அன்பின் கருப்பிக்கு....
"வெறும் நட்பல்ல இந்த உறவெல்லாம் என்று பலமுறை நினைத்திருக்கிறேன்...!"
நினைவிருக்கிறதா இந்த சொற்றொடர் ?கொஞ்ச வருடத்திற்கு முன்னால் நீ எனக்கு அனுப்பியிருந்த முதல் மின்னஞ்சலில் இப்படி எழுதியிருந்தாய்.
இத்தனை காலத்தில் தோழியாய் காதலியாய் மனைவியாய்.... எத்தனை பதவிகளை அடைந்து விட்டாய்!நினைத்துப் பார்த்தால் வியப்பாக இருக்கிறது.நாம் எப்படி அறிமுகமானோம் என்பது நினைவில் இல்லை.உனக்கு நினைவிருக்கிறதா? இருந்தால் பகிர்ந்துக்கொள்.
31.05.00 அன்று எனக்கு முதல் மின்னஞ்சல் அனுப்பியிருந்தாய்.நாம் பழகிய ஆண்டுகள் நிறைவானதைக் கொண்டாடும் வகையில் 31.05.00 அன்று அத்தனை நிகழ்வுகளையும் நினைவு படுத்தி காதோரம் பேசி மகிழ வேண்டுமென்று கடந்த பல நாட்களாய் திட்டமிட்டிருந்தேன்....ஆனால் அன்றைய தினம் வேலை மிகுதியால் முடியாமல் போய்விட்டது.
31.05.00 அன்றைய தினத்தைப் பற்றி என்றாவது நீ சிந்தித்துப் பார்த்திருக்கிறாயா? இருக்காது.அன்றிலிந்து உனக்கு எவ்வளவு அறிவுரைச் சொல்லியிருப்பேன்.உனக்கு ஈழமக்களைப் பற்றி எண்ணியே நேரமும் வாழ்வும் கரைந்துப் போய்க்கொண்டிருக்கிறது. தனக்கான வாழ்வும் வேண்டும் என்பதில் அக்கறையே சிறிதுமில்லை உனக்கு. ஒருவேளை இப்போதே ஈழம் சுதந்திரம் அடைந்துவிட்டால் அதை அனுபவிக்க "ஈழமண்ணில்" உன் வாரிசு ஒன்று வேண்டாமா? அல்லது ஈழச்சுதந்திரம் நாள் தள்ளிப் போவதென்றால் ஈழத்துக்காகப் போராட உன் வாரிசு ஒன்று வேண்டாமா ?
ஒரு விடயத்தை உனக்குத் தெளிவு படுத்த விரும்புகிறேன்.உன் தனிப்பட்ட விருப்பங்களை உலகில் எந்த ஆணாலும் நிவர்த்திக்க முடியாது.இதுவரை உலகில் அப்படி ஒருவன் தோன்றவேயில்லை.இனிமேலும் தோன்றப்போவதுமில்லை.
உண்மையில் ஈழத்தை நீ நேசிப்பவள் என்றால் மழலைகளைப் பெற்றெடு.எனக்கும் கொடு.அப்போதுதான் ஈழத்துக்காக நீ செய்ய விரும்பும் தியாகம் நிறைவேறும்.
எப்பொழுது உனக்கு ஓய்வு (விடுப்பு) நாள் என தெரியப்படுத்து.இன்னும் பேசலாம் காதோரம் நிறைய.
உன் அன்பு வீரன்.
என் தோள் தொட்டணைத்த என் வீரனுக்கு.....
சுகம் சுகம்தானே.நித்தமும் காதோரம் சுகம் கேட்டாலும் கடிதம் என்பதின் சடங்கு சுகம் கேட்பது !
ஈழம் என் முதல் காதலன்.நீங்கள் என் கணவர்.உங்களை வணங்குகிறேன்.ஈழத்தைப் பூஜிக்கிறேன்.உயிர் உங்களிடம்.மூச்சு தாய்மண்ணிடம்.உங்களின் ஆசைகள் பற்றிக் கதைத்தால் வாதங்கள் பிடிவாதங்களுக்குள் திணறும்.வேண்டாம்.சில நினைவுகளை மீட்டெடுத்து உங்கள் காதில் மீட்டவா இன்று !
அன்றைய தீபத் திருநாள் ஞாபகமிருக்கிறதா.அகல்விளக்கு நிரைகளில் ஒற்றை விளக்கின் திரிதூண்ட நான் குனிய என் முகத்தடியில் திரண்டு கருத்த வைரமென உங்கள் பாதம் பூமி நிரப்ப நிமிர்ந்த என் கண்ணுக்குள் தந்தம் கடைந்த அற்புத உருவம் மயக்கமாய்.அன்றைக்குப் பிறகு இன்னும் சுயமாய் நானில்லை !
பின்னொருநாளில் சொல்லியிருந்தேன்.மங்கிய மாலையில் முகர்ந்து பார்க்க மஞ்சள் பூக்களை நிறையவே பிடிக்குமென்று.மறக்காத நீங்கள் கைகள் அள்ளிய சிவப்பும் மஞ்சளுமாய் கொட்டாத மகரந்தத்தோடு முந்தானை விலக்கி மூச்சு முட்ட முட்ட முழுவதுமாய் தலை தொட்டுப் பாதம்வரை மகரந்தப் பொடி தடவி...முங்கி எழ வைத்து இன்னும் தரவா என்றீர்கள் இருபொருள்பட.இல்லை....இன்றிலிருந்து மஞ்சள் மாதுளம் பூக்களை விரும்பப்போவதில்லை.என் உடல் நனைக்குமளவிற்கு பூக்களைப் பறித்தால் பழங்களை அழித்த பாவியாகிவிடுவேன் என்றேன்.அடி போடி மஞ்சள் இதழ்கள் மரத்திலிருப்பதைவிட உன் மார்பிலிருப்பதே அழகென்றீர்கள்.உதடு பிதுக்கி அழகு காட்ட அங்குமொரு ஒற்றை இதழ் செருகி முள்ளில்லா மாதுளை மரமொன்றில் மூவிதழ் பூவொன்று... பாட்டும்பாட... முழித்தேன்.....சிரித்தீர்கள் !
இன்னுமொன்று.....
கைகாட்டி வேம்பும் ஞான வைரவரும் ஒளித்திருந்து பார்க்க இறுக்கிய முத்தத்தில் காற்றடிக்க வேம்பின் கிளையும் ஒடிந்து பக்கம் விழ வேப்பம்பூவின் வாசனையோடு உங்கள் தோள் சரிந்திருந்தேன்.மெலிதாய்க் கேட்டீர்கள் பிடிக்கிறதாவென்று.ம்.... என்றேன்...சரிதான் மற்றுமொரு இரவில் பரப்பிய வேப்பம்பூப் படுக்கையில் பூக்களோடு என்னையும் சேர்த்துக்கொண்டே இப்போதும் பிடிக்கிறதாவெனக் கேட்க...அப்போதும் முழித்தேன் அள்ளியெடுத்து அணைத்தபடி "கள்ளி என்னையும்தான் கேட்டேனடி..." என்றீர்கள்.பூக்களோடு உங்களையும் பிடிக்குமென்று இன்றுவரை சொல்லவேயில்லை நான்!!!
ஹேமா(சுவிஸ்)
Tweet | ||||
54 comments:
//"நித்தமும் காதோரம் சுகம் கேட்டாலும் கடிதம் என்பதின் சடங்கு சுகம் கேட்பது"//
//"உங்களின் ஆசைகள் பற்றிக் கதைத்தால் வாதங்கள் பிடிவாதங்களுக்குள் திணறும்.வேண்டாம்"//
//"பூக்களோடு உங்களையும் பிடிக்குமென்று இன்றுவரை சொல்லவேயில்லை நான்!!!"//
ரசித்த வரிகள். அருமை.
அவ்வ்வ்வ்
அடுத்த பதிவா ..கவிதை இல்லையா !!!??? ரைட்டு படிச்சிட்டு வரேன்
lovely...
ஹேமா,
கற்பனையில் ”காதல் கவிதைகள்” நிறைய எழுதுவாய் என்று அறிந்திருந்தேன்.
காதல் கடிதங்களும் அமர்க்களமாய் புனைந்திருக்கிறாய்.
வாழ்த்துக்கள்.
“பூக்கள் பூக்கும் தருணம்...” பாடல் சொக்க வைக்கிறது.
ஹேமா,
ஒரு சந்தேகம். கருப்பியா நீங்க? (கடித்தத்தின் தலைப்புல அப்பிடித்தானே இருக்கு!)
நல்ல இருக்குங்கோ.... நான் ரொம்ப சின்ன பையன் ... அதனால காதல் பத்தி எல்லாம் அவ்வளவா தெரியாது. இருந்தாலும் வார்த்தைகள் உபயோகம் நல்ல இருக்கு
உங்கள் தளத்தில் எழுத்துக்கள் குறைந்தபட்சம் வெள்ளை நிறத்தில் இருக்கப் பாருங்க.
கற்பனை, காதல், கவிதை நன்றாக இருந்தது ஹேமா. ஜோதிஜி சொல்வது சரி ஹேமா. சிறிய கவிதைக்கு இந்த டெம்ப்ளேட், வாசிக்க கடினமாக இருக்காது. பெரிய இடுகைக்கு கண்களை உறுத்தும். வாசிப்பது கடினமாக இருக்கும்.
கடிதம் நிறைய காதல் பேசிற்று ஹேமா..பல வரிகள் காதலோடு கம்பீரமாய்..
//என் தோள் தொட்டணைத்த என் வீரனுக்கு.சுகம் சுகம்தானே.நித்தமும் காதோரம் சுகம் கேட்டாலும் கடிதம் என்பதின் சடங்கு சுகம் கேட்பது.
ஈழம் என் முதல் காதலன்.நீங்கள் என் கணவர்.உங்களை வணங்குகிறேன்.ஈழத்தைப் பூஜிக்கிறேன்.உயிர் உங்களிடம்.மூச்சு தாய்மண்ணிடம்//
இந்த வரிகள் உணர்வை பேசுகிறது.
பின்னொரு நாளில்,இன்னுமொன்றும் கிறக்கம் காதலை மெல்லிசையாய் வாசித்து இருக்கீங்க.. வாழ்த்துக்கள் ஹேமா..
அற்புதமாக கடிதம் வரைந்து உங்கள் ஆசைகளை சொல்லியிருக்கிறீர்கள் கனவுகள் , கற்பனைகள் ஒரு வலியை பாடிச் செல்கிறது கடைசி வரை சொல்லவே இல்லை பூக்களையும் உன்னையும் பிடிக்கும் என்ற இடத்தில் கரைந்து போகிறது மனசு.
நல்லபாடல் இனைப்பு. எழுத்து வேற வர்ணம் பிடிக்காதா கண்ணை உறுத்துகிறது வீரனுக்கு கடிதம் .
வாழ்த்துக்கள் தோழி !
இத்தனை காலத்தில் தோழியாய் காதலியாய் மனைவியாய்.... எத்தனை பதவிகளை அடைந்து விட்டாய்!நினைத்துப் பார்த்தால் வியப்பாக இருக்கிறது.நாம் எப்படி அறிமுகமானோம் என்பது நினைவில் இல்லை.உனக்கு நினைவிருக்கிறதா? இருந்தால் பகிர்ந்துக்கொள்.//
நெஞ்சில் மாறாத வரிகள்....!!!
அருமை அருமை....!!!!
ஹேமா காதலின் கருப்பிக்கு ...சுகம்.
அன்பின் ஜோதிஜி வேண்டுகோளை செவிமடுக்கலாமா...
super!
பல வரிகள் காதலோடு கம்பீரமாய்..
உங்கள் கடிதமும் கவிதையாய்... நிறைய முறை ரசித்து ரசித்து படித்தேன் உங்கள் வரிகளை...
கவிதையில் மட்டுமல்ல கடிதத்திலும் நீங்கள் புலிதான்.
அருமையான கடிதம்
அப்புறம் ஹேமா எனக்கு நல்லா ஞாபகமிறுக்கு :P
மிளிரத்துவங்கியாயிற்று நட்சத்திரம்
பூக்களோடு உங்களையும் பிடிக்குமென்று இன்றுவரை சொல்லவேயில்லை நான்!!!
Nice..
உங்கள் கற்பனை திறம் அபாரம் தோழி.... கடிதமும் கவியாக பேசுகிறது .......
நல்லாய் இருக்கு... வரிகளில் கவிதை நயம்...
கவிதை பேசும் வார்த்தைகள் ..
கடிதம் இல்லை இது காதல் ரசம் ...
கவிதைக்கென்று தனிமொழியொன்று இருக்கிறது உங்கள் வசம்.
படித்துக் கிறுகிறுத்துப்போனேன் ஹேமா.
அழகான தமிழ்.வளமான கற்பனை.
உங்களின் எல்லா இடுகை களுக்கும் வந்து நாளும் போகிறேன் இருந்தாலும் பின்னுட்டம் இடவில்லை அப்படிப்பட்ட சூழல் உங்களின் சிந்தனை கற்பனை உண்மையில் வியக்க வைக்கிறது தேர்ந்த எழுத்தாளர் போல ம் ... தெடருங்கள் பாராட்டுகள் நன்றிகள்....
//சில நினைவுகளை மீட்டெடுத்து உங்கள் காதில் மீட்டவா இன்று !//
அற்புதம் !!!
என் கண்ணுக்குள் தந்தம் கடைந்த அற்புத உருவம் மயக்கமாய்.அன்றைக்குப் பிறகு இன்னும் சுயமாய் நானில்லை.///
கரை கடக்க அடிக்கும் கடல்லையாய் மனம் கடக்கத் துடிக்கும் காதல் நினைவலைகள் அற்புதமாய் வடித்த கவிதைக்குப் பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
கவித்துவமான காதல் நினைவுகளும், முத்த நிகழ்வுகளுமா!!!!
இந்த பூக்கள் பூக்கும் தருணம்.... பாடல் கேட்க இனிமையானது.
ஹேமா,காதலர் எழுதியதைவிட...
காதலி{நீங்க..ஹ..ஹ..ஹகககக...}
எழுதியதில்.. காதல்ரசம் சொட்டுகிறது
என்ன {நிஐந்தானே! நிழலில்லையே!}
எனக்கும் கொஞ்சம் சொல்லிக் கொடுத்தால்..,.
நன்றி மறவாமல் இருப்பேன் அல்லவா!
எப்போது பயிற்சியை ஆரம்பிக்கலாம்?
பதிவு அருமை. நட்சத்திர வாழ்த்துகள் ஹேமா.
உங்களையும் பிடிக்குமென்று இன்றுவரை
சொல்லவேயில்லை நான்!!!\\\\\
நான் சொல்லட்டுமா..? சம்மதம் கேட்கட்டுமா?
ஐய்ய்ய்யயோ வேண்டாம் ஹேமா நான் தூது
போக...அப்புறம் மின்சாரக் கனவு சினிமாமாதிரி
மாறினால்...............
இவ்வளவெல்லாம் எழுதத் தெரியுதல்லவா!
அப்புறம் அந்த ஒருசொல் சொல்லத்தெரியாமல்...
இவ்வளவு திண்டாட்டம் எதற்கு?
ஹேமா!இது இலக்கிய புனைவா?தேதிக்குறிப்பு பார்த்தா அப்படி தோணலையே!
ஹேமா,
ஒரு சந்தேகம். கருப்பியா நீங்க?
(கடித்தத்தின் தலைப்புல
அப்பிடித்தானே இருக்கு\\\\\
ஹேமா உஷார்.......
அவருக்கு ஜோடிப்பொருத்தம்
பார்கிறார் போலும்........
“பூக்கள் பூக்கும் தருணம்...” பாடலை...
என் கைத்தொலைபேசி இப்பாடலைப் பாடித்தான்
என்னை அழைக்கிறது எனக்கும் ரொம்பப் பிடித்தபாடல்
நானாகப் போடவில்லை அது ஒரு கதை.......
பிடித்தவர்கள் மூலமாய்...............
ஹேமா, காதலின் கறுப்பிக்கு...."
இவ்வளவு வெளளை மனதை வைத்துப் பின்னிவிட்டு..கொளளை கொளள வைத்துவிட்டாய்.. அருமை
நட்சத்திர வாழ்த்துகள் ஹேமா.மகிழ்ச்சியாய் இருக்கிறது உங்கட எழுத்தை வாசிக்கும் போது.
வித்தியாசமான எழுத்து. பல வரிகளை ரசித்துப் படித்தேன்.
ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப நாள் கழிச்சு வர்றேன் ஹேமா... வந்து படித்ததும் கலக்கல் பதிவுதான். மிக ரசித்தேன்...
நட்சத்திர வாழ்த்துக்கள்....!
star vaalththukkal. arumaiyaaka irukkirathu. thotaralaam kaathal kadithangkalai...
இரண்டு விஷயம் நல்லா புரியுது,
வாக்கியத்தை ஒடித்து ஒடித்து எழுதுவது மட்டும் கவிதை அல்ல....
பத்தி பத்தியா எழுதுறது வெறும் கட்டுறையும் அல்ல...
உணர்வு பூர்வமான உங்களது வார்த்தை ஒவ்வொன்றும் கவிதயாய் - அழகு.
என்ன ஒரு சுகம்! என்ன ஒரு சித்தரிப்பு! இளமையும் இனிமையும் ததும்பும் எழுத்து நடை! வளரட்டும் உங்கள் எழுத்துக்கள். வளம் பெறும் நந்தமிழ்!
கண்ணீரை வரவழைக்கும் காதல் கடிதம்.
சபாஷ் ஹேமா,
உங்களால் உரை நடையிலும், கவி நடையிலும் ஒருங்கு சேரப் பயணிக்க முடியும் என்பதற்குச் சாட்சியாய் மீண்டும் ஒரு கவி கலந்த பதிவினைத் தந்திருக்கிறீங்க,
வீரனின் கடிதத்தில் அறிவுரை மட்டும் தான் நிரம்பி வழிகிறது, ஆனால் கருப்பியின் கடிதத்திலோ காதல் ததும்பி வழிகிறது,
//உண்மையில் ஈழத்தை நீ நேசிப்பவள் என்றால் மழலைகளைப் பெற்றெடு.எனக்கும் கொடு.அப்போதுதான் ஈழத்துக்காக நீ செய்ய விரும்பும் தியாகம் நிறைவேறும்.//
உண்மையில் இந் நிலமையினை எம் தமிழர்கள் இற்றைக்குப் பல ஆண்டுகளுக்கு முன்பாக உணர்ந்தால் நாம் எப்போதே பெரும்பான்மையாகிருப்போமே. தமிழன் எப்போதுமே பட்ட பின்னர் தான் புத்தி தெளிபவன் என்பதற்கு எடுத்துக்காட்டாக இவ் வரிகளும் அமைந்து கொள்கின்றன.
//
ஒற்றை விளக்கின் திரிதூண்ட நான் குனிய என் முகத்தடியில் திரண்டு கருத்த வைரமென உங்கள் பாதம் பூமி நிரப்ப நிமிர்ந்த என் கண்ணுக்குள் தந்தம் கடைந்த அற்புத உருவம் மயக்கமாய்.அன்றைக்குப் பிறகு இன்னும் சுயமாய் நானில்லை !//
இவ் வரிகள் பற்றி இங்கே விளக்கமளித்தல் முறையல்ல என்பதனால் விட்டு விலகுகிறேன்.
ஹி..ஹி...
//இன்றிலிருந்து மஞ்சள் மாதுளம் பூக்களை விரும்பப்போவதில்லை.என் உடல் நனைக்குமளவிற்கு பூக்களைப் பறித்தால் பழங்களை அழித்த பாவியாகிவிடுவேன்//
ஈழத்துப் படைப்பாளிகளின் கவிதைக்களுள் மீண்டும் ஒரு ஆழியாள், சிவரமணி முதலியோரின் கவிதைகளினை வெல்லக் கூடிய திறமை மிகு கவிதைகளைத் தர உங்கள் கற்பனா சக்தியாலும் முடியும் என்பதற்குச் சான்றாதாரமாக இப் பதிவினைத் தந்திருக்கிறீங்க.
காதலின் கருப்பிக்கு:
தாய் மண்ணின் மீதான பாசம் வேண்டிய உள்ளத்தின் உணர்வலைகளோடு, காதல் ததும்பும் இன்ப நிலையினையும் வெளிப்படுத்தி நிற்கிறது.
http://blogintamil.blogspot.com/2011/06/blog-post_22.html
தங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன். பார்த்து கருத்துக்களை தெரிவித்தால் மகிழ்ச்சி. நன்றி.
கடித இலக்கியத்தின் உச்சம், காதல் கொண்டவளின் நினைவுகளின் சொச்சம்.. செம கலக்கல் ஹேமா..
வரிகள் காதலோடு கம்பீரமாய்...
அருமை.
அன்பு சகோதரிக்கு
நட்சத்திர வார வாழ்த்துக்கள்
தங்கள் எழுத்து மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
அழகான அசத்தல் கற்பனை வளம் உங்களுக்கு ,
அழகியல் பதிவு
வாழ்த்துகள் ஹேமா.......மிகவும் ரசித்தேன் தங்களின் கவிதையை! வல்லமை இதழுக்கு தங்களின் கவிதையை அனுப்பலாமே தோழி.
www.vallamai.com
vallamaieditor@gmail.com
இவண்
வல்லமை எடிட்டர்.
மிகவும் ரசித்தேன் ஹேமா. மயக்கம் தந்தது பல வரிகள். :)
ம்ம்ம்.... சரிங்க.... :)
காதலின் தீபம் ஒன்று ஏற்றினாலே என் நெஞ்சில்.... (நமக்கு பிடிச்ச பாட்டுங்கோ)
பதிவின் நெடி..
காத்தரமாய் உள்இறங்குகிறது ... பிரிவின் துயர்...
வாழ்வின் மீட்டெடுப்பு ----
அதன் நினைவுகளில் ஒளிந்திருப்பதை இப்பதிவு பேசுகிறது...
சரியா தோழி :)
அருமையான கவிதை.
Post a Comment