ஒற்றைக் கீறல்கள கூட
ஏதுமில்லையாம்
ஒருகாலை மடக்கி
கைகளை விரித்து
படுத்திருப்பதுபோல
அவரை
வரைந்திருந்தார்கள்
எத்தனையோ தடவைகள்
கடந்த இடமிதில்
பலரும்....நானும்
படத்தில் வரைந்தவரை
புன்சிரிப்போடு கண்டிருக்கிறோம்
சந்தியை கட்டம் கட்டி
வட்டத்திற்குள்
வரைந்திருக்கிறார்கள்
இனி எப்போதுமே
காணப்போவதில்லை அவரை
என்றாலும் அந்தச் சந்தியை
நித்தமும் கடந்துகொள்ளத்தான்
வேண்டியிருக்கிறது!!!
ஹேமா(சுவிஸ்)
Tweet | ||||
36 comments:
நாம் எல்லோருமே ஒரு தடவையாவது கண்டு, கடந்த காட்ச்சியைக் அப்படியே கவிதையாக்கி இருக்கிறீர்கள்! அருமை!
மனதில் ஆழமாக பதிந்தவர்ரை அழிப்பது கடினம் தான் ....
நிதர்சனமாக பலருக்கும் ஏற்பட்டிருக்கும் இந்த அனுபவம். அழகான ‘பா’வாகப் புனைந்திருக்கிறீர்கள் தோழி. மனதில் தைத்தது.
மனதுக்கு கஷ்டமான, மறக்க நினைக்கும், ஆனால் மறக்க முடியாத காட்சி.
நிதர்சனமான உண்மை..கண்டிருக்கிறேன்.
.in ஆக இருக்கும்போது வாக்கிமுடியவில்லை .com ஆக மாற்றியே வாக்கிட்டேன்.
அந்த நியாபகம் என்றும் நம்மை விட்டு போகாது தான்
ஓட்டு பட்டை எடுக்கவில்லை ஹேமா.
நீங்கள் லிங்க் கொடுத்துடுங்க பதிவின் கீழ்
in என்பதை அழித்துவிட்டு com/ncr/ என மாற்றி என்டர் கொடுத்துட்டா ஓட்டு பட்டை தெரியும். எல்லாருக்கும் மாற்றிட்டிருக்க நேரம் இருக்காது இல்லையா? அதனால் நீங்களே லிங்க் கொடுத்துடுங்க :-)
ஆமா ஹேமா.. இது ரொம்ப கொடுமையான விசயம்தான். பார்க்கும்போது மனம் பதறத்தான் செய்யும்.
நானும் சிலரை அந்த காட்சியில் பார்த்திருக்கேன் ஹேமா
ஏன்டா பார்த்தோமென்று இன்னமும் புலம்பிக்கொண்டு இருக்கிறேன் .
அடிக்கடி பார்த்த ஒருவரை இனி பார்க்க முடியாதென்ற காட்சியது .
இனி எப்போதுமே
காணப்போவதில்லை “அவரை”
என்றாலும் அந்தச் சந்தியை
நித்தமும் கடந்துகொள்ளத்தான்
வேண்டியிருக்கிறது!!!\\\\\\\\
பதிந்தது,பதிந்ததுதான்
மீள்பதிவு செய்துகொண்டே இருக்கும்
மறக்கமுடியுமா
காட்சிக்கு ஏற்ற கவிதை வரிகள் அமைத்த விதம் அருமை.
Puriyala
வட்டத்திற்குள்
வரைந்திருக்கிறார்கள்
இனி எப்போதுமே
காணப்போவதில்லை அவரை
என்றாலும் அந்தச் சந்தியை
நித்தமும் கடந்துகொள்ளத்தான்
வேண்டியிருக்கிறது!!!
நான் பார்த்த வட்டங்களையும் உடன் கோர்வையாக
ஞாபகப் படுத்திப் போகிறது தங்கள் பதிவு
வார்தைகள் மூலம் காட்சிகளை கண்முன்னே
நினைவுறுத்திப் போகும்
தங்கள் பதிவு அருமை
தொடர வாழ்த்துக்கள்
சூப்பர்!!
கண்முன்னே கண்ட காட்சி
காலம் ஓடினாலும் மனத்துள்
மறையாது தடம் பதித்து விடுகிறது.
புலவர் சா இராமாநுசம்
ஓட்டுப் பட்டையே காணவில்லை!
புலவர் சா இராமாநுசம்
அதிர்வைத் தருகிற கவிதை.
/நித்தமும் கடந்துகொள்ளத்தான்
வேண்டியிருக்கிறது!!!//
நிதர்சனம்.
கனமான கடந்து போதல்/
தனித்தும், பொதுவிலும் அர்த்தம் காணக் கூடிய அதிர வைக்கும் கவிதை. இணைத்திருக்கும் படமும் பிரமாதம்.
மணல் தடமாய் மனதில்
பதிந்தது கவிதை..
ethoyo gaapakam
mootiyathu!
gaapakangal marakka mudiyaathathu!0
நிதர்சனம்..... பலரும், பல முறை கடந்து வந்திருக்கும் ஒரு அனுபவம்... அழகு கவிதையாக்கியிருக்கிறீர்கள். வாழ்த்துகள் ஹேமா..
புன்னகையின் மரணம் மிகவும் கொடுமைதான். அதை நித்தமும் நினைவுபடுத்தும் பாதை அதைவிடக்கொடுமை. வார்த்தைகளுக்குள் அடங்கிய சோகம் கவிதைக்குள் அடங்கவில்லை.
நேத்துவரை நிஜமாப் பார்த்த ஒருத்தர் இன்னிக்கு நிழலா ஞாபகங்கள்ல மட்டுமே தங்கிடும் நிகழ்வு ரொம்பவே கொடுமையானது,.. அதுவும் ஞாபகப் படுத்தும் விதமா ஏதாவதொரு விஷயத்தை தினம் கடக்கவேண்டியிருப்பது இன்னுமே கொடுமை..
அருமை ஹேம்ஸ்..
உணர்ச்சி பிழம்புகளாய் உங்களின் கவிதை அக்கா..
நன்றி
நிதர்சனமான உண்மை.
படிக்கும் போது நம் வாழ்க்கையில் ஒருவரை இன்னிலையில் இழந்த சோகம் மனக்கதவை தட்டுகிறது....என்னவோ பின்னுட்டம் இடவும் தடுமாற்றம்..
கனமான உணர்வுகளை இலகுவாக வார்தையாக்குகிறீர்கள் தோழி...
நல்லாயிருந்தது...
//சந்தியை கட்டம் கட்டி
வட்டத்திற்குள்
வரைந்திருக்கிறார்கள்..//
ம்ம்..!
தினந்தோறும் காணும் காட்சியை அழகான படிமம் ஆக்கிய புனைவு அருமை. நல்லாருக்குங்கோ!
படம் அருமை. அழகு. அப்புறம் ஹேமா! ஓட்டுப்பட்டை வேலை செய்யவில்லை. இந்த கூகுள என்ன செய்யலாம் சொல்லுங்க?!
தைக்கும் வரிகள்.
கீதமஞ்சரியின் பின்னூட்டம் யோசிக்க வைத்தது.
படத்தில் வரைந்தவரை
புன்சிரிப்போடு கண்டிருக்கிறோம்
ஆம். காலம் எப்படி புரட்டிப் போட்டுவிட்டது.
இனி எப்போதுமே அவரைக் காணப் போவதில்லை என்கிற வலி கவிதை படித்ததும் கனமாய் உட்கார்கிறது மனசில்.
ஆம்! சில இடங்களை பார்க்கும்போது சில முகங்கள் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியாது!
படமும், கவிதையும் கிளாசிக்
Post a Comment