*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Monday, November 22, 2010

குடியிருப்புக்கள்...

சிறு உக்கிய மரக்குற்றி (மரக்கட்டை)
பகலில்
சிறுவர் உருட்ட
இரவில்
குடிகாரன் காலால் மிதிக்க
இரைச்சலும் எச்சிலும்
கூட்டுச்சேர்ந்து கூட்டித்தள்ள
எங்கள் குடியிருப்பு.

எதிர்பாரா நாளொன்றில்
ஒற்றைக் கால் உந்தித் தள்ள
ஓடி விழுந்தோம் பெரு நெருப்பில்.

எரிந்தோம் கருகினோம்
தடுமாறித் தகித்துப் பயம் தெளிந்தோம்.
என்றாலும்....
எம் இருப்பிடம் விடாமல்
பிடித்திருந்தோம்.
கனவுகள் கரைய
ஆக்ரோசமாய் வலிமை பெற்றோம்.

தள்ளியவன் தள்ளி நிற்க
கரையேற்றச் சில கைகள்.

சூடு ஆறாத மரக்குற்றியையே
மீண்டும் மீண்டும்
சுற்றினோம்...
தொற்றித் தொங்கி விழுந்தோம்
செத்தோம்.

குடியிருப்புக்கள்...
மரக்குற்றியோ
மண்திடலோ
மாளிகைதான்
வாழும் மனங்களுக்குள்!!!

எமக்காகத் தியாகத் தீயில் ஆகுதியாகிய அத்தனை உயிர்களையும் நினைவு கொண்டு,2010 கார்த்திகையின் ஆத்ம தீபங்கள் ஏற்றுவோம் இந்த வாரம் முழுதும் !


ஹேமா(சுவிஸ்) படம் - நன்றி எங்கள் புளொக்.

38 comments:

சத்ரியன் said...

ஹேமா,

அவர்களின் ஆத்மா அமைதி பெற ... ஆற்றுவோம் அவரவர் பங்கை.

சத்ரியன் said...

ஹேமா,

குஞ்சுகளின் கூக்குரல் , கேளாதவர்கள் போலவே இருந்து விட்டீர்களே... என்று நெஞ்சில் குத்துவது போன்ற படம்.

படம் கவிதையினை உணர்த்த மிகப்பெரும் பலம்!

Prabu M said...

உணர்வைப் புரிய வைக்கும் வரிகள் அக்கா...
மௌன அஞ்சலியாய் உணர்கிறேன்...
:-(

அம்பிகா said...

அவர்களின் ஆத்மா அமைதி பெற ... அஞ்சலிகள்.

வினோ said...

அவர்களின் ஆத்மா அமைதி பெற என் பிராத்தனைகள்...

T.V.ராதாகிருஷ்ணன் said...

அவர்களின் ஆத்மா அமைதி பெற என் பிராத்தனைகள்...

தினேஷ்குமார் said...

தீராத தழலில் ஆறாத வடுவாய் மறைந்தும் மனதில் நிற்கும் எம் தமிழ் போராளிகள் ஆத்மசாந்தி பெற படைத்தவனிடம் பாரம் குறைப்போம்

கவிநா... said...

மனதை படபடப்புக்குள்ளாக்குகிறது படம்...

அவர்களின் ஆத்மா அமைதி பெற என் பிராத்தனைகள்...

--
அன்புடன்
கவிநா...

பவள சங்கரி said...

உணர்வுகளை அழகாக வெளிப்படுத்தியுள்ளீர்கள் ஹேமா. அவர்தம் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.

அன்பரசன் said...

உணர்வுப்பூர்வமா இருக்குங்க.
எனது பிரார்த்தனைகளும்.

கவி அழகன் said...

கார்த்திகை பூக்களுக்கு அஞ்சலிகள்

Unknown said...

என் வீர வணக்கம்...

தமிழ் உதயம் said...

நினைப்போம். அவர்களின் தியாகத்தை. வணங்குவோம். அவர்களின் வீர மரணத்தை.

ராஜவம்சம் said...

வீரர்கள் மரணிப்பது அல்ல
வாழ்ந்துக்கொண்டிருக்கிறார்கள் நம் உணர்வுகளோடு.

Ramesh said...

வணக்கங்கள் வித்துக்களுக்கும் வித்துடல்களுக்கும். கனவுகள் நெஞ்சுக்குள் தீயாகும் எண்ணங்களே. நனவாகும் தீபங்களே.

ஜோதிஜி said...

உங்களின் இந்த கவிதை என் மனதில் இருந்து மறைய நிறைய நாளாகும்.

எல் கே said...

கவிதையும் படமும் அருமை

மோகன்ஜி said...

மனசு ரொம்ப வலிக்கிறது ஹேமா! நெகிழ வைக்கும் கவிதை !

ம.தி.சுதா said...

ஃஃஃஃஃஎதிர்பாரா நாளொன்றில்
ஒற்றைக் கால் உந்தித் தள்ள
ஓடி விழுந்தோம் பெரு நெருப்பில்ஃஃஃஃ

இப்போ இதைப் பற்றி ஒன்றுமே சொல்ல முடியல....

yarl said...

எமது மாவீரர் செல்வங்களுக்கு எனது கண்ணீர் கலந்த வீர அஞ்சலி. தமிழரின் தாகம் தமிழ் ஈழத் தாயகம்.
அன்புடன் மங்கை

Anonymous said...

வீர வணக்கங்கள் அவர்களுக்கு

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

//தள்ளியவன் தள்ளி நிற்க
கரையேற்றச் சில கைகள்.//

//மரக்குற்றியோ
மண்திடலோ
மாளிகைதான்
வாழும் மனங்களுக்குள்!!!//

உணர்வுகளின் குவியல் இக்குமுறும் கவிதை.மனதின் மூலையில் இப்போது அசைகிறது ஆத்ம தீபத்தின் சுடர்.

அன்புடன் மலிக்கா said...

படமும் வரிகளும் மனதை பிசைகின்றன தோழி
வலிகள் வடுக்களாக மாறி வலிதருவதுபோல்.. சொல்லவார்த்தைகளில்லை..

Ravi kumar Karunanithi said...

nalla iruku.. vazhthukkal

'பரிவை' சே.குமார் said...

உணர்வைப் புரிய வைக்கும் வரிகள் ...

அவர்களின் ஆத்மா அமைதி பெற என் பிராத்தனைகள்...

logu.. said...

அவர்களின் ஆத்மா அமைதி பெற என் பிராத்தனைகள்...

rvelkannan said...

ஆம் ஹேமா அவர்கள் அணையா தீபங்கள் நம் நினைவில் என்றும் ...

க.பாலாசி said...

இந்த படமும், கவிதை தரும் உணர்வும் அழியாத தீபங்கள்..என்றுமே ஏற்றிவைப்போம், மனதெங்கும்...

அப்பாதுரை said...

நானும் ஏற்றுகிறேன் ஒரு விளக்கு

ராஜ நடராஜன் said...

சில கணங்களுக்கு முன் தமிழ் நதிக்கு இட்ட மௌனங்களை இங்கேயும் விட்டுச்செல்கிறேன்.

நிலாமகள் said...

ஏற்றும் தீபங்களின் ஒளியும், பெரு வெப்பமும் போராடும் உணர்வைப் புதுப்பித்தபடி இருக்கட்டும். இன்னுயிர் ஈந்தவர்கள் பன்மடங்காய் துளிர்த்திடட்டும் பாரெங்கும்.

எஸ்.கே said...

அமைதி நிலவட்டும்!

Thenammai Lakshmanan said...

மனம் கனத்துவிட்டது ஹேமா.. கருகிய குட்டிகளைப் பார்த்து..:((

Bibiliobibuli said...

சுதந்திர ஈழம் எங்கள் மனங்களுக்குள்.....!!

ஸ்ரீராம். said...

நான் ரொம்ப லேட்...

உருகிக் கசிந்துருக வைக்கும் கவிதை. உங்கள் கவிதைக்கு படம் நன்றாகவே பொருந்தியிருக்கிறது.

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

உணர்வைப் புரிய வைக்கும் வரிகள் ...
"அவர்களின் ஆத்மா அமைதி பெற என் பிராத்தனைகள்.'

தமிழ்க்காதலன் said...

என் இனத்தின் மீதான அவலம்
காலம் ஆற்றாத காயமாய்...
புரையோடியப் புண்ணாய்...
இன்னுமின்னும் உயிர் விழுங்கும்
நோயாய்...,
மார்பட்ட புண்
கொட்டும் குருதியில்
எழுதப்பட்ட சரித்திரம்
மானுடத்தின் அவலம் பேசும் நாளை.
சுதந்திரக் காற்றை
வாடகை கொடுத்து
சுவாசிக்க மனமில்லாமல்
மரணம் ஏற்ற வீர மறவர்கள்
அனைவருக்கும் வீர வணக்கம்.
மீண்டும் மீண்டெழும் ஈழம்.

மே. இசக்கிமுத்து said...

உணர்ச்சி பொங்க எழுதியிருக்கிறீர்கள்.
தியாகிகளின் ஆத்மா அமைதியுற வேண்டுவோம்!!!!!!!!

Post a Comment