*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Wednesday, August 04, 2010

தொடரும் சாபங்கள்...

எங்கும் எதிலும்
உதாசீனம் ஒருக்களிப்பு
அக்கறைப்படுவதாயில்லை
மனங்கள் வலிப்பதைப் பற்றி.

மனிதனை மனிதன் நம்பாமல்
வீட்டுக்குக் காவல் நாய்.

கொல்லைவழி போய்
பெரிய வீட்டுக் கோடியில்
பனையேறும்
முருகன் அண்ணா.

காலை உணவு சுமந்து விற்கும்
பசியோடு
பள்ளி செல்லாச் சிறுமி.

சாதிப்பெயரோடு
தன் பெயரை வைத்துக்கொண்டாலும்
*ஆச்சி* என்றழைக்கும்
என் தாத்தா.

*உன் நல்வாழ்வுக்காகவே
உன்னை விட்டுப் போகிறேன்*
என்று பிரியும் காதல்.

விபச்சாரி வீடு சென்று
கால் அலம்பி
வீடு நுழையும் கணவன்.

ஒவ்வொரு முறையும்
*இனி வந்தால் வேண்டாம்*
என்று நினைத்தாலும்
வந்தவுடன்
முடி கத்தரிக்கத் தொடங்கும் கைகள்.

‘நான் யார்’
நிலையற்ற வாழ்வில்
நிஜம் மறந்த மானுடம்!!!

ஹேமா(சுவிஸ்

72 comments:

நேசமித்ரன் said...

முகத்தில் அறையும் வாழ்வின் யதார்த்தம் எளிய மொழியில்

தொடர்க ஹேமா

Unknown said...

இன்னும் ஐம்பது வருடங்கள் ஆனாலும் இது மாறாது.. இந்திய தேசத்தின் சாபக்கேடு ஜாதிகள்...

அ.முத்து பிரகாஷ் said...

// ஒவ்வொரு முறையும்
*இனி வந்தால் வேண்டாம்*
என்று நினைத்தாலும்
வந்தவுடன்
முடி கத்தரிக்கத் தொடங்கும் கைகள். //

எந்த ஒரு கவிஞரும் சொல்லாதது ...
ஒரு பெண்ணால் இந்த வரிகளை எவ்வாறு எழுத முடிந்தது என நினைத்துக் கொண்டேன் ...
கவியில் ஆண் பெண் என்று உண்டா என்ன ?
பாலினம் தாண்டியவர் தானே கவி !
வந்தனங்கள் தோழர் !

கொல்லான் said...

//*உன் நல்வாழ்வுக்காகவேஉன்னை விட்டுப் போகிறேன்*என்று பிரியும் காதல்.//

கவியரசி,

இப்படிப்பட்ட காதல்களும் உண்டல்லவோ?

Thenammai Lakshmanan said...

‘நான் யார்’
நிலையற்ற வாழ்வில்
நிஜம் மறந்த மானுடம்!!!//

அருமை ஹேமா..

கோவைகுமரன் said...

நல்லா இருக்குங்க..

‘நான் யார்’
நிலையற்ற வாழ்வில்
நிஜம் மறந்த மானுடம்!!!//
அருமை..

ரிஷபன் said...

*உன் நல்வாழ்வுக்காகவே
உன்னை விட்டுப் போகிறேன்*
என்று பிரியும் காதல்.
ஒவ்வொரு வரியும் அசத்தல்.. கூடவே வலிகளும்.

தேவன் மாயம் said...

நிதர்சன வார்த்தைகள்!!

ஸ்ரீராம். said...

ஏதோ ஒரு தேவை இருப்பதால்தான் ஒட்டிக் கொண்டிருக்கும் உறவுகள்... தனக்கு தேவைப் படும்போது ஒட்டிக் கொள்வதும், தேவை தீர்ந்த பின் விலகி ஓடுவதுமான மனித உறவுகள்...
" எங்கும் எதிலும்
உதாசீனம் ஒருக்களிப்பு
அக்கறைப்படுவதாயில்லை
மனங்கள் வலிப்பதைப் பற்றி"

நல்ல கவிதை ஹேமா.

வினோ said...

/ எங்கும் எதிலும்
உதாசீனம் ஒருக்களிப்பு
அக்கறைப்படுவதாயில்லை
மனங்கள் வலிப்பதைப் பற்றி. /


/ ‘நான் யார்’
நிலையற்ற வாழ்வில்
நிஜம் மறந்த மானுடம்!!! /

யோசிக்க யோசிக்க‌ வேதனை தான் மிச்சும்...

அக்கறை இருந்திருந்தால் மனிதம் இங்கு புன்னகைத்திருக்கும் தோழி...

கவிதை அழகு ஹேமா :)

T.V.ராதாகிருஷ்ணன் said...

அருமை...அற்புதம் ஹேமா..

அம்பிகா said...

\\‘நான் யார்’
நிலையற்ற வாழ்வில்
நிஜம் மறந்த மானுடம்!!!//
யதார்த்தம்.

தமிழ் உதயம் said...

மனிதர்களின் இயல்புகளை சொன்ன நல்ல கவிதை.

ஜோதிஜி said...

படிக்க பச்சை எழுத்துக்கள் சிறப்பாக இருந்தது. கவிதையும் ரொம்பவே பிடித்தது.

கார்த்திகைப் பாண்டியன் said...

இந்த எளிமைதான் உங்கள் பலம் தோழி.. அருமை..

சீமான்கனி said...

வாழ்வதாய் நினைத்து செத்துக்கொண்டிருக்கும் நிஜவாழ்வின் முள்முடிக் கவிதை சிறப்பாய் இருக்கு ஹேமா வாழ்த்துக்கள்...

vadivel said...

sabangal ellam oru nal varamagum..

Manithan ithai than ethirparkiran

vinthaimanithan said...

//நிலையற்ற வாழ்வில்
நிஜம் மறந்த மானுடம்!!!//

மனிதம் மறந்த மனிதர்களால்தான் வாழ்வு நரகமாகிப்போகிறது... நேசமித்திரன் சொன்னதுபோல நாமெல்லாம் கார்ட்டூன் டாட்டூக்களாய்த்தான் நடமாடிக்கொண்டிருக்கிறோம்

meenakshi said...

// எங்கும் எதிலும்
உதாசீனம் ஒருக்களிப்பு
அக்கறைப்படுவதாயில்லை
மனங்கள் வலிப்பதைப் பற்றி. //

மனிதனர்களை மனிதர்களாக நினைக்காதவர்கள், மனங்களை பற்றியா கவலை பட போகிறார்கள்! கவிதைக்கேற்ற தலைப்பு.

dheva said...

மனித இயல்புகளாய் இவை ஆகிப்போனது யார் குற்றம்...விரக்தியாய் வந்து விழும் வார்த்தைகளில் ஒளிந்திருக்கும் ஏக்கங்களை யாரிட்யம் பகிர்வது ஹேமா?

சாபங்களாய்ப் போன நிகழ்வுகளை வாழ்வின் பகுதிகளாக்கி நகர்கிறதே உலகம்.....

உங்களைப் போலவே விரக்தியினூடே... நானும் உங்களின் வரிகளின் மீது பயணிக்கிறேன் தோழி!

நசரேயன் said...

ம்ம்ம்

ராஜவம்சம் said...

//எங்கும் எதிலும்
உதாசீனம் ஒருக்களிப்பு
அக்கறைப்படுவதாயில்லை
மனங்கள் வலிப்பதைப் பற்றி.//

அடுத்தவறுக்கும் மனம் உண்டு என்று நம்ப மறுப்பவர்கள்.

ராஜவம்சம் said...

//மனிதனை மனிதன் நம்பாமல்
வீட்டுக்குக் காவல் நாய்.//

நன்றியுள்ள நாய் மனிதனை விட மேல் என்பதாலோ.

ராஜவம்சம் said...

//கொல்லைவழி போய்
பெரிய வீட்டுக் கோடியில்
பனையேறும்
முருகன் அண்ணா.//

அவர் கைப்பட்ட பனை வீட்டு முற்றத்தில் விற்ற காசு வாழ்வின் திமிராக.

ராஜவம்சம் said...

//காலை உணவு சுமந்து விற்கும்
பசியோடு
பள்ளி செல்லாச் சிறுமி.//

குற்றம்-செய்தது யார் என்று தெரியாமலையே தண்டனை அனுபவிப்பவள்.

ராஜவம்சம் said...

//சாதிப்பெயரோடு
தன் பெயரை வைத்துக்கொண்டாலும்
*ஆச்சி* என்றழைக்கும்
என் தாத்தா.//

ரத்தத்திலேயே கலந்துவிட்டதால்.

ராஜவம்சம் said...

*உன் நல்வாழ்வுக்காகவே
உன்னை விட்டுப் போகிறேன்*
என்று சொல்லி தனக்கு புது காதல் தேடும் பொய்முகம்.

ராஜவம்சம் said...

//விபச்சாரி வீடு சென்று
கால் அலம்பி
வீடு நுழையும் கணவன்.//

வீட்டில் நுழையும் போது மனவியிடம் சொல்கிறான் மாராப்பை இழுத்து விடு.

ராஜவம்சம் said...

‘நான் யார்’
நிலையற்ற வாழ்வில்
நிஜம் மறந்த மானுடம்!!!



முழுக்கவிதையும் உணர்வுகளோடு உறவாடியது நன்றி.

மேவி... said...

ஹேமா ....நெத்தியடி வார்த்தைகள் ...

ரொம்ப நல்ல இருக்குங்க...

"வந்தவுடன்
முடி கத்தரிக்கத் தொடங்கும் கைகள்."

இந்த வரிகள் மட்டும் புரியவில்லை ..விளக்கம் ப்ளீஸ்

Anonymous said...

//‘நான் யார்’
நிலையற்ற வாழ்வில்
நிஜம் மறந்த மானுடம்!!!
‘நான் யார்’
நிலையற்ற வாழ்வில்
நிஜம் மறந்த மானுடம்!!!//

யதார்த்தமான முகத்திலடிக்கும் உண்மைகள்!
அருமையான கவிதை தோழி!
வாழ்த்துக்கள்..

கமலேஷ் said...

மிக கனமாகவும் எதார்த்தமாகவும் இருக்கு சகோதரி. வாழ்த்துக்கள்.

Karthick Chidambaram said...

இதெல்லாம் அவ்வளவு சீக்கிரத்தில் மாறாது சகோதரி.
//‘நான் யார்’
நிலையற்ற வாழ்வில்
நிஜம் மறந்த மானுடம்!!!//
மாறும் என்றும் நம்புவோம்.

Sweatha Sanjana said...

I see your point !!, Your writting could change the world that you want. Express your thoughts!!. Politics , Business , Entertainment , Sports & Games , Life & Events ,and Health what else?. Meet your like minded here. The top social gathering in one place all the top notches meet here. It is not about win the race, participation is all matters. We proud inviting you to the the internet's best Social community. www.jeejix.com .

சௌந்தர் said...

மனிதனை மனிதன் நம்பாமல்
வீட்டுக்குக் காவல் நாய்.

காலை உணவு சுமந்து விற்கும்
பசியோடு
பள்ளி செல்லாச் சிறுமி.//

இந்த சாபங்கள் எப்போது போகுமோ

Ashok D said...

‘நான் யார்’
நிலையற்ற வாழ்வில்
நீதான் ஆகச்சிறந்த மானுடம்!!!
ஆதலால் உன்னைத் தேடு...

ஆதவா said...

எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை
எளிமையாகவும் சிறப்பாகவும் எழுதியிருக்கிறீர்கள்.. வாழ்க்கை நிலையற்றதுதான்... ஆனால் நிலைப்படுத்துவது நிஜமான வாழ்க்கையில் உள்ளது. சின்னச் சின்னக் கவிதைகள் பெருங்கவிதைகளாக உருவெடுத்தது போல இருக்கிறது. ஆனால் கடைசி வரியில் எதற்காக கீற்றிலும் என்று முடித்திருக்கிறீர்கள்?

மனித மனங்களைப் படிக்கும் வசதியிருந்திருந்தால்...... மனிதன் இன்னும் ஏற்படுத்துவான் வலியை!!!

வாழ்த்துக்கள் சகோதரி

அமுதா said...

ஒவ்வொரு வரியும் யதார்த்தத்தைக் கூறுகிறது... மனதைப் பிசையும் உண்மைகளுடன்...

ஜெயா said...

’நான் யார்’
நிலையற்ற வழ்வில்
நிஜம் மறந்த மானுடம்!!!

அழகு வரிகள்........

தூயவனின் அடிமை said...

உதாசீனம் ஒருக்களிப்பு
அக்கறைப்படுவதாயில்லை
மனங்கள் வலிப்பதைப் பற்றி.

சுயநலமே வாழ்க்கை என்று வாழும் உலகில், பிறர் மனம் பற்றி எங்கே கவலை பட போகின்றார்கள்.

சத்ரியன் said...

//‘நான் யார்’?

நிலையற்ற வாழ்வில்
நிஜம் மறந்த மானுடம்!!!//

ஒரு வழியா கண்டுப்பிடிச்சிட்ட. இனியெல்லாம் ஜெயம் தான்.

Muniappan Pakkangal said...

Nice finishing Hema.

ponraj said...

மிக அருமை!!!

ஹேமா said...

அத்தனை ஊக்கம் தரும்அன்பு உறவுகளுக்கும் நன்றி.நேரம் கிடைக்கவில்லை.
ஒவ்வொருவருக்காக நன்றி சொல்ல.

Anonymous said...

andrada negazhvugalai kavithaiai thoduththa vitham azhagu hema....

முனியாண்டி பெ. said...

அழுத்தமான வலிமையான மொழியில் அழகான கவிதை

Ahamedirshad said...

Super Lines Hema..

சிங்கக்குட்டி said...

சூப்பர் ஹேமா :-)

ஸ்ரீராம். said...

ஹேமா

லீவா... உடம்பு சரியில்லையா... கமெண்ட்ஸ் கூட எந்த ப்ளாக்லயும் பார்க்க முடியவில்லையே...வேலை அதிகமா?

மா.குருபரன் said...

நான் யார்’
நிலையற்ற வாழ்வில்
நிஜம் மறந்த மானுடம்!!

யதார்த்தம் ஹேமா... வரிகள் நன்றாக இருக்கிறது.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

‘நான் யார்’
நிலையற்ற வாழ்வில்
நிஜம் மறந்த மானுடம்!!!//

அருமை ஹேமா.எளிய மொழியில் யதார்த்தம்.

கண்ணகி said...

நிஜம்......பல சமயங்களில் வலியுடன் கடந்து செல்லவேண்டிய நிஜம்..அருமை..ஹேமா...

meenakshi said...

ஹேமா, எப்படி இருக்கீங்க? நாலஞ்சு நாளா தினம் வந்து வந்து பாக்கறேன். எங்கள் ப்ளாக்லேயும் ஆளை காணூம். ஊர்லதான் இருக்கீங்களா?

Jeyamaran said...

Nallapathivu tholiye..........
tamil font work agala athaan............

சின்னபாரதி said...

எழுத்து மட்டும் எல்லாம் காட்டும் .
கவிதையின் முற்றுப்பகுதி அத்தனைக்கும் தகும்

thiyaa said...

அருமையா சொன்னிங்க ஹேமா

வானவில் மனிதன் said...

நிதர்சனமான உண்மை.இன்று தான் உங்கள் வலைத்தளம் கண்ணுற்றேன்.நல்லா ஆழமான சிந்தனையோட்டத்தினை பதிவு செய்கிறீர்கள். வாழ்த்துக்கள்.
மோகன்ஜி,ஹைதராபாத்

பத்மா said...

படித்தவுடன் ஒரு பாறாங்கல் மனதில் வந்து புகுந்து விட்டது ...
போலிமயமான உலகம் தான் .....ஹேமா .வாழ்ந்து தானே தீர வேண்டும்?

விஜய் said...

ஹேமா நலமா ?

நானும் வலைப்பக்கம் வந்து பல நாட்களாகி விட்டது

நெற்றியடி கவிதையாக இருக்கிறது

வாழ்த்துக்கள்

விஜய்

madrasdada@gmail.com said...

விருப்பமும் நேரமும் இருப்பின் படித்துப்பார்க்கவும்
http://madrasdada.blogspot.com/

அன்புடன் நான் said...

//மனிதனை மனிதன் நம்பாமல்
வீட்டுக்குக் காவல் நாய்.//

மிக ரசித்த வரிகள்.

ஸ்ரீராம். said...

இன்னும் எத்தனை நாள் மௌன விரதம் இருக்க உத்தேசம்...?

Riyas said...

எல்லாமே யதார்த்த உண்மைகள் ஹேமா அக்கா

தினேஷ்குமார் said...

வணக்கம் ஹேமா
//*உன் நல்வாழ்வுக்காகவே
உன்னை விட்டுப் போகிறேன்*
என்று பிரியும் காதல்.//
நல்ல வரிகள் சகோதரி
http://marumlogam.blogspot.com/2010/08/blog-post_23.html

அப்பாதுரை said...

விடுமுறையா?

vinthaimanithan said...

நேரா மனசுக்குள்ள போயி தைக்குது கவிதையின் கரு

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

நல்லா இருக்குங்க...

RVS said...

நிலையற்ற வாழ்வில் நிஜம் மறந்த மானுடம்... அப்பாடி என்ன ஒரு க்ளைமாக்ஸ் வார்த்தைகள்... அட்டகாசம்.. ஹேமா..

அன்புடன் ஆர்.வி.எஸ்.

pinkyrose said...

*உன் நல்வாழ்வுக்காகவே
உன்னை விட்டுப் போகிறேன்*
என்று பிரியும் காதல்.

ஆனால் இந்த வார்தைகளும் சுயனலமாகி விட்டன ஹேமா

logu.. said...

‘நான் யார்’
நிலையற்ற வாழ்வில்
நிஜம் மறந்த மானுடம்!!!



Neththiyadi..

கோநா said...

hema...very nice...

விச்சு said...

//*உன் நல்வாழ்வுக்காகவே
உன்னை விட்டுப் போகிறேன்*
என்று பிரியும் காதல்.
விபச்சாரி வீடு சென்று
கால் அலம்பி
வீடு நுழையும் கணவன்.// நான் யார்? என்னைப்பொறுத்தவரை நான் என்பதே தவறு. எல்லாமே பொய்தான்.. எதுவும் நிலையில்லை.

Post a Comment