மடித்த சாய்கதிரை.
மூலையில்
சாய்த்த கைத்தடியோடு செருப்பு.
கவிழ்த்தபடி எச்சில் துப்பும் சட்டி.
எறிவதற்கான குப்பைக்குள்
மருத்துப் போத்தல்களோடும்
மற்றும் நினைவுகளும்.
அலமாரியில் ஒரேயொரு சேலை
ரவிக்கையுடன் !
ஓய்ந்துவிட்ட ஒப்பாரி.
அணைந்த ஊதுவத்தி.
பாட்டியையும்
பாட்டியின் ஆவியையும் மறந்து
பயமில்லாமல் தலைவாசல் தூணில்
சுற்றி விளையாடும் பேரப்பிள்ளைகள்.
இயற்கையும் விழிதுடைத்து
அடுத்த அலுவலுக்காய் !
தாத்தா மட்டும்
அறை வாசலுக்கு
வருவதும்
நிற்பதும் போவதுமாய்!!!
ஹேமா(சுவிஸ்)
Tweet | ||||
46 comments:
முதன் முதலாக முதன் முதலாக பரவசமாக பரவசமாகத்தான்...
வயோதிகர்களைப்புரிந்து கொள்ளவும் ஒரு பக்குவம் வேண்டும்.உங்களிடம் அது நிறையவே இருக்கு ஹேமா
கவிதை நல்லாருக்கு.. அதற்கான ஸ்டில்ஸில் ஃபாரீன் கப்பிள் போடாமல் இந்திய ஜோடியையே போட்டிருக்கலாமே.. ஏன் எனில் கடைசி வரை ஒற்றுமையாக இருப்பதில் உலக அளவில் இந்திய ஜோடிகளே முன்னிலை வகிக்கின்றன்
//தாத்தா மட்டும்
அறை வாசலுக்கு
வருவதும்
நிற்பதும் போவதுமாய்!!!
//
நிறைய சொல்லுது ஹேமா இந்த வரிகள் யோசிக்கவும் வைக்கிறது வரப்போகும் முதுமையின் நிலையை..உறவுகல் இழந்த நிலை கொடுமை..
கவிதை நல்லாருக்கு..வார்த்தைகள் .. விளையாடியிருக்கு..
காட்சிப் படிமம் பிரமாதம் ஹேமா...! ஒவ்வொரு வரியிலும் மூழ்கித் திளைக்கிறேன். அறை வாசலில் வந்து நின்று போகும் தாத்தா மனம் படும் பாடு நன்றாகவே புரிகிறது. வார்த்தைப் பிரயோகங்களுக்கும், அவை தரும் அர்த்தங்களின் அடர்த்திக்குமாக உங்களுக்கொரு 'சபாஷ்'!!
மிக அருமை.மனக்கண்முன்
காட்சியாய் தங்கள் கவிதை
விருந்து போவதல்லாமல்
உணர்வையும் உலுக்கிப் போகிறது
மிகச் சிறந்த படைப்பு
தொடர வாழ்த்துக்கள்
சி.பி.செந்தில்குமார் said...
கவிதை நல்லாருக்கு.. அதற்கான ஸ்டில்ஸில் ஃபாரீன் கப்பிள் போடாமல் இந்திய ஜோடியையே போட்டிருக்கலாமே.. ஏன் எனில் கடைசி வரை ஒற்றுமையாக இருப்பதில் உலக அளவில் இந்திய ஜோடிகளே முன்னிலை வகிக்கின்றன்
...இங்கே அமெரிக்காவில் அறுபது வருடங்களாக - அதற்கும் மேலாக திருமணம் ஆகி சேர்ந்து வாழ்ந்து கொண்டு இருக்கும் வயதான தம்பதிகள் நிறைய பேரை எங்கள் voluntary work மூலம் சந்தித்து இருக்கிறோம். ஹேமா சொல்லி இருக்கும் கவிதை - உலகத்தில் உள்ள எந்த வயதான தம்பதியினருக்கும் - நீண்ட ஆண்டு காலமாக திருமணம் ஆகி வாழ்ந்த தம்பதியினருக்கும் - பொருந்தும்.
please read: http://www.aprillorier.com/2011/02/50-state-winners-in-longest-married.html
அருமையான கவிதைங்க...
முதுமையின் அன்பை இவ்வளவு நேர்த்தியாய் யாரும் சொன்னதே இல்லை.
ரொம்ப அழகா இருக்குங்க.
ஹேம்ஸ்...அப்படியே பாட்டி இறந்த வீட்டில் சாதாரணமாய் நடக்கும் நிகழ்வினை ,,ம்ம்...அழகாய் படம் பிடிச்சு போட்ட மாதிரியான வரிகளில்...ம்ம்..என்னாலே அந்த காட்சியவே கற்பனை பண்ண முடிஞ்சது ஹேம்ஸ்...சூப்பர்...
அழுத்தமான உணர்வுகள் கவிதை வரிகளாக...
. வாழ்ந்த நாட்களின் ஞாபகங்களுக்கு இருப்பதாலேயே, இன்னும் கொஞ்ச நாளைக்கு வாழ முடியுமோ. அருமையான கவிதை.
கடைசி நாலு வரியில் பரவும் நிலையை தான் கவிதை என்பார்களோ.. ?
எதையோ சொல்லி எதையோ விளங்கவைக்கிறீர்கள்... நன்று
கண்முன்னே வந்துபோகும் சூழல் கவிதையின் சிறப்பு , வாழ்த்துகள் ஹேமா.
நல்லாருக்கு
ரொம்ப எளிமையான வார்த்தைகள் கொண்டு வாழ்க்கையின் எதார்த்தத்தை சொல்லீட்டீங்க
இம்முகவரியில் நான் இரசித்தவற்றின் பட்டியலில் இதுவும் ...
நல்லாயிருக்கு ஹேமா! முதுமையில் தான் காதல் பரிபூரணமாகிறது! :)
திருமணம் முடித்து ஒருநாள்,ஓருவாரம்,ஒருமாதம்
வாழ்ந்ததே போதுமென்று விவாகரத்துக் கேட்கும்
இந்த புதுயுகத்திலும்....
மனைவியிருந்தும் இன்னொன்று தேடும்
கணவன்மார் உள்ள இந்தக்காலத்திலும்......
கணவன் இருக்குபோதே மனைவி
வேறொருவரை நாடும்
இந்த காலகட்டத்திலும்.....
{மன்னிக்கனும் நான் எல்லோரையும்
சாடவில்லை}
இப்படியுமொரு தம்பதியர்கள் வாழ்ந்தார்களெனவும்
இன்னும் வாழ்கிறார்களெனவும்.....
சிலபேர்களிடம் மறையாமல்,மணக்கும் அன்புவாழ்கிறது
இன்னும்....
என்கிறதுஉங்கள் கவி நன்று.
"தாத்தா மட்டும்
அறை வாசலுக்கு
வருவதும்
நிற்பதும் போவதுமாய்!!!"
இந்த வரிகள் மனசை வலிக்க செய்கிறது ஹேமா.அருமையான கவிதை ஹேமா.
(கவிதை என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் ரகம் நான் .
உங்களால் கவிதைகளை நேசிக்க ஆரம்பித்து விட்டேன்)
"தாத்தா மட்டும்
அறை வாசலுக்கு
வருவதும்
நிற்பதும் போவதுமாய்!!!
தாத்தா மனதில் உள்ள வலி இந்த வரிகளுக்கு. அருமை ஹேமாக்கா
ஆரம்ப வரிகளிலேயே காட்சியைக் கண்முன்னே நிறுத்தி நிலைமையைப் புரிய வைத்து விட்ட வரிகள். அந்த வெறுமை நமக்கே உரைக்கும்போது தாத்தா என்ன செய்வார், பாவம்...நேற்று செய்தித் தாளில் எண்பத்தைந்து வயது தாத்தா கோவிலுக்குச் சென்ற தன் எண்பது வயது மனைவியைக் காணோம் என்று தேடும் செய்தி படித்தேன்.அதுவும் நினைவுக்கு வருகிறது. அபார கவிதை.
சித்ரா கருத்தை ஆமோதிக்கிறேன்!
ஃஃஃஃதாத்தா மட்டும்
அறை வாசலுக்கு
வருவதும்
நிற்பதும் போவதுமாய்!!!ஃஃஃஃ
உண்மையிலேயே விலகாத உறவு தான்.... நிச்சயம் அவர்களத காதல் திருமணமாய் இருக்காது...
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
பதிவுலகத்திலிருந்து பாமரர்களுக்கு உதவ வாருங்கள்.
முதுமையில் துணை தேவை....
தாத்தா மட்டும்
அறை வாசலுக்கு
வருவதும்
நிற்பதும் போவதுமாய்!!!
இந்த வரியில் கவிதை அழுத்தமாய் பதிந்து விடுகிறது.. எத்தனை வருட தாம்பத்தியம்.. அதன் அழகை.. வலியை.. உணர்வை.. பேசாமல் பேசும் வார்த்தைகள்.
//தாத்தா மட்டும்
அறை வாசலுக்கு
வருவதும்
நிற்பதும் போவதுமாய்!!!
//
நிறைய சொல்லுது இந்த வரிகள் யோசிக்கவும் வைக்கிறது
ஆழமான உணர்வுகளின் கோர்வையாய் கவிதை...
அருமையான கவிதை ஹேமா.
கவிதை உணர்வை உலுக்கிப் போகிறது
"..ஒருக்களித்து வைத்த கட்டில்.
மடித்த சாய்கதிரை.
மூலையில்
சாய்த்த கைத்தடியோடு செருப்பு.
கவிழ்த்தபடி எச்சில் துப்பும் சட்டி.."
உங்கள் வரிகளிலிருந்து மீளமுடியாமல் துடிக்கிறது மனது.
முகப் புத்தக நண்பர்களுடன் பகிர்ந்துள்ளேன் உங்கள் கவிதையை.
நன்றி
ஈழத்து இலக்கிய வரலாற்றிலும், புலம் பெயர் தமிழ்க் கவிஞர்கள் வரிசையிலும் சகோதரி ஹேமாவின் படைப்புக்களுக்கு தனியானதொரு தரம், இலக்கிய நயம், இலக்கிய இடம் உண்டென்பதை யாராலும் மறுக்க முடியாது.
அந்த வகையில் உங்களின் வலைப் பூவினை நீங்கள் எழுதத் தொடங்கிய காலத்திலிருந்து படிக்கும் சந்தர்ப்பம் இல்லாவிட்டாலும் அண்மையில் வலைப் பூவின் ஆரம்ப காலப் பதிவுகள் முதல் இன்றைய கவிதைகள் வரை படித்துள்ளேன்.
படிம கவிதைகள், புதுக் கவிதைகள், வசன கவிதைகள், உரை நடை கலந்த சொல்லாடல்கள், இன்னும் பல வகைப்படுத்த முடியாத கவிதை வடிவங்கள் எனப் பலவகை கவிதை வடிவங்களையும் தாங்கி உங்களின் படைப்புக்கள் காத்திரமாக வலையுலகில் வலம் வருகின்றன.
சமூகத்தின் அவலங்கள், நடை முறை வாழ்வியல் கோலங்கள், தாய் நாட்டின் மீதான ஈர்ப்பின் வெளிப்பாடுகள், எனப் பல வகைகளில் சுருங்கச் சொல்லின் நவரசங்களையும் கலந்து உங்கள் கவிதைகள் இணையத்தில் வலம் வருகிறது மகிழ்ச்சியான விடயமே. இருபதாம், இருபத்தியோராம் நூற்றாண்டுப் புலம் பெயர் கவிதைகள் எனும் தொகுப்பினை வெகு விரைவில் தொகுக்கலாம் என்று எண்ணுகிறேன். இத் தொகுப்பின் ஆய்வுகளில் உங்களின் கவிதைகளும் பெருமளவில் பங்களிப்புச் செய்யும் என்பது மறுக்க முடியாத உண்மை. வாழ்த்துக்கள் சகோதரி!
விலகாத உறவு: மனித வாழ்க்கையில் பந்த பாசங்களை இலகுவில் அறுத்தெறிய முடியாது என்பதன் சாட்சியின் வெளிப்பாடான கவிதை. இறப்பிற்குப் பின்னரும் தாத்தாவினால் நினைவு கூரப்படும் பாட்டி, பாட்டியின் நினைவுகளிற்குள்ளே தன்னையும், தன் வாழ் நாளையும் தொலைத்து விட்ட தாத்தா, - அவர் அடிக்கடி நடந்து போய் தரிசிக்கும் பாட்டியின் அறை எனும் சொல்லோவியம் வாயிலாக சித்திரிக்கப்பட்டுள்ளமை கவிதையின் உயிர் நாடியாக இருக்கிறது.
மனித வாழ்வின் அந்திம காலப் பொழுதுகளையும், அதன் பின்னரான எங்கள் சமூகவியல் பாசப் பிணைப்புப் பண்பாட்டுக் கோலத்தின் கோடுகளையும், வார்த்தைகளின் கீறல்களாக்கி கவி ஓவியமாகக் காட்டும் விலகாத உறவு- வாழ்வில் என்றும் இரண்டறக் கலந்திருக்கும் முதியவர்களின் பாசப் பிணைப்பின் சான்று!
ஒரு ஈடே செய்ய முடியாத இழப்பை காட்சிப் படித்தி இருக்கும் கவிதை வரிகள்.. மற்ற வரிகள் கவிதை எனில் கடைசிவரிகள் காவியம் ஹேமா..
இந்த முடிவை வைத்து இன்னொரு கவிதையே எழுதலாம் ஹேமா.
உங்கள் “மனப்பிறழ்வு” இப்போது தான் படித்தேன். இதயம் கீறிய ரணங்களின் வலியை வார்த்தைகள் ஆக்கியிருக்கிறீர்கள் போல...!
தாத்தாவின் சொல்லப்படாத நிறைய உணர்வுகள் கடைசிபத்தியில் தொக்கி நிற்கிறது ஹேமா..
கவிதை நல்லாருக்கு.வாழ்த்துகள் ஹேமா.
/தாத்தா மட்டும்
அறை வாசலுக்கு
வருவதும்
நிற்பதும் போவதுமாய்!!!//
மற்ற எல்லோரும் அவரவர் வாழ்க்கையை மீண்டும் தொடர.. உண்மையான உறவு மட்டும், தனித்து விட்டுச்சென்றதை நம்ப முடியாமலும், சென்றது தவறு என்று மீண்டும் வந்துவிடமாட்டாளா என்ற ஏக்கத்திலும்..
//தமிழரசி said...
//தாத்தா மட்டும்
அறை வாசலுக்கு
வருவதும்
நிற்பதும் போவதுமாய்!!!
//
நிறைய சொல்லுது ஹேமா இந்த வரிகள் யோசிக்கவும் வைக்கிறது வரப்போகும் முதுமையின் நிலையை..உறவுகள் இழந்த நிலை கொடுமை..//
சரியாகச் சொன்னீங்க தமிழ்..
உணர்வுமிக்க கவிதை பாராட்டுக்கள்.
தாத்தாவின் உணர்வு அவருக்கு மட்டுமே தெரியும்.....
நன்றாக இருக்கிறது கவிதை ... இதே சாயலில் ஏற்கனவே ஒரு கவிதையை தங்கள் வலைப்பதிவில் படித்ததாக நினைவு...சரிதானா?
//தாத்தா மட்டும்
அறை வாசலுக்கு
வருவதும்
நிற்பதும் போவதுமாய்!!!
//
எல்லாருக்கும் முதுமை சொந்தமானது
ஆனால்
மனம் மட்டும் அதை கதையில் வரும் பெரியவருக்கு மட்டும் உரியதாய் நினைகிறது.....
தாத்தாவோடு ஒன்றிவிட்ட அத்தனை உறவுகளுக்கும் மிக்க மிக்க நன்றி.
இன்னும் என்னோடு இணைந்திருங்கள்.
தாத்தாவின் பாடு திண்டாட்டம் தான். என் திண்ணை ராஜ்ஜியம் படித்தீர்களா ?http://sivakumarankavithaikal.blogspot.com/2010/09/thinnai-rajyam.html
புரிதலில் பூத்த இனிய உறவு இது. உதிருவதில்லை என்றும், நினைவுகளாய் வாசம் வீசும்.
இரசித்துப் படித்தேன்! அருமை அருமை!
வலி..உணவு ஒருமித்து இருக்கிறது..அருமை
Post a Comment