இரு சாத்தான்கள்
மண்டையோடுகள் தவிர்த்து
மட்டையோடு
விளையாடும் நேரமின்று.
உள்ளும் வெளியிலும்
தமிழனின் சில உயிர்கள்
சிரட்டைகள் தங்கிய
மழை நீருக்குள்ளும்
அங்குமிங்கும் மிச்சமாய்
இன்னும் கொஞ்சம்.
தமிழனின் தலைகளைப்
பந்தாக நினைத்தாலே
யாரோ ஒருவர் கையில்
உலகக்கோப்பை
உறிஞ்சும் இரத்தம்
உலகம் காணாமல்
மட்டையோடு
எலும்புகளும் பத்திரமாய்.
சூரியனைத் தொலைத்த
மொட்டைப் பனைமரமென
நீள வளர்ந்திருக்கிறது
உயிரற்ற நிலை
தாய் மண்ணுக்குள்
வாய்ப்பூட்டுப் போட்ட
மௌனப்போராடமும் அப்படியே.
இதுவும் கடந்து போகுமென
பேசமுடியாதிருக்கிறார்கள்
அவர்கள்...
விளையாடியபடிதான்
இன்னும் இவர்கள்!!!
இலங்கை வென்றால் இறந்த இராணுவத்தாருக்குச் சமர்ப்பணமாம் விளையாட்டில்கூட நாடா.....இனமா இந்தியாவே வெல்லட்டும் !
ஹேமா(சுவிஸ்)
Tweet | ||||
28 comments:
ம்ம்ம்
ஹேமாவுக்கும், இந்தியாவுக்கும் வாழ்த்துக்கள்
இலங்கையும், சிங்களனும் நாசமாகப்போகட்டும்..
விளையாட்டாவது மனிதனை சந்தோஷப்படுத்த வேண்டும். முடியவில்லை. எதுவும் மகிழ்ச்சி தராமல்... எந்த மகிழ்ச்சியையும் விரும்பாமல்...
யார் வென்றால் என்ன - தோற்று போனது மனித நேயம் தானே.
இது உரைநடை கவிதையா.?
வெறுப்புகள் பேச செய்கிறது இந்தியாவென.. எங்களுக்கு உணர்ச்சிகள் பேசுகிறது இந்தியா என..
இதுவரை இலங்கையும் ஜெயிக்கலாம், இந்தியாவும் ஜெயிக்கலாம் என்றிருந்தேன்.. எப்போ ராஜபக்க்ஷே வர்றார்னு தெரிஞ்சிதோ.. நோ இலங்கை தான்..
என்னத்த சொல்ல
தங்களின் உணர்வுகளுக்கு நன்றி..
நெஞ்சு பொறுக்குதில்லையே....ஹேமா
\\இனமா இந்தியாவே வெல்லட்டும் !\\
ம்ம்ம்..
வலிப்பந்தை வார்த்தை மட்டைகளால் விளாசியிருக்கிறீர்கள். எல்லைகளைத் தாண்டி எங்கள் இதயத்தில் சிக்ஸர் அடித்துவிட்டீர்கள் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை, ஹேமா.
என்னை போருத்தவரியில் இரண்டு பொறுக்கித்தனமான (அழுத்தம் பொறுத்தருள்க )நாடுகளுமே எம்மின தமிழக ,ஈழ மக்களை கருவருக்கவே செய்கிறது . விசத்தில் நல்ல விஷம் உண்டோ அதேபோல இருநாடுகளுமே தமிழர்களை பகையாகவே பார்க்கிறது இன்னும் இந்திய அரசை ஈழத்தமிழர் நம்பவே செய்கின்றனர் . அனால் இந்த கேடுகெட்ட அரசுதான் கொலைகருவிகளை வழங்கியது இன்னும் தமிழர்களை பகைவர்களாக பார்க்கிறது .
விளையாட்டில் கூடவா அரசியல்?
கீதா மதிவாணன் அழகாகச் சொல்லியிருக்கிறார்.
இங்கேயும் மேட்ச் ஃபிக்சிங் செய்வானுகளோ தெரியலையே....
கைகள் கோர்த்துக்கொண்ட
இரு சாத்தான்கள்
மண்டையோடுகள் தவிர்த்து
மட்டையோடு
விளையாடும் நேரமின்று. //
கவிதையின் ஆரம்பமே சிலாகித்துச் சொல்லப்பட்டிருக்கிறது.
நல்ல வேளை பேயாட்டம் ஆடவில்லை. நாடே அல்லோலகல்லோலப்பட்டிருக்கும்.
உள்ளும் வெளியிலும்
தமிழனின் சில உயிர்கள்
சிரட்டைகள் தங்கிய
மழை நீருக்குள்ளும்
அங்குமிங்கும் மிச்சமாய்
இன்னும் கொஞ்சம்./
எங்களின் இறந்த காலங்களை இன்னுமொரு தரம் நினைவில் கொண்டு வரும் வரிகள்.. யதார்த்தம் தொனித்திருக்கிறது.
உலகம் காணாமல்
மட்டையோடு
எலும்புகளும் பத்திரமாய். //
இன்னும் ஆழப் புதைந்திருக்கும் புதை குழிகளின் உள்ளே உள்ள எலும்புகளைத் தோண்டியெடுத்திருந்தால் அவையும் பல கதைகள் பேசும்.
சூரியனைத் தொலைத்த
மொட்டைப் பனைமரமென
நீள வளர்ந்திருக்கிறது
உயிரற்ற நிலை//
இது கவிதைக்கு அணி சேர்க்கும், அழகு சேர்க்கும் அருமையான சொல்லாடல்.
மொட்டைப் பனை மரத்தாலும் பயனேதுமில்லை//
உயிரற்ற நிலையாலும் ஆவதொன்றுமில்லை.
அழகான அணிக் கையாள்கை
தாய் மண்ணுக்குள்
வாய்ப்பூட்டுப் போட்ட
மௌனப்போராடமும் அப்படியே.//
காலத்தின் கைகளில் எல்லாவற்றையும் கைகளுவி விட்டு விட்டு, மௌனமாய் ஆகியோள்ள எல்லோரையும் சுட்டும் வரிகள்!
இதுவும் கடந்து போகுமென
பேசமுடியாதிருக்கிறார்கள்
அவர்கள்...
விளையாடியபடிதான்
இன்னும் இவர்கள்!!!.//
இது நிதர்சனம்
உலகக் கிண்ணக் கிரிக்கட், எங்கள் ஒவ்வொருவர் வாழ்விலும் உள்ள கறை படிந்த பக்கங்களின் நினைவுகளை மறந்தவர்களாய், எங்கள் அவலங்களை மனதை விட்டு அகற்றியோராய், உலகக் கிண்ணத்தோடு ஒன்றியிருப்போருக்கு, ஒரு நினைவூட்டலாயும், வரலாற்று ஞாபகச் சிதறலாகவும் அமைந்துள்ள கவிதை!
உண்மையில் மிகவும் மிகவும் சந்தோஷமாக உணர்கிறேன்.என் பிறந்த நாட்டுக்கு நான் செய்யும் துரோகமாக மனம் உணர்ந்தாலும் பிறந்த நாடு என்னை ஒரு தன் பிரஜையாக ஏற்றுக்கொள்ள
வில்லை.
நாடற்ற ஏதிலிகளா ஏதோ ஒரு நாட்டில் அவதிப்படுவகிறோம்.
ஊரில் என் மக்கள் இன்றும் மௌனமாய் தங்கள் தேவைகளைக் கூட வாய் திறந்து கேட்க
உரிமையற்று பிறந்த தேசத்திலேயே அவதிப்படுகிறார்கள்.
இன்னும் இன்னும் !
இந்தியாவும் எங்களுக்கு அநியாயம்தான் செய்தது.ஆனாலும் போகட்டும்.கூண்டிலில் இருக்கும் சரத் பொன்சேகா சொல்லியிருக்கிறார் புலிகளை வென்றதுக்கு அடுத்த வெற்றியாம் கிரிக்கெட்டில் வெற்றி பெற்றால்.ராஜபக்ஷ் சொல்றார் இறந்த இராவணுவ வீரர்களுக்குச் சமர்ப்பணமாம்.
எத்தனை ஆயிரம் தமிழ் உயிர்களை உயிரோட சாப்பிட்டிட்டு திருப்பதி முருகன் காலடியில போய் சொல்றார் ”இலங்கையில தமிழர்களுக்கு ஒரு குறையுமில்ல.அவர்கள் சந்தோஷமா இருக்கிறார்கள்” என்று.அந்தச் சாமி உண்மையாயிருந்தால் கேட்டு வச்சுக்கொள்ளட்டும் அவர்
சொன்னதின் உண்மைகளை !
அப்போ நாங்கள் எங்கள் நாடு என்று எப்படி நினைக்க வருது.இதிலயும் அரசியல் கலந்து எங்களைத் தள்ளித்தானே வைக்கிறார்கள்.எல்லாம் எல்லாம் நினைக்க இந்தியா வென்றது சந்தோஷமே !
உங்கள் ஆநங்கம் புரிகிறது..
இப்போ அட்டற்ற மகிழ்ச்சியில் இருக்கிறேன்..
பின்னர் இந்த கருத்துகளுக்கு பதிலளிக்கிறேன்..
உங்கள் எழுத்து கவிதை நோக்கம் எனக்கு நிறைவை தந்தது. மகிழ்வாய் உணர்கின்றேன்.
அருமை!
ம்ம் கோவம்
உனக்கு குறை வைக்கவில்லை திருப்பதி வெங்கடாசலபதி...
அடித்தது சிக்ஸர் தான்! ஆனால் உடைந்ததென்னவோ இதயம்!!!
உங்கள் ஆதங்கம் மட்டுமல்ல அக்கா எனது ஆதங்கமும் அதுவே... சிங்களம் எதிலும் ஜெயிக்க கூடாது என்பதே ஆதங்கம்
Post a Comment