எனது சிகரெட்டின்
சிறு சிறுத் துகள்களாய்
நீயே......
புகையிலையாகியிருக்கிறாய்.
உன்னை சுவாசித்து
நுரையீரல் காதலாய் திகைக்கிறது !
உன்னைத் தவிர்த்த
நிலம் என்று
என்னிடம் ஏதும் இல்லை.
உன்னை விடுத்த
ஞாபகம் என்றும்
என்னிடம் எதுவுமே இல்லை..!
எனது ப்ரிய கணணியை இயக்குகிறேன் !
கீபோர்ட் மொத்தமும்
உன் பெயரின்
முதல் எழுத்துக்களாய்
நிரம்பியிருக்கிறது !
ஓஹோ..!
இதுவும் உன் விளையாட்டா என்று
எல்லாக் *கீ*யும் ஒன்றுதான் என்பதாய்
எண்ணம் போனபோக்கில்
ஏதேதோ *கீ*களை அழுத்துகிறேன்..!
முழு மானிட்டர் திரையிலும்
உன் முகமறியா
முகத்தின் காதலாய்
நிரம்புகிறது...!
அடி....
இங்குமா நீ என்று
மவுஸைக் கிளிக்கி
இந்த (உன்) அமானுட நிலவொளியை
டாஸ்க் பாரில் சுருக்கப் பார்த்தேன்.
கள்ளி...
மவுஸின் மென்மையிலும்
நீயே நிறைந்து கொண்டு
என்னைக் கிளிக்குகிறாய் !
போதுமடி....
இந்த மார்ஃபிங் விளையாட்டு
உனக்கொரு மெயில் தட்ட
முனைகிறேன் மீண்டுமாய் !!!
ஹேமா(சுவிஸ்)
சிறு சிறுத் துகள்களாய்
நீயே......
புகையிலையாகியிருக்கிறாய்.
உன்னை சுவாசித்து
நுரையீரல் காதலாய் திகைக்கிறது !
உன்னைத் தவிர்த்த
நிலம் என்று
என்னிடம் ஏதும் இல்லை.
உன்னை விடுத்த
ஞாபகம் என்றும்
என்னிடம் எதுவுமே இல்லை..!
எனது ப்ரிய கணணியை இயக்குகிறேன் !
கீபோர்ட் மொத்தமும்
உன் பெயரின்
முதல் எழுத்துக்களாய்
நிரம்பியிருக்கிறது !
ஓஹோ..!
இதுவும் உன் விளையாட்டா என்று
எல்லாக் *கீ*யும் ஒன்றுதான் என்பதாய்
எண்ணம் போனபோக்கில்
ஏதேதோ *கீ*களை அழுத்துகிறேன்..!
முழு மானிட்டர் திரையிலும்
உன் முகமறியா
முகத்தின் காதலாய்
நிரம்புகிறது...!
அடி....
இங்குமா நீ என்று
மவுஸைக் கிளிக்கி
இந்த (உன்) அமானுட நிலவொளியை
டாஸ்க் பாரில் சுருக்கப் பார்த்தேன்.
கள்ளி...
மவுஸின் மென்மையிலும்
நீயே நிறைந்து கொண்டு
என்னைக் கிளிக்குகிறாய் !
போதுமடி....
இந்த மார்ஃபிங் விளையாட்டு
உனக்கொரு மெயில் தட்ட
முனைகிறேன் மீண்டுமாய் !!!
ஹேமா(சுவிஸ்)
Tweet | ||||
60 comments:
//உன் முகமறியா
முகத்தின் காதலாய்
நிரம்புகிறது...!//
ரசித்தேன் .. முகமறியா முகம் - நல்ல சொல்லாடல் .
சோக்கா கீதுங்க :)
arumai hemaaa
கணினி மொழியில் கவிதை அழகு..
ஹேமா - டெக்கிமா
காதல் மார்பிங் பண்ணினாலும் காதலே
கணினி கவிதையா !!
வித்தியாசமான முயற்சி
ரசித்தேன்
\\உன்னை விடுத்த
ஞாபகம் என்றும்
என்னிடம் எதுவுமே இல்லை..!\\
கணிணி கவிதை, நல்லாயிருக்குப்பா.
:)
இரசித்தேன்
எல்லாவுமானாய்...நீ!\\\\\\\
ஹேமா,
என்ன தலைப்பு??
எல்லாமுமானாய் நீ
இதுதான் சரியா??
அடுத்து நான் படிக்கவே இல்லை
சிவப்பெழுத்து என்னவோ செய்கிறது
கண்களை!!
ஏன் இவ்வளவு கோபம் ?
அதைக் காட்ட பாவம்!இந்த
எழுத்துத்தான் அகப்பட்டதா?
அடுத்து நான் படிக்கவே இல்லை
சிவப்பெழுத்து என்னவோ செய்கிறது
கண்களை!!
ஏன் இவ்வளவு கோபம் ?
அதைக் காட்ட பாவம்!இந்த
எழுத்துத்தான் அகப்பட்டதா
Thanks Kala. But voted.
/ உன்னைத் தவிர்த்த
நிலம் என்று
என்னிடம் ஏதும் இல்லை.
உன்னை விடுத்த
ஞாபகம் என்றும்
என்னிடம் எதுவுமே இல்லை..! /
அழகு.... நல்லயிருக்கு தோழி
ஹேமா...@ சமகாலத்துக்கு ஏற்ற ஒரு கவிதை...அதுவும் காதல் கொப்பளிக்க...வாழ்த்துக்கள்!
முழுவதுமாய்... எல்லாவுமாய் ரசித்தேன் ஹேமா
கணணிக்கவியா இது
அடப்பாவமே..!
காதல் இப்படி ”கண்ணை ” மறைச்சிடுச்சே...!
கள்ளி...
மவுஸின் மென்மையிலும்
நீயே நிறைந்து கொண்டு
என்னைக் கிளிக்குகிறாய் !
சும்மா பூந்து கலக்கிட்டிங்க, அருமையாக உள்ளது.
இந்த தடவ ஒரப்பு கம்மியா இருந்தாலும், சுவை குறையவில்லை.
காதல் இப்படி கம்ப்யூட்டரின் வடிவிலும் கொல்லுதே
கலக்ஸ் ஹேமா
அட்றா சக்கை
நவீனக்காதல்... இப்படித்தானோ....
//எனது சிகரெட்டின்
சிறு சிறுத் துகள்களாய்
நீயே......//
அப்டின்னா உடம்புக்கு கெடுதல்ன்னு சொல்லுங்க...
//போதுமடி....
இந்த மார்ஃபிங் விளையாட்டு//
பேன், பொடுகு பிறக்கி விளையாடுங்க
//உன்னைத் தவிர்த்த
நிலம் என்று
என்னிடம் ஏதும் இல்லை.//
பட்டா கேட்க மாட்டாங்க என்கிற நினைப்பா ?
//எனது ப்ரிய கணணியை இயக்குகிறேன் !//
பிரியாமணி தெரியும் அது என்ன ப்ரிய கணணி ?
//உன் முகமறியா
முகத்தின் காதலாய்
நிரம்புகிறது//
மிக அருமை ஹேமா
உன்னைத் தவிர்த்த
நிலம் என்று
என்னிடம் ஏதும் இல்லை.
விசுமெங்கும் விரவிய காதலின் நிலம்
நிழல்களால் ஸ்பரிசிக்கப் படுவதில்லை
மாறாக ஈரத்தால்
நன்று ஹேமா
கணினி வைத்து கவிதை....
காதலாகி, கணினியாகி, கசிந்துருகி... நல்லா இருக்கு ஹேமா.
நவீனக் காதல்.... கம்ப்யூட்டர் காதல்..! எங்கெங்கும் காதல்... என்றென்றும் காதல்...!
//உன்னைத் தவிர்த்த
நிலம் என்று
என்னிடம் ஏதும் இல்லை.//
காதலின் அப்பட்டமான உணர்வின் தொனி.
நல்லாயிருக்கு கவிதை
ரசித்தேன்... உமா... எப்பவும் கலக்கல்தான்..
அன்புடன்
ஆ.ஞானசேகரன்
கணினி(கவிதை) வித்தை வியக்கும் படி!
மிகவும் சிறப்பாக இருக்கிறது இக்கவிதை... உங்கள் கவிதைகளிலேயே சற்று தனியே நிற்கிறது சகோதரி.
தலைப்பு எல்லாமுமானாய் என்பது இன்னும் தமிழ்ச்சுவையைத் தரும் என்பது என் கருத்து
கவிதையை மீண்டும் ஒருமுறை வாசித்ததில்...
முதல் பத்தி மிகவும் பிரமாதமாக இருக்கிறது...
வாழ்த்துகள்!
கவிதை சூப்பர்க்கா.
அதுக்கு பேசாம கணினியையே காதலிக்கலாம்.
உன்னைத் தவிர்த்த
நிலம் என்று
என்னிடம் ஏதும் இல்லை.
உன்னை விடுத்த
ஞாபகம் என்றும்
என்னிடம் எதுவுமே இல்லை..!எல்லாமுமானாய்...நீ.
அழகான வரிகள். பாராட்டுக்கள்...
நிக்கோடின் காதல் புகையாய் கசிகிறது
வாழ்த்துக்கள் ஹேமா
விஜய்
//எல்லாக் *கீ*யும் ஒன்றுதான் என்பதாய்
எண்ணம் போனபோக்கில்
ஏதேதோ *கீ*களை அழுத்துகிறேன்..!
முழு மானிட்டர் திரையிலும்
உன் முகமறியா
முகத்தின் காதலாய்
நிரம்புகிறது...!//
காதலன் கணினிக்கு கவிதை வடித்த அற்ப்புதம்... அழகு...
போதுமடி....
இந்த மார்ஃபிங் விளையாட்டு
உனக்கொரு மெயில் தட்ட
முனைகிறேன் மீண்டுமாய் !!!
...... அட, அட, அட..... என்னமா இருக்குது கவிதை! :-)
எனது ப்லொக்ல நீங்க கேட்டு இருந்த ஒரு கருத்து: அரசியல் மாற்றம் வரும் போது (உலகம் சுற்றும் திசை மாறி), அப்பொழுது இலங்கை பிரச்சினை இருக்காதே.... அதான் குறிப்பிடவில்லை.... :-)
//உன்னைத் தவிர்த்த
நிலம் என்று
என்னிடம் ஏதும் இல்லை.//
முதல் மூன்று பாராக்கள் அருமை. ரசித்தேன்..
கடைசியில் கொஞ்சமாய்க் கவிநடை குறைந்துவிட்டது போல் உணர்வு...
ஹேமா,
அன்பு வேண்டுகோளுக்காக....
உங்கள் புரிந்துணர்வுக்கும்,
செவிமடுத்தலுக்கும் மிக மிக
நன்றியடி தோழி
இப்போது முடியவில்லை படிக்க..
வந்து படித்துவிட்டு ....வடிக்கிறேன்!!
கொஞ்சமா கொஞ்சுமா.
கணினிக் காதல்.
வசீகரம்.
adadada.....idhu kooda nalla eruku hema...
நல்ல கவி வரிகள் இரசித்தேன்.
எனது சிகரெட்டின்
சிறு சிறுத் துகள்களாய்
நீயே......
புகையிலையாகியிருக்கிறாய்.
உன்னை சுவாசித்து
நுரையீரல் காதலாய் திகைக்கிறது\\\\\\
வெண்சுருட்டு {சிறுசிறு துகள்களான}
புகையிலை இல்லாமல்....
முழுமையடையாது.புகையும் வராது
அதுபோல்...உன்னையும் சிறுசிறு துகள்களாய்
{உன் நினைவுகளை} உடலின் துவாரங்களில்
அடைத்து, நான் வெளியிடும் மூச்செல்லாம்
நீ {புகைபோல் }நீயே வெளிவருவதைப் பார்த்து...
நுரையீரல் கூடத் திகைக்கிறது
இப்படியொரு அன்பா என்று!?
ஹேமா,
நீங்கள் கொடுத்த {கவியில்}
கணணியின் அத்தனை பாகங்களும்
இல்லாமல்.....
கணணியென்று முழுமையடையாது!
அதுபோல் ...என் உடல் பாகங்கள்
உன் அன்பால் நிரம்பி,
ஒவ்வொன்றிலும் ..
எல்லாமுமாய்..நீ !!
கவிதை நல்லாருக்குது ஹேமா அக்கா..
raittu madam
late aa vanthatharku sorry
இது வெள்ளிக்கிழமை. விடிந்தும் சூரியன் அரும்பாத மழைக்கால காலை. வெளியே இன்னும் மழைத் தூறிக்கொண்டிருக்கிறது.
கவிதைப் படித்ததும் புகைக்கத் தோன்றுகிறது. இதோ கிளம்புகிறேன்.
ஏனோ மனம் கனத்துக் கிடக்கிறது - வானம் போல.
திகட்டா பூ
< இவன்
படுகை.காம்
வாங்க...சி.கார்த்திக்.இங்க 2- 3 கார்த்திக் இருக்கிறதால நீங்க சி.கார்த்திக் ஆயிட்டீங்க.
அஷோக்...என்னா சோக்கா கீதுன்னா ?ஏதாச்சும் ஊத்தைப் பேச்சா !
LK ...சுருக்கமாச் சொல்லிட்டு ஓடிப்போய்ட்டீங்க !
குணா...வந்தது சந்தோசம்.கணணி மொழிக் கவிதை...இன்னொருவரில் கற்பனையில்தான் முயற்சி !
ஜமால்...வாங்கோ நன்றி நன்றி.
செந்தில்...உங்களை மாதிரி எழுத முடில.ரொம்பக் கவலை !
சக்தி....வாங்க தோழி.முயற்சிக்கு முயற்சி இந்தக் கவிதை !
நன்றி...ராதாகிருஷ்ணன் ஐயாவுக்கு.என்றும் உங்கள் அன்புக்கும் நன்றி.
அம்பிகா...தனிமைக்குத் துணையே இப்போ கணணிதானே !
ஆறுமுகம்....என்ன இப்பிடி !
அமுதா...ரொம்ப நாளுக்கு அப்புறமா !
ஜோதிஜி...சும்மா சொல்லாதீங்க கலா சொன்னதுக்காக.கலாதான் தள்ளாத வயசில சொல்றான்னா !
விநோ...முதல் வருகைக்கு நன்றி.உங்கள் பக்கமும் வந்தேன்.அருமை.
தேவா...உங்கள் எழுத்துக்கும் முன்னால இதெல்லாம் ஒரு சின்னப் புள்ளி.வந்து பாராட்டினதே போதும்.
றமேஸ்...இதுதான் கணணிக் கவிதையாம்.சொன்னாங்க !
சத்ரியா...யார் கண்ணை யார் மறைச்சது.சொல்லவேயில்ல !
தூயவன்...எப்பவுமே கண்ணிக்குள்ளதானே விளையாடிக்கிட்டு இருக்கோம்.மறக்கக் கூடாதுதானே !
கொல்லான்...ஓ...கவனமா இருக்கேன் இனி.அப்புறம்
"கவியரசி"பட்டத்தைப் பறிச்சிடுவீங்க.ஆனா இனி நான் தரமாட்டேனே !
அப்துல்மாலிக்...அன்பு வருகைக்கு நன்றி.இப்பிடியும் எழுதலாம்ன்னு நானும் கத்துக்க்கிட்டேன்!
சிவசங்கர்....பாராட்டுக்கு மிக்க நன்றி.இன்னும் சந்திக்கலாம்.
பாலாஜி...இந்தக் கவிதைக்கு நவீனக் காதல்ன்னும் சொல்லலாமோ !
நீங்க சொன்னதை சொல்லிட்டேன்.ஆனா கவிதை வாசிச்ச அப்புறம் சிகரெட் பத்தணும்போல இருக்காம்.என்ன செய்ய !
ஐயா...நசர் ஐயா...கும்மி ஐயா...நான் ஒண்ணுமே சொல்லல.ப்ரியத்துக்கும் ப்ரியாவுக்குமே இடைவெளி தெரில !
வேல்கண்ணன்...நன்றி அன்பின் கருத்துக்கு!
நேசன்...அதனால்தான் காதலின் நினைவு சாகும்வரை ஈரலிப்பாகவே !
சௌந்தர்...ரொம்ப பிஸியோ !
தமிழ்...தேவாரம் திருவாசகம் சொன்ன மாதிரி இருக்கோ !
ஸ்ரீராம்....தமிழ் சொன்னதுக்கு எதிர் மாறா ராஜேந்தர் ஸ்டைல்ல நீங்க !
மஞ்சள் நிலா...எங்க உங்க பதிவு ?
கதிர்..அடிக்கடி மறந்துபோறிங்க என்னை !
ஞானம்...நன்றி.யார் அது உமா ?அச்சுப்பிழையா !
அரசு...
ஏன் உப்புமடச் சந்திப் பக்கம் காணல !
ஆதவா...நிறைவான சந்தோஷம்.பழைய நட்பொன்று திரும்பவும் கிடைத்ததுபோல.
சொல்லப்போனால் உப்புமடச் சந்தியை ஊக்குவித்தவர் நீங்கள் என்பேன்.கவின் காணல.கமல் இப்போ பதிவுகள் போடுறார்.இந்த வாரம் விடுமுறைபோல.ஆளைக் காணோம்.நீங்கள் சொன்னபடி தலைப்பை மாற்றிவிட்டேன்.கலாவும் சொல்லியிருந்தா.
ராஜவம்சம்....சரியாச் சொன்னீங்க.
நேரம் கிடைக்கிறப்போ எல்லாம் கணணிகூடத்தானே இருக்கோம்.
காதலிச்சிட்டாப் போகுது !
வாங்க தங்கமணி....சந்தோஷம்.
ஜெயா...நன்றி தோழி.எங்கே உப்புமடச் சந்தில காணேல்ல.
லீவில போயிருக்கீங்க போல !
விஜய்...இப்பல்லாம் ரொம்ப லேட்.ஏன் வேலைப்பளுவா !
சீமான்...காதலனாய் மாறி எழுதிய கவிதையை ரசித்தமைக்கு நன்றி.
சித்ரா...உங்களை மாதிரிச் சிரிக்க வைக்க என்னால முடியலயே !சரியாகச் சொன்னீர்கள் சித்ரா.உலகம் சுற்றும் திசை மாறும்போது தமிழனும் இருக்கமாட்டன்.பிரச்சனையும் இருக்காதுதானே !
தமிழ்ப்பறவை அண்ணா...
தொடங்கும்போது இருக்கும் ஆர்வம் தேடுதலில் குறைந்துவிட்டது போலும் !
அப்பா...காதல்ங்கிறதே கொஞ்சல்தானே.
அதில எப்பிடி...கூடக் குறையன்னு !
மது...நன்றி நன்றி வருகைக்கு !
தமிழரசி...போன கவிதையில் உங்கள் பின்னூட்டத்தில் நெகிழ்ந்து போனேன் தோழி.அன்பு வாழும்.அன்பாய் வாழுவோம்.
இல்லாதவர்களுக்கும் கொடுப்போம் கைமாறு பார்க்காமல் !
சந்ரு...கலக்குறீங்க அரசியல களம் கொதிச்சுப் போகுது !
கலா...நீங்கள் சொன்னபடி கலர் மாத்திட்டேன் தலையங்கமும் யோசித்துக்கொண்டிருக்க ஆதவாவும் அதையே சொல்கிறார்.
மாற்றிவிட்டேன்.உங்கள் ஆழமான கருத்து என்னையே சிந்திக்க வைக்கிறது தோழி.அன்பு அடை பட்டுக் கிடக்கிறது.நிரந்தரமில்லாத அன்பானாலும் மனதில் பதிந்துவிடுகிறது சில சமயங்களில் !
ரியாஸ்..எங்கே ஆளைக் காணோம்.வேலையா !
மேவீ...எப்பவுமே சாட்டுச் சொல்லாதீங்க.விளங்கலன்னு சொல்லுவீங்க.விளங்கினா லேட்ன்னு சொல்லுவீங்க.இதுக்கு முதல் எப்ப வந்தீங்கன்னு பாருங்க.ஆளை பாரு.
சும்மா சொல்லிக்கிறது நான் தானே ஆரம்பகால ரசிகன்ன்னு !
படுகை.கொம்....நன்றி வருகைக்கு.
ஜே..உங்க பார்வையில இந்தக் கவிதை படணும்ன்னு பார்த்திட்டே இருந்தேன்.கடைசியான்னாலும் வந்தீங்களே.அதுக்காக புகைச்சு நிரப்பிக்கிறதில்ல.அதுக்கும் கவிதை வச்சிருக்கேன்.வானமும் தென்றலும் நிரந்தரமானது ஜே.மனதோடு வாழும் அன்பும் சில நினைவுகளும் !
உன்னைத் தவிர்த்த
நிலம் என்று
என்னிடம் ஏதும் இல்லை.
உன்னை விடுத்த
ஞாபகம் என்றும்
என்னிடம் எதுவுமே இல்லை..!
கவிதை அழகு..
//உன்னைத் தவிர்த்த
நிலம் என்று
என்னிடம் ஏதும் இல்லை.
உன்னை விடுத்த
ஞாபகம் என்றும்
என்னிடம் எதுவுமே இல்லை..!//
உன்னைத் தவிர்த்துப்
பார்த்தால்
நானென்றே ஏதுமில்லை!!!!!
எப்பூடி??!!!
//உன்னைத் தவிர்த்த
நிலம் என்று
என்னிடம் ஏதும் இல்லை. //
it's really super
"என் ப்ரிய கணணியை இயக்குகிறேன்
கிபோர்ட முழுவதும் உன் பெயரின் முதல் எழுத்துகளால்
நிரம்பிக்கிடக்கிது"....
காதல் வெள்ளம்....
நன்றாக இருக்கிறது தோழி....
Post a Comment