உணர்வுகளைத் தொலைத்த கனம்
சாணைபிடிக்கா நகம்
திணறும் அழகு
உதறி உதறி ஆடை விலக்கி
நடையோ நளினம்
இலந்தமரக்குயிலுக்கு
எதிர்க்குரல் விடும் குயிலா.
தூக்கிய ஒற்றைப்பாவாடை
கிணற்றுக் கட்டில்
உள்தொங்கிய கால்கள்
பறக்கும் முடி
நைந்துவிட்ட றவுக்கை
குளிக்காத தேகம்
அவளே இளவரசி.
பரிகசிக்கும் பலர்
பாவப்படும் சிலர்
காற்றுக்கும் காமப்பசி
தூக்கிப் பறக்கும் ஆடை
தன்னை மறந்த குயிலா
குயிலுக்குக் குரல் கொடுத்தபடி!!!
ஹேமா(சுவிஸ்)
Tweet | ||||
51 comments:
அசத்தல்!!
பரிகசிக்கும் பலர்
பாவப்படும் சிலர்
காற்றுக்கும் காமப்பசி
தூக்கிப் பறக்கும் ஆடை
தன்னை மறந்த குயிலா
குயிலுக்குக் குரல் கொடுத்தபடி!!!////
மிகவும் அற்புதமான வரிகள்..
மிகவும் ரசித்தேன் உங்களின் கவிதையை.. நன்றி..
எப்படி சொல்ல தெரியல ஹேமா... !? குயிலா என்னை மிக கவர்ந்துவிட்டாள் .
சகோ, இந்தக் கவிதையில் காலத்தின் கோலத்தால் சிதைந்து போன ஒரு பெண்ணின் வாழ்வினைப் படம் பிடித்துக் காட்டியுள்ளீர்கள். விரிவான பின்னூட்டங்களுடன் இரவு வருகிறேன்.
குயிலா இளவரசியேதான்.
//காற்றுக்கும் காமப்பசி
தூக்கிப் பறக்கும் ஆடை//
ஹேமா,
அட போட வைக்கும் கற்பனை வரிகள்.
குயிலா = மகாராணி
//பரிகசிக்கும் பலர்
பாவப்படும் சிலர்//
நிழல்களிலே வாழப் பழகியவர்களுக்குத் தெரியப் படுத்தும் செய்தி இது..
நன்று கவியரசி...
கஷ்டப்பட்டு ஒரு மாதிரி விளங்கிகொண்டன், நினச்சு நினச்சு பாக்க கனக்க விளக்கம் வருகுது
நீங்க வர வர மோசம் இப்படியா மூலைக்கு வேலை கொடுக்கிறது
மிகவும் ஆழமான அற்புதமான வரிகள் ........
//சத்ரியன் said...
//காற்றுக்கும் காமப்பசி
தூக்கிப் பறக்கும் ஆடை//
ஹேமா,
அட போட வைக்கும் கற்பனை வரிகள்.
//
அதேதான்...
இசைக்குயில் இளவரசி
பரிகசிக்கும் பலர்
பாவப்படும் சிலர்
காற்றுக்கும் காமப்பசி
தூக்கிப் பறக்கும் ஆடை
தன்னை மறந்த குயிலா
குயிலுக்குக் குரல் கொடுத்தபடி!!!///
கலக்கல் கலக்கல் கலக்கல் கலக்கல்....!!!!!
//காற்றுக்கும் காமப்பசி
தூக்கிப் பறக்கும் ஆடை//
ஆகா!அருமையான கற்பனை!
பல அர்த்தங்கள் கூறுகிறது குயிலா காற்றின் காமப்பசிக்கு தூக்கிப் பறக்கும் ஆடை ஐரோப்பிய நிலையோ என நினைத்தேன் நீங்கள் கவுத்துப்போட்டீர்கள்
தன் வாழ்க்கையே வறண்ட நிலமாக மாறிவிட்டதை நினைத்து , தன் நிலை மறந்து விட்டால்.
ஹேமா நலமா? ரொம்ப நாளைக்கு பிறகு வரேன்...
கவிதை என்ன சொல்ல..வரிகளில் நிற்கிறேன்..
களைத்த மனதில் தொலைத்த கனம் திணறும் அழகு பரிகசிக்க சிலர், பாவப்பட சிலர், காற்றுக்கும் காமப் பசி....வார்த்தைகளில் கவர்கிறீர்கள்..
கரு எதுவாக இருந்தாலும் குயிலாவின் முதல் பத்தி வர்ணனை கதாநாயகி இந்த கவிதை நாயகி.. நைஸ் ஒன் ஹேமா....
புரியல சகோதரி!மீண்டும் வாசிக்கிறேன்
கவலையோடு பெருமூச்செரிகிறேன் ஹேமா...
இலந்தமரக்குயிலுக்கு
எதிர்க்குரல் விடும் குயிலா.\\\\\
ஹேமா யாருடா அது?
உங்களுக்குப் போட்டியாய்......
விடவேண்டாம் .........
// பரிகசிக்கும் பலர்
பாவப்படும் சிலர்
காற்றுக்கும் காமப்பசி
தூக்கிப் பறக்கும் ஆடை
தன்னை மறந்த குயிலா
குயிலுக்குக் குரல் கொடுத்தபடி!!!//
நல்ல ஆக்கம் பாராட்டுகள் ஆனால் ஒன்று இலேசாக புரிகிறது யாரையோ சாடுகிறீர்
பரிகசிக்கும் பலர்
பாவப்படும் சிலர்\\\\\
மனதைத் திடமாய்,தெளிவாய்
வைத்திருந்தால்...
இந்த மனநோய் வந்திருக்குமா?
தன்னை மறந்த குயிலா
குயிலுக்குக் குரல் கொடுத்தபடி!!!\\\\\
கூப்புட்டுக் கூவுவது
அக்குயிலுக்கு கேட்குமா..!?
எதிர்பாட்டுப்பாட!
வருமா?...!!
அட...யார்தான் அந்தக் குயில்?
குயிலை வைத்தே கூவும் கவி
“கோகிலத்தின்”உச்சக்கட்டச்
சோகத்தை படம் பிடிக்கும் இக்
கீழுள்ளவரிகள் போதும்.
பிசறிக் களைத்த மனம்
உணர்வுகளைத் தொலைத்த கனம்\\\
உங்களின் ஒவ்வொரு பதிவும் பாராட்டும் படியாகவும் அதேசமயம் புரியாத செய்தியாகவும் தெரிகிறது ஒரு நல்ல ஆக்கம் மக்களுக்கான ஆக்கமாக இருக்கவேண்டும் என என்னுகிறவள் நான் அது புரியும் மொழியில் இருக்கவேண்டும் மறைபொருளாக இருந்தால் எல்லோருக்கும் புரிவதில்லை வேண்டுமானால் புரியாமல் தலையாடலாம் .அதனால் யாருக்கும் ஒன்றும் ஆகிவிட போவதில்லை உங்களைபோல எல்லோருக்கும் எல்லோரின் மனசும் புண்படாமல் விமர்சனம் எழுதும் காலை எனக்கு வராதுஅக்கா.
அழகான அதே நேரம் உணர்வின் வலியுடன் ஒரு சொற்சித்திரம்.
ஹேமா.. கவிதை ஓக்கே..
சாணை பிடிக்காத நகம் என்றால் என்ன? புரியல..
பரிகசிக்கும் பலர், பாவப்படும் சிலர்... இது தான் வாழ்வோ? நம்மை இயல்பென்று கொள்வது நாம் மட்டும் தானா? சுவையான வரிகள்.
பிசறிக் களைத்த மனம்
உணர்வுகளைத் தொலைத்த கனம்
சாணைபிடிக்கா நகம்
திணறும் அழகு
உதறி உதறி ஆடை விலக்கி
நடையோ நளினம்
இலந்தமரக்குயிலுக்கு
எதிர்க்குரல் விடும் குயிலா.//
பல உணர்வுகளைத் தனக்குள் தானே வெளிக்காட்டியதால், பேச்சுத் துணைக்கு ஆட்களின்றி தனிமையில் பேசிய காரணத்தால் உணர்வுகளைத் தொலைத்து விட்ட பெண்ணாக இங்கே குயிலா.
தொடர்ந்து படிக்கையில் கவிதையில்..
சாணை பிடிக்கா நகம், வெட்டப்படாமல் கூராக இருக்கும் நகம்,
திணறும் அழகு: இது தானே ஆண்கள் பார்வைக்கு முந்திரிக் கனி போலத் தெரிவது;-))
நடக்கையில் சித்த சுவாதீனமற்றவளாக இருக்கும் ஒரு பெண் எப்படி நடப்பாள் என்பதை ஒரு கணம் நினைத்துப் பாருங்கள்,
அதே நிலையினை இங்கே குயிலா கொண்டிருக்கிறாள். ஆடை விலகுவது தெரியாமல் நடக்கும் நிலை.
ஆனாலும் அவள் குரல் என்னவோ குயிலின் குரல் என, கவிதையில் உணர்வால் சித்தசுவாதீனமற்ற பெண்ணினை, உருவகத்தால் கீழறக்கக் கூடாது என கவிதாயினி இங்கே சதி செய்துள்ளார்.
அதன் வெளிப்பாடு தான் குயிலுக்கே எதிர்ப்பாட்டுப் பாடும் பெண்ணின் குரல்.
ஆக இவற்றின் அடிப்படையில் முதல் பாடலில் அங்க வர்ணணை, உடை வர்ணனை கலந்த தோற்ற வர்ணனை இடம் பெற்றுள்ளது.
தூக்கிய ஒற்றைப்பாவாடை
கிணற்றுக் கட்டில்
உள்தொங்கிய கால்கள்
பறக்கும் முடி
நைந்துவிட்ட றவுக்கை
குளிக்காத தேகம்
அவளே இளவரசி//
மேக் அப் இல்லாப் பெண்களிடம் இருக்கும் அழகு தான் நிஜ அழகு என்பார்கள். அதனைத் தான் கவிதாயினியும், இவ் இடத்தில் இவ் வரிகளைச் சுட்டுவதன் ஊடாக விளக்கியுள்ளார்.
குளிக்கா விட்டால் மணக்காதோ;-))
பரிகசிக்கும் பலர்
பாவப்படும் சிலர்
காற்றுக்கும் காமப்பசி
தூக்கிப் பறக்கும் ஆடை
தன்னை மறந்த குயிலா
குயிலுக்குக் குரல் கொடுத்தபடி!!!//
ஜடமாகிப் போன உணர்வுகளோடு நடக்கும், சித்தசுவாதீனமற்ற பெண்ணினை இங்கே காட்சிப் படுத்தி அவள் மீதான சமூகப் பார்வையினை உங்கள் கவிதையில் அழகுற எடுத்தியம்பியுள்ளீர்கள்.
காற்றுக்கும் காமப்பசி//
இவ் வரிகளுக்கு இணையாக....
எதனையும் சொல்ல இயலவில்லை. உணர்வுகளுக்குள் ஒன்றிக்கும் படி கவி தொடுத்திருக்கிறீர்கள்.
//பிசிறி களைத்த மனம், உணர்வுகளை தொலைத்த கனம்//
அருமை ஹேமா. மனதை பிசைகிறது வரிகள்.
//நம்மை இயல்பென்று கொள்வது நாம் மட்டும் தானா?// நிச்சயமாய் இதுதான் வாழ்கை. மிக அழகாக சொல்லி விட்டீர்கள் அப்பாதுரை.
"நிர்ப்பந்திக்கப்பட்டவைகள்."...
இலந்தமரக்குயிலுக்கு
எதிர்க்குரல் விடும் குயிலா.//
தன்னை மறந்த குயிலா
குயிலுக்குக் குரல் கொடுத்தபடி!!!
நிர்பந்திக்கப்பட்ட கனமான உணர்வுக் கவிதை..
மனத்தைக் கனக்கவைக்கிறாள் மனம்பிரண்ட குயில்.
நல்லா இருக்குது உங்கள் கற்பனை.
மனதைப் பிசையும் வரிகள்.,குயிலாவின் நிலையை கண்கள் கசியும் படி சொல்லி இருக்கிறீர்கள்.
அவள் உலகில் அவளே இளவரசி, அவள் பார்வையில் நாமெல்லாம் பைத்தியக்காரர்கள்! அவளைப் பார்த்ததால் சாடலாயொரு கவிதை ஹேமாவின் உள்ளத்திலிருந்து! மனம் கனக்கிறது, ஹேமா.
ஜீ...முதல் வருகைக்கு மிக்க நன்றி.குயிலாவின் கூவல் கேட்டிச்சோ !
கருன்...வாங்க.நன்றி !
கௌசி...குயிலா யாரைத்தான் கவரவில்லை.கள்ளி அவள் !
ராமலஷ்மி அக்கா...
அன்புக்கு நன்றி !
சத்ரியா...நீங்க ரசிக்கும் கவிஞர்தான் !
வசந்து...மகாராணி...
ஆனாலும் பாவம் !
கொல்லான்...வாங்கோ.அழகான பட்டம் எனக்கும் தந்து ஊக்கம் தரும் உங்களுக்கு நன்றி !
யாதவக் கிழவரே...வயசு போட்டுது உங்களுக்கு.அதான் விளங்கேல்ல.இந்த வரிகள் விளங்காட்டி !
பாலா...நன்றி நன்றி !
சிசு...எனக்கும் பிடித்த வரியைக் கை காட்டி சந்தோஷப்படுத்தியிருக்கிறீர்கள் !
கலாநேசன்...எங்கே ஆளை அடிக்கடி காணோமே !
மனோ...கலக்கறீங்க நீங்கதான்.
அந்தப் பேய் வந்திச்சா மனோ !
சென்னை பித்தன்...நன்றி ஐயா !
நேசன்...இது எங்கட ஊர் குயிலா பாவாடை கட்டினபடி.ஆசைதான் உங்களுக்கும் !
தூயவன்...நிலை மறந்தால் அதுவும் தன்னையே மறக்கும் ஒரு பெண்.கஸ்டம் !
வினோ...நான் நல்ல சுகம்.யாழ் குட்டியோட நிறையப் பொழுதுகள் போகுதாக்கும்.அதான் பதிவுகளைக் காணோம்.நீங்களும் சுகம்தானே !
ஸ்ரீராம்...தொடர்ந்து தரும் ஊக்கம் தரும் வார்த்தைகள்.நன்றி எங்கள் புளொக்கிற்கு !
தமிழரசி...அன்புக்கு நன்றி தோழி !
சிவா...என்ன புரியவில்லை.மனம் குழம்பிய ஒரு பருவப் பெண்ணின் நிலை.நிரூ அழகாகச் சொல்லியிருக்கிறார்.பாருங்கோ !
தவறு...ம்ம்ம் சில சோகங்களை என்ன செய்யலாம்.எழுதித் தொலைப்போம் !
கலா...குயிலின் குரல் குயிலுக்குக் கேக்காமல் போகுமா.ஆனால் எதிர்க்குரல் கொடுக்காது.ஏனென்றால் அதுக்கும் விளங்காது !
தயா...ம்ம்ம் என்னையும்கூட !
மாலதி...இந்தக் கவிதை உங்களுக்குப் புரியாமல் இருக்காது நிச்சயமாய்.சில கவிதைகள் எனக்கு மட்டுமே புரிந்த இரகசியம்.ஆனாலும் அவரவருக்கேற்றபடி பொருள் கொள்ளும்.கவிதை அப்படி இருப்பதுதானாம் அழகு.நான் ஒரு பொருளில் எழுத பின்னூடங்களில் கருத்து மாறுபட்டிருக்கும்.அதுவும் சரியாகவே பொருந்தும்.இப்ப சொல்லுங்களேன் !
ரிஷபன்...நீங்கள் சொல்வது கதையில்.நான் !
சிபி...சாணை பிடிக்காத நகம் என்றால் வெட்டி நகப்பூச்சுப்பூசி அழகு படுத்தாத நகத்தை அப்பிடிச் சொல்லிப் பார்த்தேன் !
அப்பாஜி...உண்மைதான் எம்
இயல்பு அடுத்தவர்களுக்கு பைத்தியக்காரத்தனம் !
நிரூ...கை கொடுங்கள் காற்றலையில்.என் மனதை அப்பிடியே படம் பிடித்து எழுதிய உங்களுக்கு என் அன்பின் நன்றியும் பாராட்டும்.ஆனாலும் உங்கட பாட்டுப்போடியில என்னைச் சேர்க்கேல்ல.உங்களோட கோவம் !
மீனு...சுகமா தோழி.அப்பாஜி சொன்னது சரிதானே !
இராஜேஸ்வரி...சிறுகதை வாசித்தீர்களா.நன்றி.
மாதேவி...பதிவு போடுங்கோ.வருகைக்கு நன்றி !
சித்தாரா...இது கற்பனை இல்லை !
சிவகுமாரன்...சில உண்மைகள் இப்படித்தான் !
கீதா...சரியாகச் சொன்னீர்கள் நாம்தான் பைத்தியங்கள் அவள் கண்ணில் !
கண் முன்னே கொண்டு வரப்பட்ட காட்சி ...
அழகான வரிகளில் ஒரு அசத்தல் கவிதை
நல்ல படைப்பு... கவர்ந்துவிட்டாள் குயிலா...
காற்றுக்கும் காமப்பசி
இதுவரை எங்கும் படித்திரா கற்பனை
வாழ்த்துக்கள்
விஜய்
இன்னும் மெனக்கெடலாம்
அப்பப்பா அசத்திட்டிங்க......
நல்லாயிருக்குங்க......
excellent words...Super..write more...
http://zenguna.blogspot.coom
ஜமால்...வாங்கோ.சுகம்தானே.
காணவே முடியிறதில்ல இப்பல்லாம் !
தங்கமணி...நன்றி நன்றி அன்புக்கு !
விஜய்...அழகான் வரியா இருந்தாலும் தப்பாகுமோன்னுகூட நினைச்சேன்.ஆனாலும் அந்த வரியை ரசிச்சிருக்கிறீங்க.நீங்களும் மத்தவங்களும்கூட !
நேசன்...உங்க கருத்தை மிகவும் வரவேற்கிறேன்.கேட்டுகிறேன்.
கவனிக்கிறேன் !
விடிவெள்ளி...செண்பகம் வந்திட்டீங்களே திரும்பவும்.சந்தோஷம் !
குணசேகரன்...வாங்க.அடிக்கடி வாங்க சந்திக்கலாம் !
Very Nice... Enjoyed your work. Bit busy as I was away for a month for medical emergency. Let me come back again to read more.
Thanks & Warm regards!
மிக்க சுகம் ஹேமா
குட்டி நிலாவுக்கு எங்கள் அன்பை சொல்லவும்
குயிலா போன்றவர்களுக்கு கவிதையை தாண்டி சமர்ப்பிக்க ஏதாவது விழைய வேண்டுமென்ற உணர்வை வாசிப்பவர்கள் மனதில் துளிர்க்கச் செய்த அழகிய கவிதை தோழி.பரிகசிக்கவும், தவறாகப் பயன்படுத்திக் கொள்ளவும், உதாசீனப்படுத்தவும் பலருண்டு. உறவினும் மேலான பரிவுடன் அவள் மேன்மையை உணர்த்தி நிற்கிறது உங்கள் கவிதை.
பரிகசிக்கும் பலர்
பாவப்படும் சிலர்
காற்றுக்கும் காமப்பசி
தூக்கிப் பறக்கும் ஆடை
தன்னை மறந்த குயிலா
குயிலுக்குக் குரல் கொடுத்தபடி
உள்ளதை அள்ளிச் கொள்ளும்
அருமை யான வரிகள்
காற்றுக்கும் காமப்பசி என்பதில்
வருகின்ற உம்மையால் இன்னும்
பல பொருளை தாங்கி நிற்பது
பாராட்டுக்குரியது
புலவர் சா இராமாநுசம்
Post a Comment