ஒரு தேவதையை
பூசித்துக் கழித்த பொருளென
எச்சிலோடு கரைத்தெறிந்த
வார்த்தைகள்
தாங்கி நிற்கும் மனங்களில்
ஓமகுண்டமெனப் புகை
நிற்க...
நாற்கோண உருவங்களில்
தோராயமாய்
வெட்டி வீசிய வார்த்தைகளை
தூற்றித் துவலையாக்க
நீரடித் தாவரத்தூர்
தகர்க்கும் மௌனத்தை
நான்
காதல் என்கிறேன்
அவர்கள்
சாத்தான்கள் என்கிறார்கள்!!!
ஹேமா(சுவிஸ்)
Tweet | ||||
32 comments:
கவிதையில் “ நீரடித் தாவரத்தூர்
தகர்க்கும் மௌனத்தை’ என்பது மிக அழகிய சொற்றொடராகும்! காதல் என்பது ஓவ்வொருவர் பார்வையிலும் ஒவ்வொரு அர்த்தம் தான் ஹேமா! வழக்கம் போலவே அழகிய கவிதை!
சரி, தமிழ்மண ஓட்டுக்கள் தெரொய மாட்டேங்குது! அதனைச் சரி செய்யுங்கள்!
மீண்டும் மீண்டும் படித்து விட்டுச் செல்கிறேன் ஹேமா...(புகை நிற்க என்று சேர்ந்து வந்திருக்க வேண்டுமோ....)
மீண்டும் நல்ல கவிதை ஒன்று தந்திருக்கிறியள் ஹேமா
வார்த்தைகள் விளையாடுகிறது கவிதையில். நல்ல கவிதை.
சொல்லிவிட்டு போகட்டுமே/காதல் என்றும் சாத்தான் என்றும் /எது உண்மையோ அது நிலைக்கும் கண்டிப்பாக/
அசத்தலாயிருக்கு ஹேமா..
நல்ல கவிதை ஹேமா.
ஸ்ரீராம் சொன்னது சரிதானோ?
/ஓமகுண்டமெனப் புகை
நிற்க.../
அழகான,அருமையான கவிதை!வாழ்த்துக்கள்!!!!
varthaiyida payamiththu
vitten!
ஓமகுண்டப் புகை என இதில் உள்ளீடு அரசியலைச் சாடி விட்டீர்கள் புகைபோல தான் இப்போதைய பாதை!
காதல் என்றும் சாத்தான் என்றும் சொல்பவர்களின் மனநிலையைப் பொறுத்து சொல்லட்டும் எப்படி என்று வித்தியாசமான கவிதை. வாஎத்துக்கள்.
இன்று சுவீஸ் வானில் இலவச மழையோ ஹேமா ??பதிவுலகில் அம்பலத்தார் அடி எடுத்து வைக்க ஐயா யோகா சீர் செய்திருக்கின்றார். சிரிப்பு வருக்கின்றது உள்குத்து உறைக்குது . ஹீ ஹீ
சரி, தமிழ்மண ஓட்டுக்கள் தெரொய மாட்டேங்குது! அதனைச் சரி செய்யுங்கள்!//
ரிப்பீட்டு
பிரமிப்புடன் படித்து ரசித்தேன் இக்கவிதையை! அருமை1
அருமையான சொல்லடைகள் உங்கள் கவிதையை சிறப்பாக்குகிறது
அவர்கள் சாத்தான் எனக்கொண்டார்கள் என்றும் சொல்லலாமோ?.. கவிதை நறுக்கென்று..
நல்ல கவிதை,
காதல் சிலர் வாழ்வில் சாத்தானாகவும் மாறிவிடுவதும் உண்டு!
நானும் சாத்தான் என்கிறேன்...
பல முறை படித்து விட்டேன் ஹேமா..
//தூற்றித் துவலையாக்க
நீரடித் தாவரத்தூர்
தகர்க்கும் மௌனத்தை// ஆகா அழகான சொல்லாட்சி... அருமை.
ஹா! நீரடித் தாவரத்தூர்
தகர்க்கும் மௌனத்தை- என்ன அழகான வார்த்தைகள் ஹேமா! மொழி புதிதாய் உருக்கொள்கிறது கவிதையில்.
நானும்....எப்படிச் சொல்ல...!..?
வார்த்தைகளால் பின்னிய அருமைக் கவிதை வாழ்த்துகள்.
சிலசொல்லாடல் அருமை!
ஆனால் கவிதையின்
பொருள் சரியாக உணரமுடியவில்லை என்னால்!
ஏதேனும் உள்ளுரை உண்டா ?
புலவர் சா இராமாநுசம்
உங்களுக்கு ஒரு விருதை பகிர்கிறேன் ...பெற்றுக் கொள்ளவும்
//நீரடித் தாவரத்தூர்
தகர்க்கும் மௌனத்தை//
கவனம் கோரும் சொற்கள்.நன்று
கணினி பிரச்சினையினால் தங்களது கடந்த சில படைப்புகளை தவறவிட்டுவிட்டேன். பதிவுகள் மட்டும் இட்டேன். கருத்துரைகள் ஏதும் கடந்த நான்கு நாட்களாக இட முடியாமல் போயிற்று. இனி தொடர்வேன்.
அருமையான கவிதை ஹேமா. ஆனால் புலவர் அய்யா சொல்வது போல் கொஞ்சம் எளிமைப்படுத்துங்கள் உங்கள் கவிதை நடைகளை. பாமரனுக்கும் புரிய வேண்டுமல்லவா? ஆனாலும் உங்கள் இஷ்டம். காரணம் நம் குழந்தை எப்படி இருக்கவேண்டும் என்பது நம் இஷ்டமல்லவா? உங்கள் படைப்பு சுதந்தரத்தில் தலையிட நான் விரும்பவில்லை. நன்றி.
தமஓ 12.
நானும் காதல் என்றே சொல்லும் சைத்தான்...அழகிய படைப்பு...ஹேமா..
பார்வைகள் பலவிதம்.
துவலை => மிக அரிதாக பயன்படுத்தும் சொல்லைக் கையாண்டிருப்பதற்கு பாராட்டுக்கள்,
நீரடி தாவர தூர் => அழகிய ஒரு காட்சியை மனதினுள் பிம்பமாக்கும் சொல்.
(தாவர தூர்- ஒரு புது சொல்லாக்கமும் கூட.)
ஹேமாவுக்கு பாராட்டு மழை!
சிச்றந்த கவிதை கொஞ்சம் சிந்தித்து படிக்க வேண்டி இருக்கிறது பாராட்டுகள் உடன்படிக்கைகள் எப்போதும் பெரும் மக்களுக்கு நல்லன செய்வதில்லை
" நான் காதல் என்றேன் " - அருமை ! நாளுக்கு நாள் உங்கள் உங்கள் கவிதையின் அழகு கூடிக்கொண்டே போகிறது ! வாழ்த்துக்கள் !
கைரேகைகள் போல பார்வைகளும் வேறுபடத்தானே செய்கிறது..
அருமையான கவிதை.
Post a Comment