நான் அம்மா
சமைப்பதாய் சைகை !
அவன் அப்பாவாம்
கணணியும் கையுமாய் !
"என்னப்பா...எனக்கொரு சந்தேகம்."
"ம்...சொல்லு...கேளு எப்பவும்போல !"
"எப்பிடிப்...பிறந்தே...நீ ?!"
"அப்பாவும் அம்மாவும் சேர்ந்து பெத்தாங்க."
தெரிந்த அறிந்த தீர்மானமாய் !
வெளி வந்த விழி அதிசயிக்க...
"எப்பிடி...அப்பிடி !"
"ம்ம்ம்...சரி...சரி
நீ...எப்பிடிப்...பிறந்தே ?!"
"ஏஞ்சல் ஒன்று என்னை தூக்கிப்போய்
பக்குவமா பட்டில சுத்தி
பாடுற குயில் வாயில மாட்ட
அதுவும்...
பக்கத்தில உள்ள பூக்காட்டில
"பொத்"ன்னு போட்டும்விட
அழுதேனாம் நானும் கத்திக் கத்தி.
எடுத்திட்டு வந்தாளாம் அம்மா அப்போ !"
பலவாய் திரித்த கதைகள்
பருதியாய் உருள...
எக்கச்சக்கமாய் சிக்கிய
விழுங்கும் இடியப்பமாய்...
"ஓ...
இத்தனை கஸ்டமாய்
பிறந்தியா நீ!!!"
ஹேமா(சுவிஸ்)
Tweet | ||||
60 comments:
ம் ரசித்தேன் உமது வரிகளை...
வரிகள் அழகு . தமிழ்மண போட்டியில் வெற்றிப் பெற வாழ்த்துக்கள்
அழுமூஞ்சி கவிதைகளுக்கு இந்த குட்டி கதை எவ்வளவோ பரவாயில்லைங்க ;)
அழகு பாப்பா படம் போட்டு அழகிய கவிதை ஒன்று...
அருமை வரிகள் அனைத்தும்
விருது பெற வாழ்த்துகிறேன்...
இவ்வளவு சிக்கல் இருந்தும்…..நீங்கள்
சிக்கெடுக்காமல் போனால் எப்படிக் ஹேமா?
சிக்கிய சிசு சிக்கெடுக்காமலே……….உங்கள் கவி…………
குழந்தை பிறந்த கதை? ;-)
ரொம்ப சிரமமாத்தான் பிறந்ததாம்
வெற்றி பெற வாழ்த்துக்கள் ஹேமா...
ஹேமா,
இந்த (படத்தில் இருக்கும் குழந்தை) வயசிலயேவா சொல்லிக் கொடுக்கச் சொல்றீங்க.
ஹேமா,
ஒரு குறிப்பிட்ட வயதில் கட்டாயம் சொல்லிக்கொடுக்கத்தான் வேண்டும்.
நம் தலைமுறையிலாவது அது நிகழட்டும்.
அருமை வரிகள்
குட்டி கலாட்டா!
அருமை!
குழந்தை படம் அழகா... ஹேமாவின் கவிதை அழகா...
நல்லா இருக்குங்க
//
திமிழ்மண விருதில்
படிப்பிலக்கியம்...(ப்ரியம்சுழித்தோடும் வெளியில்)//
வாட் இஸ் திஸ் மச் ஸ்பெல்லிங் மிஸ்டேக்?
ரசித்தேன்
என் சிறியவன் சிறு வயதில் சொல்லுவான் - எனக்கு குழந்தை வேண்டாம்ப்பா "பப்பி" தான் பிறக்கவேண்டும் என்று !! இரண்டு மூன்று நாட்களுக்கு முன் கூட பெண்களை பற்றி ஏதோ கேட்டான். ஏதோ பரவாயில்லை அவனின் மிடில் ஸ்கூல் வயதில் இங்கே சொல்லி கொடுத்து விடுகின்றார்கள்.
//கணணியும் கையுமாய் !//
கணணியா? கன்னியா ? ஆவ்வ்வ்வ்
"ஏஞ்சல் ஒன்று என்னை தூக்கிப்போய்
பக்குவமா பட்டில சுத்தி
பாடுற குயில் வாயில மாட்ட
அதுவும்...
பக்கத்தில உள்ள பூக்காட்டில
"பொத்"ன்னு போட்டும்விட
அழுதேனாம் நானும் கத்திக் கத்தி.
எடுத்திட்டு வந்தாளாம் அம்மா அப்போ !"//
ஆஹா ஓஹோ பேஷ் பேஷ் ரொம்ப நன்னாயிருக்கு... எனக்கு கலா மாதிரியெல்லாம் கமெண்ட் போடத்தெரியாதுங்க ஹேமா கலா ஒரு கமெண்ட் ராணி....
விருதுமேல விருதா வாங்கி குவிக்க வாழ்த்துகள்
// D.R.Ashok said...
அழுமூஞ்சி கவிதைகளுக்கு இந்த குட்டி கதை எவ்வளவோ பரவாயில்லைங்க ;)//
அண்ணா அழுமூஞ்சிகிட்ட இருந்து அழுமூஞ்சி கவிதமட்டும்தான் வருமாம்
//சத்ரியன் said...
ஹேமா,
ஒரு குறிப்பிட்ட வயதில் கட்டாயம் சொல்லிக்கொடுக்கத்தான் வேண்டும்.
நம் தலைமுறையிலாவது அது நிகழட்டும்.//
ம்ம் போன தலை முறையிலயே சொல்லிக்கொடுத்திருந்தா எவ்ளோ நல்லாயிருந்திருக்கும் இன்னேரம் தாத்தா ஆயிருப்பேன் நான்.. ஆவ்வ்வ்வ்
அப்பா..வி.
அருமை வரிகள் தமிழ்மண போட்டியில் வெற்றிப் பெற வாழ்த்துக்கள்....
இதில் யார் குழந்தை ஹேமா?
அழகாய்...
ஆனாலும்
ஏங்க நிறையப் பிழைகள்?
”அப்பாவும் அம்மாவும் சேர்ந்து பெத்தாங்க.”
தெரிந்த அறிந்த தீர்மானமாய்!..விவரமான அப்பா.
வெளி வந்த விழி அதிசயிக்க....
”எப்பிடி...அப்பிடி!”...அப்பாவி அம்மா.
டூ மச்சா திங் பண்ணுற குட்டிப்பாப்பா படம்கொள்ளை அழகு ஹேமா..........
கஷ்டம் ஒரு வேளை வட மொழி சொல் என்பதாலா?
உங்களை விருது பெற வாழ்த்துகிறேன் என்று செந்தில் சொல்வது போல சொல்ல மாட்டேன்.
உங்க கூட்டமே அதை கொண்டு வந்து சேர்த்துடுவாங்க.
பாப்பா பாட்டு அழகு
வாழ்த்துக்கள் ஹேமா
விஜய்
விருதுகள் பெற நிறைய, நிறைய வாழ்த்துக்கள், ஹேமா.
ஜோதிஜி,
அது யாரு, "உங்க கூட்டமே"?? தயவு செய்து சொல்லிடுங்க.
வரிகள் அழகு . தமிழ்மண போட்டியில் வெற்றிப் பெற வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள்!
கவிதையில், இன்றைய நிலைமையை படம் பிடித்து காட்டுவதாக இருந்தது.
விருதுபெற வாழ்த்துக்கள். தட்டச்சுப் பிழையை சரி செய்யுங்கள். (தமிழ்மணம்)
நன்று ஹேமா
வாழ்த்துக்கள் ஹேமா...
கவிதை கேள்வி கேட்கிறது...
ஆமாம் சொல்லி தந்தால் தான் என்ன...?!
எல்லோரையும் யோசிக்க வச்சிடீங்க...
வாழ்த்துகள் ஹேமா
ரசிக்குபடியாக இருக்கு
\\"ஏஞ்சல் ஒன்று என்னை தூக்கிப்போய்
பக்குவமா பட்டில சுத்தி
பாடுற குயில் வாயில மாட்ட
அதுவும்...
பக்கத்தில உள்ள பூக்காட்டில
"பொத்"ன்னு போட்டும்விட
அழுதேனாம் நானும் கத்திக் கத்தி.
எடுத்திட்டு வந்தாளாம் அம்மா அப்போ !"\\
evlo azhaga sollirukeenga..
Gr8..
வாழ்த்துக்கள் ஹேமா..:)
அருமை அருமை
குழந்தை படம் அழகு
அழகான வரிகள்....
அழகான பார்வை அழகான வார்த்தையைத் தரும்.....
அழகான வார்த்தைகள்..... அழகை அழகாகப் பதிவுசெய்யும்....
இது ஓர் அழகான அப்ரோச் அக்கா.....வாழ்த்துக்கள் :)
தெள்ளத்தெளிவாய் ஒரு திகட்டா கவிதை..போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்
// ஒ! இத்த்னி கஷ்டமா பிறந்தியா நீ //
இல்லேடா கண்ணா !
எங்கம்மாவுக்கு
இஷ்டமா பிறந்தேன்டா நான்.
சுப்பு ரத்தினம்.
http://vazhvuneri.blogspot.com
http://movieraghas.blogspot.com
தமிழ்மண போட்டியில் வெற்றி பெற வாழத்துக்கள் அக்கா...
ஒரு அழகான வடிவம்.. மற்றும் க்யூட்நெஸ்... உங்களின் ரசனைக்குரிய கவிதைகளில் இதுவும் ஒன்று..
தமிழ்மணம் போட்டியில் வெல்ல வாழ்த்துக்கள் ஹேமா..
அழகான கவிதை ஹேமா..வாழ்த்துக்கள்...
//"ஓ...
இத்தனை கஸ்டமாய்
பிறந்தியா நீ!!!"//
ரசனை....
வெற்றிக்கு வாழ்த்துகள்...ஹேமா....
Nice topic Hema.
கவிதை சொன்ன விதம் அருமையாக இருந்தது. நல்ல வரிகள்.
ஏனோ இரண்டு முறை படிக்க வேண்டியிருந்தது.
//என் சிறியவன் சிறு வயதில் சொல்லுவான் - எனக்கு குழந்தை வேண்டாம்ப்பா "பப்பி" தான் பிறக்கவேண்டும் என்று !! //
aha...
தமிழ்மண போட்டியில் வெற்றி பெற வாழத்துக்கள்....
மகளே...நலமா. உன்னை நலமான்னு கேட்பதற்கே பயமா இருக்கு.
லவ்லி ஹேமா :)
வரிகளை இரசித்தேன்... விருது பெற வாழ்த்த்துக்கள் பல...
அன்பு நண்பர்கள் எல்லோருக்கும் நன்றியும் அன்பு வணக்கமும்.
அநேகமாக எல்லோருமே இந்தக் கவிதையின் கருவை உள்வாங்கி ஆமோதித்திருபதாய் உணர்கிறேன்.
செந்தில்,கார்த்திக்(LK) திட்டுவார்கள் என்று எதிர்பார்த்தேன்.அடக்கி வாசித்துட்விட்டுப் போய்விட்டார்கள்.ஆனால் சரியோ தப்போ சில வாதங்கள் சில விஷயங்களைத் தெளிவாக்கும்.
வசந்த்...விளங்கிச்சோ விளங்கலியோ கும்மியடிக்கணும்ன்னு நினைச்சு கும்மியடிச்சிட்டார்.
நசர் பாவம் காணவேயில்லை !
ஏனோ தெரியவில்லை
....மனக்குழப்பமோ பயமோ காரணம்...சில பல எழுத்துப்பிழைகள்.வசந்த்,கதிர் சொல்லியிருந்தார்கள்.
சத்ரியன்...விஷயத்தை மெல்லத் தொட்டுவிட்டுக் கிளறாமல் நகர்ந்துவிட்டார் !
மற்றும்படி எல்லோருமே ஆமோதித்துப் போனதாய் நினைக்கிறேன்.எல்லோருக்கும் இதமான நன்றி !
நிறைய நிறையக் காலத்துக்கு அப்புறம் அப்பாபோல நான் நினைக்கிற தாரபுரத்தான் ஐயா சுகம் கேட்டபடி வந்திருந்தார் என் பதிவுக்கு.மிக்க மிக்க சந்தோஷம் ஐயா.நான் நல்ல சுகம்.நீங்களும் சுகம்தானே.ஆனாலும் இந்த மகளைக் கண்டு பயம் என்கிறீர்களே...ஏன் ?சரியோ பிழையோ சொல்லுங்கள் ஏற்றுக்கொள்கிறேன்.அன்புக்கு நன்றி !
தமிழ்மண விருது கிடைக்க வாழ்த்திய எல்லோருக்குமோ நன்றி.அதே வாழ்த்து உங்கள் எல்லோருக்கும்தானே !
"ஓ...
இத்தனை கஸ்டமாய்
பிறந்தியா நீ!!!"// ஹாஹா..ஹா..
பொங்கல் நல் வாழ்த்துக்கள்!
subbu rathinam
www.vazhvuneri.blogspot.com
Post a Comment