,,,,தல் குரலோஓஓஓஓ.....?
ஹாய்,மச்சினிச்சி,கலா!எப்படி இருக்கிறீர்கள்?
ஹாய்ய்ய..அத்தான் உங்க நினைவோட............மிக நன்றாக இருக்கிறேன் நன்றியத்தான்
காதல் துயர் கூட தேன் தடவி தான் வழியுமோ? ஹேமா..எப்படி குட்டிக்கரணம் போட்டாலும் உங்க மாதிரி எழுத முடியலையே எப்பூடி..
என் இனிய தோழி ஹேமா...
நான் உங்களுக்கு
வாழ்த்து நெய்வதற்கு
ஒரு வாக்கியப் பூவும்
கிடைக்கவில்லை ஹேமா...
சகோதரி நலமா ! அருமை ! ரொம்ப நாளாச்சு உங்க தளம் பக்கம் வந்து :)
- சேவியர்
காதல் காதல் காதல்!
நரம்பின் இழையெடுத்து-காதல்
நயம்படவே குரல்கொடுத்து
வரம்பும் இல்லையென-தூய
வளர்காதல் தொல்லையென
கரும்பின் சுவைகாண-நல்
கவியாக்கி மனதூண
அரும்பும் மலர்ந்தனவே-மேலும்
அரியமணம் தந்தனவே
சா இராமாநுசம்
நரம்பின் இழையெடுத்து-காதல்
நயம்படவே குரல்கொடுத்து
வரம்பும் இல்லையென-தூய
வளர்காதல் தொல்லையென
கரும்பின் சுவைகாண-நல்
கவியாக்கி மனதூண
அரும்பும் மலர்ந்தனவே-மேலும்
அரியமணம் தந்தனவே
சா இராமாநுசம்
நெய்யும் நினைவுகள் மிகவும் சுகமாக இருக்கிற தருணங்கள் மிகவும் ரம்யமானது.
நலமா கவிதாயினி?
சாவகாசமாய் வந்திருந்து பாடம் கற்க வேண்டும் கவிதாயினி எப்படி இப்படி எழுதுவது என்று...
மறக்காமல் டிக்கட் அனுப்பவும்...-:)
Short n Sweet...I luvd it...
#வசப்பட்டு வளைகிறேன்
ஓரிழையாய் உனக்காக
உன்னோடு என்னை! #
ஹேமா , வார்த்தைகளை எங்கிருந்து பிடிக்கிறீர்கள் ! அருமை
நெய்துகொண்டிருக்கிறேன்
ஒவ்வொரு
நரம்பின் இழையிலும்
உன் குரலை..//
கவிதையின் இழையோடு
தோழியின் வார்த்தைகள்
மிக மிக அழகு..
உங்கள் வலைபூ நன்றாக இருக்கிறது.. கவிதைகளும் சூப்பர்.. வாழ்த்துக்கள் ..
கவிதை எம்மையும் வசப்படுத்துகின்றது.
ஹேமா... ஏதாவது வெளியூர் பயணமோ..... நலம்தானே...?
ஹேமா என்னாச்சு? புது பதிவு எங்கே?
எங்கப்பா போனே ஃப்ரெண்ட்... நீங்க இல்லாம பதிவுலகமே போரடிக்குது எனக்கு... எப்ப வருவீங்க...? வெயிட்டிங்!
//மண்டியிட்டு மறுத்த
மௌனங்களைப் பிசைந்து
பேசும் பெண்ணாக்குகிறாய்
என் சொற்களால்
உன் வார்த்தைகளை
உடைத்த பாவமும் இப்போது!!!//
மண்டியிட்டு வணங்குகிறேன் தங்கள் கவி உணர்வின் முன்னால்.
Excuse me நீங்க யாரையாச்சும் Love பண்றீங்களா?
இன்று ஓர் பொன்னாள்!ஆம்,இன்று தான் சிங்கையிலிருக்கும் பெண் சிங்கம் கலா வுக்குப் பிறந்த நாள்!கூடி வாழ்த்துகிறோம்,பல்லாண்டு,பல்லாண்டு வாழ்கவென்று!!!!
அத்தான்! இது எப்படி உங்களுக்குத்
தெரியவந்தது?
ஆஹா....ஹேமாவிடம் இனி ஒரு இரகசியமும் சொல்வதில்லை.....
எப்படிப் பறந்திருக்கிறது செய்தி என்று பார்.
ம்ம்ம...மிக்க நன்றி ஐயா,
இந்த வருடம் உங்கள வாழ்த்துக் கிடைத்தது என் பாக்கியம்.
இன்று பிறந்தநாளை வெகு விமர்சசையாக சிங்கப்பூரில் கொண்டாடும் எங்கள் அன்புக்குரிய, நேசிப்புக்குரிய ,நாத்தனார் ,அண்ணி ,கறுப்புப்பட்டி என்று புகழப்படும் கலாப்பாட்டிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை கடல் கடந்து வாழ்த்துகின்றோம் வலை உறவுகளோடு உப்புமடச்சந்தியில் இருந்து . என்றும் நலம் உடன் நூறாண்டு வாழ்க.
அன்பின் நேசன் !
கலர்,கலர் "கலா" கலர்!!!!!!ஸ்வீட் எடுங்கோ,கொண்டாடுங்கோ!!!!எனக்கும் அனுப்புங்கோ!!!!!!!உங்கள் நண்பி ஒண்டுமே சொல்லையில்ல,நாங்க சொல்லித்தான் அவவுக்கே தெரியும்,ஹி!ஹி!ஹீ!!!!!!!!!!!!
நான் படிக்காமலே..நீங்கள கொடுத்த
அத்தனை பட்டங்களுக்கும் மிக்க நன்றி
நேசன்.
நேசன் {என்னும்போது... எனக்கொரு அத்தைமகன் ஜெர்மனியில் இருக்கிறார் அவர் ஞாபகம் வந்தது}
உப்புமடச்சந்தியில் \\\\\
என் இனத்தோடு இன்று சேர்த்துவிட்டமைக்கு நன்றிகள பல....
யாரப்பா சொன்னார்கள விமர்சையாக....என்று இந்தக் ஹேமாவால......ஐயோஓஓஓஓஓஓஓஓஎன் .............குட்டணும்..வாரன்
அத்தானுக்கு ரொம்பதான்........----------------- ஜாஸ்தி
அக்காகிட்டச் சொல்லி உப்புக்கஞ்சி போடச் சொல்கிறேன்...
ஹேமாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ
கலா said...
அத்தான்! இது எப்படி உங்களுக்குத்
தெரியவந்தது?
ம்ம்ம...மிக்க நன்றி ஐயா,
இந்த வருடம் உங்கள வாழ்த்துக் கிடைத்தது என் பாக்கியம்.////ஆரது "பாக்கியம்",உங்களோட இருக்கிறாங்களோ?????ஹீ!ஹி!ஹீ!!!!!
கவிதாயினிக்கு என்னாச்சு?
நீண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ட இடைவெளி விட்டிருக்காங்க.
ஹேமா, காதல்குரலில்...
தேடுவது கேட்கவில்லையா?
நீளமாகத் தூதுவிட்டது!
என் சொற்களால்
உன் வார்த்தைகளை
உடைத்த பாவமும் இப்போது!!!///
அருமை!
கவிதையின் வரிகள் என்னையும் வசப்படுத்தி விட்டது....
அருமையான கவிதை
சொற்களால்
வார்த்தைகளை
உடைத்த கவிதைக் குரல் !!!
அருமை அருமை கவிதாயினியே...
எப்படி சுகம் அக்கா நீண்ட இடைவேளையின் பின் வந்துள்ளேன்...
இந்த பதிவை-
வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன்!
வருகை தாருங்கள்!
தலைப்பு; மூத்தவர்கள்,,
Post a Comment