வேறு வழியில்
உன்னை வார்க்கத்
தெரியவில்லை எனக்கு
தெரிந்திருந்தால்
இதுநாள்வரை
காதலில் வளர்ந்த
எம் உணர்வுகளை
வடித்திருப்பேன்
பாடலாய்...
ஓவியமாய்...
சுவர் சித்திரமாய்...
இல்லையேல்
ஏதோ ஒரு
கலை வண்ணமாய் !
என் காதலைப் பிய்த்து
யாரிடமோ சொல்லி
யாசகம் கேட்டு வரைய
எனக்கு விருப்பமில்லை
உனக்கும்தான் !
ம்...என்கிற
ஒற்றைச் சொல்லில்
உன் உணர்வுகளைப்
புரிந்துகொண்ட எனக்கு
விளங்காததா !
தாய்மையின் உணர்வோடு
மடி தவழ்ந்தபோதே
என்னையும்
உணர்ந்திருப்பாய் நீ
இனி யார் யாரை
உணர்ந்துதான் எதற்கு !
எத்தனை கவிதைகள்
எம் காதல் புணர்வுக்குப்
பிறந்த குழந்தையாய்
இந்தா...இப்போதும்
ஒரு குழந்தை உன்னடியில் !
தள்ளிவிடாதே
என்னைத் தள்ளியதுபோல
இது உன் குழந்தை
நீ ஒன்றும்...
புத்தனில்லையே!!!
ஹேமா(சுவிஸ்)
Tweet | ||||
44 comments:
எத்தனைக் குழந்தைகள்! தள்ளிவிட மனிதனாகிய எவருக்கும் மனம் வராது! அழகான உருவகத்தில் கவிதை சொல்லி அசத்திட்டீங்க ஹேமா!
இன்னும் தமிழ்மணம் ஓட்டுப்பட்டை சரில்லையா?சொல்லுங்க.கணேஸ் ஓட்டுப் போட்டதா தெரில !
தமிழ் 10 லயும் இணைக்கத் தெரில.இணைச்சுவிடுங்கோ யாராச்சும் ப்ளீஸ் !
கவிதைக்கு ஒரு கவித்துவமான விளக்கம்...உணர்வாய்...!
:-))))
ஓட்டுப் போட மறந்துட்டுப் போயிட்டமேன்னு திரும்ப வந்தேன் ஃப்ரெண்ட்! இப்ப போட்டுட்டேன். தமிழ் 10ல இணைச்சுடறேன். இனிமே நீங்க ஒர்ரி பண்ணிக்க வேணாம். நான் பாத்துக்கறேன். சரியா?
நல்ல கவிதை.வாழ்த்துக்கள்.
குழந்தைகளைப்பற்றி எவ்வளவு வேண்டுமானாலும் எழுதிக்கொண்டிருக்கலாம்.
டெஸ்ட்டுக்காக வெச்சிருந்த ஐடிலருந்து கமெண்ட் தவறி வந்துடுச்சு ஃப்ரெண்ட்! நான்தான் தமிழ்10ல சேத்துட்டேன். ஸீயு!
வழக்கம் போல் கவிதை வித்தியாசமான சிந்தனையில் நல்லாயிருக்கு.
//தள்ளிவிடாதே
என்னைத் தள்ளியதுபோல
இது உன் குழந்தை
நீ ஒன்றும்...
புத்தனில்லையே!!!//
வாழ்த்துகள் ஹேமா
அசத்தல் வரிகள்
அசத்தலா இருக்கு கவிதை ஹேமா வாழ்த்துக்கள்...!!!
என் காதலைப் பிய்த்து
யாரிடமோ சொல்லி
யாசகம் கேட்டு வரைய
எனக்கு விருப்பமில்லை//
அது ஞாயம் தான்.
Super kavithai accahchi ippadiye eluthunka
அருமை!
நல்ல கவிதை.வாழ்த்துக்கள்.
கவிதை தவிர
வேறு வழியில்
உன்னை வார்க்கத்
தெரியவில்லை எனக்கு\\\\\\\
{யாரிடமும் பகிர்ந்து கொள்ளமுடியாத
மனக்குமுறல்களைக் கொட்டி ஓடவிடும்
ஒரு வாய்க்கால் வழிதான்!ஹேமா சரியாகச்
சொன்னாய்
என் காதலைப் பிய்த்து
யாரிடமோ சொல்லி
யாசகம் கேட்டு வரைய
எனக்கு விருப்பமில்லை
உனக்கும்தான் !\\\\\\
{மறுப்பும்,எதிர்ப்பும் தெரிவித்தாலும்,...
கெஞ்சமாட்டேனென, விட்டுக்கொடுப்பதற்கு
பெரியமனது வேண்டுமடி!{உங்க மனது ரொம்பதான்
விசாலமோ?}
இனி யார் யாரை
உணர்ந்துதான் எதற்கு\\\\\\
{ஆமா..காலம் கடந்துவி{சு}ட்டது
எத்தனை கவிதைகள்
எம் காதல் புணர்வுக்குப்
பிறந்த குழந்தையாய்
இந்தா...இப்போதும்
ஒரு குழந்தை உன்னடியில் !\\\\\\
இக்குழந்தையை
ஏற்பார்களா? இல்லை இது ஒரு பைத்தியம்
எனப் பட்டம் கொடுப்பார்களா?
தள்ளிவிடாதே
என்னைத் தள்ளியதுபோல\\\
{இவ்வரிகளால்..மனது வலிக்கிறதுஹேமா!
தள்ளியது காதல்அல்ல...இருவரின் புரிந்துணர்வுதான்”அடி”பட்டதுமட்டும்தானே!
உயிர்போகவில்லையே,மீண்டு{ம்}எழுந்துவிட
வேண்டும் {ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறது
வாழ்வென்றால்......}
\
எத்தனை கவிதைகள்
எம் காதல் புணர்வுக்குப்
பிறந்த குழந்தையாய்\\\\\
காதல் புணர்வில் {ஏமாற்றத்தால்}
புண்ணாகிய...
உணர்விலிருந்து
“கரு”க்கட்டி பண்ணாகிப் பிறந்து
“வலையில்”ஆடும் கவிக்குழந்தை
மிகப் பிரமாதம் ஹேமா.
கலக்கல் ஹேமா. தொடருங்கள்.
Hemaa!
neengalum ennai polave!
ethulayum inaikka theriyaamal-
pathivukalai!
naan!
kavithai!
arumai!
அழகான குழந்தையாக இக்கவிதை அருமை ஹேமா.
காதல் தேவதையால் நம்ம ஹேமா அக்காச்சி ரெம்பவே ஆசீர்வதிக்கப்பட்டு இருக்கார் போல :) ஒவ்வொரு வரியிலும் காதல் ஆட்சிதான் :)
ரெம்பவே புடிச்சு இருக்கு அக்காச்சி :)
என் காதலைப் பிய்த்து
யாரிடமோ சொல்லி
யாசகம் கேட்டு வரைய
எனக்கு விருப்பமில்லை//
நியாயமான வரிகள்... எனக்கு ரெம்ப புடித்த வரிகளும் கூட..... :) :) :)
அக்காவின் கவிதைகளுக்கு எப்போதும் நான் அடிமை...... அதிலும் அந்த காதலர்தின ஸ்பெஷல் கவிதையை வாழ்க்கையில் மறக்க முடியாது..... அந்த கவியை என் சிறகானவளுக்காக (சிறகானவனுக்கு) இப்பவே பத்திரப்படுத்தி வைத்துள்ளேன் :)
அருமையா இருக்கு ஹேமா
உங்களுக்கு மட்டும் தான் இப்படியெல்லாம் வித்தியாசமா தோணும்
குழந்தை மீதான உங்கள் கவிதை உணர்வு சிலிக்கவைக்கின்றது.
//தள்ளிவிடாதே
என்னைத் தள்ளியதுபோல
இது உன் குழந்தை
நீ ஒன்றும்...
புத்தனில்லையே
//புத்தன் பேசமாட்டான் என்பதை இப்படி முடிச்சு விட்டீங்க ஜோசிக்க வைக்கின்றது. குழந்தை காதல்.
எல்லா வரிகளிலும் வலி மிதக்கிறது.மனதின் வெப்பியாரத்திலிருந்து கிளம்புகிற சத்திய வார்த்தைகளாய் விரவிக்கிடக்கிறது வரிகள் ஒவ்வொன்றும்.
ஹேமா,
காதலில்,சோகம் இழையோடும் கவிதைகளே வாசகனை வசீகரித்து விடுகிறது.
இந்த படைப்பு வலியறியாத வாசகனையும் காதலை எழுதத் தூண்டும்.
அருமை ஹேமா...சேமித்துக் கொண்டேன்.
இன்னுமின்னும் நிறையக் கவிக்குழந்தைகளைத் தவழவிடுங்கள் காற்றலைகளில். தாயைத் தள்ளியக் கரங்கள் ஒருபோதும் சேயைத் தள்ள முனைவதில்லை. தொடரட்டும் கவிக்குழந்தைகளைத் தொட்டிலாட்டும் கரை சேராக் கணங்களின் நினைவுகள்.
அசத்தல்.
ஹேமா ..அருமை. மிகவும் பிடித்திருந்தது.
வழக்கம்போலவே அசத்தல் கூடவே வலியும்!
//எத்தனை கவிதைகள்
எம் காதல் புணர்வுக்குப்
பிறந்த குழந்தையாய்
இந்தா...இப்போதும்
ஒரு குழந்தை உன்னடியில் !
தள்ளிவிடாதே
என்னைத் தள்ளியதுபோல
இது உன் குழந்தை
நீ ஒன்றும்...
புத்தனில்லையே!!!//
சோகத்தைச் சொல்லில் வடிக்க
இயலும் என்பதற்கு நீங்கள் சிறந்த
எடுத்துக்காட்டு!
புலவர் சா இராமாநுசம்
அருமையான அசத்தலான வரிகள். உணர்வுகளை வருடும் கவிதை. ஏதோ ஏதேதோ உணர்வுகள்...வாழ்த்துக்கள்!
தள்ளிவிடாதே
என்னைத் தள்ளியதுபோல
இது உன் குழந்தை
நீ ஒன்றும்...
புத்தனில்லையே!!!
முடித்தவிதம் அருமை சகோ வாழ்த்துகள்!!
அழகான குழந்தைதான் பெத்திருக்கிறிங்க. வாழ்த்துக்கள்.
அம்மா ஹேமா நீங்க பெறும் அழகான ஆரோக்கியமான குழந்தைகளால் பதிவுலகம் நிறையட்டும். வாசகர் மனங்குளிரட்டும் வாழ்த்துக்கள்.
ஆரம்பமும் சரி
முடிவும் சரி
அசத்தல் வரிகள்
உங்களைப்போல ஒரு கவிதாயினி
இனி பிறந்துதான் வரவேண்டும்...
தங்களை ஒரு தொடர்பதிவு எழுத அழைத்திருக்கிறேன்..
நேரம் கிடைக்கையில் என் தளம் வந்து பாருங்கள்.
நன்றிகள் பல.
நல்ல கவிதை...
///என் காதலைப் பிய்த்து
யாரிடமோ சொல்லி
யாசகம் கேட்டு வரைய
எனக்கு விருப்பமில்லை
உனக்கும்தான் !////
பகிர்வுக்கு நன்றிகள் சகோதிரி....
இந்தக்கவிதையில் வலியும் புரிகிறது. சூப்பர்.
இந்தக் கவிதையை மூன்றாவது தடவையாகப் படிக்கிறேன்.
அருமையான கவிக் குழந்தை
தொடர்ந்து பெற்றுத் தர வேண்டுகிறோம்
அழகான உருவகத்தில் கவிதை
அருமையான பகிர்வுகள்.. வாழ்த்துகள்.. பாராட்டுக்கள்..
என் காதலைப் பிய்த்து
யாரிடமோ சொல்லி
யாசகம் கேட்டு வரைய
எனக்கு விருப்பமில்லை
உனக்கும்தான் !/// நன்னாயிருக்கு
...எத்தனை கவிதைகள்
எம் காதல் புணர்வுக்குப்
பிறந்த குழந்தையாய்
இந்தா...இப்போதும்
ஒரு குழந்தை உன்னடியில் !
தள்ளிவிடாதே
என்னைத் தள்ளியதுபோல
இது உன் குழந்தை
நீ ஒன்றும்...
புத்தனில்லையே..///
அருமையான கவிதை வாழ்த்துக்கள்
Post a Comment