*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Thursday, May 27, 2010

பொய்யாகாத இரவு...

ஒரு இரவல் இருளில்தான்
உண்மையும் பொய்யுமான
அந்த நாடகம்
காற்றோடு வந்தது
மனதில் நிறுத்தி
ரசிக்கச்சொல்லி.

அன்றைய இரவு
பௌர்ணமியைக் குடித்த போதையில்
தள்ளாடியபடி
மூச்சின் உஸ்ணம்
வந்தடையச் சாத்தியமற்ற பொழுது
இன்றைய இரவும் அதேபோல
பொய்யும் உண்மையுமாய்.

முத்தங்களை வாங்கிக்கொண்ட
நிலவின் துகள்களிலும்
பொய்யான விம்பங்களுக்குள்
சேர்த்த வார்த்தைகளும்
சேமித்த பார்வைகளுமாய்.

வெட்ட வெளியில்
காற்றாட உலவிய வாழ்வு
சூன்யங்களைப்
பிரித்து வேய
விருப்பமின்றியே!!!

ஹேமா(சுவிஸ்)

57 comments:

Ashok D said...

அட... சூப்பர்... :)

தனி காட்டு ராஜா said...

மொத்ததுல படிகறவங்கலுக்கு ஒன்னும் புரிஞ்சற கூடாது ...அது தானே உங்க நோக்கம் ..?

நேசமித்ரன் said...

ரொம்ப நல்ல வெளிப்பாடு ஹேமா

//இரவல் இருளில்தான்//

நல்லா இருக்கு

ஆனால் எதுக்கு இத்தனை உண்மையும் பொய்யும் ?

:)

Ashok D said...

கவிதை உங்கள் உள்மனசை பேசுகிறது...

Ashok D said...

கடைசி ரெண்டு பேரா மிகவும் நன்றாக இருக்கிறது..

மொத 2 பேரா நன்றாக உள்ளது...

சாட்டில் மிரட்டியதுற்காக... மூணு கமெண்ட் ஓக்கேங்களா ஹேமா...

Ashok D said...

மேல உள்ள கமெண்ட் வேற ப்ளாகல போடறதுக்கு உங்க ப்ளாக்ல போட்டுட்டேன்... ஹிஹி

அதான் டெலிட்...

S Maharajan said...

//முத்தங்களை வாங்கிக்கொண்ட
நிலவின் துகள்களிலும்
பொய்யான விம்பங்களுக்குள்
சேர்த்த வார்த்தைகளும்
சேமித்த பார்வைகளுமாய்//

SUPER

தமிழ் உதயம் said...

கவிதைகளில் வார்த்தைகளை எவ்வளவு அழகாக கோர்கிறிர்கள் தெரியுமா. அழகோ அழகு.

ராஜ நடராஜன் said...

//கவிதைகளில் வார்த்தைகளை எவ்வளவு அழகாக கோர்கிறிர்கள் தெரியுமா. அழகோ அழகு.//


பொருள் புரிவதற்கு பிகாசோ வீட்டுத் தோட்டத்தில் பூ பறிக்க வேண்டும்!

Prasanna said...

என் ரேஞ்சுகளுக்கும் புரியிற மாதிரி நடு நடுவுல கொஞ்சம் வரிகள் சேர்க்கவும் ;)

Unknown said...

ஒவ்வொரு வார்த்தையையும் தனித் தனியா படிச்சா நல்லாப் புரியுது. மொத்தமாப் படிச்சா மட்டும் ஏங்க புரிய மாட்டுங்குது ?

சத்ரியன் said...

//முகிலன் said...
ஒவ்வொரு வார்த்தையையும் தனித் தனியா படிச்சா நல்லாப் புரியுது. மொத்தமாப் படிச்சா மட்டும் ஏங்க புரிய மாட்டுங்குது//

உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு முகிலன்.

Chitra said...

நல்லா இருக்குங்க.

அ.முத்து பிரகாஷ் said...

இரவல் இருள் ...
நானெல்லாம் ,
இரவல் ஒளியில் தான் இருக்கிறேன் ஹேமா ...

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

கலக்கற ஹேமா....

ராஜவம்சம் said...

மறுபடியும் பள்ளிக்கு போகனும் போல!

கவி அழகன் said...

நல்ல கவிதை

ஸ்ரீராம். said...

தனிக்காட்டு ராஜா ,ராஜா நடராசன், பிரசன்னா, முகிலன், சத்ரியன், கமெண்ட்களை ரசித்தேன். கலா மேடம் வரணும் விளக்கம் சொல்ல..பொய்யான காதலை நம்பி ஏமாந்தது போல கரு என்று நினைக்கிறேன்..சிரிக்காதீங்க ஹேமா..

நிலாமதி said...

உள் மனதைக்காட்டும் அழகான் கவிதை

Unknown said...

அசத்துறீங்க ஹேமா ...
கொஞ்சம் மெச்சுரிட்டி கூடியிருக்கு வாழ்த்துக்கள்

அன்புடன் நான் said...

விரல்ல... மையிருக்கு...

அதாவது ஓட்டு போட்டுட்டேன்,

விஜய் said...

நீங்க கவிதையில முன்னேற முன்னேற நாங்க முடியை பிச்சுக்கணும் போலருக்கே. (நல்ல வேலை மொட்டை போட்டுருக்கேன்)

வாழ்த்துக்கள்

விஜய்

அம்பிகா said...

\\வெட்ட வெளியில்
காற்றாட உலவிய வாழ்வு
சூன்யங்களைப் பிரித்து
வேய விருப்பமின்றியே!!!\\
அருமையா இருக்கு ஹேமா.

நசரேயன் said...

ம்ம்ம்ம்

meenakshi said...

ஹேமா, கவிதையின் வார்த்தைகள் வர்ண ஜாலம்தான். ஆனால் கவிதைதான் புரியவில்லை.

Muniappan Pakkangal said...

Nice Hema.

கலா said...

ஒரு இரவல் இருளில்தான்
உண்மையும் பொய்யுமான
அந்த நாடகம்
காற்றோடு வந்தது
மனதில் நிறுத்தி
ரசிக்கச்சொல்லி\\\\\\\

எனக்குச் சொந்தமில்லாத இரவில்
{வருவதும்,போவதும் சொந்தமல்ல}
நீநடிகனாய் மாறி...
உண்மைபாதி,பொய்பாதி பேசி
{காற்றுடன் கலந்து}
தொலைபேசி வழியாய்
உரையாடி அதை வேறு
என் மனதில் வைத்துப் பார்க்கவும்
சொன்னாய்.

அன்றைய இரவு
பௌர்ணமியைக் குடித்த போதையில்
தள்ளாடியபடி
மூச்சின் உஸ்ணம்
வந்தடையச் சாத்தியமற்ற பொழுது
இன்றைய இரவும் அதேபோல
பொய்யும் உண்மையுமாய்\\\\\

கேட்க என் மனது விருப்பபடாத செய்தியைக்
கேட்டதனால்...
அன்றிரவு எல்லாமே இருண்டு
இருள் மயத்தில் நான் தட்டுத் தடுமாறி
மூச்சுக் காற்றுக் கூடவெளியிட முடியுமா?
என்ற என் நிலையில்...
உன் பேச்சு என் நினைவில் வர......

இன்றைய பொழுதும் ......

முத்தங்களை வாங்கிக்கொண்ட
நிலவின் துகள்களிலும்
பொய்யான விம்பங்களுக்குள்
சேர்த்த வார்த்தைகளும்\\\\

நிலவு சாட்சியாய் நீ கொடுத்த
முத்தங்களைப் பார்த்து ரசித்த நிலாக்கூட...
இன்று வெடிக்க... {என்மனதைப் போல்}
அச் சிறு துண்டுகளில் கூட...
நீ பேசிய வார்த்தைகளும்,உன்,பொய்யான
உருவமும்,அதை நம்பிய..என் உருவமும்..



வெட்ட வெளியில்
காற்றாட உலவிய வாழ்வு\\\\
தேவை ஏற்படும் போதுமட்டும்
தேவைப்பட்ட என் சிநேகம்,....
{வாழ்வு}


சூன்யங்களைப்
பிரித்து வேய
விருப்பமின்றியே\\\\\\

நடந்து முடிந்த அனைத்தையும்
மீண்டும் நினைத்துப் பார்க்க முடியாத
மனத்தில் உள்ளேன்

நண்டு@நொரண்டு -ஈரோடு said...

ம்..

கலா said...

ஹேமா ஒரு ஆணை எவ்வளவு அழகான
கற்பனையில் சாடிருக்கிறாய்

அவன் சொன்ன,செய்த.பேசிய அத்தனையும்
பொய்யாயிருக்கலாம்....ஆனால்
அந்தத தலைப்பு பிரமாதம்
பொய்யாகாத இரவு.

அதிலும் இவ்வரிகள் என்னைக்
கவர்ந்தன


{ஒரு இரவல் இருளில்தான்
உண்மையும் பொய்யுமான}

{பௌர்ணமியைக்
குடித்த போதையில்}

{பொய்யான விம்பங்களுக்குள்
சேர்த்த வார்த்தைகளும்
சேமித்த பார்வைகளுமாய்}

{வெட்ட வெளியில்
காற்றாட உலவிய வாழ்வு}

இந்தக் கடைசி இருவரிகளுமே போதும்
ஆயிரம் கதை சொல்லும்

நல்ல உவமைகளடி உன் கற்பனாசக்தி

ஸ்ரீராம் மிக்க நன்றி உங்கள் எதிர்பார்ப்புக்கு!
நானும் உங்களைப் போல்தான்!
என் சின்ன மூளைக்கு எட்டியவைதான்!!
நன்றி.
ஹேம்ஸ் உன் கவிதைக்கு ஏற்ற பாடல்
ஒன்று ஞாபம் வருகிறது..

அன்றொருநாள் இதே நிலவில்
அவரிருந்தார் என் அருகே.....என்ற
பாடலை முழுமையாய்க் கேட்டுப் பார்.

மாதேவி said...

"உண்மையும் பொய்யும்" நல்லாகவே இருக்கிறது.

அத்திரி said...

ரைட்டு..........

கலா said...

நீங்க கவிதையில முன்னேற
முன்னேற நாங்க முடியை
பிச்சுக்கணும் போலருக்கே
. (நல்ல வேலை மொட்டை
போட்டுருக்கேன்)\\\\\\\\

விஜய் பிச்சுகவேணாம் அழகாகத்
தாளம் போடக்..கடகடவென வரும்
கவிதை
பத்து விரல்களையும் தலையில்
வைத்து{கடம்} கடகடவெனத்
தட்டுங்கள் அப்புறம் பாருங்களேன்
சலசலவென ஊற்றும் கவிதை
ம்ம்ம்ம...நடக்கட்டும்!!

Jerry Eshananda said...

நல்லா பிரிச்சு மேஞ்சிட்டீங்க.

தமிழ் மதுரம் said...

ஹேமா.. ஏனிந்தக் கொலை வெறி? கவிதை புரிந்தும் புரியாமலுமாக இருக்கிறது?

- இரவீ - said...

//முகிலன் said...

ஒவ்வொரு வார்த்தையையும் தனித் தனியா படிச்சா நல்லாப் புரியுது. மொத்தமாப் படிச்சா மட்டும் ஏங்க புரிய மாட்டுங்குது ?//

Same Blood :(

ஜெயா said...

பொய்யாகாத இரவு நிறைய பேரை குழப்பி இருக்கிறது ஹேமா...கவிதையின் அர்த்தம் புரியாமல் தலை முடியை பிய்த்துப் பிய்த்து பின்னூட்டம் இட்டிருக்கிறார்கள்.

எனக்கும் புரியவில்லை.ஆனால் பொய்யை மெய் என்று நம்பி ஏமாந்து
வாழ்க்கையே கேள்விக்குறியாக உட்கார்ந்திருக்கும் அந்தபெண்ணின் படம் பார்க்கும் போது கவிதையின் கரு ஓரளவு புரிந்தது.........

Anonymous said...

அருவருப்பான பதிவுகளும் சீரழியும் கலாச்சாரமும்.

http://shayan2614.blogspot.com/2010/05/blog-post_28.html

- இரவீ - said...

//ஒரு இரவல் இருளில்தான்
உண்மையும் பொய்யுமான
அந்த நாடகம்//

1) இருள் இரவளா இருந்ததால்... நடந்த நாடகம் பொய்யா???
2) இல்ல நாடகம் பொய்யானதுன்னு, அந்த உன்மயான இருள் இரவலானதா???
3) இரவலா இருந்த இருளுங்கிற காரணத்தாள உன்மையான நாடகம் பொய்யாச்சா???
மேல உள்ள 1,2, 3 ம் சரியா?
இல்ல 1 ம் 2 ம் சரியா?
இல்ல 1 ம் 3 ம் சரியா?
இல்ல 2 ம் 3 ம் சரியா?
இல்ல 1,2, 3 ம் தவறா?
இல்ல 1 ம் 2 ம் தவறா?
இல்ல 1 ம் 3 ம் தவறா?
இல்ல 2 ம் 3 ம் தவறா?

இதுக்கு விடைகிடச்சதும் மத்த வரிக்கு விளக்கம் கேக்கரேன்...

meenakshi said...

'பொய்யாகத இரவு'. எவ்வளவு அற்புதமான தலைப்பு. வாழ்கையில் சில இரவுகள் பொய்யாகாத இரவுகள்தான்.
கலா உங்கள் விளக்கத்தில்தான் இந்த கவிதையே புரிந்தது. மிக்க நன்றி. 'அன்றொரு நாள் இதே நிலவில்....' எப்பேற்பட்ட பாடல் இது. கேட்கும் ஒவ்வொரு முறையும் என்னையும் அறியாமல் கண்ணீர் வந்து விடும்.

Ahamed irshad said...

கவிதை நல்லாயிருக்குங்க ஹேமா...

"உழவன்" "Uzhavan" said...

நல்ல கவிதை ஹேமா

Madumitha said...

//பெளர்ணமியைக் குடித்த போதையில்//

அற்புதமான வரி.

அண்ணாமலை..!! said...

நல்ல மொழிநடை!
3-வது தடவை படிக்கிறேன்!
மரமண்டைக்குப் புரிய மாட்டேங்குது!
இதோ..4..

Anonymous said...

VARO said...//


உண்மையான பதிவு ஒண்டிருக்கு? படிச்சுப் பாருங்கோ?


http://nijem.blogspot.com/


இலங்கைப் பிரபலத்தின் உண்மை முகம்?
அம்பலத்திற்கு வராத சங்கதிகள்.




http://nijem.blogspot.com/

Anonymous said...

VARO said...
அருவருப்பான பதிவுகளும் சீரழியும் கலாச்சாரமும்.

http://shayan2614.blogspot.com/2010/05/blog-post_28.html//


கொஞ்சம் மேல பாக்கிறது?

அன்புடன் மலிக்கா said...

இருளிலும் வெளிச்சம் வீசுகிறது.
உள்மன வெளிப்பாடுகளாய்...

Unknown said...

முத்தங்களை வாங்கிக்கொண்ட
நிலவின் துகள்களிலும்
பொய்யான விம்பங்களுக்குள்
சேர்த்த வார்த்தைகளும்
சேமித்த பார்வைகளுமாய்.

:)

ஹேமா said...

அஷோக்...உங்களுக்குப் உண்மையாவே புரிஞ்சுதா.பொய் சொல்லாதீங்க !கீழே உள்ள பின்னூட்டங்களின்படி கவிதை புரிஞ்சிருக்கு உங்களுக்கு.நன்றி.


தனிக்காட்டு ராஜா...வாங்க.உங்க எரிச்சல் பார்த்து நான் சிரிச்சிட்டேன்.
இப்போ கலா விளக்கம் கொடுத்திருக்காங்க.புரிஞ்சிருக்குமே !


நேசன்....வாழ்வு எனக்கே புரியாமல்தான்.உண்மையா பொய்யா !


மகாராஜன்...மிக்க நன்றி வருகைக்கு.


தமிழ்...எண்ணப்படி வாழ்வு என்று நீங்களும் சொல்லியிருக்கிறீர்கள்.
பார்க்கலாம்.


நடா..."பொருள் புரிவதற்கு பிகாசோ வீட்டுத் தோட்டத்தில் பூ பறிக்க வேண்டும்!"இதுவும் அழகுதான்.


பிரசன்னா...நிச்சயம் பொறுமையா வாசியுங்க.புரியும்.அடுத்த கவிதை உங்களுக்குப் புரியிறமாதிரி.சரியா.
ஆனா பின்னூட்டம் சரியா தரணும்.


முகிலன்...முதல் வருகை.
சந்தோஷம்.பதில் சொல்லத் தெரியாத கேள்வியெல்லாம் கேக்கக்கூடாது.
நானெல்லாம் உண்மையாக் கேக்கிறதேயில்லை !


சத்ரியா...கவிதை புரியலன்னு சொல்லாம...ஏன் முகிலனுக்குப் பொய்யான பாராட்டு.


சித்ரா...ரொம்ப நன்றிப்பா.


நியோ...முதல் வருகைக்கு நன்றி.
இரவல் ஒளியானாலும் எங்களுக்கென்ற நிரந்தர ஒளியானால் சந்தோஷம்தானே !


தங்கமணி...உங்களை மாதிரிப் பயமுறுத்தலயே நான் !

ராஜவம்சம்...பராவாயில்லை என் பேரில இன்னொருதரம் பள்ளிக்குப் போய்ட்டு வாங்களேன் !


ஸ்ரீராம்..உங்களை நினைச்சுச் சிரிச்சிட்டேன்.உதவிக்குத்தான் இத்தனை பேரான்னு !கலா சொல்லிட்டாங்க.திருப்திதானே !


நிலா...அன்புக்கு நன்றி தோழி.

ஹேமா said...

செந்தில்...ஓ....அப்போ நான் வளர்ந்திடேனாக்கும் !


அரசு...கை கழுவிட்டு ரெடியா இருங்க.அடுத்த பதிவு போடுறேன் !


விஜய்...நான் சொல்லல.கலா என்னமோ சொல்லியிருக்காங்க.
உங்க தலைக்கு !
போட்டோ நல்லாத்தானே இருக்கு !


அம்பிகா...எங்க ரொம்ப நாளாக் காணோம்.காணாமப்
போயிடறீங்கப்பா அடிக்கடி.


நசர்....எப்பிடி...எப்பிடி கும்மி அடிக்க முடியாம ஒரு கவிதை.
ஒண்ணும் புரியலையாக்கும் !
அதான் ம்ம்ம்.


மீனு...முதல் புரியாட்டியும் இப்போ புரிஞ்சுட்டதா போட்டிருக்கீங்க.
கலாவுக்குத்தான் நன்றி.


டாக்டர்...ரொம்ப வேலையா.ரொம்ப நாள் காணல.ஆனாலும் ஹேமாவை மறக்கல.நன்றி.
சுகமா இருங்க எப்பவும்.


நண்டு சார்...எதுக்கு ம்...சொன்னீங்க !

ஹேமா said...

கலா...சொல்ல வார்த்தைகள் இல்லை.என் மனச்சாட்சி எப்படிப் போனது சிங்கப்பூருக்கு !என்னைவிட உங்களை இங்கு எத்தனைபேர் எதிர்பார்க்கிறார்கள்.அவர்கள் சார்பிலும் நன்றி. எனக்கும் பிடித்த அழகான பாடலை நினைவுக்குக் கொண்டு வந்திருக்கிறீர்கள்.


மாதேவி...வாழ்வு புரியாமல் உண்மையும் பொய்யுமாய்.
அதான் அப்பிடி !


அத்திரி...வாங்க வாங்க.


ஜெரி...பிரிச்சு மேய விருப்பமில்லாமன்னுதானே சொல்லியிருக்கேன் !


கமல்...ஏன் உங்களுக்கு இந்தக் கொலை வெறி !சின்னப் பிள்ளையளுக்கெல்லாம்
புரியாத கவிதையோ !


ரவி...முகிலனுக்கு இப்போ ரெண்டாவது ஓட்டு நீங்க.இரவும் பொய்யில்ல.நிகழ்வும் பொய்யில்ல.
மனங்கள் பொய்யாய் இருக்குமோ !உங்களுக்கு இவ்வளவும் புரிஞ்சதே பெரிய விஷயம்.அப்பா..டி !போதும்.


இர்ஷாத்...நன்றி நன்றி அன்புக்கு.


உழவன்...உங்கள் சிட்டுக் கவிதைக்கு ஈடு இன்னும் இல்லை.


அண்ணாமலை...உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் அன்புக்கும் நன்றி.


VARO...எல்லாம் தெரிஞ்ச விஷயம் அப்பன்.விடுங்கோ !


மல்லிக்கா....இவ்ளோ லேட்.இனி பெஞ்சிலதான் ஏத்தணும் !


ஆறுமுகம் முருகேசன்....முதல் வருகை.அன்பு வணக்கம் உங்களுக்கு.
உங்கள் பக்கமும் வந்தேன்.
அருமையான கவிதைகள்.
சந்திப்போம் இனி.

ஹேமா said...

ஜெயா...ஜெயாக்குட்டி எப்பிடி சுகம்.
உங்களைத் தவறவிட்டுருக்கிறேனே.
தூக்கக் கலக்கமோ !என்றும் அன்புக்கு நன்றி.அருகில்தான் நீங்கள்.


மது...உங்கள் கருத்துக்கும் அன்புக்கும் நன்றி நன்றி.

அப்பாதுரை said...

முதல் para படிக்க நல்லா இருக்கு புரியவும் செய்யுது.
மத்த paraக்கள் நல்லா இருக்குற மாதிரி தான்.. ஆனா புரியலிங்க.

குடந்தை அன்புமணி said...

புதிய 'ழ' இதழும், 'உதகை ரோட்டரி கிளப்' பும் இணைந்து நடத்தும் கவிதைப் போட்டி. தலைப்பு 'மலையரசியின் எழில் அழகு' (சூழலியல் சார்ந்து) தொடர்புக்கு- 9443751641

பனித்துளி சங்கர் said...

//////////அன்றைய இரவு
பௌர்ணமியைக் குடித்த போதையில்
தள்ளாடியபடி
மூச்சின் உஸ்ணம்
வந்தடையச் சாத்தியமற்ற பொழுது
இன்றைய இரவும் அதேபோல
பொய்யும் உண்மையுமாய்.
////////

வார்த்தைகள் அனைத்தும் எதார்த்ததில் நனைந்தபடி . மிகவும் அருமை !

Thenammai Lakshmanan said...

பொய்யான விம்பங்களுக்குள்
சேர்த்த வார்த்தைகளும்
சேமித்த பார்வைகளுமாய்//


பிரமாதம் ஹேமா

Anisha Yunus said...

அதெப்படிங் எல்லாரும் இப்படி அருமையா கவித எழுதறீங்? நானும் எழுதனும்ந்தேன் ஆச...ஆனா தமிழ் இன்னும் கொஞ்ச நாள் வாழட்டும்னு விட்டுர்றேன்.. என்னமோ போங்க...உங்க கவிதையெல்லம் படிச்சலே கவித தானா வந்துரும் போலவே??

குறுக்கால போவான் said...

dwdsfdwsddfdf

Post a Comment