*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Saturday, November 27, 2010

வரலாற்றுக் கோள்...


சாத்தியமேயில்லை
சூரியன் இறப்பது.
நிழலோடும் இருட்டோடும்
ஊழியம் செய்யும் பெரு நெருப்பாய்
இருளை நிரந்தமாக்காத
வரவாய் வரலாறாய் அவன்!

கசிந்த சூட்டில்
இதமாய் வளர்ந்த பயிர்களை
ஆடு மேய்ந்ததாய் ஒரு கதை.
பேய்கள் கொளுத்திய தீயில்
சூரியன் கருகிவிட்டதாயும் ஒன்று.
புயல் பிய்த்ததால் கதிர்கள் கிழிந்ததாம்.
அலை அடித்த வேகத்தில்
ஆழக் கடலுக்குள் சிதைந்தாய்
சரித்திரத் தாளிலும் மாற்றம்.

கடலும் தின்னாது
அடவிக்குள்ளும் ஒளியான் அந்தச் சூரியன்!

சிறுபயிர்களுக்கும்
சீராய் நிழல் வெப்பம் செருகி
செங்குழலில்
சிற்றுருண்டைகளாய் சோறு சமைத்தூட்டி
மேயும் ஆடுகளை
மேய்ப்பரிடம் ஒப்படைக்கவும் செய்தவன்
அந்த ஊழிக்காரன்.

மழை இருள் மண்டிக்கிடக்கிறதே
தவிர....
மாற்றமில்லை அவனில்.
சிதறித்தான் கிடக்கிறோம்
சீரழியவில்லை.
பதறித் துவள்கிறோம்
பதராகவில்லை.

பெற்றவள் சூல் வலிவாள்
கருச்சிதைந்து போகாக் காளியவள்
மீண்டும் கருவுருவாள்
கருப்புகுந்து மீண்டும்
கொற்றவனோடு வெளிவருவோம்.
ஏரிகள் குளங்கள் குளிர்ந்து களிக்க
வான் பூத்தூவ
என் தாயவளுக்கு மீண்டுமொரு
உதிரமில்லாப் பேறுநாள் அன்று!!!

பொங்கிடும் கடற்கரை...

வெல்வதற்கே தோல்வி!எழுவதற்கே வீழ்ச்சி!
நாளைய விடியல் நம்பிக்கையுடன் பூக்கட்டும்...!

(ஹேமா(சுவிஸ்)

39 comments:

நசரேயன் said...

//நாளைய விடியல் நம்பிக்கையுடன் பூக்கட்டும்...!//

கண்டிப்பாக

சத்ரியன் said...

//கருப்புகுந்து மீண்டும்
கொற்றவனோடு வெளிவருவோம்//

ஹேமா,

மாவீரர்கள் ஒன்றாய்க்கூடி உரக்க கூறுவது போல் ஒலிக்கிறது செவிகளில்...!

பழிகளை ஒழித்து, பெறுவதற்கான வழிகளைக் காண்போம்.

நேசமித்ரன் said...

நாளைய விடியல் நம்பிக்கையுடன் பூக்கட்டும்

பித்தனின் வாக்கு said...

மாவீரர்கள் நினைவு நாள் கவிதை போல, நன்றாக இருக்கின்றது.

Ramesh said...

அத்தனை வரிகளையும் தேக்கிநுழைகிறது வெப்பக்காற்று...
தீபங்கள் ஒளிர்கவே

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

//வெல்வதற்கே தோல்வி!எழுவதற்கே வீழ்ச்சி!//

வாழ்வுக்கான பாடம் எளிய வரிகளில்.

Bibiliobibuli said...

ஹேமா ஒன்றை கவனித்தீர்களா, நாங்கள் இழப்பின் வலிகளில்..... இந்தியாவும் இலங்கையும் ஒப்பந்தங்களில் கையெழுத்துப் போட்டிருக்கிறார்களாம்!!????

ஸ்ரீராம். said...

நம்பிக்கையைக் காட்டும் கவிதை. எழுச்சியூட்டும் வரிகள்.

Chitra said...

நாளைய விடியல் நம்பிக்கையுடன் பூக்கட்டும்...!


....நிச்சயமாக !!!

தமிழ் அமுதன் said...

//
நாளைய விடியல் நம்பிக்கையுடன் பூக்கட்டும்...!///


நிச்சயம் பூக்கும்...!

சௌந்தர் said...

வெல்வதற்கே தோல்வி!எழுவதற்கே வீழ்ச்சி!
நாளைய விடியல் நம்பிக்கையுடன் பூக்கட்டும்...!/////

இந்த வரிகள் நன்றாக இருக்கிறது

Anonymous said...

பூக்கும் காலத்திற்காய் நாங்களும் காத்திருக்கிறோம் ஹேமா..

ராஜ நடராஜன் said...

ஹேமா!ஒன்றோடு ஒன்று ஒப்பிடும்போதே கவிதையின் பொருளும் கவிதை வரிகளின் ஆழங்களும் புரிகின்றன.

இவையெல்லாம் இன்னும் தமிழ் பேசும் உலகுக்கு அகன்று பரவ வேண்டும்.

விடியலே நம்பிக்கைதானே!

ராஜ நடராஜன் said...

வரலாற்றுக்கோளின் மின்வரும் மேகங்கள் பாடும் முழுப்பாடலையும் கேட்டேன் ஹேமா.

அஹ‌ம‌து இர்ஷாத் said...

நிச்சயம் பூக்கும்...

sakthi said...

கடலும் தின்னாது
அடவிக்குள்ளும் ஒளியான் அந்தச் சூரியன்

அபாரமான வரிகள் ஹேமா!!!

sakthi said...

சிதறித்தான் கிடக்கிறோம்
சீரழியவில்லை.
பதறித் துவள்கிறோம்
பதராகவில்லை.

நிஜம்...

எஸ்.கே said...

அருமை! மிக அருமை!

பவள சங்கரி said...

கடலும் தின்னாது
அடவிக்குள்ளும் ஒளியான் அந்தச் சூரியன்!

அருமை சகோதரி, சத்தியம்.....தர்மம கட்டாயம் வெல்லும்........

Prasanna said...

//என் தாயவளுக்கு மீண்டுமொரு
உதிரமில்லாப் பேறுநாள் அன்று!//

நம் இந்த நம்பிக்கை நிஜமாகட்டும்..

வினோ said...

/ வெல்வதற்கே தோல்வி!எழுவதற்கே வீழ்ச்சி!
நாளைய விடியல் நம்பிக்கையுடன் பூக்கட்டும்...! /

உண்மை... கண்டிப்பா...

Starjan (ஸ்டார்ஜன்) said...

//நாளைய விடியல் நம்பிக்கையுடன் பூக்கட்டும்...!//


....நிச்சயமாக...

Unknown said...

தாயகத்துக்காக தன் இன்னுயிரை தியாகம் செய்த அத்தனை வீரர்களுக்கும் என் வீர வணக்கம்..

ஆ.ஞானசேகரன் said...

//வெல்வதற்கே தோல்வி!எழுவதற்கே வீழ்ச்சி!
நாளைய விடியல் நம்பிக்கையுடன் பூக்கட்டும்...!//


ஆம் அருமைங்க ஹேமா..

நட்புடன்
ஆ.ஞானசேகரன்

Prabu M said...

//சிதறித்தான் கிடக்கிறோம்
சீரழியவில்லை.
பதறித் துவள்கிறோம்
பதராகவில்லை.
//

உண்மை அக்கா...
உணர்ச்சி ததும்பும் வரிகள்...
உதிரத்தின் ஈரம் காய்ந்தாலும் வீரம் கல்லில் மண்ணில் கறையாய்ப் படியும்...

//நாளைய விடியல் நம்பிக்கையுடன் பூக்கட்டும்...!//

நிச்சிய‌ம் பூக்கும்....

அம்பிகா said...

வெல்வதற்கே தோல்வி!எழுவதற்கே வீழ்ச்சி!
நாளைய விடியல் நம்பிக்கையுடன் பூக்கட்டும்...


கண்டிப்பாக!

'பரிவை' சே.குமார் said...

//சிதறித்தான் கிடக்கிறோம்
சீரழியவில்லை.
பதறித் துவள்கிறோம்
பதராகவில்லை.//

மாவீரர்கள் நினைவு நாள் கவிதை நன்றாக இருக்கின்றது.

தமிழ்க்காதலன் said...

குருதி குழைத்து....
எழுதப் பட்ட அவர்களின்
இரத்த சரித்திரம்....!
பிணங்களை பிழைக்க செய்யும்
மூல மந்திரம்...!!

தாயின் கருவில்
தாயகம் கண்ட வீர மகன்கள்
தார்மீக பொறுப்பெடுத்த
தனிப் பெறும் புரட்சி...!
தமிழன் புரட்சி...!!
தமிழின் புரட்சி...!!!

ஓய்ந்து விட்டிருக்கலாம்...
ஒழிந்து விடவில்லை.
புற்று நோயையே அழிக்க முடியா நீ...தமிழ்ப்
பற்று போரையா சாய்க்க முடியும்...?

"எட்டப்பன்களின்" பிடியில்
தமிழன் தடுமாற்றம்...!
"ஏகாதிபத்தியத்தின்" பிடியில்
தமிழின் தடுமாற்றம்...!!

இருந்தும் விடாமல்...எங்கள்
"கட்டபொம்மன்" கைவரிசைகள்...!
இன்னும் இருக்கும்...எங்கள்
"வன்னி வாழ் கன்னியின்" கருவில்...
"வேலுப் பிள்ளைகள்"...!!
எனது இந்த வரிகளையே உங்களோடு பகிர்கிறேன்.

அன்பரசன் said...

//நாளைய விடியல் நம்பிக்கையுடன் பூக்கட்டும்...!//

நிச்சயம்.

விஜய் said...

வெல்வது திண்ணம்

பெருநம்பிக்கையுடன்

விஜய்

அன்புடன் மலிக்கா said...

நாளைய விடியல் நம்பிக்கையுடன் பூக்கட்டும்//

நிச்சயமாக பூக்கும் நம்பிக்கையுடன் இருப்போம்.

Unknown said...

நாளைய விடியல் நிச்சயம் பூக்கும்.

ஜோதிஜி said...

மீண்டும் வருகின்றேன்.

நிலாமகள் said...

தகிக்கும் சொற்களில் ஜொலிக்கிறது சத்தியம்! தளரா நம்பிக்கை நாளைக்கான பூ மலர்த்தும். பிரார்த்திப்போம்.

VELU.G said...

நம்பிக்கை நம் வேர்களில் இன்னும் உயிரோடுதான்

வெல்வோம்

ஜோதிஜி said...

ஹேமா நசரேயன் கூட கும்மிக்குள் போகாமல் குமுறிக்கொண்டு அழ வைத்து விடுவார் போல......... ஆச்சரியம் ன். கனத்த வரிகளும் கடுமையான சோதனையான காலமுமாய்.

மேய்ப்பரிடம் ஒப்படைக்கவும் செய்தவன்
அந்த ஊழிக்காரன்.

எத்தனை பேர்களுக்கு இந்த வரிகள் புரிந்துருக்கும் என்று தெரியவில்லை
ஈழம் தொடர்பாக திருமாவேலன் என்பவர் எழுதிய கட்டுரைகளை இப்போது படித்துக் கொண்டுருக்கின்றேன். பத்து வரிகள் தொடர்ச்சியாக படிக்க முடியல. மனம் கனத்துப் போய் விடுகின்றது.

ஏன் இந்த தேவையில்லாத சிந்தனை என்றாலும் திரும்ப திரும்ப சிந்தனைகள் இதற்குள்ளே தான் போய்க் கொண்டுருக்கிறது. ஏன்? தெரியவில்லை?

கருச்சிதைந்து போகாக் காளியவள்
மீண்டும் கருவுருவாள்
கருப்புகுந்து மீண்டும்
கொற்றவனோடு வெளிவருவோம்.
ஏரிகள் குளங்கள் குளிர்ந்து களிக்க
வான் பூத்தூவ
என் தாயவளுக்கு மீண்டுமொரு
உதிரமில்லாப் பேறுநாள் அன்று!!!

நான் இறந்து போவதற்குள் இந்த நிலை நடந்தால் நிச்சயம் தனிப்பட்ட தமிழின் என்கிற விதத்தில் என் ஆன்மா சாந்தியடையும்.

பார்க்கலாம். இத்தனை ஆழமான வரிகளை உங்களிடம் இருந்து எதிர்பார்க்காத வியப்புக்குறியுடன் நகர்கின்றேன்.

Anonymous said...

ஈழம் வெல்லும்!!அது தமிழன் பெருமை சொல்லும்!

Thenammai Lakshmanan said...

வான் பூத்தூவ
என் தாயவளுக்கு மீண்டுமொரு
உதிரமில்லாப் பேறுநாள் அன்று!!!
// அருமை ஹேமா.. நிச்சயம் நடக்கும்.

அப்பாதுரை said...

வாவ்! கொடி பிடிக்கிற பாட்டு! நல்லா இருக்குங்க.

Post a Comment