நேரமுமில்லை
விருப்பமும் இல்லை
அவை அவைகளாகவே
இருக்கட்டும்
என்னைப்போலவே.
கடலின் ஆழத்தை
அதன் விரிவுகளை
அலையின் இரகசியத்தை
கரையோர மணலின்
தணிவுகளையும் கூட.
நதி எங்கு தொடங்கி
எங்கு வருகிறது
என்பதற்கான புதிர்களின்
தொடக்கங்களையும்
முடிவுகளையும்
கண்டறியத் தேடியதில்லை
என்றாலும் கண்முன்
நதியும் கடலும்
நிதர்சனமாய்.
இன்றைய தேடுதல்
புதிதாய்...அதிசயமாய்
இல்லை...இல்லை
எனக்குள்ளேயே சந்தேகமாயும்.
பிறை நிலவுக்குள் இருளையே
சிறைவைத்த உனக்கு
ஒரு பெயர்
தேடிக் களைத்து
இன்று...
காற்றுக்கு லஞ்சமாய்
முத்தம் கொடுத்தும்
பனியின் கூந்தல் தடவி
சிக்கெடுத்தும்
வானின் ஊத்தை தோய்த்தும்
கேட்டுப் பார்த்தேன்.
எப்படி இருப்பாய் நீ...
என்றல்லவா கேட்கிறார்கள்
எப்படிச் சொல்ல நான்.
கவிதை போல...
காலையின் பனி போல...
தூங்கத் தோள் தரும்
காதலன் போல...
தாலாட்டும் அன்னை போல...
காலை எழுப்பும் பூபாளம் போல...
என் தனிமை போக்கும் இசை போல...
எதைச் சொல்ல நான்!!!
ஹேமா(சுவிஸ்)
Tweet | ||||
69 comments:
கவிதை அசத்தலா இருக்கு ஹேமா...
அழகான மொழிநடை
துங்க தோல்தரும் காதலன்போல.வாழ்த்துக்கள்.
அட.. ஹேமா பிளாக்ல கூட ஃபிகரோட ஸ்டில்லு..? ஹா ஹா
>>காற்றுக்கு லஞ்சமாய்
முத்தம் கொடுத்தும்
பனியின் கூந்தல் தடவி
சிக்கெடுத்தும்
வானின் ஊத்தை தோய்த்தும்
கேட்டுப் பார்த்தேன்.
நல்ல கற்பனை. ஹேமா.. ஆனா வானின் ஊத்தை என்றால் என்ன?
>எதைச் சொல்ல நான்!!!
ஹா ஹா எதையும் சொல்ல வேணாம்.. புரிஞ்சிடுச்சு.. ஹிஹி
இப்பத்தான் பார்த்தேன்.. இண்ட்லில 159 போஸ்ட்க்கு 153 ஹிட் ஆகி இருக்கு.. அடேங்கப்பா.. 97% வெற்றி.. ஆனா எனக்கு 72% தான்.. ம் ம் வாழ்த்துக்கள்
கருப்பாக
சிவப்பாக
இரண்டுங்கலந்து.
சிந்திக்க தெரிந்தவராய்
அல்லது சிந்திக்கவே
தெரியாதவராக
எப்படி இருப்பார்...
அழகுள்ளவறாய்
இல்லை அழகே
இல்லாதவராக
சுயநலவாதியாக
அல்லது மக்கள்
நலன் கொண்டவராக
எப்படியேனும்
இருந்துவிட்டு
போகட்டுமே
என்
அக்காவை பாசத்தோடு
பார்த்து கொள்ளட்டுமே
தன்னோடு பேசும் சொற்கள் தரணிக்கே ஆகும் என எழுதுகின்ற பாங்கில்தான் பிரபஞ்சத்தில் தன்னையும் தன்னில் பிரபஞ்சத்தையும் காண்கிறாள் கவிதைப் பெண்
புதிர்கள், புதிர்களாகவே இருக்கிற வரை ஈர்ப்பு. மனதை கவர்ந்த கவிதை.
நல்லாருக்குடா ஹேமா!
அப்புறம், இந்த நேசன் பயலின் கமெண்ட்டும்.
அப்புறம், அப்புறம், அப்புறம், இந்த புகைப்படமும்.
'சொல்ல...வா அண்ணியிடம்?' என்று கேட்பாய். (ஹி..ஹி..வேண்டாம்)
\\கவிதை போல...
காலையின் பனி போல...
தூங்கத் தோள் தரும்
காதலன் போல...
தாலாட்டும் அன்னை போல...
காலை எழுப்பும் பூபாளம் போல...
என் தனிமை போக்கும் இசை போல...
எதைச் சொல்ல நான்!!! \\
அஸ்கு புஸ்கு..
எல்லம் சொல்லிட்டு
ஏதும் சொல்லலன்ன எப்பூடி?
கவிதை கலக்கல்.
புதிர்களை அவிழ்க்க
நேரமுமில்லை
விருப்பமும் இல்லை
அவை அவைகளாகவே
இருக்கட்டும்
என்னைப்போலவே.//
வணக்கம் சகோதரம், மனித வாழ்க்கையே ஒரு புதிராக இருக்கிறது, அதிலை நீங்கள் வேறை புதிர்களை அவிழ்க்க வெளிக்கிட்டால் பூமி தாங்காது...
வம்பை விலை கொடுத்து வாங்கிற எனும் முடிவோடை தான் வெளிக்கிட்டிருக்கீங்க.
கடலின் ஆழத்தை
அதன் விரிவுகளை
அலையின் இரகசியத்தை
கரையோர மணலின்
தணிவுகளையும் கூட.
நதி எங்கு தொடங்கி
எங்கு வருகிறது
என்பதற்கான புதிர்களின்
தொடக்கங்களையும்
முடிவுகளையும்
கண்டறியத் தேடியதில்லை
என்றாலும் கண்முன்
நதியும் கடலும்
நிதர்சனமாய். //
ம்... மனித மனங்களின் விசித்தரமான கண்களை இப் பதிவினூடாக காட்டியிருக்கிறீர்கள். ஒரு சில உள்ளங்கள் இத்தகைய ஆராய்ச்சிகளை வேண்டி நிற்பதுண்டு, இன்னும் சில மனங்கள் தங்கள் பாட்டில் இருந்து விடுவதுமுண்டு.
பிறை நிலவுக்குள் இருளையே
சிறைவைத்த உனக்கு
ஒரு பெயர்
தேடிக் களைத்து
இன்று...//
இந்த வர்ணனைகள் தான் இக் கவிதையின் ஹைலைட் வரிகள்..
அடடா என்ன ஒரு அருமையான கற்பனை நயம்.
//காற்றுக்கு லஞ்சமாய்
முத்தம் கொடுத்தும்//
ஆஹா.. இது தான் ஊதி விடும் பிரெஞ்சு முத்தமோ(French kiss).. பிரெஞ்சு முத்தத்தையும் அழகாக வர்ணித்திருக்கிறீர்கள்.
//பனியின் கூந்தல் தடவி
சிக்கெடுத்தும்
வானின் ஊத்தை தோய்த்தும்
கேட்டுப் பார்த்தேன்.
எப்படி இருப்பாய் நீ...
என்றல்லவா கேட்கிறார்கள்
எப்படிச் சொல்ல நான். //
அடி முடி அறிய முடியாத பொருளாக உங்களவரினையும் வர்ணித்திருக்கிறீர்கள். அவர் வார்த்தைகளுக்குள் அடங்காத வர்ண ஓவியம் என்று தான் நினைக்கிறேன். சரியா சகோதரம்?
கவிதை போல...
காலையின் பனி போல...
தூங்கத் தோள் தரும்
காதலன் போல...
தாலாட்டும் அன்னை போல...
காலை எழுப்பும் பூபாளம் போல...
என் தனிமை போக்கும் இசை போல...
எதைச் சொல்ல நான்!!!//
வாழ்வில் எப்போதும் கூட வரும் ஜீவனை வர்ணிக்க இதனை வேறு வார்த்தைகளை எங்கே தேட? எனும் வகையில் கவிதை அமைந்துள்ளது. சொல்லவா...... எதிர்பார்ப்புக்களைக் கிளறி விடும் வர்ணணைகளின் மொழிப் பிரவாகம்.
அட சூப்பரா இருக்குங்க.. அதுவும் அந்த உவமைகள் அள்ளுகிறது..
அருமையான கவிதை! சூப்பர்!
we are fine Hema, thanks for your regards.
Hope & Wish you and Nila are fine too.
[[பிறை நிலவுக்குள் இருளையே
சிறைவைத்த உனக்கு
ஒரு பெயர்
தேடிக் களைத்து
இன்று...
காற்றுக்கு லஞ்சமாய்
முத்தம் கொடுத்தும்
பனியின் கூந்தல் தடவி
சிக்கெடுத்தும்
வானின் ஊத்தை தோய்த்தும்
கேட்டுப் பார்த்தேன்.
எப்படி இருப்பாய் நீ...
என்றல்லவா கேட்கிறார்கள்
எப்படிச் சொல்ல நான். ]]
nice ...
கவிதையின் ரசனையில் லயித்தேன்
என் ஓட்டு"தனிமை போக்கும் இசை".
முடிச்சவிழ்தால்..முழுவதும்
கொட்டிவிடும்
பின்
அனுதாபம்,ஆதங்கமாய்
அடைமொழி ஒட்டி
“அடைய” ஆரவாரிக்கும்
ஆதனால்...
இன்னும் இறுக முடிந்துவிடு
முடிச்சாகவே இருக்கட்டும்!!
வானின் ஊத்தை என்றால் ......
ஊத்தை_அழுக்கு
நல்லா இருக்கு...
ஆழ்ந்த கருத்துக்கள்.
ஹேமா.. நல்லா இருக்கீங்களா.. நலம்னே நம்புறேன். ரொம்ப நாள் ஆச்சு இல்ல? கொஞ்சம் தனிப்பட்ட பிரச்சினைகள் காரணமா எதையும் வாசிக்கமாயே இருந்துட்டேன்.. ஆனா நிதர்சனம் என்பது இதுவும் கடந்து போகும் என்பதுதானே.. தெளிஞ்சு வந்தாச்சு.. இனிமேல் பழையபடி தொடருவோம்..:-)))
//கவிதை போல...
காலையின் பனி போல...
தூங்கத் தோள் தரும்
காதலன் போல...
தாலாட்டும் அன்னை போல...
காலை எழுப்பும் பூபாளம் போல...
என் தனிமை போக்கும் இசை போல...
எதைச் சொல்ல நான்!!! //
இதை விட அழகாய் நேர்த்தியாய் எப்படிச் சொல்ல எப்படி இருப்பார் என்று... ஹேமா உனக்கு நிகர் நீ தான்..கவிதையில் கடைசி இரண்டு பத்திகள் ஹை லைட்.... டச்சிங்..
ஹேமா, கவிதை அருமையா இருக்குப்பா...
\\பா.ராஜாராம் said...
அப்புறம், அப்புறம், அப்புறம், இந்த புகைப்படமும்\\
பாராண்ணா!
ஹேமா சொல்லாட்டியும் அண்ணிகிட்டே நான் சொல்றேன்.
கவிதை இன்னும் படிக்கவேயில்லை...
படத்துல இருப்பது குஷ்புவா:)
பொய் சொல்வானேன்!
வழக்கம் போல் மெய்யாலுமே புரியல:)
//தூங்கத் தோள் தரும்
காதலன் போல... /
வழக்கம்போலவே அருமை
தூங்குமூஞ்சி ஹேமா நீங்க
ஆறுதலுக்கு தோள் தரும்
காதலன் போல
ஹேமா, எதுக்கும் உப்புமடச்சந்தியில் சந்திக்கிறேன்.
உணர்ச்சிகளை கவிதை மூலமாய் நயமாய் படைக்கிறீங்க.ஹேமா.
கவிதை அழகு.
நேசமித்திரனின் வரிகள் மிக அருமை.
கவியரசி ஹேமா,
உணர்வுகளை வார்த்தைகளாக மட்டும் கொணராமல், அதை அனுபவிக்கும் நிலைக்கே கொண்டு செல்வது தான் உங்கள் கவிதையின் சிறப்பு.
அருமை ஹேமா. அருமை.
(எப்படி இப்படி கவிதை எழுதறதுன்னு எனக்கும் கொஞ்சம் சொல்லிக் கொடுங்களேன்)
உணர்வுகளை பரிமாற்றம் செய்வதுதான் நல்ல கவிதை...!
இந்த கவிதை அதை குறையில்லாமல் செய்திருக்கிறது.......கவிதையோடே பயணிக்கிறது மனது வாசித்து வெகுநேரம் ஆகியும்....!!!!
தென்றலாய்த்தாலாட்டுது கவிதை..
ஹாய் ஹேம்ஸ்...:)) நிலா பாப்பா எப்படி இருக்காள்?? உங்க கவிதை எல்லாம் இமயமலை ரேஞ்சு ஹேம்ஸ்...அதுவும் கடைசி பாரா சில்லு...ஜில்லு:))
@சி பி சார்...என்ன சார் இங்கயும் வந்து பிகரு படம் பத்தி தானா...:)))) இன்டிலி ஆராய்ச்சி பண்ணிட்டிங்களா...வெரி குட்...ஹ ஹ..ஹ்ஹா ஹ...
இன்னும் கொஞ்சம் எடிட் செய்யப்பட்டு இருந்தால் மிகபிரமாதமாக வந்திருக்கும்..
ஆனாலும் உயிர்ப்பான கவிதைக்கு பாராட்டுக்கள்..
புதிர்களை அவிழ்க்க
நேரமுமில்லை
விருப்பமும் இல்லை
அவை அவைகளாகவே
இருக்கட்டும்
என்னைப்போலவே....அருமை ஹேமா.
நல்லாயிருக்குங்க
சுயதுக்குள் மறந்து கிடக்கும் முடிசுகளுக்கான விடை எபொழுது கிடைக்கும் ????????????????
சொல்வதும் சுகம்
சொல்லாமலிருப்பதும் சுகம்
சொல்லாமற்சொல்லி சுகம்பரப்பி
சொல்லவேயில்லை என்பது சுகமோ சுகம்.
எல்லாமும் சொல்லியாகிவிட்டது, இனி சொல்வதற்கென்ன? அழகிய கவிதை ஹேமா.
என் தலைவன் நசரேயன் வரும் வரைக்கும் இந்த மகுடம் தமிழ்மணத்தில் தொடர்ந்து நிற்க வேண்டும்.
மிகவும் ரசித்தேன் மேடம் ..
மிகசிறப்பா செதுக்கி இருக்கீங்க ....
நிறைய வார்த்தைகளை அழகாய்
பயன்படுத்தி இருக்கீங்க ,.
ம்.. அசத்தல்..
வாழ்த்துக்கள்...
கவிதை போல...
காலையின் பனி போல...
தூங்கத் தோள் தரும்
காதலன் போல...
தாலாட்டும் அன்னை போல...
காலை எழுப்பும் பூபாளம் போல...
என் தனிமை போக்கும் இசை போல...
எதைச் சொல்ல நான்!!!
---- அழகாய் சொல்லி விட்டீர்கள்
இன்னும் என்ன சொல்ல வேண்டும் ?
கூந்தலை அலங்கரித்த கைகளுக்கு சற்றும் சளைத்ததில்லை ஹேமா, இக் கவிதை சமைத்த கைகள்...! தேனில் விழுந்த ஈயாய் கிறங்கிப் போய்க் கிடக்கிறேன். பிரமாதம் பிரமாதம்....!!!
//கவிதை போல...
காலையின் பனி போல...
தூங்கத் தோள் தரும்
காதலன் போல... //
சூரியன் வந்த உடனே பனி மறைந்து போகும் ..
காதலனும் ஓடிப்போவானோ ?
//பிறை நிலவுக்குள் இருளையே
சிறைவைத்த உனக்கு
ஒரு பெயர் //
அரை லூசு ?
//
காற்றுக்கு லஞ்சமாய்
முத்தம் கொடுத்தும்
பனியின் கூந்தல் தடவி
சிக்கெடுத்தும் //
பேன் பொடுகு எல்லாம் பொறக்கலையா
//வானின் ஊத்தை தோய்த்தும்
கேட்டுப் பார்த்தேன்.//
ஓசோன் ஓட்டைய அடைச்சது நீங்க தானா ?
//
எப்படி இருப்பாய் நீ...
என்றல்லவா கேட்கிறார்கள்
எப்படிச் சொல்ல நான்.
//
நல்லா பன்னிகுட்டி மாதிரி இருப்பேன்னு சொல்லுங்க
Kaatrukku lanjamaai-nalla varihal Hema.
நிதர்சனமாய் தெரிந்தாலும் எல்லாமே புரியாத புதிர். அருமை ஹேமா!
கவிதை மற்றும் உவமை அசத்தல்..
//////
நரகத்தில் இருப்பது போன்றே இருக்கிறேன்... தயவு இந்த அவஸ்த்தை என்னுடைய எதிரிக்கூட வரவேண்டாம்./////
விவரம் அறிய..
http://tamilpaatu.blogspot.com/2011/04/blog-post.html
"பிறை நிலவுக்குள் இருளையே
சிறைவைத்த" பிடித்திருந்தது.
காதல் என்பது பற்றி எமது இடுகையில் விரிவாக அலசப்பட்டு உள்ளது . கவர்ச்சி மட்டுமே காதல் ஆகிவிடாது இருவரும் முழுமையாக காதலிக்க தொடக்கி விட்டாலே பெரும் சிக்கல் களுக்கு தீர்வு கிடைத்துவிடும் . எப்படி இருப்பார் என்பதைவிட என்ன கொள்கையாளர் என்பதை முதலில் அறியப்படவேண்டும் .வீணான கற்பிதங்கள் சிக்கலை உண்டாக்கலாம் .வெளி உலகிற்கு நாங்கள் இப்படிப்பட்ட எண்ணம் கொண்டவர்கள் என அறிவிப்பது சிறந்தத்தாக இருக்கலாம் .
உறவுகளே இது பற்றி கதைக்க
siddhadhaya @gmail .com
என்னைக்கவர்ந்தது கடைசி வரிகள்.
சொல்லாம சொல்லிட்டீங்க அருமையான கவிதை .
(என்னமோ தெரியல அவசரமா ,பிஸியா இருந்தா கூட உங்க கவிதைகளுக்கு
ஆங்கில பின்னூட்டம் போட பிடிக்கல )
புதிர்கள் புதிர்களாகவே இருக்கட்டும் ஹேமா அப்பொழுது தான் அதற்கு மதிப்பு...
தென்றலாய் வருடுகிறது கவிதை
சூப்பர்
வாழ்த்துக்கள்.
அருமையான கவிதை.வாழ்த்துக்கள்.
தங்களை ஒரு தொடர் பதிவுக்கு அழைத்துள்ளேன்.உங்களின் கருத்தினை பகிருங்கள்.
முதல் பத்தி அற்புதமாக இருக்கிறது. (பலமுறை படித்தாலும் பிரமிப்பு). கவிதை அங்கேயே நின்றிருக்கக் கூடாதோ என்று தோன்றினாலும், மற்ற பத்திகளையும் ரசித்தேன்.
மிரட்டலான, அசத்தலான, அழகான, அருமையான கவிதை ஹேமா.
ஃஃஃஃகண்டறியத் தேடியதில்லை
என்றாலும் கண்முன்
நதியும் கடலும்
நிதர்சனமாய். ஃஃஃ
சரியான ஒரு விடயத்தை மறைமுகமாகச் சொல்லியுள்ளீர்கள் நன்றி நன்றி...
நல்ல கவிதை.
வாழ்த்துக்கள்.
அவை அவை அவ்வாறே
தமக்கிசைய இருப்பதே
இயற்கையின் அழகு.
அதை அப்படியே அழகான வரிகளாக..சூப்பர்.
அசத்தல்
அருமை.வாழ்த்துக்கள்!
hi hema realy super... epadinka enthamathiri ellam kavithai thonuthu.... nice ....
BY
Parthipan
Post a Comment