தூக்கிய குளிரைச் சமப்படுத்தியபடி
தெருவோடு கண் அலைய...
தவளைகளின் சத்தமில்லா இரவு
செயற்கை மின்மினிகளாய் வெளிச்சம்
அசையா வெள்ளை மரங்கள்.
இறுக்கிய குளிருக்குள்
முத்தங்களோடு இளசுகள்.
இல்லாத பிள்ளைக்காய் மார்வலிக்க
அனுங்கியபடி ஒரு பெண்.
மாற்றுத்திறானாளிக்கு
உதவும் ஒரு ஆசிரியர்.
பிண ஊர்தியின் குரல்.
வாடகைப் பெண்ணும்
அன்றைய வாழ்வை ரசிக்கும் இளைஞனும்.
வழுக்கும் பனியில் கைத்தடிதான் உறவாய்
தனித்தே நடக்கும் முதுமை.
குளிர் உயிரை உறைய வைக்க
சிந்திக்கச் சிந்திக்க
வெறுக்கும் வாழ்வின் உச்சம்.
இறப்பிலும் பிறப்பிலும்
உறவு தேடும் நாம் எங்கே
இவர்கள் எங்கே.
இன்னொரு அரைக்குவளை
எடுத்துக்கொள்கிறேன்
ஏன் என்றால்....
இன்றிலிருந்து பழகவேண்டும்
என் பிணத்தை நானே காவல் காக்க!!!
ஹேமா(சுவிஸ்)
Tweet | ||||
64 comments:
நல்ல கவிதை.
நிதானித்த வேளையில் நிதானிக்கின்றேன்
ஹேமா.
நிதானித்த வேளை.. நன்று ஹேமா.
அருமையாக முடித்துள்ளீர்கள்...
//இறப்பிலும் பிறப்பிலும்
உறவு தேடும் நாம் எங்கே
இவர்கள் எங்கே//
//இன்றிலிருந்து பழகவேண்டும்
என் பிணத்தை நானே காவல் காக்க//
கனமான வரிகள்...வாழ்த்துக்கள் ஹேமா...
அற்புதமான கவிதை ஹேமா.
சொன்ன வார்த்தைகளில் எத்தனை சொல்லாத உணர்வுகள்!
இதுதான் ஹேமா உங்களின் ஸ்தானம்.இந்த மொழிதான் ஹேமா உங்களுடையது.
வேறொரு மண்ணில் ஒட்டாத வாழ்க்கை எத்தனை கொடியது?
இன்னொரு அரைக்குவளை மதுவை நானும் எடுத்துக் கொள்கிறேன் வேறு காரணங்களுக்காக.
>>>
இன்னொரு அரைக்குவளை
எடுத்துக்கொள்கிறேன்
ஏன் என்றால்....
இன்றிலிருந்து பழகவேண்டும்
என் பிணத்தை நானே காவல் காக்க!!!
the final touching is kalakkal hema
கவிதை நன்று....
குடி குளிர்காக்குமா?
//"வழுக்கும் பனியில் கைத்தடிதான் உறவாய்
தனித்தே நடக்கும் முதுமை"//
முந்தைய வரிகளில் வாழ்வை அனுபவிக்கும் அனைவரும் வந்து சேரும் இடம்...
"இன்னொரு அரைக்குவளை
எடுத்துக்கொள்கிறேன்"
நிதானித்த வேளை'யில் முரண்?!
"..சிந்திக்கச் சிந்திக்க
வெறுக்கும் வாழ்வின் உச்சம்.
இறப்பிலும் பிறப்பிலும்
உறவு தேடும் நாம் எங்கே.."
உணர்வுகளும், சிந்தனைத் தேடலும் நிறைந்த படைப்பு.
உண்மைதான் தோழி தேடித்தேடியே நம்மை இழக்கிறோம் நம்மில்
இருப்பவனை மறந்து மறைத்து ....
கவிதை நல்லாயிருக்கு.. இரண்டு முறை படித்தபிறகுதான் புரிந்தது.
//இன்னொரு அரைக்குவளை
எடுத்துக்கொள்கிறேன்
ஏன் என்றால்....
இன்றிலிருந்து பழகவேண்டும்
என் பிணத்தை நானே காவல் காக்க!!!//
ம்ம்ம்
TOUCHING ONE.I FELT IT MY LIFE.
SUPER......!
//வாடகைப் பெண்ணும்
அன்றைய வாழ்வை ரசிக்கும் இளைஞனும்//
அற்புதமான கவிதை .
நல்ல கவிதை தோழி. கவிதையின் கருப்பொருள் தனிச்சிறப்பு. உணர்வுப்பூர்வமான நமது வாழ்க்கை முறைக்கும் பொருளை மையப்படுத்துகின்ற மேலை நாட்டு வாழ்க்கை முறைக்கும் எவ்விதத்திலும் ஒத்துப்போகாது தான். தங்களின் தொனி நன்று. அவ்வப்போது உங்கள் கவிதைகளை உயிரோசையில் வாசித்ததுண்டு...
வாழ்த்துக்கள்.
எல்லா வரிகளும் அற்புதம் ஹேமா
"இறப்பிலும் பிறப்பிலும்
உறவு தேடும் நாம் எங்கே
இவர்கள் எங்கே"
உண்மை ஹேமா .உங்கள் கவிதைகளில் ஒரு மெல்லிய சோகம் ......
ஆனால் உங்கள் கவிதை எனக்கு அழகாகவும் தெளிவாகவும் புரிகிறது .
ஏதோ ஒன்று இழுத்து வந்திருக்கிறது... ஒட்டுவது சிரமமே ஹேமா...
wonderful...You had pen down exactly what I have seen here in EU.
I wish you to Continue this Great Work...
கவிதை அருமையாயிருக்கு ஹேமா..
இறுக்கிய குளிருக்குள்
முத்தங்களோடு இளசுகள்.//
ம்....இளசுகளைக் கூட விட்டு வைப்பதாக இல்லை. கவிதையில் கடிப்பதென்றே முடிவு,
இல்லாத பிள்ளைக்காய் மார்வலிக்க
அனுங்கியபடி ஒரு பெண்.
மாற்றுத்திறானாளிக்கு
உதவும் ஒரு ஆசிரியர்//
சமூகத்தில், வீதியில் நாள் தோறும் நடக்கும் அன்றாட நிகழ்வுகளை, உரை நடை கலந்த புதுமையான கவிதை வடிவில் தந்திருப்பது அழகு.
ரொம்ப பயமுறுத்துறீங்க சகோதரி. பார்த்து இன்னொரு கப் எடுங்கோ. ரொம்ப போதை ஏறப் போகுது.
கவிதைக்குள் சிக்கிக்கொள்பவர்கள் தான் கவிதை படைப்பாளிகளாகி விடுகிறார்கள். கண்ணில் படும் எல்லாவற்றையும் தக்கத்தருணத்தில் சொற்களாய் வெளிப்படுத்த வேண்டும் என்ற உந்துதல் உள்ளுக்குள் இருப்பதால், நடந்து போகும் போதும், பாதையைப் பார்த்துக் கொண்டு நடக்காமல், பாதையை பார்வைக்குள் சேமித்துக் கொண்டே செல்கிறான்(ள்) கவிதை படைப்பாளி.
எனக்கு மதுமேல் விருப்பமில்லை. மதுமேல் மட்டும்.
எனக்கு மது வேண்டாம். கவிதை போதும்.
இந்தக் கவிதை மீள்பதிவா ஹேமா?
மிக அருமை. நானும் கூட
என் பிணத்தை நானே
காவல் காக்க பழக வேண்டும் என
தீர்மானம் செய்து கொண்டேன்
சமீபத்திய தங்கள் படைப்பில்
சொற்களும் உணர்வுகளும்
கைகோர்த்து அன்னியோன்னியமாக
சிரித்துச் செல்வது இதில்தான் என நினைக்கிறேன்
தொடர வாழ்த்துக்கள்
//வழுக்கும் பனியில் கைத்தடிதான் உறவாய்
தனித்தே நடக்கும் முதுமை.//
வழுக்கும் பனி என்றாலும் =என்றும்
வழுவாத எம்மொழி பேசுவோர் இனிமையிலே,
தழுவி அணைக்கும் இளமை நினைவுகள் = கைத்
தடியினும் மேலே அல்லவா எனைத்
தாங்கி நிற்கின்றன !!!
சுப்பு ரத்தினம்.
http://vazhvuneri.blogspot.com
//ஏன் என்றால்....
இன்றிலிருந்து பழகவேண்டும்
என் பிணத்தை நானே காவல் காக்க!!!//
அயல்நாட்டு வாழ்க்கை கொடுக்கிற அச்சமூட்டுகிற உண்மை...
அருமையான கவிதை ஹேமா.
//இன்னொரு அரைக்குவளை
எடுத்துக்கொள்கிறேன்
ஏன் என்றால்....
இன்றிலிருந்து பழகவேண்டும்
என் பிணத்தை நானே காவல் காக்க!!
//
சிந்திக்கவும் கவலைப்படவும் வைக்கும்
excellent lines
புவியின் இருபுறங்களிலும் எல்லாமே முரண்கள்தானே....
இங்கு இரவில் அங்கு பகல் என்று சூரியன் செய்த ஆதார சதியிலிருந்து எல்லாமே ஒன்றொக்கொன்று நேரெதிர்தான்... Some people on Earth "Live"... Rest of all just Survive!
ஒரு மிகப்பெரிய விஷயத்தை ஓர் அரைக்குவளை மதுவை நிதானித்து முகத்தில் அறைந்தார்ப்போலப் புரியவைத்தது சூப்பர்ப் அக்கா... வாழ்த்துக்கள்..
நிதானித்த வேளை.....
ஹேமா நாகரீகநகரத்தின்
அதுவும் குளிருறையும் இடங்களும்...,
அழகானவரிகளுடன் உருகிஓடுகிறது
உங்கள் கவியில்....
இந்த அவசரஉலகில் தொலைந்துபோய்க்
கொண்டிருக்கும் சிலவற்றில்....
இந்த ஒரு சொல் நிதானமும் மறைந்து வருகிறது
நீங்களாவது நின்று,நிதானித்து கண்ணோட்டம்
விட்டீர்களே பரவாயில்லை ..நன்றி ஹேமா
அற்புதமான கவிதை.
அம்மாடீ.. கவிதையா இது..
\\சிந்திக்கச் சிந்திக்க
வெறுக்கும் வாழ்வின் உச்சம்.\\
அட்டகாசம்.
மிக அழுத்தமான பதிவு.
நல்ல கவிதை. முடிவு நன்றாக இருக்கிறது ஹேமா.
அருமையான கவிதைங்க...
இறுக்கிய குளிருக்குள்
முத்தங்களோடு இளசுகள்.//
சூப்பர் வரிகள்
எனக்கு மதுமேல் விருப்பமில்லை.
மதுமேல் மட்டும்.\\\\\\\\\
ஹேமா ....எங்கபோனாலும் இந்த
“மது” மயக்கத்தில்...
விடமாட்டார் போலும்...
உங்களுக்காவது தெரியுமா?
தயவுசெய்து ....
ஒரு அரைக் குவளையை மிச்சம் வை. என் பிணத்துக்காக, எனக்கு வேணாமா? :-)
நல்லாருக்குடா ஹேமா!
நறுக்குகள் ...
கண்களை மட்டுமல்ல ...
இதயத்தையும்
இடம் மாற
செய்கிறது .
இது ...
விரக்தியின்
வெளிப்பாடு
உங்களிடம் இருந்து
இதை எதிர்பார்க்கவில்லை
அனால் ஆழம் நிறைந்தது .
வெற்று செற்கள்
இல்லாதது
வலியின் கொடுமை
பட்டறிவினால் உணர்வது
செழுமையாக்குங்கள்
உங்களின்
சொல்லாடல்களை
அல்ல ...
இதயத்தை
இன்னும் இரும்பக்குங்கள் .
வலி...
வாலி போல்
மறைந்து கொள்ளும் .
உறைந்துபோன பனிக்குள்ளும்
உறைய மறுக்கும்
உறவுகள்தான் நம் வாழ்வு,
அன்பிற்கு ஆயிரம் அர்த்தமுண்டு
ஆயிரத்தில் அன்பை மட்டுமே
அர்த்தம் கொள்ளும்
தூர தேச பறவை நீயோ..
அருமை தோழி..
அடுத்த குவளையிலும் நிதானமாய்...!!!
அருமை ஹேமா...
கடைசிவரி.. கனம்!
வார்த்தைகள் வேகமாய்,சூடாய்,குமுறலோடு விழும் கவிதை இது..
எனக்குமொரு கோப்பை தாயேன்..
சிறிது உவர்ப்பு கூட்ட
உன்னிருதுளி கண்ணீரும்...
என்னிரு துளி கண்ணீரும்..
//இறப்பிலும் பிறப்பிலும்
உறவு தேடும் நாம் எங்கே
இவர்கள் எங்கே//
நல்ல வரிகள்.
ரதி...வாங்க முதல் கைவிஷேசம் உங்க கையால.சந்தோஷம் !
தவறு...கவிதையைத்தானே சொல்றீங்க !
ராமலஷ்மி அக்கா...நல்லது சந்தோஷம் !
தமிழ்...எப்பவும்போல உற்சாக வார்த்தைகள் !
ராஜா...வாங்க.எனக்கு மனசில அழுத்தின வரிகளைக் குறியிட்டது மகிழ்ச்சி !
சுந்தர்ஜி...உங்க சந்தோஷம் காற்றலையில் என் கையைத் தொடுது.என்னை படிச்சு வச்சிருக்கீங்கபோல.சியர்ஸ் !
சிபி...என்னைத் தொடர்ந்தும் ஊக்கப்படுத்தும் உங்கள்
வார்த்தைகள் சந்தோஷம் !
அரசு...நன்றி.குடி மருந்துபோல இருந்தால் கேடில்லை.
குளிருக்கும் சுகம் தரும் !
ஸ்ரீராம்...அரைக்குவளை முரணா.முழுசா எடுத்தா
மூக்கு முட்டிடுமே !
டாக்டர்....வாங்க வாங்க இந்தப் பக்கம் வந்ததே சந்தோஷம்.வாழ்வியல் கவிதை அதான் வந்திருக்கீங்கபோல !
தினேஸ்...எங்களுக்குள் இருக்கும் இன்னொரு மாயையைத்தான் தேடிக்கொண்டிருக்கிறோம்.ஆனால் எம் கண்முன்னால்தான் !
நசர்...ம் ம் ம்....என்னமோ உறைப்பா எனக்கு சொல்றாப்போல இருக்கு !
விடுதலை...முதல் வருகைக்கு நன்றி.விடுதலை வார்த்தை இனிக்கிறது !
வருணன்...வாங்க.அழகான எனக்குப் பிடிச்ச பெயரும்கூட.உங்க பக்கமும் வந்தேன்.தமிழால் நிறைஞ்சிருக்கு உங்க தளம்.இன்னும் வருவேன் !
ஏஞ்சலின்...எனக்குள் இருக்கும் இயல்பான அந்த மெல்லிய சோகம் தவிர்க்கவே நினைக்கிறேன்.அப்பப்போ எல்லா எழுத்துக்களிலும் தானாகவே நுழைந்துவிடுகிறதே.நான் என்ன செய்ய் !
வினோ...எத்தனை வருடங்கள் ஆனாலும் ஒட்டாது."அவர்கள் எங்கே என்கிறார்கள்.இப்போதும் இங்கில்லை என்கிறேன் ".
அருண் காந்தி..உங்கள் அன்புக்கு மிக்க நன்றி.என் ஆற்றாமைகள்தான் எழுத்துக்களாகிறது தோழரே !
சாரல்...நன்றி நன்றி தோழி !
நிரூபன்...வார்த்தைகளை அலசி ஆராய்ஞ்சு ரசிப்பீங்கபோல.
குளிர்கால அமைதிச் சாலையில் ஒருநாள்...அவ்வளவும்தான் !
ஃஃஃஃஃபிண ஊர்தியின் குரல்.
வாடகைப் பெண்ணும்
அன்றைய வாழ்வை ரசிக்கும் இளைஞனும்.ஃஃஃஃ
நிஜத்தை உணர்வ கலந்த வரைஞ்சிருக்கீங்கள் நன்றிகள்.....
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
காணாமல் போன 2 பதிவர்கள், மறைமுக பணம் பறிக்கும் தொலைத் தொடர்பு சேவையும்.
ஹேம்ஸ்...ரொம்ப உணர்வு பூர்வமான....வாழ்வின் இறுக்கமான த்வனி ஒவ்வொரு வரியிலும் தெரிகிறது...மனசு கனத்து போகிறது ஹேம்ஸ் உங்கள் ஒவ்வெரு கவிதையும்...கொஞ்சம் என்னை சிரிக்க தான் வைங்களேன் ஒரு கவிதையிலாவது...
அருமை.ரொம்ப நன்றாக இருக்கின்றது............
கவிதை அருமை, வாழ்த்துக்கள்!
good one. we are all always carrying our dead body everyday. nice hemu
அழுத்தமான ஆழமான கவிதை ஹேமா. வெளி நாட்டு வாழ்வில் பலரும் அனுபவிக்கும் உணர்வு உங்கள் கவிதைத் திறனில் கவிதையாக....
Well done.
அற்புதம் ஹேமா
வாழ்த்துக்கள்
விஜய்
இறப்பிலும் பிறப்பிலும்
உறவு தேடும் நாம் எங்கே
இவர்கள் எங்கே?
என்னை மிகவும் கவர்ந்த வரிகள்.......
அருமையான கவிதை
செயற்கை மின்மினியாய்...வாழ்வு. அருமை ஹேமா.
கவிதை அருமை ஹேமா.. வேறு இணைய இதழில் வந்துள்ளதா.. படித்ததுபோல் இருக்கு.. அதுதான் கேட்டேன்.
ஜடங்களான ஜனங்களுக்கு சரியான சாட்டையடி...
எல்லாருக்குமே ஒரு நிதானித்த வேளை தேவை தான் போலிருக்கிறது. அருமை ஹேமா!
வடையண்ணா...நன்றி.
தவறவிட்டதுக்கு வருத்தம் !
சத்ரியா...மதுவும் கவிதையாகும் கவிதையும் மதுவாகும் தெரியாதோ !ம்ம்..இரண்டு மாதங்களுக்குமுன் உயிரோசையில் வெளியான கவிதை !
ரமணி...நிறையவே ரசித்திருக்கிறீர்கள் வரிகளை.நன்றி !
சுப்பு ஐயா...மிக்க மிக்க நன்றி வருகைக்கு.உண்மைதான் முதுமையின் கைத்தடிகளில்
எத்தனை இளமை பாரங்கள் !
சுந்தரா...வாழ்வே விரக்தியாகிறது இங்கு சில காட்சிகள் !
வேலு...வாங்க.சிந்திப்பதால்தான் இன்னும் மனம் ஒருநிலையில்.
இல்லையென்றால்....!
பிரபு...மூளை சிந்தித்து சரி இப்படித்தான் என்றாலும் மனம் குறுகுறுக்கிறதே !
கலா...நிதானித்த வேளையில் நிதர்சனங்கள் நிறைய.நன்றி தோழி !
கலா...கன்னியில்லாத்தீவில மதுவும் கிடைக்காதுதானே !
குமார்...வாங்க.நன்றி நண்பரே !
லோகு...பயந்திட்டேன்.இது கவிதையான்னு திட்டுறீங்களோன்னு !
நித்திலம்...அன்புக்கு மிக்க நன்றி !
சித்ரா...அன்பு வருகைக்கு நன்றி !
பாரா அண்ணா...தைரியமா ஒரு குவளையே வச்சுக்கிறேன் உங்களுக்கும் எனக்குமா.பங்குக்கு அஷோக்...கு வராம இருந்தா சரிதான் !
தயா...இப்பவே மனம் இரும்புதான்.இன்னும் இறுகினால் நான் ஹேமாவாக இருக்கமுடியாது.ஒரு குட்டிக்கவிதையாகவே உங்கள் பின்னூட்டம்.சந்தோஷம் தயா !
சங்கர்...தூரதேசத்தில் என் தேகம் மட்டுமே.அழகான ரசிப்பு !
சீமான்...நிதானம் தவறும்வரை குவளை தப்பில்லை !
கதிர்...சந்தோஷம் வருகைக்கும் கருத்துக்கும் !
மோகண்ணா...கண்ணீரில் கரையும் உறவுகள் தேடித்தானே நிதானித்த வேளை.கைகள் கோர்த்துக்கொள்வோம் அன்போடு !
தூயவன்...நன்றி சகோதரா !
சுதா...வாங்கோ.சில உறுத்தல்கள்தானே வார்த்தைகளாகிறது !
ஆனந்தி...நானும் சிரிக்க வைக்கத்தான் பாக்கிறேன்.முடியலையே.உப்புமடச் சந்திப்பக்கம் போங்கோ.கொஞ்சம் சிரிக்கலாம் இப்ப !
சித்தாரா...முதல் வருகைக்கு நன்றி தோழி.சந்திப்போம் இனி !
கொச்சின் ரவி...நன்றி அன்பின் வருகைக்கு !
சுதா அண்ணா...இடையிடை வந்து ஹேமு சொல்லிப் போறீங்க.நீங்க இப்போ எங்கே ?
ஜெஸி...நீங்களும் இந்தக் கவிதைத் திணறலை நிச்சயம் அனுபவித்திருப்பீங்கதானே !
விஜய்...நன்றி.என்ன வேலைப்பளுவா...ரொம்ப நாளாச்சு பதிவுகள் கண்டு !
ஜெயா...சுகம்தானே.உங்களிடம் ஏதோ மன அழுத்தம் பார்க்கிறேன்.அமைதியாயிருங்கள் தோழி !
மாதேவி...அன்புக்கு நன்றி.வாழ்வு மின்மினிதானே !
தேனக்கா...உயிரோசையில் வந்த கவிதை.நன்றியக்கா கவனிப்புக்கு !
குறட்டைப்புலி...வெளிநாட்டு வாழ்க்கையே ஒரு ஜடம்போலத்தான்.என்ன செய்வது !
குட்டி...மறக்காம இடையிடை வந்து நிதானப்படுத்திட்டுப்போறீங்களா....
நன்றி நன்றி !
சதீஷ்குமார்...வருகைக்கு மிக்க நன்றி !
//முத்தங்களோடு இளசுகள்
இல்லாத பிள்ளைக்காய் மார்வலிக்க
அனுங்கியபடி ஒரு பெண்.
மாற்றுத்திறானாளிக்கு
உதவும் ஒரு ஆசிரியர்.
அன்றைய வாழ்வை ரசிக்கும் இளைஞனும்.
//
enakku oru santhegam .
ivargalum etho oru vagayil uravugalai thanae thedukirargal.
illaya ? vaalvil pidippu thane erpada vendum?
puriyavillai entru vaithukkollungal?
கொஞ்சம் லேட் ஹேமா. யதார்த்தம். இன்றைக்கு பெருநகரங்களில் மட்டுமல்ல, சிறு ஊர்களிலும் இதுதான் நிலை
அருமை ஹேமா.
கவிதை மனதைப் பிசைகிறது.
எப்படி சிந்திக்கிறீர்கள்..வாவ்
poignant!
Post a Comment