*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Monday, January 16, 2012

நேற்றுப் பொங்கல்...

இன்னும் நம்பவில்லை !

வெறுத்துக் கக்கிய
வார்த்தைகள்தான் தெரிந்தன
பொங்கிச் சிதறிய துளிகளில்.

தொட்டுப் பார்க்கிறேன்
ஒரு துளியை
அன்பை நிராகரிக்கும்
எச்சிலாய் அது.

வாந்தியாய்த் துப்பிய
வார்த்தையின் ஓலங்களாய்
கொதித்துக்
கொந்தளிக்கும் நுரை.

அன்பே...
காணக் காத்திருக்கிறேன்
காணும் பொங்கலில்
காதலுடன்
உன் அன்பு முகம்!!!அதே வார்த்தைகள்...

நேற்றைய இரவில்
விகார உருவெடுத்து
தலையணைக்குள் சேகரித்த
என் காதலையும்
அசிங்கப்படுத்தியிருக்கிறது
அதே கொடூர வார்த்தைகள்
இபோதும் நீங்கள் காணலாம்
அந்த வெறுப்பையும்
அறுந்து தொங்கும்
நூலின் நிராகரிப்பால்
உதிரும் பஞ்சையும்!!!

எல்லோருக்கும் பொங்கல் வாழ்த்துகள்...ஹேமா(சுவிஸ்)

27 comments:

vimalanperali said...

சோகம் மிகுந்த பொங்கல் வாழத்தாயும்,கசப்பான நினைவுகள் சுமந்த வாழ்த்துக்களாயும் இருக்கிறது.வாழ்த்துக்கள்.

sury siva said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் எங்கள் பொங்கல் வாழ்த்துக்கள். ஹேமா என்னும் சொல்லுக்கு இரத்தம் எனவும் பொருள் உண்டு. பனி என்றும் பொருள் கொள்ளலாம்.
ரத்தத்தை பனி போல் உறைய வைக்கும் சரித்திரம் உங்கள் பதிவிலே பொறிக்கப்பட்டிருக்கிறது.


உங்களது வலைதனையும் வாழ்த்துக்களையும் இங்கிருந்தும் பெறலாமே !!

சுப்பு ரத்தினம்

http://vazhvuneri.blogspot.com

Anonymous said...

வார்த்தைகள் கொதிப்பதை உணர முடிகிறது கவிதை வரிகளில். மனதில்தான் எவ்வளவு வேதனை ஹேமா!

ஜோதிஜி said...

ஸ்விஸ் பொங்கல் எப்டியிருந்தது ஹேமா?

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ம் ...
எனதினிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் .

T.V.ராதாகிருஷ்ணன் said...

நேற்று பொங்கல்

கசப்புகள் இன்று அகன்று

காணும் பொங்கலாய்

பொங்கும்

காணும் போது

சி.பி.செந்தில்குமார் said...

ஹலோ பொங்கல் அன்னைக்கு கூட உங்க சோகத்தை விட மாட்டீங்களா? :))

தமிழ் உதயம் said...

பொங்கல் கவிதை - புது விதமான அனுபவத்தில், வாழ்க்கை கற்று கொண்ட பாடத்தில். அருமையாக இருந்தது.

Asiya Omar said...

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

ஆமினா said...

திருநாளூம் அவன் நிராகரித்த வெறுமை நாட்களை நினைவுபடுத்துகிறது.....

கனக்க செய்யும் கவிதை

பால கணேஷ் said...

வெறுப்பையும் அறுந்து தொங்கும் நூலின் நிராகரிப்பால் உதிரும் பஞ்சையும்! எவ்வளவு வலிமையான, வேதனை மிகுந்த வார்த்தைகள் ஹேமா... உங்களின் வேதனை என்னையும் பற்றிக் கொண்டது.

Unknown said...

ம்ம்ம்...பொங்கலிலுமா?
நான் நேற்று சோகமாக இல்லை.
நேற்று அடிக்கடி அடிக்கடி All is well சொல்லிக்கொண்டேன்! ஏதோ ஒரு நல்ல மாற்றம் தெரியுது! ட்ரை பண்ணுங்க!

துரைடேனியல் said...

Vedhanaigal vazhiyum Vaalkkai. Sugaththai Vida Sogame Unmaiyana INBAM Sago. Pongal Vaalthukkal.

சாந்தி மாரியப்பன் said...

இனிய பொங்கல் வாழ்த்துகள் ஹேமா.. சோகமான காலம் மாறி சுகமான தென்றல் வீச ஆரம்பிக்கட்டும் இந்த நன்னாளிலிருந்து :-)

கவிதை வீதி... // சௌந்தர் // said...

நெருடலுடன்...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

மகிழ்ச்சியாய் கொண்டாடுங்கள்...
இனி வரும் நாளை...

இராஜராஜேஸ்வரி said...

தங்களின் நேற்றுப் பொங்கல்..." இனிக்கவில்லையே!!

ஷைலஜா said...

காலம் மாறும் பொங்கல் இனிக்கும் ஹேமா. வாழ்த்துகள்!

நிரூபன் said...

வணக்கம் அக்கா,
சோகங்களை மட்டும் நினைவு மீட்டலாய் பொங்கல் தந்திருக்கிறது.
வார்த்தைகளின் வெப்பியாரத்தில் வடுக்களைச் சுமந்த பொங்கலாக நினைவுகள் மட்டும் எஞ்சியிருகிறது என்பதனையும்,
காதலனின் இன்னோர் முகத்தினையும் கவிதை சொல்லி நிற்கிறது.

ஸ்ரீராம். said...

காணும் பொங்கலின் நினைவுகளின் இனிமையிலிருந்து சோகங்கள் இனி 'காணும்' (காணோம்) என்று ஆகட்டும்.பொங்கலுக்கு அங்கு என்ன செய்தீர்கள்?

Unknown said...

பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்

புலவர் சா இராமாநுசம்

அம்பிகா said...

சோகங்கள் மறைந்து இனிமை மலர்ந்திட வாழ்த்துக்கள் ஹேமா.

Anonymous said...

கனக்க செய்யும் கவிதை..
வானம் வசப்படும்...
வாழ்த்துக்கள் சகோதரி...

அனுஷ்யா said...

ஆர்த்மார்த்தமான வரிகள்..
கொஞ்சம் நிதானித்தேன்.

வலைக்கு வந்திருந்தீரென அறிந்தேன்.மகிழ்ச்சி.
நன்றி.
தொடர்ந்து வந்து தொல்லை கொடுப்பேன்..:)

Ashok D said...

ரைட்டு... என்னாச்சு?

பொங்கட்டும் வாழ்க்கை உங்களுக்கு நல்லவையாக :)

ராமலக்ஷ்மி said...

பொங்கல் வாழ்த்துகள் ஹேமா.

நிராகரிப்பின் வலி பேசும் வரிகள்.

ராஜி said...

விரும்பியவன் நிராகரித்துவிட்டால் பண்டிகை இனிக்குமா?

Post a Comment