வாழ்வில் இயல்பானாலும்
முட்டிய மதில்களே வாழ்வாய்
பகிர்ந்து கொடுக்க முடியாத
பங்கீடுகளாகி.
காக்கை கரைதலும்
பல்லி சொல்லுதலும்
பூனையின் குறுக்கு நடையும்
சமாதான வார்த்தைகளில்
தங்கிவிடும் விதிகளாய்.
எவருமில்லா தீவுகளில்
விதித்த விதிகள்
சில உயிரினங்களுக்கு
கீறிக் கிழித்த
பொத்தலான பைகள் போல
ஒழுகியபடி.
குறிப்பெடுக்கமுடியா
சில குறிப்பேடுகளின்
வழுக்கிய பக்கங்கள் போலவே
சிலரின் வாழ்வு!!!
ஹேமா(சுவிஸ்)
உயிரோசையில் முதன் முதலாக வந்த கவிதை !
Tweet | ||||
58 comments:
கவிதை நல்லா இருக்கு ஹேமா. உயிரோசையில் வந்ததற்கு வாழ்த்துக்கள்
ஃஃஃஃகாக்கை கரைதலும்
பல்லி சொல்லுதலும்
பூனையின் குறுக்கு நடையும்
சமாதான வார்த்தைகளில்
தங்கிவிடும் விதிகளாய்.ஃஃஃஃ
அருமையாக இருக்கிறது.. வாழ்த்துக்கள்...
/ குறிப்பெடுக்கமுடியா
சில குறிப்பேடுகளின்
வழுக்கிய பக்கங்கள் போலவே
சிலரின் வாழ்வு!!! /
பலரின் வாழ்வு அல்லவா ஹேமா..
கவிதை அருமை..
வாழ்த்துக்கள் ஹேமா உயிரோசையில் இடம் பெற்றதற்கு ;-)
\\குறிப்பெடுக்கமுடியா
சில குறிப்பேடுகளின்
வழுக்கிய பக்கங்கள் போலவே
சிலரின் வாழ்வு!!!\\
Perumbalanavargalin vazhvu.
romba arumaiya irukku.
வாழ்த்துக்கள் ஹேமா! மிகவும் சந்தோஷம்.
//காக்கை கரைதலும்
பல்லி சொல்லுதலும்
பூனையின் குறுக்கு நடையும்
சமாதான வார்த்தைகளில்
தங்கிவிடும் விதிகளாய்//
மிக அருமை ஹேமா.
உயிரோசையில் வெளிவந்தமைக்கு வாழ்த்துக்கள்.
//முட்டுதலும் மோதலும்
வாழ்வில் இயல்பு...//
ஹேமா,
இதை அறிந்துக் கொண்டாலே போதும்... வாழ்வைச் சிறப்பாய் வாழ்ந்து விடலாம்.
முத்தான வரி முத்தாய்ப்பாய் முடித்த வரி.
அழகா எழுதறீங்கப்பா.. வாழ்த்துக்கள்.
கவிதை நல்லா இருக்குங்க.
வாழ்த்துக்கள் உயிரோசையில் இடம் பெற்றமைக்கு.
நல்ல கவிதை ஹேமா....உயிரோசையில் வந்ததற்கு வாழ்த்துக்கள்.
\\குறிப்பெடுக்கமுடியா
சில குறிப்பேடுகளின்
வழுக்கிய பக்கங்கள் போலவே
சிலரின் வாழ்வு!!!\\
கவிதை நல்லா இருக்கு ஹேமா. உயிரோசையில் வந்ததற்கு வாழ்த்துக்கள்
//முட்டுதலும் மோதலும்
வாழ்வில் இயல்பானாலும்
முட்டிய மதில்களே வாழ்வாய்
பகிர்ந்து கொடுக்க முடியாத
பங்கீடுகளாகி.//
அருமை.
உயிரோசையில் வந்ததற்கு வாழ்த்துக்கள் அக்கா
இதுவரை எழுதிய உங்கள் மொத்த கவிதைகளில் ஆகச்சிறந்த கவிதை இது ...
அருமை
வாழ்க வளமுடன்.
குறிப்பெடுக்கமுடியா
சில குறிப்பேடுகளின்
வழுக்கிய பக்கங்கள் போலவே
சிலரின் வாழ்வு!!!
.....எத்தனை அருமையாக - தெளிவாக சொல்லி இருக்கீங்க.
//குறிப்பெடுக்கமுடியா
சில குறிப்பேடுகளின்
வழுக்கிய பக்கங்கள்//
Wow!
வழுக்கிய பக்கங்கள் போலவே
சிலரின் வாழ்வு!!!
எனக்கு புரிந்தது(?)
அதென்ன எல்கே மிகச் சரியாக ஒவ்வொரு முறையும் முதலில் வந்து நின்று விடுகிறார்.
கவிதை நல்லா இருக்கு ஹேமா. உயிரோசையில் வந்ததற்கு வாழ்த்துக்கள்
repeataiiiii
கவிதை அற்புதம். நல்ல வரிகள். உயிரோசை கவித்திருக்கும் உங்கள் க விதைகளால்
நல்லா இருக்கு ஹேமா
ஹேமா! நல்ல கவிதை. உயிரோசையில் உன் ஓசை ஒலித்தமைக்கு பாராட்டுக்கள்!
கலக்கம்மா! கலக்கு!
வித்தியாசமான பரிமாணம் ஹேமா.. 'வழுக்கிய பக்கம்' சொல்லாட்சி மிகவும் பிடித்திருக்கிறது.
ரொம்ப அழகான பரிமாணம் அக்கா...
//குறிப்பெடுக்கமுடியா
சில குறிப்பேடுகளின்
வழுக்கிய பக்கங்கள் போலவே
சிலரின் வாழ்வு!!!//
குறிப்பேடுகளின் வழுக்கிய பக்கங்களில் குறிப்பெடுக்கமுடியவில்லை!!! அதுபோல சிலரின் வாழ்க்கை!!!
இந்த பத்தியில் ஆழம் இருக்கு... கருத்துப் புதையலும் இருக்கு என்று உணர்ந்தபின் மீண்டும் ஒருமுறை படித்துப்பார்த்தேன்.... தலைப்பையும் புரிந்துகொள்ள முடிந்தது....
அருமைக்கா.... எவ்வளவு யோசிக்க வைக்கிறது "வழுக்கிய பக்கங்கள்???"
"தி பெஸ்ட் ஆஃப் ஹேமா அக்கா" என்று என்னைக் கேட்டால் இந்தக் கவிதையைத்தான் இப்போதைக்கு பிக் செய்வேன் அக்கா.... ஃபைவ் ஸ்டார்ஸ்!!!!!
கவிதையும் வாழ்க்கையும் அழகான புதிர்கள்...
வாழ்த்துக்கள் அக்கா :)
உங்கள் வாசகன்,
பிரபு எம்
//எவருமில்லா தீவுகளில்
விதித்த விதிகள்
சில உயிரினங்களுக்கு
கீறிக் கிழித்த
பொத்தலான பைகள் போல
ஒழுகியபடி.//
அருமையான வார்த்தை கோர்ப்புகள்
வாழ்த்துகள்ங்க ஹேமா!
எவருமில்லா தீவுகளில்
விதித்த விதிகள்
சில உயிரினங்களுக்கு
கீறிக் கிழித்த
பொத்தலான பைகள் போல
ஒழுகியபடி.///
நன்றாக வந்திருக்கிறது.இன்னும் கொஞ்சம் எழுதியிருக்கலாமோ :)
//குறிப்பெடுக்கமுடியா
சில குறிப்பேடுகளின்
வழுக்கிய பக்கங்கள் போலவே
சிலரின் வாழ்வு!!!//
கவிதையில் பொய் இருந்தா அழகு என்பார்கள் உங்கள் கவிதை உண்மை மட்டுமே பேசுகிறது..
//உயிரோசையில் முதன் முதலாக வந்த கவிதை //
வாழ்த்துகள் ஹேமா
முட்டி மோதும் இயல்பு, சமாதான வார்த்தை விதிகள், விதிகள் பொத்தலான பைகள் போல, இவை எல்லாவற்றையும் விட கடைசி வரிகள்..குறிப்பாக 'வழுக்கிய பக்கங்கள்' ....அருமை ஹேமா.
கவிதை வரிகள் அழகு
உணர்வுடன் உள்ளது
மனிக்கவும் ஹேமா அக்காச்சி நான் உங்க பக்கத எப்படி மிஸ் பணிணன் எண்டு தெரியல உணர்வுடனான் கவிதைகள் போடிருகிங்க கணால கண்ணீர் வருது
வாழ்த்துக்கள் ஹேமா :)
கவிதை நல்லா இருக்கு ஹேமா.
உயிரோசையில் இடம் பெற்றதற்கு வாழ்த்துக்கள்...
கவிதை அருமை.........
அருமையான கவிதை...உயிரோசையில் வெளிவந்ததற்கும் சேர்த்து இரட்டை வாழ்த்துக்கள் ஹேமா...
//குறிப்பெடுக்கமுடியா
சில குறிப்பேடுகளின்
வழுக்கிய பக்கங்கள் போலவே
சிலரின் வாழ்வு//
சரளமாய் விழுந்த உவமையில் அசந்தேன் ஹேமா.
தேற்றவும் தேற்றப்படவும் வாழ்க்கை. இல்லையா ஹேமா?
அழகிய சொல்லாடல் ஹேமா...ரசித்து படித்தேன்...உயிரோசையில் இடம் பெற்றதிற்கு வாழ்த்துக்கள்...
தமிழ் உதயம் கதையைப் படித்து விட்டு இங்கே வந்தேன் - இப்போது தான் உயிரோசை விவரத்தைக் கவனித்தேன். பாராட்டுக்கள். கவிதையைப் பலமுறை படிக்க முடிகிறது.
அருமையா இருக்கு.வாழ்த்துக்கள்
//எவருமில்லா தீவுகளில்
விதித்த விதிகள்
சில உயிரினங்களுக்கு
கீறிக் கிழித்த
பொத்தலான பைகள் போல
ஒழுகியபடி.//இதயத்தை ...
நெருடும் வார்த்தைகள் ...
இப்படியும் மனித வாழ்வு ...
சிலருக்கு ...
சுகம்
சிலருக்கு
சோகம் .
சோகம் என்றும்
நிரந்தரமல்ல .....
பலரின் வாழ்க்கை அப்படியே.. ஜி... :)
//குறிப்பெடுக்கமுடியா
சில குறிப்பேடுகளின்
வழுக்கிய பக்கங்கள் போலவே
சிலரின் வாழ்வு!!!//
மனதும் கனக்கிறது.
கவிதை நல்லா இருக்கு அக்கா.உயிரோசையில் வந்ததற்கு வாழ்த்துக்கள்
Supper. Hema akka
athanai varigalum nitharsanamana unmai. Vazhthukkal. :-)
நல்லா இருக்குங்க..
வலிகளை சுமந்த வரிகள்...
வாழ்த்துக்கள் உயிரோசையில் வெளிவந்தமைக்கு..
மிக அருமை ஹேமா!
வழுக்கிய பக்கங்களின் வலி :(
//காக்கை கரைதலும்
பல்லி சொல்லுதலும்
பூனையின் குறுக்கு நடையும்
சமாதான வார்த்தைகளில்
தங்கிவிடும் விதிகளாய்.//
உண்மை வரிகள்...
கவிதை அருமை தோழி....
கவிதை அருமை ஹேமா..
எங்கோ நான் இருந்தாலும் நினைக்க வைக்கிறீங்க உங்க கவிதையின் பலமாகத் தான் இருக்கும் அந்த நினைவு..
உணர்வை இக்கவிதையில் சிந்திய விதம் இந்த உணர்வோடு என்னை வேறு ஒரு கவிதை எழுத நினைத்திருந்த உந்துதலை தடுத்தது அதான் ஹேமா சொல்லிட்டாங்களே என்ற நிறைவோடு. மனம் படித்து எழுதியதை போல இருந்தது ஹேமா...
நல்லா இருக்குங்க ஹேமா அக்கா.. வாழ்த்துகள்..! :)
உணர்வைத் தாங்கிப் பிடிக்கும் உயர்ந்த எழுத்துக்கள் வாழ்வின் கலையும் பக்கங்களின் அலைகழிதல் பற்றி அழகாய் ஆழமாய் படம் பிடிக்கிறீர்கள்........... நன்றி..... ஹேமா...... உங்கள் நான் வைத்த வினாக்கள்....??? விடை இல்லாமல் இன்னமும் தொக்கியே நிற்கிறது.........
அருமை. உயிரோசையில் வந்ததற்கு வாழ்த்துக்கள் ஹேமா.
குறிப்பெடுக்கமுடியா
சில குறிப்பேடுகளின்
வழுக்கிய பக்கங்கள் போலவே
சிலரின் வாழ்வு!!!
உண்மைதான் தான் தோழி.......
கவிதை வரிகள் பேசுகின்றன
முட்டிய மதில்களே வாழ்வாய்...
சில குறிப்பேடுகளின் வழுக்கிய பக்கங்கள் ...
உயிர் நிரந்தரமல்ல... விதியும்!
கவிதை அசத்தல்!
கார்த்திக்...எப்பிடி எப்பவும் முதலாவதா ஓடி வறீங்கன்னு எல்லாரும் கேக்கிறாங்க.சொல்லுங்க!
சுதா...எங்களூர்க் காற்றோடு வரும் சகோதரா நன்றி நன்றி அன்புக்கு !
வினோ...பலரின் வாழ்வின் சாட்சியம்தான் இந்தக் கவிதை எண்ணம் !
ஆர்.வி.எஸ்...நன்றி அன்புப் பாராட்டலுக்கு !
லோகு...பலரின் வாழ்வின் அடையாளம்தான் இந்தக் கவிதை !
மீனு...இந்தக் கவிதையையும் ரசித்தீர்களா .நன்றி !
ராமலஷ்மி அக்கா...உங்களைப் போன்றார்களின் ஊக்கம் தரும் வார்த்தைகள்தான் எல்லாவற்றிற்கும் !
சத்ரியா...துன்பம் வருவதும் போவதும் இயல்பென்று உணர்ந்துகொண்டாலும் அது வரும் சமயங்களில் உடைந்துபோகிறோமே !
தமிழ்...தொடரும் அன்புக்கு நன்றி.உங்கள் பதிவுகளும் நாலும் சொல்லித் தருகிறதே !
சாரல்...எண்ணங்கள்தான் எழுத்தாய் வடிகிறது தோழி !
அன்பு...எனக்கும் சந்தோஷம் உயிரோசையில் வந்ததுக்கு !
நித்திலம்...நன்றி நன்றி தோழி !
அம்பிகா...சில வலிக(ள்)ளை
இறக்க இதுவும் ஒரு வழி !
சி.கார்த்திக்...இனிதான அன்புக்கு நன்றி சகோதரா !
செந்தில்...உங்கள் பாராட்டுதல் என்னை உற்சாகப்படுத்துகிறது.நன்றி !
ராஜவம்சம்...அன்பான வாழ்த்து மனதை இளகச் செய்கிறது !
சித்ரா...எப்பவும்போல அழுவாச்சிக் கவிதைதான்.உங்களைப்போலச் சிரிக்க வைக்கத் தெரியவில்லையே தோழி !
பிரசன்னா...இப்பல்லாம் உங்களுக்கு விளங்கிற மாதிரி கவிதை எழுதுறேனா நான் !
ஜோதிஜி...விளங்கினாச் சரி.
எல்.கே வேலை செய்யுமிடம் கணணிப் பகுதியென்று நினைக்கிறேன்.அதுதான் அவரால் பதிவுகளைச் சீக்கிரமே பார்க்க முடிகிறது !
பித்தரே...ஹேமு சரியாத்தானே கவிதை எழுதிட்டு வரேன்.
வாழ்த்துக்கு நன்றி !
றமேஸ்...அற்புதம் க விதைகள் பின்னூட்டம் !
ராதாகிருஷ்ணன் ஐயா...தொடர்ந்த அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி !
மோகண்ணா...ஊக்கம் தர நீங்கள் எல்லாரும் இருக்கிறப்போ எனக்கென்ன குறை !
அப்பாஜி...வாழ்வு புத்தகமாகும்போது அங்கு வழுக்கிய பக்கங்களும் இருக்கலாம்தானே !
பிரபு...அன்பான சகோதரனாய் என் பக்கம் உலவுகிறீர்கள்.உங்கள் பாராட்டுக்களுக்கு நான் தகுதியானவளா தெரியவில்லை.
என்றாலும் அன்பு மெய்சிலிர்க்க வைக்கிறது !
வசந்து...நிறைய நாளுக்கப்புறம்
என் பதிவின் பக்கங்களில்.
சந்தோஷமாயிருக்கு.கோவம் போயிருச்சுப்போல."ங்" இவ்ளோ அழுத்தமாயிருக்கு !
நேசன்...உயிரோசையில் வந்த முதல்நாளே உங்கள் வாழ்த்துத்தானே முதலில் கிடைத்தது.உங்கள் ஆதங்கத்தை அன்றே சொன்னீங்க.
இன்னும் முயற்சிக்கிறேன்.நன்றி !
ரியாஸ்...கவிதைகள் பொய்யென்று சொன்னாலும் எல்லாக் கவிதைகளும் பொய் சொல்லாது !
நசர்...என்ன ம்ம்ம்.கும்மியடிக்க வார்தைகள் வரவில்லையோ தங்களுக்கு !
ஞானம்...வேலைப்பளுவா.என்னாச்சு அடிக்கடி காணமுடியிறதில்ல உங்களை.என்றாலும் மறக்காம இருக்கீங்க.நன்றி !
ஸ்ரீராம்...கவிதையின் சாரத்தையே பின்னூட்டமாகப் பதிவு பண்ணியிருக்கீங்க.நன்றி !
யாதவக் கிழவரே....அடிக்கடி மறந்துதான் போறீங்க இந்த அக்காச்சியை.ஊர்ல இருந்து வருகிற உங்களைக் காணும்போது எனக்கு எவ்வளவு சந்தோஷம் தெரியுமோ.
அதை நான்தான் தவறவிடுகிறேன்.
என் ஊர்க்காற்று இங்க குறைவாகவே அடிக்கிறது !
பாலா...வாழ்த்துக்கு நன்றி நன்றி !
குமார்...நன்றி அன்புக்கு !
இளம் தூயவன்...எவ்ளோ நாள் ஆச்சு உங்களைக் கண்டு.சுகம்தானே !
ராஜா...இரட்டை வாழ்த்து
மிகவும் சந்தோஷம் !
சுந்தர்ஜி...தேற்றினாலும் நாங்கள்தான் தேற்றிக்கொள்வதும் நாங்கள்தான்.வாழ்க்கை தூர நின்று எங்களை ரசிக்கும் !
கௌசி...நன்றி தோழி அன்புக்கு !
அப்பாஜி...திரும்பவும் தரும்
உங்கள் அன்பும் அக்கறையும்
மனதில் படிகிறது !
உழவன்...எங்கே அடிக்கடி காணமுடியிறதில்ல.பதிவுகளும் குறைவு.சுகம்தானே !
தயாநிதி...என் சகோதரனின் பெயரும் இதுவே.சின்னப்பிள்ளையாய் இருந்த காலங்களில் அழுவார் தன் பெயர் பெண்ணின் பெயராய் இருப்பதாக.
பிறகு என் அம்மம்மா சொல்லுவா அது சிவனின் பெயர்.அது சாமிப்பெயர் என்று.முதல் வருகைக்கு நன்றி.உங்கள் இயற்கை மருத்துவக் குறிப்புகள் அருமை !
அஷோக்...சுகம்தானே இப்போ.சிலரின் வாழ்வு அல்ல பலரின் வாழ்வு இப்படித்தான் !
நாஞ்சில் மனோ...புது அறிமுகம்.நன்றியும் சந்தோஷமும் !
பிரஷா...நன்றி சகோதரி !
சிந்தியா...அக்கா என்றீர்கள்.அன்பை உணர்கிறேன் சகோதரி.தொடருங்கள் !
அரசன்...நன்றி வருகைக்கும் வாழ்த்துக்கும் !
குட்டி...கொஞ்சம் வலி கொஞ்சம் சுகம்தானே வாழ்க்கையே !
கவிநா...எங்கள் வேதனைகள் துன்பங்களை விதிகள் மேலேயும் சகுனங்கள் மேலேயும்தானே போட்டுவிடுகிறோம் பலவேளைகளில் !
இர்ஷாத்...நன்றி நண்பரே !
தமிழரசி...உங்கள் கவிதையை நான் தடுத்துவிட்டேனா.அப்படியல்ல தோழி.எழுதணும் வேற ஒரு கண்ணோட்டத்தோட !
சிவாஜி...எங்க உங்க அருமையான காதல் கவிதைகளை இப்பல்லாம் ரசிக்க முடியிறதில்ல.எழுதுங்க !
தமிழ்க்காதலன்...நிறைவான பின்னூட்டம்.மனம் மகிழ்கிறது.
மன்னிக்கணும்.போன மூன்று பதிவுகளிலும் தேடினேன் உங்கள் கேள்வி என்ன என்று.உண்மையில் தெரியவில்லை.என்ன கேட்டிருந்தீங்க?தமிழனுக்கு தமிழன்தானே எதிரின்னு கேட்டமாதிரி இருக்கு.அது சரிதானே.
எட்டப்பர் கூட்டம்ன்னு
ஒரு கூட்டமே இருக்கே !
மாதேவி...நன்றி.சுண்டைக்காய் குழம்பை ஞாபகப்படுத்தி நான் இங்க ஒவ்வொரு சைனீஸ் கடை கடையாக ஏறி இறங்குறேன் !
தினேஸ்...அன்பான பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி !
நிலா...விதி நிரந்தரமல்லவென்று மூளை நினைச்சாலும் மனம் விதியைத்தானே சாடுகிறது !
அரசு...இருங்க இருங்க.கடைசி பஸ்ஸில ஏறி வந்து ஒரு அசத்தலோ !
கவிதை நல்ல இருக்கு நன்றி
Post a Comment