*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Tuesday, December 14, 2010

தேவை ஒரு மரணம்...

மரணம்....
அறிதல் எப்படி
அதன் வலி
கடைசி நிமிடத் தவிப்பு !

இறந்தபடிதானே வாழ்வு இப்போ.
இதைவிட வலியாய்
இல்லை...
இதைவிட சுகமாய் அது !

எனக்குள் இருந்தபடி
என்னைக் கொல்ல
உனக்கு மட்டுமே முடிகிறது.
உன்னால் மிஞ்சியதை
கொன்றுவிட
நீயேதான் வசதி
கொன்றுவிடு
ஒரு மரணம் பார்க்க !

மரப்பாச்சிக் கட்டையை எரிக்க
மலங்க மலங்க மறுகுகிறாய்.
ஓ...பாவம் பார்க்கிறாயோ
பாவம் என்கிற
வார்த்தையையே வெறுக்கிறேன் நான்!

வாழும் ஆசையில் இழவு விழுத்திய நீ
எதற்காக யோசிக்கிறாய்
நடிக்காதே சொல்வதைச் செய் !

ம்ம்ம்...நடத்து
ஏதாவது செய்
மரணம் தா !

எரித்தலே பிடிக்கும்
என்றாலும்...
புதைப்பதும் எரிப்பதும்
உன் வசதி.
புழு மேய்ந்து
கூச்சம் தராத அமைதி தா !

எதற்கும்...
இந்தப் பதிவைப்
பிரதி செய்து கொள்கிறேன்.
எனக்கும் உனக்கும்
ஒரு சாட்சியாய்!!!

ஹேமா(சுவிஸ்)

61 comments:

logu.. said...

ah..ah... vadai.. puduchutomla...

logu.. said...

padichutu varom...

sathishsangkavi.blogspot.com said...

//எரித்தலே பிடிக்கும்
என்றாலும்...
புதைப்பதும் எரிப்பதும்
உன் வசதி.
புளு மேய்ந்து
கூச்சம் தராத அமைதி தா !//

அருமையான வரிகள்...

logu.. said...

\\இறந்தபடிதானே வாழ்வு இப்போ.
இதைவிட வலியாய்
இல்லை...
இதைவிட சுகமாய் அது !\\

Maranam eppothum sugamana onruthan purinthavargalukku.

Valigal thangiya varigal.
valikkathan seiginrana.
( Note: Vadai adicha santhosam pochhhhhhhhh..)

ப்ரியமுடன் வசந்த் said...

//மரணம்....
அறிதல் எப்படி
அதன் வலி
கடைசி நிமிடத் தவிப்பு !//

சுடுகாட்டுக்குப்போய்
செத்தவனை எழுப்பி கேட்டுப்பாருங்களேன்!

T.V.ராதாகிருஷ்ணன் said...

அருமையான வரிகள்...

ப்ரியமுடன் வசந்த் said...

//இறந்தபடிதானே வாழ்வு இப்போ.
இதைவிட வலியாய்
இல்லை...
இதைவிட சுகமாய் அது !//

ஓஹ் செத்து செத்து விளையாடறீங்களோ?

ப்ரியமுடன் வசந்த் said...

//எனக்குள் இருந்தபடி
என்னைக் கொல்ல
உனக்கு மட்டுமே முடிகிறது.
உன்னால் மிஞ்சியதை//

அவனை போலீஸ்ல பிடிச்சு குடுத்துடலாம் டோண்ட் வொர்ரி

Karthick Chidambaram said...

அருமையான வரிகள்...

ப்ரியமுடன் வசந்த் said...

//கொன்றுவிட
நீயேதான் வசதி
கொன்றுவிடு
ஒரு மரணம் பார்க்க !//

ஆச தோச அப்பள வட.. உசிரு அம்புட்டு ஈசியா போச்சா?

Anonymous said...

//எனக்குள் இருந்தபடி
என்னைக் கொல்ல
உனக்கு மட்டுமே முடிகிறது.//


வலியான வரிகள்.

ப்ரியமுடன் வசந்த் said...

//மரப்பாச்சிக் கட்டையை எரிக்க
மலங்க மலங்க மறுகுகிறாய்.
ஓ...பாவம் பார்க்கிறாயோ
பாவம் என்கிற
வார்த்தையையே வெறுக்கிறேன் நான்!//

அய்யோ பாவம்..

ப்ரியமுடன் வசந்த் said...

//வாழும் ஆசையில் இழவு விழுத்திய நீ
எதற்காக யோசிக்கிறாய்
நடிக்காதே சொல்வதைச் செய் !//

டேய் எட்றா அந்த துப்பாக்கிய...

ப்ரியமுடன் வசந்த் said...

//எரித்தலே பிடிக்கும்
என்றாலும்...
புதைப்பதும் எரிப்பதும்
உன் வசதி.
புளு மேய்ந்து
கூச்சம் தராத அமைதி தா !//

இப்படியெல்லாம் பயப்பட்டா எப்டி சாக முடியும்?

ப்ரியமுடன் வசந்த் said...

//எதற்கும்...
இந்தப் பதிவைப்
பிரதி செய்து கொள்கிறேன்.
எனக்கும் உனக்கும்
ஒரு சாட்சியாய்!!!
//

ஸ்ஸப்பா எதுக்கு சொர்க்கதுக்கு போய் எமதர்மராஜன்கிட்ட சாட்சியா காட்றதுக்கா?

ப்ரியமுடன் வசந்த் said...

கும்மியடுச்சுட்டேன்

இனி அப்றமா பேசறப்போ ஏன் கமெண்ட் போடலைன்னு கேப்பீங்க?

VELU.G said...

நல்ல கவிதை

ரசித்தேன்

போளூர் தயாநிதி said...

//இறந்தபடிதானே வாழ்வு இப்போ.
இதைவிட வலியாய்
இல்லை...
இதைவிட சுகமாய் அது !

எனக்குள் இருந்தபடி
என்னைக் கொல்ல
உனக்கு மட்டுமே முடிகிறது.
உன்னால் மிஞ்சியதை
கொன்றுவிட
நீயேதான் வசதி
கொன்றுவிடு
ஒரு மரணம் பார்க்க !//
நல்ல ஆக்கம்
பாராட்டுகள் மைகொண்டு
எழுதியதாக தெரியவில்லை ...
கண்ணீர் மிச்சம் இருக்கிறதா?

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ம் ...

தமிழ் அமுதன் said...

///இதைவிட சுகமாய் அது !///


எனக்கும் அப்படிதான் தோன்றுகிறது...!

செத்த பிறகு ஒரே ஒரு பதிவு போட
வரம் கிடைச்சா டீடெய்லா விளக்கிடலாம்...!;;))

தூயவனின் அடிமை said...

ஓவ்வொருவரும் ஒரு நாள் மரணத்தை தழுவியாக வேண்டும்.
அந்த மரணம் நிச்சயமாக வேதனை அற்றதாக இருக்க வேண்டும்.
மரணிப்பதை கவலை பட கூடாது.
தவறு செய்பவனே கவலை படவில்லை.
நாம் ஏன் கவலை பட வேண்டும்.
நம் எண்ணம் போல் வாழ்க்கையும் மரணமும் அமையும்.
என்ன சகோதரி மரணத்தை பற்றி எழுதி , எல்லாரையும்
கவலை பட வைத்து விட்டீர்கள்.

Thenammai Lakshmanan said...

வரிக்கு வரி வலித்தது ஹேமா..

சத்ரியன் said...

//ம்ம்ம்...நடத்து
ஏதாவது செய்
மரணம் தா !//

கேட்பதற்கு எவ்வளவோ இருக்கிறது,இவ்வுலகில்!

மரணம் கேட்கிறாய் நீ.

மரணம் என்பது
மலர்வனம் இல்லை.
அது மலர் நிலம்...
சுகம் மட்டும் விளையும் இடம்.

வினோ said...

/ வாழும் ஆசையில் இழவு விழுத்திய நீ
எதற்காக யோசிக்கிறாய் /

:(

ஒவ்வொரு வரியிலும் வலி ஹேமா :)

அன்பரசன் said...

//ஏதாவது செய்
மரணம் தா !//

வலிமிகு வரிகள்.

sakthi said...

என்னாச்சு ஹேமா :((

சோகமாய் ஒரு கவிதை

பித்தனின் வாக்கு said...

நல்லா இருக்கு, கவிதை ஹேமு.

Jerry Eshananda said...

Take care.

அப்பாதுரை said...

கடைசி வரிகள் அற்புதம்!

'ஒரு நாளைக்கு எத்தனை முறை இறக்கிறேன்' என்று பட்டியலிட்டு எழுதியிருந்த இன்னொரு பெண் பதிவரின் வரிகள் நினைவுக்கு வந்தன - இறந்தபடிதானே வாழ்வு!

ப்ரியமுடன் வசந்த் கமெந்ட் படித்துச் சிரித்து உருண்டு கொண்டிருக்கிறேன்.

Unknown said...

மரணத்தின் பிரதிகளை சேகரிக்கதுவங்கும்
மனதின் கற்பனைகளில் வழிகிறது ஒரு தீராத வலி
இக்கவிதை வழியாக...

Chitra said...

வாழும் ஆசையில் இழவு விழுத்திய நீ
எதற்காக யோசிக்கிறாய்
நடிக்காதே சொல்வதைச் செய் !


.....மனதின் வலி தெரிகிறது.

ஜெயா said...

இறந்தபடிதானே வாழ்வு இப்போ.
இதைவிட வலியாய்
இல்லை....
இதைவிட சுகமாய் அது!

வலி நிறைந்த வரிகள்......

தமிழ் உதயம் said...

ஒரு காதலின் வலியை இதை விட அழகாக, உண்மையாக சொல்ல முடியுமா.

Thanglish Payan said...

Wow.. Superb poet..

அம்பிகா said...

இத்தனை வலி ஏன் ஹேமா?
நல்ல கவிதையே என்றாலும்:

thamizhparavai said...

ரொம்ப நாள் கழிச்சு வந்தா சோகக்கவிதை போட்டிருக்க ஹேமா...
:(

‘புளு மேய்ந்து’ -திருத்திவிடுங்கள் ஹேமா... ‘புழு மேய்ந்து’

சீமான்கனி said...

//எரித்தலே பிடிக்கும்
என்றாலும்...
புதைப்பதும் எரிப்பதும்
உன் வசதி.
புளு மேய்ந்து
கூச்சம் தராத அமைதி தா !//

ஏன்??? எதுக்கு....குழந்தை நிலாக்கு அப்படி என்ன ஆச்சு!!?....ஏனோ....காரணம் தேவை...

Prabu M said...

மரணத்தை அனுபவிச்சு எழுதும் கைகளில் நீளமாய் ஆயுள்ரேகை.... அழுவதா சிரிப்பதா??

"இதுக்கு முன்னாடி செத்திருக்கீங்களா?"ன்னு கேட்டால் "நிறைய தடவை ஆனா உயிரோட.." என்று சொல்வதுபோல் இருக்குக்கா....

உங்கள் உணர்வுகள் புரியுதுக்கா... ஆனா பதிலை
கொன்றுகுவித்துப் புதைக்க‌ அகழ்ந்தாலும் தாங்குவதே தொழில் என்று பார்த்துக்கொண்டிருக்கும் பூமித்தாய்தான் சொல்ல வேண்டும்...

அவ‌ள் அழுதால் நில‌த்த‌டி நீர் வ‌ற்றிவிடும்...
சிரித்தால் உல‌க‌மெங்கும் மர‌ண‌ ஓல‌ம்....
ஒருவேளை செத்துப்போய்ட்டாளோ??

yarl said...

//எதற்கும்...
இந்தப் பதிவைப்
பிரதி செய்து கொள்கிறேன்.
எனக்கும் உனக்கும்
ஒரு சாட்சியாய்//

மனதை எதோ ஒன்று பிசைகிறது ஹேமா

Bibiliobibuli said...

என் மரணத்தை இப்படி வருந்தி அழைக்க வேண்டும்.!!! புரியவில்லை.

நிலாமதி said...

ஏனம்மா இந்த வலி .............வாழ்க்கையே வலி கொண்டது தானே . அவரவர் கணக்கு (பாவ புண்ணிய)முடிக்கும் வரை,
எம தர்மன் அழைப்பதில்லை யாம் . வாழும் வரை போராடு.

தமிழ்க்காதலன் said...

ஹேமா என்னாச்சு? இதை எழுத்து எனக் கொள்வதா? அனுபவித்த வலி எனக் கொள்வதா?படிக்கும் எனக்கே இதயம் கிழியும் சப்தம் கேட்கிறது என்றால் உங்களுக்கு.....?! நிறைய யோசிக்க வைக்கிறீர்கள். அன்பு எங்கே தவறாய் புரியப் படுகிறது...? அவரவர் சிந்தனைக்கேற்ப எதிர்ப்பார்ப்புகள் கூடுகிற போதுதான் அன்பில் சிக்கல் விழுகிறது. எதிர்ப்பார்ப்பில்லாத அன்பு உன்னதமானது. எது எப்படியோ நீங்கள் சொல்ல நினைத்தை சாட்டையால் அடித்து சொல்லிவிட்டீர்கள். வலிக்கிறது ஹேமா.

# மரப்பாச்சிக் கட்டையை எரிக்க
மலங்க மலங்க மறுகுகிறாய்.
ஓ...பாவம் பார்க்கிறாயோ
பாவம் என்கிற
வார்த்தையையே வெறுக்கிறேன் நான்!

# நடிக்காதே சொல்வதைச் செய் !

ம்ம்ம்...நடத்து
ஏதாவது செய்
மரணம் தா !

எரித்தலே பிடிக்கும்
என்றாலும்...
புதைப்பதும் எரிப்பதும்
உன் வசதி.
புழு மேய்ந்து
கூச்சம் தராத அமைதி தா !

எதற்கும்...
இந்தப் பதிவைப்
பிரதி செய்து கொள்கிறேன்.
எனக்கும் உனக்கும்
ஒரு சாட்சியாய்!!!

வலியின் ரணங்களில் வழியும் வார்த்தைகள்.

Anonymous said...

//புழு மேய்ந்து
கூச்சம் தராத அமைதி தா //
இவ்வரிகளின் வழியே எகிறும் வலியின் கொடூரம் :(

meenakshi said...

அருமையான கவிதை!
இறந்தபடி வாழ்வதை விட இறப்பதே மேல்.

சி.பி.செந்தில்குமார் said...

டைட்டிலும் கவிதையும் டாப்

Raja said...

கனமான கவிதை...வாழ்த்துக்கள் ஹேமா...

arasan said...

வலிகள் நிறைந்த வரிகள்...

நல்லா இருக்குங்க

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

//எரித்தலே பிடிக்கும்
என்றாலும்...
புதைப்பதும் எரிப்பதும்
உன் வசதி.
புளு மேய்ந்து
கூச்சம் தராத அமைதி தா !//

அருமையான வரிகள்...அக்கா

"உழவன்" "Uzhavan" said...

// எனக்குள் இருந்தபடி
என்னைக் கொல்ல
உனக்கு மட்டுமே முடிகிறது.//

வெகு அழகு

ஆனந்தி.. said...

ஹேமா...என்ன ஒரு உணர்சிகரமான கவிதை...குமுறல்...எனக்கு அந்த போட்டோ கூட ரொம்ப புடிச்சு இருந்தது...நல்லா இருக்குங்க..

ஸ்ரீராம். said...

எரிப்பதிலும் புதைப்பதிலும் கூட எதிராளியின் விருப்பம்! மரணத்தை வெல்லும் காதல். அருமையான வரிகள் ஹேமா.

kala said...

வசந்த்,
என்ன ரொம்பக் கும்மியா?
நான் இல்லாவிட்டால் ரொம்பதான்
ஆட்டமா?
வாரன்……..பயம் போயாச்சா?

kala said...

எனக்குள் இருந்தபடி
என்னைக் கொல்ல
உனக்கு மட்டுமே முடிகிறது.///////
“அந்த”வதனகுமாரன் அவ்வளவுக்கு வாட்டுகிறாரா?
உங்கள் பளிங்கி மனசை?



உன்னால் மிஞ்சியதை
கொன்றுவிட
நீயேதான் வசதி
கொன்றுவிடு
ஒரு மரணம் பார்க்க//////

////
அடிசெல்லம், வாழ்ந்து காட்டவேண்டும்
வழியா இல்லே……..ம்ம்ம……..

தமிழ்த்தோட்டம் said...

//எனக்குள் இருந்தபடி
என்னைக் கொல்ல
உனக்கு மட்டுமே முடிகிறது.//


வலியான வரிகள்.

ம.தி.சுதா said...

ஃஃஃஃவாழும் ஆசையில் இழவு விழுத்திய நீ
எதற்காக யோசிக்கிறாய்ஃஃஃஃஃ

உறுத்தலான வாரிகள் மிக மிக அருமையாக உள்ளது....

ஹேமா said...

அழுவாச்சிக் கவிதைன்னு திட்டு வாங்கி முடில.அதனால....

இங்க வந்து என்னோட சேர்ந்து கவலைப்பட்டவங்க எல்லாருக்கும் நன்றி சொல்லிக்கிறேன்.

சீமான்...காரணம் கேட்டிருக்கிறார்.விஷேசமான காரணம் இருக்குன்னு இல்ல.
ஆனாலும் மரணம் எப்பிடி இருக்கு.அந்த நேர உணர்வு வலியா,சுகமா,அவ்ஸ்தையா.அதுக்கு அப்புறம் எப்பிடி இருக்க்கும்ன்னு எல்லோரையும்ப்போல
எனக்கும் ஒரு ஆசைதான்.
அதுக்கு இப்பிடி ஒரு வழி !

ஏதோ ஒரு சமயத்தில என்னோட மனசு இப்பிடி இருந்திருக்கு. கிறுக்கியிருக்கேன்.அவ்ளோதான் !

"நான் இறந்துபோயிருந்தேன்"ன்னு இணையத்தில தலைப்பும் பாரத் கொடுத்திருந்தார்.அந்தச் சமயத்தில் இப்படி ஒரு உணர்வும் சேர்ந்தே அந்த நேரத்தில இந்தக் கவிதை உருவாகிச்சுன்னும் சொல்லிக்கலாம் !


லோகு...குழந்தைநிலாலயும் வடை தந்தாங்களா.எனக்கே தராம எப்பிடி உங்களுக்குத் தந்தாங்க !


வசந்து...நசர்,ரவி இல்லாத குறையை இல்லாம ஆக்கிட்டீங்க.என்னா ஒரு.... கும்மி.அப்பாடி !
நீங்க ரொம்ப ஜாலியா இருந்த சமயத்தில நான் பதிவு போட்டிருக்கேன்போல.
இல்லன்னா எனக்குத்
திட்டுத்தானே விழுந்திருக்கும் !

ஜோதிஜி said...

வாழும் ஆசையில் இழவு விழுத்திய நீ


வர வர என்னைக்கூட கவிதை படிக்க வைக்கும் ஹேமா வாழ்க

மேலே உள்ள அந்த வரியில் வந்து நின்று போது நழுவிக் கொண்டு வந்த வரிகள் சற்று மேடு பள்ளத்தில் ஏறி இறங்குவது போல நீங்க கொடுத்த ப்ளோ சற்று தடுமாறி மறுபடியும் வீர் என்று.

வேறுவிதமாக எனக்கு விமர்சிக்கத் தெரியவில்லை. இது உங்க ஏரியா?

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//சத்ரியன் said...
/ம்ம்ம்...நடத்து
ஏதாவது செய்
மரணம் தா !/

கேட்பதற்கு எவ்வளவோ இருக்கிறது,இவ்வுலகில்!

மரணம் கேட்கிறாய் நீ//

Repeat.

C/O TAMILEEZHAM said...

மிகவும் அருமையாகவுள்ளது....

shriya said...

fantastic...

shriya said...

arumai varigal..mei silirka vaikiradhu...

Post a Comment