*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Monday, February 27, 2012

ஐ.நா மனித உரிமைகள் பேரவை...

தகர்த்தெறியப்பட்ட
வேலிகள் சுவர்கள்
உயரமாயும்
உடைந்து சிதைந்து சின்னதாயும்
அதற்கப்பால் அதற்குள்
பலருக்குத் தெரிந்தும்
சிலருக்குத் தெரியாததுமான
விம்மி வெடித்த உண்மைகள்
அறிந்ததும் அறியாததுமாய்.

தாண்டித் தேடும் புலன்களுக்குள்
ஏன் அகப்படவில்லை
அவைகள் அவர்களுக்கு
நியாயம் சொல்பவர்களாயின்
தேடல்
அப்பாலுக்கு அப்பால்தானே.

முடக்கும் வேலிகளுக்குள்
எம் உண்மைகள்
எம் உபாதைகள்
வேலிகள்
எம் மெய் மறைக்குமெனில்
ஏன் அவைகளும்
அவர்களும்!!!

ஹேமா(சுவிஸ்)

31 comments:

விச்சு said...

அவர்களும் வந்து போகட்டும். மனித உரிமை மீறலை மனிதம் உள்ளவர்கள் பார்க்கட்டுமே.நல்ல சிந்தனை.

கீதமஞ்சரி said...

மெய் மறைக்கும் வேலிகள் மெய்யை மறைத்திட எந்நாளும் இயலாது. பொய்யின் நாவுகள் பொசுக்கப்படும் ஒருநாள். மெய்யென்னவென்பதை உலகம் அறியும் அன்று.

மகேந்திரன் said...

ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும்
ஆதவன் மறைவதில்லை..

கொல்லான் said...

எளியோரை வலியோர் வாட்டினால், ...


நலம் தானே?

பவள சங்கரி said...

//முடக்கும் வேலிகளுக்குள்
எம் உண்மைகள்
எம் உபாதைகள்
வேலிகள்
எம் மெய் மறைக்குமெனில்
ஏன் அவைகளும்
அவர்களும்!!!//

உண்மைதான் தோழி..... காலம் பதில் சொல்லும் ஓர் நாள் கட்டாயம்!

தமிழ் உதயம் said...

.சுடும் உண்மைகளை சுட்டி காட்டியது கவிதை.

பால கணேஷ் said...

தேடல் அப்பாலுக்கும் அப்பால் தான். நிஜம் சுட்டது ஹேமா.

Thooral said...

Unmai...
kavithai arumai

Seeni said...

அநீதி நடக்கும்போது-
தடுக்காதவர்கள்-
எல்லாம் முடிந்தபின் -
என்ன செய்ய வாராங்க?

Marc said...

வேலிகள் எல்லாவற்றையும் மறைக்கின்றன.

சத்ரியன் said...

நிலை மாறும்!

கவி அழகன் said...

Unmai varikal

test said...

ம்ம்ம்..என்ன சொல்றது..இனி என்னத்த..

Unknown said...

காலம் வரும்
கவலை வேண்டாம்!

புலவர் சா இராமாநுசம்

Ashok D said...

நிறைய பேர்களின் வாழ்க்கை முள்வேலியில் தான்... ஹேமா...
கண்ணுக்கு தெரிஞ்ச முள்வேலி சில சமயங்களில் பாதுகாப்பானதோ என்று என்ன வைத்துவிடுகிறது :(

ராமலக்ஷ்மி said...

/ஏன் அவைகளும்
அவர்களும்!!!/

மனிதம் வெட்கப்பட வேண்டும். சுடுகிற உண்மைகள் வரிகளாய்.. நன்று ஹேமா.

ஸ்ரீராம். said...

வாடும் மனங்களுக்கு விடிவு இன்று வரும் நாளை வரும் என்று நித்தம் நித்தம் ஏக்கம்...தீரட்டும் சீக்கிரம்.

Anonymous said...

உண்மை சுட்டது சகோதரி...

நிலைமை விரைவில் மாறும் என்றே எண்ணுவோம் ஹேமா...

காட்டான் said...

வணக்கம் ஹேமா!
ம் இப்போதுதான் ஐநா வரை பிரச்சனைகளை கொண்டு வருகிறார்கள்.. பார்ப்போம் என்ன நடக்கின்றது என்று.

வேலிகள் என்றுமே மறைப்பதுக்குதானே?

Unknown said...

ஐ.நா கதவை இன்னும் பலமாக தட்டவேண்டும்....

தனிமரம் said...

வேலியே பயிரை மேய்ந்த நிலையில் வெள்ளாடுகள் வேதனையில் வெளிச்சம் போட்டுக்காட்டியும் விளங்காத ஐ.நா பார்ப்போம் இனியும் நடப்பதை.

சி.பி.செந்தில்குமார் said...

யார் வந்தாலும் ஒண்ணும் ஆகப்போறதில்லை. மாற்றாங்கள் அவ்விடமும், இவ்விடமும் வரனும் அதுதான் பிரச்சனைக்கு தீர்வு

...αηαη∂.... said...

காலம் வரும் காத்திருக்க வேண்டும்..,

மாலதி said...

இந்த பாழும் உலகம் உண்மையையும் நேர்மையையும் கொன்று அழிக்கிறது எத்தனை தான் போரட்டங்ககள் நடத்தினாலும் உண்மை விடைபெற்று பொய்மை அரசாட்சி செய்யும் காலம் உலகெங்கும் தமிழன் ஒன்று பட்டு ஒருமித்த குரல் எழுப்பதவரையில் தமிழனுக்கான உரிமைகள் மறுக்கப் படும் . இதை தமிழகத்து தமிழனும் ஈழத்தமிழனும் உலகெங்கும் உள்ள புலம் பெயர் தமிழனும் உணரவேண்டும் உணர்வார்கலேன நம்புவோம்.

நம்பிக்கைபாண்டியன் said...

நிச்சயம் ஒரு நாள் இந்த வேலிகளுக்கு விடிவு கிடைக்கும்,

நம்பிக்கைபாண்டியன் said...

நிச்சயம் ஒரு நாள் இந்த வேலிகளுக்கு விடிவு கிடைக்கும்,

ராஜ நடராஜன் said...

வழிகாட்டும் கண்கள் இல்லாமலே
தட்டு தடுமாறி ஐ.நா
கதவு தட்டப்பட்டது.
கதவு திறந்தும் குழும அறை
தெரியாத குருடர்களாய்.

SELECTED ME said...

ஏன் அவைகளும்
அவர்களும்!!! - நியாயமான கேள்வி!

அருள் said...

இலங்கை: ஐ.நா.வில் வைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ தீர்மானம்.

http://arulgreen.blogspot.com/2012/03/blog-post.html

தறுதலை said...

ஹிந்தியாவே முடிவு செய்.
தமிழ்நாடு வேண்டுமா? சிங்கள நாடு வேண்டுமா?

-------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள் - மார் '2012)

Kannan said...

தயவு செய்து இந்த facebook page இல் உங்களது கருத்துக்களை பதிவு செய்யுங்கள் சனல் 4 வீடியோவுக்கு எதிராக சிங்கள இனவாதிகளால் இது செய்யப்படுகிறது
http://www.facebook.com/Channel4.Fake.Video
எவ்வளவு முடியுமோ comment பண்ணுங்கள்
fake account விரும்பத்தக்கது

Post a Comment